Saturday, April 21, 2018

 எதற்கெடுத்தாலும், போராட்டத்தில் ,குதிப்போரால் ,மக்கள்,எரிச்சல்!
தமிழகத்தில், எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால், மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில், எதிர்மறை கருத்துக்கள் பரப்புவதை பார்த்து, கடும் கோபம் அடைந்துள்ளனர். அவசியமற்ற போராட்டங் களால், அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதால், வெறுப்படைந்துள்ள மக்கள், அரசு கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.




தமிழகத்தில் போராட்டம் நடத்துவது, சமீப காலமாக, 'பேஷன்' ஆகி வருகிறது. எதற்கு போராட்டம் நடத்த வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல், எதற்கெடுத்தாலும் ரோட்டை மறிக்க இறங்கி விடுகின்றனர்.

தாமதம்

காவிரி பிரச்னையில், மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு தாமதம் செய்வதை எதிர்த்து, மாநில அரசு, உச்ச நீதிமன்றம் சென்றுஉள்ளது. உச்ச நீதிமன்றம், மத்திய அரசை கண்டித்ததுடன், செயல் திட்டம் சமர்ப்பிக்க, கெடு விதித்துள்ளது.காவிரி பிரச்னையில், நம் உணர்வை வெளிப்படுத்த, அனைவரும் இணைந்து, அமைதி வழியில் போராடினால் வரவேற்கலாம்.

ஆனால், ஒவ்வொரு கட்சியினரும், தங்க ளுடைய செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனிப்பட்ட முறையில், கடையடைப்பு, பந்த், பஸ் உடைப்பு, மறியல், நடைபயணம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என, பல்வேறு போராட்டங்களை நடத்து கின்றனர்.காவிரி போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில், ஐ.பி.எல்., கிரிக்கெட்

போட்டி நடத்த, எதிர்ப்பு தெரிவித்து போராடினர். பாதுகாப்புக்கு வந்த போலீசாரை தாக்கினர். அதைத்தொடர்ந்து, பிரதமர் வருகையை எதிர்த்து, கறுப்புக் கொடி காட்டினர். தற்போது, கவர்னருக்கு எதிராக போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

பாதிப்பு

திடீர் போராட்டங்களால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்படுகிறது; பதற்றம் ஏற்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால்,அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதற்கிடையில், சமூக வலைதளங்களில், போராட்டக்காரர்களை துாண்டும் விதமாக, சிலர் பிரச்னைக்குரிய கருத்துக்களை பதிவிடுகின்றனர். அதற்கு பலர் எதிர்வினையாற்ற, தேவையற்றபிரச்னை வெடிக்கிறது.

ஏதாவது ஒரு விதத்தில், எதிர்மறை கருத்துக்களை பரப்பி, பிரச்னையை துாண்டி விடுவ தையே, சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுவும், மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.சிலர் தங்களுடைய கருத்துக்கு, யாரும் எதிர் கருத்தே கூறக்கூடாது என, நினைக்கின்றனர். நாகரிகமற்ற விதத்தில், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அடங்கிய, 'மீம்ஸ்' போட்டு, அசிங்கப்படுத்துகின்றனர்.

அதுபோன்றவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்காமல், 'ஆண்மை இருந்தால், முகவரி யோடு விமர்சியுங்கள்' என, அமைச்சர் ஜெயகுமார் சவால் விடுவது, அரசின் இயலா மையை தான் காட்டுகிறது.எனவே, சமூக வலைதளங்களில், தேவையின்றி, எதிர்மறை கருத்துக்களை பரப்புவோர் மீதும், மக்களை பாதிக்கும் விதமான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீதும், இனிமேலாவது, அரசும், போலீசும், கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த மாநிலத் தின், ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தில், 'நாங்களும் இருக்கிறோம்' என, மக்களிடம் காட்டிக்கொள்ள, பெரிய கட்சிகள் மட்டுமின்றி, துக்கடா கட்சிகளும், போராட்டத் தில் குதிக்கின்றன. திடீரென,புதுப்புது பெயர்களுடன், பல அமைப்புகள் வீதிக்கு வருகின்றன. இந்த சுயநல போராட்டத்தால், மக்களிடம், அவர்களுக்கான செல்வாக்கு நிச்சயம் குறையும்.

