Thursday, May 24, 2018

Impact of NEET? Sheen off bio, fizz back in comp sci

Ram.Sundaram@timesgroup.com 24.05.2018

After the NEET fiasco, biology seems to have lost its sheen among students applying for Class XI in Tamil Nadu schools with computer science gaining more prominence among science aspirants.

For non-science students, business maths and commerce have emerged the most soughtafter courses, say teachers and students. “Of the 500 applications we received on Wednesday, nearly 300 were for computer science group. Another 150 applied for business maths and commerce and less than 50 applied for bio-maths and computer science,” said C Velusamy, headmaster of a government higher secondary school in Trichy.

The trend was no different when it came to private matriculation schools as well, said R Vishalakshi, president of Tamil Nadu Private Matriculation Schools Association. “Only those who are keen on pursuing medicine have expressed interest towards biology courses”.

A government-aided school headmaster from Kancheepuram said many students found this year’s biology paper tough as they were unable to simultaneously balance the state board syllabus and NEET preparation. “So, they have intentionally avoided applying for biology courses. All the four core subjects in bio-maths group are tough. So, it is better to avoid the risk and opt for computer science,” said S Jeya, a Class 10 student from Madurai. Government has revamped higher secondary computer science education this year. According orders issued on Wednesday, three different types of computer science courses will be made available to science, arts and vocational students.

M Chandran from Post Graduates Teachers’ Association said that besides employment opportunities after completing BSc or BCom, many find business maths easy.

However, the issue here is that not many government schools have enough commerce teachers and some do not offer the course, said a district education officer request-

ADMISSION ROW

Several mediocre and low achievers were alledgedly denied Class XI admission in their own school. Despite a Madras high court ruling that schools should prefer own students over newcomers when it comes to Class XI admissions, those who have 300 or below had a tough time finding a seat. The situation was worse in city schools as those who scored 75% were denied application forms. TNN

தவிர்த்திருக்கலாம்!

By ஆசிரியர் | Published on : 24th May 2018 02:52 AM |

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடக்கும் போராட்டம் கடந்த இரண்டு நாட்களாக உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. துப்பாக்கிச் சூட்டிலும் முடிந்திருக்கிறது. செவ்வாய், புதன் இரண்டு நாட்களிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டமும் சரி, போராட்டக்காரர்கள் நடத்திய வன்முறையும் சரி, அதை எதிர்கொள்ள காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடும் சரி இவையனைத்துமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

கடந்த மார்ச் 24-ஆம் தேதி தூத்துக்குடியில் 20,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பராமரிப்பைக் காரணம் காட்டி ஸ்டெர்லைட் நிறுவனம் தனது ஆலையை தற்காலிகமாக மூடியது. அந்த ஆலையிலிருந்து தயாரிக்கப்பட்ட தாமிரத்தை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஸ்டெர்லைட் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் முதல் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. முன்னெச்சரிக்கையாக 144 தடையுத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம், போதிய அளவில் காவலர்களை தயார் நிலையில் வைக்காமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது.

குமாரரெட்டியாபுரம், மடத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து காலையிலிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி நகர்ந்த ஊர்வலத்தில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் திரண்டிருந்த மீனவர்களும் சேர்ந்தபோது மிகப்பெரிய பேரணியாக அது மாறியது. ஊர்வலத்தில் வந்தவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயன்றபோது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த வாகனங்களை தீக்கிரையாக்கி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு வளாகத்திற்கு நுழைந்து 40-க்கும் மேற்பட்ட வாகனங்களை மட்டுமல்லாமல், ஜெனரேட்டருக்கும் தீ வைத்திருக்கிறார்கள். போராட்டம் வன்முறையாக மாறியிருக்கக் கூடாதுதான். ஆனால், அதை எதிர்பார்க்கவும், எதிர்கொள்ளவும் காவல்துறையும், நிர்வாகமும் தவறியதன் விளைவுதான் துப்பாக்கிச் சூடும், அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் உயிர்ப்பலிகளும்.

