Wednesday, June 13, 2018

சவுதி அரேபியாவில் பணிபுரிய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

Published : 12 Jun 2018 20:26 IST

சென்னை

 



சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சவுதி அரபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை மயக்க மருத்துவம், இன்டெர்னல் மெடிசன் (Internal Medicine), அறுவை சிகிச்சை அனைத்து மருத்துவப் பிரிவுகள் , பேமிலி மெடிசின் (Family Medicine), நியோநாட்டேல் தீவிர சிகிச்சைப் பிரிவு (Neonatal ICU) போன்ற பிரிவுகளில் அனுபவமிக்க அலோபதி மருத்துவர்களுக்கான நேர்முகத் தேர்வு 09.07.2018 முதல் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்குட்பட்ட கன்சல்டன்டுகள், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.

தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு மருத்துவர்களுக்கு அனுபவத்திற்கேற்ப மாத ஊதியமாக ரூ 1.84 லட்சம் முதல் ரூ 3.03 லட்சமும் (வளருகின்ற நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு), அனுபவத்திற்கேற்ப ரூ 3.07 லட்சம் முதல் ரூ 5.09 லட்சமும் (வளர்ந்த நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு), கன்சல்டன்ட் மருத்துவர்களாக இருப்பின் ரூ 2.42 லட்சம் முதல் ரூ 3.98 லட்சமும் (வளருகின்ற நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு), ரூ 5.01 லட்சம் முதல் ரூ 7.59 லட்சமும் (வளர்ந்த நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு), உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவுதி அரேபிய அரசின் சட்டத்திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ள மருத்துவர்கள் தங்களின் முழுவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 044-22505886/ 22502267 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது www.omcmanpower.com என்ற வலைதளத்திலும் அறிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் அதிரடி ஆஃபர்: ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ‘திகைப்பூட்டும் சலுகை’

Published : 12 Jun 2018 20:50 IST

மும்பை,
 


கோப்புப்படம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்யும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, வழக்கமாக நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி இலவசமாக வழங்கப்பட்டுவந்தநிலையில், இனி கூடுதலாக 1.5ஜிபி வழங்கப்படுகிறது. அதாவது, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை இன்று முதல்(12ம்தேதி) வரும் 30-ம்தேதி வரை தொடரும்.
 
இதன்படி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.149, ரூ.349, ரூ.399, ரூ.449 ஆகிய தொகைக்கு ரீசார்ஜ் செய்தால், வழக்கமாக வழங்கப்படும் நாள்தோறும் 1.5ஜிபி (4ஜி)டேட்டாவோடு கூடுதலாக 1.5ஜிபி டேட்டா வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக நாள்ஒன்றுக்கு 4ஜி வேகத்தில் 3ஜிபி டேட்டா வழங்கப்படும்.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ.149-க்கும், ரூ.399க்கும் நாள் தோறும் 1ஜிபி டேட்டா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. அதற்குப் போட்டியாக ஜியோ இன்று இந்தசலுகையை அறிவித்துள்ளது.

ரூ.198, ரூ,398, ரூ.448 மற்றும் ரூ.498க்கு ரீசார்ஜ் செய்து, நாள்தோறும் இலவசமாக 2ஜிபி(4ஜி) டேட்டா பெறும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இனி நாள்தோறும் 4ஜிவேகத்தில் 3.5ஜிபி டேட்டா இலவசமாக பெறுவார்கள்.


ரூ.299க்கு ரீசார்ஜ் செய்தால்,வழக்கமாக 3ஜிபி டேட்டா மட்டுமே நாள்தோறும் கிடைக்கும். இனி நாள்தோறும் 4.5ஜிபி டேட்டாவை 4ஜிவேகத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேபோல, ரூ.509க்கு ரீசார்ஜ் செய்தால், நாள்தோறும் 4ஜிபி டேட்டா வழங்கப்படுவதற்குப் பதிலாக கூடுதலாக 1.5ஜிபி சேர்த்து 5.5 ஜிபிடேட்டா 4ஜி வேகத்தில் வழங்கப்படும்.

ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 6.5 ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும். இதுதவிர இலவச வாய்ஸ்கால், எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் பயன்பாடும் அளிக்கப்படுகிறது.