-அரவிந்த், பட்டுக்கோட்டை

இன்றைக்கு போராட்டம் நடத்தி, தங்களை பெரிய ஆளாக காட்டினால், நாளை, 'கல்லா' கட்டலாம் என்ற எண்ணத்தில் தான், பலரும் போராட்டத்தில் குதிக்கின்றனர். தமிழக மக்கள் மிகவும் தெளிவானவர்கள். இது போன்றவர் களை நம்ப மாட்டார்கள். போராட்டங்களால், தாங்கள் படும் அவதியை மறக்க மாட்டார்கள்.

-இம்ரான், திருவாரூர்

போராட்டம் என்றால், மதிப்பு, மரியாதை இருந்த காலம், மலையேறி வருகிறது. நியாய மான காரணத்திற்கு போராடலாம். எதற் கெடுத்தாலும் போராட்டம் என்பது சரியான நடைமுறையல்ல. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் படுகிறது. இதுபோன்ற செயல்களுக்கு, அரசு ஊக்கம் அளிக்கக்கூடாது; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகரன், கீழ்ப்பாக்கம், சென்னை

தமிழகத்தில் நடக்கும் கலவர போராட்டங் களால், முதலீட்டாளர்களுக்கு, தமிழகத்தின் மீதான, நம்பிக்கை போய் விட்டது. அதனால், இங்கு வர வேண்டிய முதலீடுகள், சத்தமில்லாமல், மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. இது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பு.

-செந்துார்பாண்டி, துாத்துக்குடி

அரசியல் கட்சிகள், அடிக்கடி அர்த்தமற்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால்,மக்களின் அடிப்படை பிரச்னைகள் மறைக்கப்படுகின்றன.

-அன்வர், நாகை- நமது நிருபர் -
கல்விக் கடன் மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஏப் 21, 2018 05:24

மதுரை: கல்விக் கடனை வங்கிமறுப்பதுநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை புதுவிளாங்குடி ஹரிகரசுதன்,'பி.எல்.,படிக்க கல்விக் கடன் கோரி மதுரை புதுவிளாங்குடி இந்தியன் வங்கி கிளையில்விண்ணப்பித்தேன். உரிய நேரத்தில் வங்கி பரிசீலிக்கவில்லை. கடன் வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். வங்கி நிர்வாகம்,'மனுதாரர் 2016 ல் பிளஸ்2 முடித்துள்ளார். தாமதமாக 2017ல் பி.எல்.,சேர்ந்துள்ளார்.இதற்கு தகுந்தகாரணங்களை தெளிவுபடுத்தவில்லை. மனுதாரரின் தந்தை பற்றிய கடன் அறிக்கையானது (சிபில் ரிப்போர்ட்), சாதகமாகஇல்லை,' என தெரிவித்தது.நீதிபதி: சாதாரண வலுவற்ற காரணங்களைக்கூறி, கல்விக் கடன் மறுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் பலவழக்குகளில்தெளிவுபடுத்தியுள்ளது. அதை மீறி நிராகரிப்பது வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். மேற்கண்டகாரணங்களைக்கூறி கல்விக் கடன் மனுவைநிராகரிக்கக்கூடாது என தனது அனைத்து கிளைகளுக்கும் இந்தியன் வங்கி சென்னைதலைமை அலுவலகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் மனுவை சாதகமாக பரிசீலித்து, கடன் வழங்க கிளை மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நீதிமன்ற உத்தரவுகள் தாமதம் : அறிக்கை அளிக்க நீதிபதிகள் குழு