ஆரம்பம் முதலே லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் எனப்படும் தாமிரம் தயாரிப்பு நிறுவனம் பிரச்னைக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. இவர்கள் 1991-இல் மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் இந்தத் தொழிற்சாலையைத் தொடங்க முற்பட்டு 1993-இல் கட்டடப் பணியும் முழுவீச்சில் நடந்தது. அப்போது 30,000-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்தத் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை கேள்விப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1994-இல் மாவட்ட ஆட்சியரும், அரசும் தலையிட்டு ரத்தினகிரியில் இந்த ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அடுத்த ஓர் ஆண்டில் தூத்துக்குடியில் இந்த ஆலை அமைவதற்கு அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அனுமதி வழங்கியது. மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ. தொலைவில் இப்படியொரு ஆலை அமைவது பல்லூயிர்ப் பெருக்கத்துக்கு ஆபத்து என்பதையும் மீறி தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களை சட்ட செய்யாமல் ஸ்டெர்லைட் காப்பர் என்கிற இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 1995-இல் ஆஸ்திரேலியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நிராகரிக்கப்பட்ட இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 1996-இல் ஆண்டொண்றுக்கு 40,000 டன் தாமிர உற்பத்தித் தயாரானது இந்த நிறுவனம்.

1997-இல் இதிலிருந்து வெளியான நச்சப் புகையால் பாதிக்கப்பட்ட 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் காரணம், இந்த ஆலையிலிருந்து வெளியான சல்பர் டை ஆக்ûஸடு வாயு என்று உறுதிபடுத்தப்பட்டது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக அரசு அந்த போராட்டத்தை தடுக்க முற்பட்டது என்பதுமட்டுமல்ல, ஸ்டெர்லைட் நிறுவனம் தனது உற்பத்தியை 70,000 டன்னாக அதிகரிக்க அனுமதியும் வழங்கியது.
தொடர்ந்து அதிமுக, திமுக மாநில அரசுகளும், காங்கிரஸ், பாஜக மத்திய அரசுகளும் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக இருந்திருக்கின்றன என்பதுதான் உண்மையான பின்னணி. இடதுசாரிகளின் துணையோடு மத்தியில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசின் ஆட்சியின்போது ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த போராட்டக்காரர்களுக்காக அனுதாபம் தெரிவிக்கும் தார்மிக உரிமை ஆட்சியிலிருந்த எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் கிடையாது.

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஒற்றைச் சர்வாதிகார தலைமை ஆட்சியில் இல்லாமல் இருப்பதால் அதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, பல்வேறு சக்திகளும் களமிறங்கியிருக்கின்றன. முந்தைய அரசுகள் செய்த தவறுகளுக்கெல்லாம் இன்றைய தமிழக அரசு பழியைச் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இத்தனை உயிர்கள் பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டிருக்கலாம்தான். ஆனால், இப்படியொரு கலவரம் நடக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் முடிய வேண்டும் என்று சில சமூகவிரோத சக்திகள் திட்டமிட்டிருக்கவும் கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனத்தைத் தூத்துக்குடியில் தொடரவிட்டவர்களின் தவறுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியிருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
மருத்துவத்தில் ஒரு புரட்சி- குறைந்த கட்டணங்கள்! அசத்தும் 500 கோடி சாம்ராஜ்யம்- ஆர்த்தி ஸ்கேன்ஸ்!!!

 Posted By: Lakshmi Priya Updated: Wednesday, May 16, 2018, 16:38

நமது நாட்டில் ஓர் புரட்சி மிக அமைதியாக பலருக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. இது தற்பொழுது மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இந்த புரட்சிக்கு சொந்தக்காரர் ஓர் தமிழர். எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கேன் குழுமமாக திகழும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனர் திரு.கோவிந்தராஜன் அவர்களே அந்த தமிழர். Aarthi scans gives medical service for the patients who are from poor தென்தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அய்யனேரி எனும் கிராமத்தில் பிறந்தார்.

ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் ன் 85 கிளைகளில் CT ஸ்கேன், MRI ஸ்கேன் மற்றும் லேப் கட்டணங்களை 75 % வரை அதிரடியாக குறைத்தது இந்திய மருத்துவ பரிசோதனை துறையில் குறிப்பாக தமிழகத்தில் ஓர் அதிர்வலையினை உருவாக்கி கொண்டுள்ளது. ஸ்கேன் துறையில் புரட்சி நோயாளிக்கு சிகிச்சையினை துவக்கும் முன் மருத்துவரின் முதல் தேடல் என்ன நோய் என்று தெரிந்து கொள்வது. இதற்காக மருத்துவர்கள் பெரிதும் பரிந்துரைப்பது CT ஸ்கேன் அல்லது MRI ஸ்கேன்களையே. இன்றைய நிலவரப்படி MRI ஸ்கேன் எடுக்க குறைந்தது ரூ.8000 ஆகிறது. ஒரு சாமான்யரின் மாத சம்பளமே ரூ.15000 ஆக இருக்கும் பொழுது இந்த ஒரு ஸ்கேனை மட்டும் எடுக்கவே பாதி சம்பளத்தை கட்ட வேண்டியிருக்கும். மீதி மிச்சத்தில் தான் அந்த மாத குடும்பத்தை நடத்தவேண்டும்.இச்சூழலில் அவருக்கு சிகிச்சையை தள்ளி போடுவதை தவிர வேறு வழியில்லை. தாமதமாகும், தள்ளிப்போடும் சிகிச்சை மேலும் உடல் நிலையினை ஆபத்துக்குள்ளாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கு நவீன மருத்துவம் எட்டாக்கனி என்பதே யதார்த்தம்.

 Aarthi scans gives medical service for the patients who are from poor இந்த யதார்த்தம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ, மிகவும் ஏழ்மையான பின்னனியில் பிறந்து தனது உழைப்பால் உயர்ந்த ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார். எனவே அவர் தமது அனைத்து கிளைகளிலும் ரூ.8000 மதிப்புள்ள MRI ஸ்கேன் கட்டணத்தை ரூ.4000 என்றும் அந்த நாலாயிரமே அதிகம் என்பவர்களுக்கு இரவு 9மணிக்கு மேல் ரூ. 2500 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளார். அதுபோல் CT ஸ்கேன் கட்டணத்தையும் குறைத்து அதனையும் ரூ. 1000 முதல் 2000 என நிர்ணயம் செய்துள்ளார். இந்த கட்டணமுறை வெளிப்படையாக அனைவருக்கும் பொருந்தும்படி வைத்துள்ளார். இந்த சீரிய பணியினை செய்து வரும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனர் திரு.கோவிந்தராஜ் அவர்களிடம் இதுபற்றி கேட்ட பொழுது," வருடா வருடம் ஸ்கேன் எடுக்கும் கட்டணம் உயர்ந்து கொண்டே வருகிறது. மாதம் 15000 சம்பளம் வாங்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரால் கூட ரூ.8000 கட்டி ஸ்கேன் எடுக்க திணறுவதை பலமுறை கண்கூடாக பார்த்தேன். இவர்களுக்கே இப்படி எனில் எனது கிராமத்தில் உள்ள ஏழை மக்களின் நிலை? ஸ்கேன் எடுக்கவே முடியவில்லை எனில் மேற்கொண்டு எப்படி சிகிச்சை மேற்கொள்வார்கள்? ஏழ்மை ஒருவரது சிகிச்சைக்க்கு தடையாக இருப்பது மிகவும் கொடுமையான விஷயம். எனவே எந்த சூழலிலும் ஒருவரின் ஏழ்மை நவீன மருத்துவவம் பெறுவதற்க்கு தடையாக அமைய கூடாது

