Monday, January 22, 2018


Police stop 9-year-old’s marriage to 39-yr-old man

Gokul.Rajendran@timesgroup.com

Trichy: The state’s infamous child marriages have hit a new low with the police preventing the wedding of a nine-year-old girl to a 39-year-old man in a village near Musiri on Thursday. The girl, who has not even attained puberty, is being given care and protection at a government reception home in Trichy.

An anonymous call to the all-woman police station (AWPS) in Musiri spurred police into action. The caller said that he had received information about talks going on for getting a girl studying in Class IV engaged to a man 30 years her senior. However, officials expressed shock that a girl below 10 years was being forced into marriage.

‘Reports showed there was a proposal for the marriage’

Inspector of police Latha and her team who rushed to Minnathampatti village in Thottiyam taluk found something amiss, indicating that the information could be true. Hence, they rescued the girl from her widowed mother, an agriculture coolie, and handed her over to the child welfare committee (CWC) in the night. The CWC inquiry confirmed that arrangements were going on for marrying off the girl. “Preliminary reports showed that there was a proposal for the marriage. The girl is being kept under our care. We are awaiting reports in this regard after which we will decide on her future,” CWC chairperson Trichy S Indira Gandhi told TOI.

However, the police inquiry with villagers revealed that it was a common practice in their community to fix the marriage of a minor girl in advance with a groom who was a blood relation. This was intended to “keep the relationship intact”. The police said that it was a confirmation for the marriage that would take place once the girl attained puberty.

However, the officials expressed shock at the revelation that a girl below ten years was being forced into child marriage. “The proposal for child marriage to a girl at such a tender age is very rare in Trichy,” said district social welfare officer (DSWO) S Usha. The prohibition of child marriage Act, 2006 had provisions that allowed the police to arrest those including the bridegroom in case of the conduct of a child marriage. However, the police remained reluctant to invoke the stringent provisions of the law against the erring persons.
கட்டணம் ஒன்று.. டிக்கெட் மூன்று: அரசு பஸ்களில் அவதிப்பட்ட நடத்துநர்கள்

Published : 21 Jan 2018 07:59 IST

சென்னை



பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், நடத்துநர்களுக்கு போதிய அளவில் டிக்கெட்கள் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஒரே கட்டணத்துக்கு 3 டிக்கெட்களை கிழித்துக் கொடுத்து நடத்துநர்கள் அவதிப்பட்டனர்.

தமிழகத்தில் அரசு பஸ்களில் கட்டண உயர்வு நேற்று அதிகாலை முதல் அமலானது. ஆனால் நடத்துநர்களிடம் போதிய அளவில் டிக்கெட் வழங்கும் கருவி இல்லாததால், அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கட்டண உயர்வுக்கு ஏற்றபடி டிக்கெட்களை வழங்காததால், ஒரே கட்டணத்துக்கு 3 பழைய டிக்கெட்களை வழங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். விரைவு பஸ்களில் 5 டிக்கெட்கள் வரை அவர்கள் கொடுக்கவேண்டி இருந்தது. இதற்காக பஸ்களை ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தவேண்டி வந்தது. இதனால், மாநகர பஸ்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக நடத்துநர்கள் சிலர் கூறும்போது, டிக்கெட் கொடுக்கும் கருவிகள் இல்லாத நடத்துநர்கள் டிக்கெட் கட்டணத்துக்கு ஏற்றவாறு டிக்கெட் கிழித்து தருகிறோம். ஏற்கெனவே, கட்டண உயர்வால், பொதுமக்கள் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சினையால் நாங்கள் மேலும் அவதிப்பட்டு வருகிறோம்’’ என்றனர்.