Added : ஏப் 21, 2018 01:48

சென்னை: நீதிமன்ற உத்தரவுகள் கிடைக்க, காலதாமதம் ஆவதாக கூறப்படும் புகார் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, நீதிபதிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர், சரவணகுமார் தாக்கல் செய்த மனு:கீழமை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளில், இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்; வழக்குகள் முடிவுக்கு வந்து, இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படும்.உத்தரவின் நகல்கள் பெற, நீதிமன்றங்களில் உள்ள, சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பிக்க வேண்டும். உத்தரவின் நகல்கள் கிடைப்பதில், காலதாமதம் ஏற்படுகிறது.நீதிமன்ற ஊழியர்களை கேட்டால், வழக்கு தொடர்பான ஆவணங்களை, கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்களை குறிப்பிடுகின்றனர். போதிய அளவில், பீரோ, இரும்பு அலமாரிகள் இல்லை.நீதிமன்றத்தில், வழக்கு ஆவணங்கள் தரையிலும், மேஜையிலும் அடுக்கி வைக்கப்படுகின்றன. முறையான பாதுகாப்பு இல்லை. ஆவணங்கள் இருக்கும் அறை, காற்றோட்டமாக இல்லை. போதிய இடவசதி இல்லாததால், துாசு ஒவ்வாமையினால், பாதிப்பு ஏற்படுகிறது.உத்தரவுகள் காலதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி, பதிவாளர் ஜெனரல், உள்துறை செயலருக்கு மனுக்கள் அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. என் மனுவை, பைசல் செய்யும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.இந்தப் பிரச்னை குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, நீதிபதிகள், சத்தியநாராயணன், கிருபாகரன், சிவஞானம், புஷ்பா சத்தியநாராயணா மற்றும் பதிவாளர் ஜெனரல் உள்ளிட்ட பதிவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை, முதல் பெஞ்ச் நியமித்தது.அறிக்கையை, ஜூன் மூன்றாம் வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


மருத்துவ மாணவர்களுக்கு 3 ஆண்டு பணி கட்டாயம்

Added : ஏப் 21, 2018 00:38

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் மூன்று ஆண்டுகள் பணிபுரிவதை கட்டாயமாக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, மாணவர்கள் இடை நிற்றலை தடுக்கவும், புதிய விதிமுறைகளுக்கு, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, மாநில சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேரும் போது, படிப்பை பாதியிலேயே கைவிட்டால், 15 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும், படிப்பை முடித்ததும், ஓராண்டு காலம், அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணி புரிவதற்கும் ஒப்பந்தம் செய்யப்படுகிறது.எனினும், அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எம்.பி.பி.எஸ்., படிப்பை இடை நிறுத்தும் மாணவர்களுக்கான அபராதத் தொகையை, 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கும், முதுநிலை படிப்பில் இருந்து இடை நிறுத்தும் மாணவர்களுக்கான அபராதத் தொகையை, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், அரசு அனுமதி அளித்துள்ளது.படிப்புக்கு பின், அரசு மருத்துவமனைகளில் மூன்று ஆண்டுகள் கட்டாயம் பணி புரிய வேண்டும்; இல்லாவிட்டால், 30 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும் விதிமுறைக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மாநில செய்திகள்

பிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன்




ஆசிரியர்கள் போராட்டம் சரிசெய்யப்பட்டுவிட்டது. பிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan

ஏப்ரல் 21, 2018, 05:15 AM

திருச்சி,

ஆசிரியர்கள் போராட்டம் சரிசெய்யப்பட்டுவிட்டது. பிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திருச்சியில் நடைபெறும் நீட் மற்றும் போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்கான பயிற்சி முகாமை நேற்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்படும். மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாட புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களிடம் வழங்கப்படும்.

மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நடத்தி வந்த பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு போராட்டம் சரிசெய்யப்பட்டுவிட்டது. எனவே பிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியிடப்படும். இந்த ஆண்டும் எஸ்.எம்.எஸ். மூலமும் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். இதற்காக மாணவர்களின் செல்போன் எண்களை வாங்கிவைத்துள்ளோம்.

திறன் மேம்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறந்ததும் இந்த பயிற்சி அளிக்கப்படும்.