. Aarthi scans gives medical service for the patients who are from poor இதற்கு ஒரே தீர்வு, கட்டணங்களை அதிரடியாக குறைப்பது தான்.. அதிரடியாக MRI கட்டணங்களை 75% வரை குறைத்துவிட்டோம். குறைவான லாபத்தில் கூடுதலான எண்ணிக்கையிலான நபர்களுக்கு ஸ்கேன் செய்யும் பிஸ்னெஸ் ஸென்சும் மற்றவர்கள் செயல்படுத்த தயங்கும் காரியங்களை தைரியமாக செய்து முடிக்கும் திறமையும் தன் சார்ந்த சமூக மக்களின் மீது அக்கறையும் செய்யும் தொழிலில் மனசாட்சியும் இருந்தால் போதும் அனைத்தும் சாத்தியமே. நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. எனவே இது இயன்றது.இது எனது சாதனை என்பதை விட எனது சமுதாய கடமை என்றே கருதுகிறேன்" என எளிமையாக பதில் அளித்தார் மேலும் அவர் தொடர்கையில்,குறைவான கட்டணத்தில் வெற்றிகரமாக செயல்படலாம் என்பதை கண்டு உணர்ந்த சக ஸ்கேன் உரிமையாளர்கள் சிலர் எமது குறைவான கட்டண முறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

இதுவே எனது வெற்றியாக கருதுகிறேன். Aarthi scans gives medical service for the patients who are from poor இந்த சிலர் இன்னும் பலர் ஆக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இதை நிச்சயம் விரைவில் நிறைவேறும். அதற்கான முதல் துவக்கத்தை எனது நிறுவனம் துவக்கியுள்ளது என்பது தான் மிக்க மகிழ்வே. ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் சென்னையில் 10 கிளைகளுடன் மதுரை திருநெல்வேலி, பாளை, தென்காசி, கோவில்பட்டி, ராஜபாளையம், தூத்துக்குடி, தஞ்சை மற்றும் பெங்களுர் ஆகிய இடங்களில் அனைத்து ஸ்கேன் மற்றும் லேப் வசதிகளுடன் இயங்கி வருகிறது. கர்நாடகா பெங்களுரில் உள்ள தனது இரண்டு கிளைகளிலும் குறைவான கட்டணமே பெறுகிறார். விரைவில் அங்கேயும் மற்ற மையங்கள் ஆர்த்தி வழிக்கு வரும்.புதுவையிலும் தனது சென்டர் குறைந்த கட்டணத்தில் செயல்படுகிறது. robotic lab விரைவில் ஐதராபாத்திலும் குறைந்த கட்டணம் பெற்று தனது கிளையினை துவக்க உள்ளது.

மேலும் 65 இடங்களில் பிரத்யோக இரத்தப் பரிசோதனை மையங்களை அமைத்துள்ளனர். நாளொன்றுக்கு ஒரு சென்டரில் சராசரியாக நூறு பேர் என மாதத்திற்க்கு சுமார் 1,20,000 பேர் குறைவான கட்டணத்தில் பலன் அடைகின்றனர். ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் குடும்பத்தில் உள்ள ஏழு டாக்டர்கள் தலமையில் அனைத்து ரிப்போர்டுகளையும் கவனமுடன் பார்த்து தருவது இவர்களின் தனிச்சிறப்பு. கதை இதனுடன் முடியவில்லை. இரத்த பரிசோதனை துறையில் மிகப்பெரிய சந்தை புரட்சியினை துவக்கி விட்டார். சென்னை வடபழனியில் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதல் முழு ரோபோட்டிக் பரிசோதனை கூடத்தை நிறுவியுள்ளார். இதில் பரிசோதனைகளை விரைவாகவும் முடிவுகளை மிக துல்லியமாகவும் பெறலாம். அதை விட மிக குறைவான செலவினத்தில் இதை இயக்க இயலும். அதன் பயனை அப்படியே பொது மக்களுக்கு சென்றடையும் வகையில் கட்டணங்களை நிர்ணயித்துள்ளார். அனைத்து இரத்த பரிசோதனைகளின் கட்டணங்கள் மற்ற லேப் கட்டணங்களை விட 50% முதல் 75 % வரை குறைவாக உள்ளது. Aarthi scans gives medical service for the patients who are from poor அனைவராலும் எளிதில் பெற இயலாத மத்திய அரசு வழங்கும் தரக்கட்டுப்பாட்டுக்கான NABL & NABH சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். இந்த சான்றிதழ்கள் தனது தரத்திற்க்கான அங்கீகரம் என கருதுகிறார்.