கனிவுடன் அணுக வேண்டும்

‘‘தமிழகத்தில் கட்டண உயர்வை தவிர்க்க இயலாத நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் விளக்கமளித்தும், எவ்வித வாக்குவாதங்களில் ஈடுபடாமலும் கனிவுடன் அணுக வேண்டும்’’ என நிர்வாக இயக்குநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்'
ரூ .25 ஆயிரம் தர, 200 கோடி ஒதுக்கியது அரசு

தமிழகத்தில், பணிபுரியும் பெண்களில், ஒரு லட்சம் பேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியத் தில், இந்தாண்டு இருசக்கர வாகனங்கள் வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.



இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மட்டுமின்றி, சிறு கடைகளில் வேலை செய்யும் பெண்களும், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

கடந்த, 2016 தமிழக சட்டசபை தேர்தலின் போது, 'பணியிடங்களுக்கு, மகளிர் எளிதில் செல்லும் வகையில், இருசக்கர வாகனங்கள் வாங்க, 50 சதவீத மானியம் வழங்கப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த, 2017 பிப்ரவரியில், முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் பழனிசாமி, 'அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

'ஆண்டுதோறும், ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு, இருசக்கர வாகனம் வாங்க, 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவிடப்படும்' என்றும் தெரிவித்தார்; அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.

இந்த ஆண்டு, கவர்னர் உரையில், 'பெண்களுக்கான இருசக்கர வாகன மானியம்,

25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்தை, ஜெ., பிறந்த நாளான, பிப்., 24ல், முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். எனவே, திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும், இத்திட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனம் பெற விரும்புவோர், இன்று முதல் விண்ணப்பிக்க லாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், இன்று முதல், பிப்., 5 வரை, விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன; அந்த விண்ணப்பங்கள், பிப்., 10ல் ஆய்வு செய்யப்படும். பிப்., 15ல் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தில், எளிதில் இயங்கக்கூடிய, கியர் இல்லாத அல்லது தானியங்கி கியர் வசதி உடைய, விருப்பமான இருசக்கர வாகனங்களை வாங்கலாம். மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்ட, இருசக்கர வாகனங்கள் வாங்கலாம். வாகனத்தின் விலையில், 50 சதவீதம் மானியம் அல்லது, 25 ஆயிரம் ரூபாய் என, இதில், எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

சொந்த முதலீடு அல்லது வங்கி கடன், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து பெற்று, இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும். 125 'சிசி'க்கு மிகாமல், மோட்டார் வாகன சட்டம், 1988ன் கீழ் பதிவு செய்யக் கூடிய வாகனத்தை வாங்க வேண்டும். கடந்த, 1ம் தேதிக்கு பின் உற்பத்தி செய்யப்பட்ட, புதிய மாசு ஏற்படுத்தாதவாகனமாக இருக்க வேண்டும். மாவட்டங்களில், கலெக்டர் தலைமையிலான குழுவும், சென்னை மாநகராட்சியில், மாநகராட்சி கமிஷனர் தலைமையிலான குழுவும், பயனாளிகளை தேர்வு செய்யும். இத்திட்டத்தில் பயன்பெற, ஏராளமான விண்ணப்பங்கள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு கிடைக்கும்?

* கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி

அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களில், இதற்கான விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்

* தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இங்கு வசிக்கும், 18 முதல், 40 வயதிற்குட்பட்ட, வேலை செய்யும் மகளிர் பயன் பெறலாம்

* ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பெண்களின் ஆண்டு வருமானம், 2.50
லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்

* குடும்ப தலைவி, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பினர், திருநங்கையர் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

* விண்ணப்பதாரர்கள், வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ், வருமான சான்றிதழ், பணிபுரிவதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், புகைப்படம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்றால், அதற்கான ஜாதிச் சான்று; மாற்றுத்திறனாளி என்றால், அரசின் அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

-நமது நிருபர்-
பஸ் கட்டண உயர்வு எதிரொலி: மேட்டூர்- ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது




பஸ் கட்டண உயர்வு காரணமாக மேட்டூர், ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

ஜனவரி 22, 2018, 04:00 AM சேலம்,

சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. மேட்டூருக்கு சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை, பூங்கா ஆகியவற்றை பார்த்து ரசித்து செல்கிறார்கள். சிறுவர், சிறுமிகள் மேட்டூர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்வார்கள். குறிப்பாக விடுமுறை தினங்களில் மேட்டூரில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்குள்ள அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கும் திரளானவர்கள் வந்து செல்வார்கள்.