கோடைகால விடுமுறையின்போது பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்தவர்கள் தவிர, வேறு எந்த வகுப்பு மாணவர்களுக் கும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. இந்த உத்தரவை மீறி யாராவது செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Friday, April 20, 2018


முகப்பு » உலகம் » PARIS TAMIL 
 
69 வருடங்களின் பின்னர் லண்டனை வாட்டும் கடும் வெயில்! மக்கள் அவதி
  PARIS TAMIL 
 


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தற்போது கடும் வெயில் அடித்து வருகிறது.

கோடைக்காலம் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.

நேற்று அதிகபட்சமாக மேற்கு லண்டன் பகுதியில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.

1949-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவுக்கு வெயில் அடிப்பது இதுவே முதன்முறையாகும்.

குளிரில் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட லண்டன் வாசிகள் வெயிலின் தாக்கம் தாங்காமல் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.


நேற்று இளநீர், தர்பூசணியுடன் அமர்க்களம்... இன்று பந்தல் இருக்கு குடிநீர் இல்லை... அ.தி.மு.க-வின் கோடை அட்ராசிட்டி

 
விகடன்    20.04.2018
 


அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூரில் பல இடங்களில் கோடைவெயிலின் தாகத்தைப் பொதுமக்கள் தணித்துக்கொள்வதற்காகத் தண்ணீர்ப் பந்தல் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் பந்தல்களில் தினமும் தண்ணீர் வைப்பது இல்லை. அதனால் அவை இரண்டு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறிப்போனது என அம்மாவின் உண்மை விசுவாசிகள் வேதனைத் தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதா இருந்த வரை தன் கட்சிக்காரர்களுக்கு கோடைக்காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்டந்தோறும் தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவிடுவார். அதே போல் அம்மாவின் ஆணைக்கிணங்க எனக் கூறி ஒவ்வோர் மாவட்டத்திலும் அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் திறப்பார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கோடைக்காலத்தின் வெயிலைச் சமாளிக்கும் வகையில் அ.தி.மு.க-வினர் தண்ணீர்ப் பந்தல் திறந்து வருகிறார்கள். தஞ்சாவூரில் கோடைக்காலத்துக்கான தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா கடந்த வாரம் நடந்தது. இதை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திறந்து வைப்பார் என அறிவித்திருந்தனர். ஆனால், அவர் வரவில்லை. தஞ்சாவூர் தொகுதியின் எம்.பி பரசுராமன் தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்தார். உடன் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மெடிக்கல் காலேஜ், புதிய பேருந்து நிலையம், கீழவாசல், கீழவீதி எனப் பல இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திறப்பு விழா தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் கோலாகலமாகப் பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்ப்பூசணி என அனைத்தையும் கொடுத்து அசர வைத்தனர் அ.தி.மு.க-வினர். அதற்கடுத்த நாள்களில் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்தனர். அதன் பிறகு, பானையை எடுத்துவிட்டு கேன் வாட்டர் வைக்கப்பட்டது. இப்போது ஒரு சில முக்கிய இடங்களில் தண்ணீரே வைப்பது இல்லை. வறண்டு கிடக்கும் டெல்டா மாவட்டத்தைப்போல் கீழவீதியில் உள்ள தண்ணீர் பந்தல் இரண்டு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாகவும் வியாபாரிகள் பொருள்கள் வைக்கும் இடமாகவும் மாறிவிட்டன.

சிரித்த முகத்துடன் ஜெயலலிதா இருக்கும் புகைப்படத்துடன் தண்ணீர் பந்தலில் போர்டு வைத்துள்ளனர். ஆனால், தண்ணீர் மட்டும் தொடர்ந்து வைப்பதில்லை. இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆணைக்கிணங்க திறக்கப்பட்ட தண்ணீர்ப் பந்தலைக்கூட கவனிக்க நேரம் இல்லாமல் இருக்கிறார்கள் நிர்வாகிகள். இதே ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இப்படிச் செய்வார்களா என வேதனையோடு தெரிவிக்கிறார் அ.தி.மு.க-வின் உண்மை தொண்டர்கள்.

NEWS TODAY 25.12.2025