 இவரது தனிப்பட்ட வருத்தம் என்னவென்றால் நமது மருத்துவ சமூகம் சர்க்கரை நோய்க்கு நமது சமூகம் தர வேண்டிய கூடுதல் கவனம் தரவில்லை என்பது. ஏனெனில் சர்க்கரை நோயின் சமூக பொருளாதர பாதிப்பு மற்ற நோய்களான போலியோ, எய்ட்ஸ், TB போன்றவற்றை விட பல மடங்கு அதிகம். எனவே அதற்கு கூடுதல் கவனம் செலுத்தி சுகர் டெஸ்டுக்கு கட்டணம் ரூ.20 எனவும் ரூ.450 மதிப்புள்ள HbAIC க்கு ரூ.150 நிர்ணயித்துள்ளார். அது போலவே ரூ. 2000 மதிப்புள்ள வைட்டமின் D க்கான கட்டணம் ரூ 400 சுகர் டெஸ்டுகள் மட்டுமல்ல மற்ற அனைத்து டெஸ்டுகளும் குறைவான கட்டணங்களில் கிடைக்கிறது. தமிழகத்தில் இதைவிட குறைவான கட்டணங்கள் கிடையாது என்பதை உறுதியிட்டு கூறலாம். குறைந்த கட்டணங்கள் ஏழைகளின் தயக்கத்தை போக்கும் என்பது இவரது கோட்பாடு. இதன் பயனை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் இதுவரை தமிழகத்தில் 60க்கு மேற்பட்ட ஊர்களில் தனது கிளைகளை துவக்கியுள்ளார். மேலும் 100க்கு மேற்பட்ட ஊர்களில் விரைவில் துவங்க உள்ளனர். பல வழிகளிலும் விளம்பரம் செய்து குறைந்த கட்டணங்களின் தகவல்களை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உள்ளார்

. Aarthi scans gives medical service for the patients who are from poor அவ்வாறு நிகழும் பொழுது பல லேப்கள் அவர்களின் லேப் கட்டணங்களை நியாமான ரேட்டில் மட்டுமே வைக்க முடியும். லேப் துறையில் கட்டணங்களை, தரத்தினை ஒழுங்குபடுத்துவதில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனரின் பங்கு மிகப் பெரியதாக திகழும். தொலை தொடர்பில் அம்பானி செய்ததை ஓர் தமிழர் ஸ்கேன் & லேப் பரிசோதனை துறையில் சத்தமில்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்.

அம்பானிக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம். அம்பானியின் நடவடிக்கையால் மக்கள் பலனடைந்தனர். போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனரின் நடவடிக்கையால் மக்கள் பயன் அடைவர். போட்டியாளர்கள் தாமகவே தம்மை ஒழுங்குபடுத்தி செம்மையடைவர். குக்கிராமத்தில் இருக்கும் கடைசி குடிமகனுக்கு உலகின் சிறந்த பரிசோதனைகளை அவனுக்கு கட்டுபடியாகும் கட்டணத்தில் வழங்கி விட்டால் தன் பிறப்பின் பயன் அடைந்து விடுவதாக தன் சுற்றத்தில் இவர் அடிக்கடி கூறுவதாக கேள்வி உண்டு. அதுவும் இவை இந்தியா சைனா போன்ற நாடுகளில் மட்டுமே சாத்தியம் என்பார். ஒரளவு இதில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே கூறலாம். dr reporting xray ஆர்த்தி ஸ்கேன்ஸின் சேவைகளை தெரிந்து கொள்ள http://aarthiscan.com/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு 7550075500 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Read more at: https://tamil.oneindia.com/news/business/aarthi-scans-gives-medical-service-the-patients-who-are-from-poor-319083.html
துப்பாக்கிச் சூடு; உளவுத்துறையின் தோல்வி, அரசின் அலட்சியம், காவல்துறையின் மிருகத்தனமான செயல்: ரஜினி கண்டனம்

Published : 23 May 2018 14:38 IST

சென்னை



ரஜினிகாந்த்- கோப்புப் படம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினி அரசின் அலட்சியம், காவல்துறையின் மிருகத்தனமான செயல் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலிக் காட்சி ஒன்றைப் பதிவிட்டு கண்டித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஆலை விரிவாக்கம் என்ற முடிவை கண்டித்து ஆலையை அகற்ற கோரி கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற போது போலீஸார் தடுக்க கலவரம் மூண்டது.