  தற்போது தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. முன்பு சேலத்தில் இருந்து மேட்டூர் செல்ல அரசு பஸ்சில் கட்டணம் ரூ.24 ஆக இருந்தது. தற்போது ரூ.36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான நேற்று மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. பஸ்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

ஏற்காடு

இதேபோல் ஏற்காடுக்கும் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் சேர்வராயன் கோவில், ராஜேஸ்வரி கோவில், பொட்டானிக்கல் கார்டன், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாய்ண்ட், ரோஜா தோட்டம், படகு இல்லம் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. சுற்றுலா வருபவர்கள் இந்த இடங்களுக்கு செல்ல தவறுவது இல்லை. விடுமுறை நாட்களில் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சேலம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்து செல்வார்கள்.

சுற்றுலா பயணிகள் வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் வருவார்கள். பின்னர் சேலத்தில் இருந்து பஸ்சில் ஏற்காடுக்கு செல்வார்கள். சேலத்தில் இருந்து ஏற்காடுக்கு முன்பு பஸ் கட்டணம் ரூ.17 ஆக இருந்தது. தற்போது ரூ.28 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நேற்று ஏற்காடுக்கு குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறும்போது, பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவில் வந்துள்ளனர். நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் தற்போது வந்துள்ளோம். முன்பு பஸ்சில் சேலத்தில் இருந்து ஏற்காடுக்கு வந்து செல்ல 2 பேருக்கு கட்டணம் ரூ.68 ஆக இருந்தது. தற்போது 2 பேர் வந்து செல்ல ரூ.112 ஆகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் பெரும்பாலானோர் வந்து செல்வதை பார்க்க முடிந்தது, என்றனர்.
பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது




பஸ் கட்டண உயர்வு காரணமாக, ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர்.

ஜனவரி 22, 2018, 04:30 AM
சென்னை,

பஸ் கட்டணத்தை தமிழக அரசு கடந்த 19-ந்தேதி இரவு அதிரடியாக உயர்த்தியது. கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு பஸ் கட்டணம் வெகுவாகவே உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருந்த பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  வெளியூர் செல்லும் பஸ்களிலும் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் கலக்கத்தில் உள்ளனர். ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, பயணிகள் அடுத்தகட்டமாக தேர்வு செய்வது பஸ் பயணங்களையே. ஆனால் கட்டண உயர்வு பஸ் பயணத்தையும் பயணிகள் மத்தியில் யோசிக்க வைத்துவிட்டது.

இதனால் பெரும்பாலான பயணிகள் ரெயில் பயணத்திற்கு மாறி விட்டனர். பாதுகாப்பான பயணம், கட்டணமும் குறைவு என்பதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னையில் எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நேற்று தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் எவ்வளவு கூட்டம் இருக்குமோ? அதேபோன்ற பயணிகள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், வைகை, அனந்தபுரி, நெல்லை, முத்துநகர், ராமேசுவரம், பொதிகை, மலைக்கோட்டை, திருச்செந்தூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் கூட்டம் மிகுதியாகவே இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடித்து விடும் நோக்கில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். இதேபோல் சென்னையில் மின்சார ரெயில்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், “பஸ் கட்டணம் எங்களை மலைக்க வைப்பதாக உள்ளது. உதாரணமாக 5 பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கூடுதலாக செலவாகிறது. இது நடுத்தர குடும்பத்துக்கு பெரிய சிக்கல் தான்.

