தூக்க மாத்திரை கேட்டு இளைஞர்கள் தொல்லை: இரவு நேரங்களில் மருந்து கடைகளில் அட்டூழியம்
2018-05-19@ 15:10:57
செங்கல்பட்டு: போதைக்காக மருந்துக்கடைகளில் தூக்கமாத்திரை கேட்டு அலையும் இளைஞர்கள், ஊழியர்களை தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அன்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. செங்கல்பட்டை அடுத்த சிங்கெருமாள் கோவில் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மருந்து கடை ஒன்றில் 2 இளைஞர்கள் தூக்க மாத்திரை தரும்படி கேட்டிருக்கின்றனர். மருந்து சீட்டு இல்லாமல் தர முடியாது என ஊழியர்கள் கூறியதால் கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து ஊழியர் மாரிமுத்துவின் கையில் குத்தியதுடன், அங்கிருந்த தொலைபேசி ரிசீவரை எடுத்து தலையில் சரமாரியாக கடுமையாக தாக்கியுள்ளார்.
இதுமட்டுமல்லாது கடையில் இருந்த 33 ஆயிரம் பணத்தையும் அவர்கள் திருடிச்சென்றுள்ளனர். இந்த தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மூப்பனார் பாலம் அருகேயுள்ள மருந்து கடையிலும் போதை ஆசாமிகள் தூக்க மாத்திரை கேட்டதுடன் பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர். இத்திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2018-05-19@ 15:10:57
செங்கல்பட்டு: போதைக்காக மருந்துக்கடைகளில் தூக்கமாத்திரை கேட்டு அலையும் இளைஞர்கள், ஊழியர்களை தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அன்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. செங்கல்பட்டை அடுத்த சிங்கெருமாள் கோவில் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மருந்து கடை ஒன்றில் 2 இளைஞர்கள் தூக்க மாத்திரை தரும்படி கேட்டிருக்கின்றனர். மருந்து சீட்டு இல்லாமல் தர முடியாது என ஊழியர்கள் கூறியதால் கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து ஊழியர் மாரிமுத்துவின் கையில் குத்தியதுடன், அங்கிருந்த தொலைபேசி ரிசீவரை எடுத்து தலையில் சரமாரியாக கடுமையாக தாக்கியுள்ளார். இதுமட்டுமல்லாது கடையில் இருந்த 33 ஆயிரம் பணத்தையும் அவர்கள் திருடிச்சென்றுள்ளனர். இந்த தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மூப்பனார் பாலம் அருகேயுள்ள மருந்து கடையிலும் போதை ஆசாமிகள் தூக்க மாத்திரை கேட்டதுடன் பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர். இத்திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி: பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. அதோடு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வருமான வரி சட்ட விதிகளின்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் டிடிஎஸ் தொகையை ஒவ்வொரு காலாண்டுக்கும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். டிடிஎஸ் பிடித்தம் செய்வோர் நிலுவை வைப்பதை தவிர்க்கவும் உடனடியாக செலுத்த செய்யவும் அபராதம் விதிப்பதாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோக்கியோ: ஜப்பானில் குறிப்பிட்ட நேரத்தை விட முன்கூட்டியே ரயில் கிளம்பி சென்றதால் பொதுமக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரயில் நிலையத்தில் இருந்து 7.12 மணிக்கு வழக்கம் போல் புறப்பட வேண்டிய ரயில் 25 நொடிகள் முன்னதாக கிளம்பி சென்றது. அந்த ரயிலில் பயணம் செய்யவிருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரயில் இல்லாததை கண்டு கோபமடைந்துள்ளனர். ஒரு சிலர் இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.