இதுதவிர ரூ.300 மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 தள்ளுபடியும், ரூ.300க்கு குறைவாக ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் தரப்படுகிறது. ஆனால், இந்த ரீசார்ஜ் ஜியோ ஆப்ஸ், அல்லது போன்பே ஆப்ஸ் மூலம் செய்யப்பட வேண்டும்.

ஜியோ ஆப்ஸில் ரூ.149க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.120 செலுத்தினாலே போதுமானது. இந்த வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 3 ஜிபி இலவச டேட்டா உள்ளிட்ட 28 நாட்களுக்கு 84 ஜிபி 4ஜிவேகத்தில் இலவசமாக வழங்கப்படும்.

ரூ.399க்கு ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்களுக்கு 252 ஜிபி வழங்கப்படும்.

இவ்வாறு ஜியோ நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு கணினி மயம்'

By DIN | Published on : 13th June 2018 01:59 AM |

தமிழகத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்று கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் பேசியது:
நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசின் நிதி, மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ. 288.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு கணினிமயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு, இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இதனை வருகிற ஆகஸ்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் கருவூலகத்துக்கு செல்லாமல் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கலாம்.

மேலும் இணையதள வசதி, விரல்ரேகை பதிவு வசதிகள் இருந்தால் உலகில் எந்தவொரு இடத்திலிருந்தும் மின்னணு உயிர்வாழ்வு சான்றை கருவூலகத்திற்கு அளிக்கலாம்.
மார்பில் ஊசியோடு போராடிய பெண்ணுக்கு அலைக்கழிப்பு

Added : ஜூன் 12, 2018 21:08

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, கர்ப்பிணி பெண் மார்பில் உள்ள ஊசியை அகற்றாமல் அலைக்கழித்ததால், கலெக்டர் உத்தரவுப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனுாரைச் சேர்ந்த வடிவேல் மனைவி சசிகலா,28. கர்ப்பிணியான இவர், கடந்த ஆண்டு, செப்டம்பர் 30ம் தேதி, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது, போடப்பட்ட ஊசி உடைந்து கைக்குள் சென்றது. நவம்பர் 23ம் தேதி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஆப்ரேஷன் செய்து ஊசி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் 1ம் தேதி, எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, அவரது மார்பு பகுதியில் ஊசி இருப்பது உறுதியானது. இது குறித்து, அவரது கணவர் வடிவேல் கலெக்டரிடம் மனு அளித்தார். கலெக்டர் அண்ணாதுரை உத்தரவுப்படி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி டாக்டர்கள், நுரையீரல் அருகே ஊசி போன்ற பொருள் இருப்பதை உறுதி செய்தனர். அவர், எட்டு வார கர்ப்பிணியாக இருப்பதால், தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். அங்கும், சசிகலா அலைக்கழித்ததால் விரக்தி அடைந்த சசிகலா, வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில், தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவுப்படி, மருத்துவக் குழுவினர் சசிகலா வீடடிற்கு சென்று, அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம், கஞ்சனுாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, கர்ப்பம் குறித்து ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அடுத்து, கோணுளாம்பள்ளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வட்டார மருத்துவ அலுவலர் காஞ்சனா தலைமையிலான மருத்துவக் குழுவினர், முதற்கட்ட தீவிர சிகிச்சையை தொடங்கியுள்ளனர். 'கருவை காப்பாற்ற முடியாமல் போனாலும் சசிகலாவை காப்பாற்றுங்கள். அவரது உடலில் உள்ள ஊசியை எடுத்து, அவர் நல்ல முறையில் வாழ வழிவகை செய்யுங்கள், என வடிவேல் டாக்டர்களிடம் கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார்.
போலீஸ் பாதுகாப்புடன் எஸ்.வி.சேகர் : இது தான் கைது செய்யும் நடவடிக்கை?

Added : ஜூன் 12, 2018 21:02 |



படப்பை: காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ள உணவகம் ஒன்றில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், எஸ்.வி.சேகர், 68, நேற்று மாலை, 'ஹாயாக' உணவு அருந்தினார். அவரை கைது செய்ய போலீசார் தயாராக உள்ளனர் என, தமிழக போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில், அதை பொய்யாக்கும் விதத்தில், அவருடன் போலீசார் பயணித்தது, பல சந்தேகங்களை எழுப்புகிறது.