இதனால் நெரிசலில் சிக்கினாலும் பரவாயில்லை என்று ரெயிலில் பயணம் செய்யும் முடிவுக்கு வருகிறோம். ரெயில்களில் கூட்டம் மிகுதியாக உள்ளது. எனவே தேவையை உணர்ந்து சிறிது காலம் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டால் நன்றாக இருக்கும்”, என்றனர்.

பயணிகள் தேவையை உணர்ந்து, ரெயிலில் அமர இடம்பிடித்து காசு பார்க்கும் வேலையையும் சிலர் செய்தனர். முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளில் ஏற நீண்ட வரிசையில் சிலர் காத்திருந்து, பெட்டிகளில் இடம்பிடித்து, அந்த இடத்தை குறிப்பிட்ட தொகைக்கு பயணிகளுக்கு விட்டுக்கொடுத்தனர்.

அந்தவகையில் அவர்கள் நேற்று ஒரு இருக்கைக்கு ரூ.80 வரையில் பயணிகளிடம் வசூல் வேட்டை நடத்தினர். அதிலும் ஜன்னல் ஓரத்தில் உள்ள இருக்கை என்றால் ரூ.100-க்கு பேரம் பேசினர். அவசர கோலத்தில் வரும் பயணிகள் எப்படியாவது இடம் கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் கேட்ட தொகையை பேரம் பேசாமல் கொடுத்து செல்வதையும் பார்க்க முடிந்தது. இதனை தடுக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
லஞ்சம் வாங்க மாட்டோம்





மத்திய அரசாங்கத்தின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டில் உள்ள 5,004 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த மாதம் 31–ந் தேதிக்குள் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஜனவரி 22 2018, 03:00 AM

மத்திய அரசாங்கத்தின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டில் உள்ள 5,004 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த மாதம் 31–ந் தேதிக்குள் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி அவர்கள் தாக்கல் செய்யாவிட்டால், அவர்களுடைய பதவி உயர்வின்போதும், வெளிநாட்டு பணிக்காக அனுப்பப்படும்போதும் லஞ்ச ஒழிப்புத்துறை கொடுக்க வேண்டிய ஒப்புதல் வழங்கப்படமாட்டாது. இதுதொடர்பாக அந்தத்துறை மத்திய அரசாங்கத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும், மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், நிர்வாகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களிடம் உள்ள அசையா சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே 2011–ம் ஆண்டே 1–1–2018–ல் அதிகாரிகள் தங்களுடைய அசையா சொத்துகள் பற்றிய விவரங்களை தெரிவிக்காவிட்டால் அவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்புதல் கிடையாது. அவர்கள் பதவி உயர்வுக்காக மத்திய அரசாங்கத்தில் உள்ள முதல்நிலை பணிகளுக்கான பட்டியலில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் என்று ஒரு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தமிழ்நாட்டில் பணிபுரியும் 376 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் பொருந்தும். நிச்சயமாக இதுபோன்ற உத்தரவுகள் வரவேற்கத்தக்கவையாகும். ஏனெனில், ஊழல் என்பது ஒரு புற்றுநோய் போன்றது. சமுதாயத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் ஊழல் புறையோடி போயிருப்பதால்தான் பல முன்னேற்றங்கள் தடைபட்டுள்ளன. திறமைகள் மங்கிப்போய் விடுகின்றன. ஊழல் ஒழிக்கப்பட்டு, வெளிப்படையான நிர்வாகம் இருக்கவேண்டுமென்றால் நிச்சயமாக அதில் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பங்கு இன்றியமையாதது.