இதில் முன்னெச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலிக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறையை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அவரது பேச்சு விபரம்:

“ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அலட்சியம், உளவுத்துறை உட்பட மொத்த நிர்வாகத்தின் தோல்வி. காவல்துறையின் வரம்பு மீறிய, சட்டத்திற்கு புறம்பான மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் இண்டெர்நெட் முடக்கம்: வதந்தி பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை

Published : 23 May 2018 19:30 IST

சென்னை
 



இண்டெர்நெட் முடக்கம்- சித்தரிப்பு படம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஆலை விரிவாக்கம் என்ற முடிவை கண்டித்து ஆலையை அகற்ற கோரி கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற போது போலீஸார் தடுக்க கலவரம் மூண்டது.

இதில் முன்னெச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். இந்தியாவையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தேசிய அரசியல் தலைவர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இரண்டாம் நாளான இன்றும் வன்முறை வெடித்தது. இன்றும் போலீஸார், பொதுமக்கள் மோதல் கலவரமாக மாறியதில் போலீஸார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுதும் தன்னெழுச்சியாக பொதுமக்கள் அரசியல் இயக்கங்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லையிலும், கன்னியாகுமரியிலும் பல போராட்டங்கள் நடந்தன. மீனவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போரட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர தூத்துக்குடியின் அண்டை மாவட்டமான நெல்லை, கன்னியாகுமரியிலும் கலவரம் பரவாமல் இருக்க நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இணையதள (இன்டெர்நெட்) சேவையை தமிழக அரசு முடக்க உள்ளது.

உள்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது இணையதள சேவையை இம்மூன்று மாவட்டங்களில் முடக்க உள்ளன. இன்றிரவு 9 மணி முதல் இணையதளங்கள் முடக்கப்படும் என தெரிகிறது.

துப்பாக்கி சூடு குறித்தும், போராட்டம் குறித்தும் வதந்தி பரப்புவதை தடுக்கவும், வாட்ஸ் அப் மூலம் தகவல் பரிமாற்றத்தை முடக்கவும் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. எத்தனை நாட்களுக்கு இந்த சேவை முடக்கப்படும் என தெரியவில்லை.

இதற்கு முன்னர் காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, நாகலாந்து போன்ற மாநிலங்களில் இணையதள சேவையை அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் முடக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உண்டு. காஷ்மீரில் இது அடிக்கடி நடக்கும். தமிழகத்தில் இணையதள சேவை வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்
மாநிலம் முழுவதும் இன்று கடையடைப்பு

Added : மே 24, 2018 04:09

சென்னை 'தமிழகம் முழுவதும், இன்று கடைகள் அடைக்கப்படும்' என, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். 'துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதைக் கண்டித்து, இன்று, தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும்' என, அவர் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 படித்த 'டாக்டர்' கைது

Added : மே 24, 2018 02:10

வாணியம்பாடி: பிளஸ் 2 மட்டுமே படித்து, சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைதுசெய்யப்பட்டார்.வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, சின்ன வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், கிருபாகரன், 42. பிளஸ் 2 படித்துள்ள இவர், எம்.பி.பி.எஸ்., - எம்.டி., என போர்டு வைத்து, வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தார்.புகாரையடுத்து, வேலுார் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையில், நேற்று, கிளினிக்கில் சோதனை செய்ததில், அவர் போலி டாக்டர் என தெரிந்தது.

வாணியம்பாடி தாலுகா போலீசார், அவரை கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...