பா.ஜ.,வை சேர்ந்தவர், நடிகர் எஸ்.வி.சேகர். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறாக கருத்து பதிவிட்டார். இதனால், பத்திரிகையாளர்களின் கோபத்திற்கு ஆளான அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. அது முதல், தலைமறைவாக இருக்கும் அவர், முன் ஜாமின் கோரி, நீதிமன்றங்களின் உதவியை நாடினார். எனினும், அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வந்த நிலையில், சமீபத்தில், குடும்பத்துடன் டில்லி சென்று, பிரதமர் மோடியையும் சந்தித்து, பரபரப்பை அதிகரித்தார். இந்நிலையில், அவர் நேற்று, காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலுார்- - வாலாஜாபாத் சாலையில், 'இன்னோவா' காரில் பயணித்தார். மாலையில், படப்பை யில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் காரை நிறுத்தி, உள்ளே சென்றார். அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் இருவர் இருந்தனர். அவர்களுடன், டிபன் சாப்பிட்ட அவர், எவ்வித பதற்றமும் இன்றி, மீண்டும் காரில் ஏறி, சென்னை நோக்கி சென்றார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள், 'இது தான் அவரை கைது செய்ய, தமிழக போலீசார் மேற்கொள்ளும் லட் சணமா...' என, கேள்வி எழுப்பினர்.
ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம் : டி.டி.ஆர்., சஸ்பெண்டு

Added : ஜூன் 12, 2018 20:38

வேலுார்: ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த போது பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.ஆர்., சஸ்பெண்டு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த தம்பதியினர், 6 வயது மகளுடன், ஊட்டிக்கு சுற்றுலா சென்று, சென்னை திரும்பினர். கடந்த 3ம் தேதி இரவு, சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். மறுநாள், அதிகாலை, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர், அனிஷ்குமார், 25, துாங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.சிறுமி திடீரென எழுந்து சத்தம் போட்டதால், அவரது பெற்றோர் மற்றும் சக பயணியர், அனிஷ்குமாரை பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில், அனிஷ்குமாரை ஒப்படைத்தனர்.வழக்கு பதிவு செய்து, டிக்கெட் பரிசோதகர், அனிஷ்குமாரை கைது செய்த ரயில்வே போலீசார், அவரை, திருப்பத்தூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், டிக்கெட் பரிசோதகர் அனிஷ்குமாரை, சஸ்பெண்டு செய்து, சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர், விஜூவின் உத்தரவிட்டுள்ளார்.
'ஸ்மார்ட்' கார்டில் திருத்தம் செய்ய முடியாமல் பாதிப்பு

Added : ஜூன் 12, 2018 23:42

சிவகங்கை: 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில் பிழை திருத்தம் செய்ய முடியாமல் 50 ஆயிரம் பேர் தவிக்கின்றனர்.ரேஷன் முறைகேடுகளை தடுக்க 2017 ஏப்., 1 முதல் 'ஸ்மார்ட்'கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இக்கார்டுகளில் ஏராளமான பிழைகள் உள்ளன. அவற்றை சரி செய்து புதிய கார்டு வழங்க 'இ-சேவை' மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. 'பார்கோடு' பிரச்னையால், ரேஷன் கடை பி.ஓ.எஸ்., கருவி மூலம் கார்டுகளை 'ஸ்கேன்' செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பிழை திருத்தம் செய்து புதிய கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.கார்டு வழங்காவிட்டாலும் 'ஆன்லைனில்' பிழைகளை திருத்தலாம். நீக்கல், சேர்த்தல் பணிகளை மேற்கொள்ளலாம் என, உணவு வழங்கல்துறை தெரிவித்தது. ஆனால் 'இ-சேவை' மையங்களில் ரேஷன்கார்டு தொடர்பான எந்த பணியும் செய்ய முடியவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தவிக்கின்றனர்.

வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மென்பொருள் சரிசெய்யப்பட்டு வருகிறது. விரைவில் திருத்தம் செய்யப்பட்ட புதிய ரேஷன்கார்டு வழங்கப்படும். அதுவரை 'ஆன்லைனில்' திருத்தம் மட்டும் செய்ய சேவை மையங்கள் அறிவுறுத்தப்பட்டன,' என்றார்.

NEWS TODAY 23.07.2026