அரசு ஊழியர்கள் கை சுத்தமாக இருந்தால், ஆட்சியில் உள்ளவர்களால் எந்த ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. ஏனெனில், ஆட்சியில் உள்ளவர்கள் ஏதாவது ஊழல் செய்து முறைகேட்டில் ஈடுபடவேண்டுமென்றால், அதற்கான உத்தரவுகளை அரசு அதிகாரிகள்தான் பிறப்பிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் உத்தரவை பிறப்பித்தாலும், கீழ்மட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அந்த முறைகேடுகளுக்கு ஏற்ற வகையில் கோப்புகளை தயார் செய்தால்தான் அதிகாரிகளும் உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆட்சியில் உள்ளவர்களும் ஊழல் செய்ய முடியும். அந்த வகையில், அரசு ஊழியர்கள் நேர்மையாக திறம்பட செயல்பட்டால் நிர்வாகம் செம்மைப்படும். நிர்வாகத்தில் தூய்மை ஏற்பட ஆட்சியில் உள்ளவர்களும், அதை தங்கள் முக்கிய குறிக்கோளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சியில் உள்ளவர்கள் ஊழல்செய்ய அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் துணைபோகக்கூடாது. அதுபோல, அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் ஊழல்செய்ய, ஆட்சியில் உள்ளவர்கள் உறுதுணையாக இருக்கக்கூடாது. இவையெல்லாம் நடக்கவேண்டுமென்றால், எல்லோருடைய மனப்பக்குவமும் மாற வேண்டும். ஊழலை கண்டுபிடிக்கும் ஊழல் கண்காணிப்புத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை மிகத்தீவிரமாக செயல்பட வேண்டும். தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் இருந்தால் நிச்சயமாக அங்கு ஊழலுக்கு இடம் இருக்காது. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் குறிப்பாக தமிழக அரசில் உள்ள ஊழியர்கள் அனைவரும் ஒரு உறுதிப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்களும் லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் தலையெடுக்கவும் விடவே மாட்டோம் என்ற உறுதியோடு செயல்பட்டால், ஒரு தூய்மையான, வேகமாக செயல்படும் அரசாக திகழ முடியும்.

Saturday, January 20, 2018

Class 12 Boy Guns Down School Principal After Scolding for Mobile Phone Use 

The accused student fired four shots at principal Ritu Chhabra, who was in her office, with a .9mm pistol and critically injured her, police said.

News18.comUpdated:January 20, 2018, 8:15 PM IST

Yamunanagar: A class 12 student of a private school allegedly shot dead the principal within the school premises on Saturday, reportedly after being scolded for using his mobile phone in the school three days ago.

The accused student fired four shots at Ritu Chhabra, principal of Swami Vivekananda School, with a .9mm pistol and critically injured her, police said. The four bullets hit her in the chest, stomach and shoulder, Yamunanagar Superintendent of Police Rajesh Kalia said.

The incident took place between 11:30 and 12 noon. Chhabra succumbed to her injuries in the hospital, DSP Desh Raj said.

After shooting the school principal, the 18-year-old commerce student tried to flee. However, a couple of parents, who were present for the parents-teachers meet in the school premises, caught hold him of with the help of locals, the SP said.

The student was thrashed by angry locals and then handed over to the police, an official said.

During preliminary investigation, the accused student told the police that he was upset with the school principal for allegedly reprimanding him a couple of times. "He had a grudge against the school principal for reprimanding him few times in front of his class mates on the complaint of teachers," the SP said adding that he was not attending school for the past few days.

The SP said the police were also investigating whether the accused was taking drugs. "He was supposed to attend his tuitions today. But rather than going to tuitions, he went to the school," the officer said. As he was a school student, he was allowed to meet the school principal, SP Kalia said.

"He talked to the Principal for some time and then came out. He then again entered the principal's room and opened fire at her with the revolver," said the SP.

During investigation, it came to light that the student stole his father's licensed revolver by breaking the wooden Almirah at his home. He took the revolver without the knowledge of his parents, Kalia said. The accused student's father is a financier and a landlord in Yamunanagar, he said.

"He has confessed to his crime and weapon has also been recovered. He will be presented before the court the tomorrow," he said.

The accused student has been booked for murder under section 302 of the IPC, said the police.

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...