Friday, June 15, 2018

மாவட்ட செய்திகள்

8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு: ‘தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம்’ என விவசாயிகள் கூறியதால் பரபரப்பு




சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் என விவசாயிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஜூன் 15, 2018, 04:30 AM சேலம்,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் போது, சேலம் மாவட்டத்தில் அரமனூர், மஞ்சுவாடி, ஆச்சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி, மூக்கனூர், ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், குப்பனூர், அயோத்தியாபட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், சுக்கம்பட்டி, வெள்ளையப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், பூலாவரி அக்ரகாரம் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த திட்டம் செயல்படுத்தினால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயம் முற்றிலும் பாதிப்படையும். எனவே பசுமை வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் மனுக்களை கொடுத்து வந்தனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஆட்சேபனை மனுக் களை அளிக்கலாம் என்றும், இதற்கான இறுதி கட்ட முகாம் 14-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் தனித்தாசில்தார்கள் அன்புக்கரசி, பத்மபிரியா, பெலிக்ஸ்ராஜா, செம்மலை, வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு வருவாய் அதிகாரி உள்ளிட்ட 3 அலுவலர்கள் இடம் பெற்று இருந்தனர்.

இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். பின்னர் அவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், எங்கள் விவசாய நிலத்தை எடுக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதி தாசில்தாரிடம் ஆட்சேபனை மனுக்களை கொடுத்தனர். மேலும் விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம் தலைமையில் பூலாவரி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆட்சேபனை மனு கொடுத்தனர். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறும் போது, 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்துக்கான முழு வரைபடம், எப்படி செயல்படுத்த உள்ளார்கள்?, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு என்ன இழப்பீடு வழங்கப்படும் என்று கேட்டு இருந்தோம். ஆனால் இந்த முகாமில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதற்கு பதில் அளிக்க வில்லை.

கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஒரு ஏக்கருக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி ஆகும். ஆனால் அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.8 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. எனவே இந்த திட்டம் செயல்படுத்தினால் விவசாயத்தையே நம்பி இருக்கிற மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள். எனவே 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார்.

ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுக்க ஏராளமான விவசாயிகள் வந்ததாலும், இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தி மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சியுடன் பள்ளி செல்வோம்!





பள்ளிகள் இனிதே தொடங்கிவிட்டன. ஆனால் பள்ளிக்கு வரும் சில தம்பிகளும், பாப்பாக்களும் அழுது கொண்டிருப்பார்கள். அது தவறாகும்.

ஜூன் 15, 2018, 05:00 AM

பள்ளி என்பது வாழ்க்கைப் பயணத்திற்கு ஒளியூட்டும் இடம். பள்ளி செல்வதை வெறுக்கக்கூடாது.

ஒரு மாதம் முதல் 2 மாதம் வரை கோடை விடுமுறையை ஜாலியாக அனுபவித்திருக்கிறோம். சுற்றுலா சென்று மகிழ்ந்தோம். உறவினர் வீடுகளுக்குச் சென்று உறவு வளர்த்தோம். டி.வி., ஸ்மார்ட்போன், விளையாட்டு என்று குதூகலமாக இருந்தோம். இப்படி சந்தோஷமாக இருந்துவிட்டு, பள்ளி திறந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பள்ளி செல்வது மனசுக்குள் கொஞ்சம் வருத்தமாக இருக்கலாம். ஆனாலும் பள்ளி செல்வதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது.

காலையில் எழுந்ததும் காலைக் கடன்கள் முடிக்க வேண்டும், பள்ளி கிளம்ப வேண்டும். பகலில் பள்ளிப்பாடம், மாலையில் வீட்டுப்பாடம் என நிறைய வேலை இருக்கும். விடுமுறையில் சதா பொழுதுபோக்கி மகிழ்ந்துவிட்டு, பள்ளி திறந்ததும் ஒரே ஓட்டமாக இருப்பதும் சிலருக்கு பள்ளி மீது சலிப்பைத் தரலாம்.

இருந்தாலும் பள்ளி செல்வது முக்கியமானது. பாட வகுப்பிலும், பள்ளிச் சூழலிலும்தான் மகிழ்ச்சியாக வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொள்ள முடியும். பள்ளிச்சூழல் மகிழ்ச்சியானது என்பதை பெரியவர்களாக வளர வளர புரி்ந்து கொள்வீர்கள். உங்கள் அம்மாவும், அப்பாவும் மகிழ்ச்சியான பள்ளிப் பருவத்தைப் பற்றி உங்களிடம் பேசி இருப்பார்களே? பள்ளி சென்று ஒழுங்காக படிக்காத பக்கத்துவீட்டு மாமாவின் கதையையும் உங்களுக்குச் சொல்லியிருப்பார்களே; படிக்காத அந்த மாமா தினம் தினம் கடினமான வேலை செய்வதையும், மகிழ்ச்சி இல்லாமல் வாழ்வதையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம், பள்ளி சென்று படிப்பதுதான் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும். எனவே பள்ளி செல்வதை வெறுக்கக்கூடாது.

பள்ளிக்கு செல்வதால் நீங்கள் புதிய நண்பர்களைப் பெறலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு பழகிய நண்பர்களையும் கோடை விடுமுறைக்குப் பின்பு சந்திக்கலாம். அவர்களிடம் கோடை விடுமுறை அனுபவங்களை பகிர்ந்து மகிழ்ச்சி கொள்ளலாம். நீங்கள் சுற்றுலா சென்றபோது நடந்த சுவையான சம்பவங்கள், நீங்கள் கண்டு ரசித்த இடங்கள், உண்டு புசித்த உணவுகள் எல்லாவற்றையும் ஜாலியாகப் பேசி மகிழலாம்.

மீண்டும் பள்ளிக்குப் புறப்படுவதால் நீங்கள் ஆசைப்பட்டுக் கேட்டதையெல்லாம் பெற்றோர் வாங்கிக் கொடுத்திருப்பார்கள் இல்லையா? புதிய பேக், ஷூ முதல் பேனா, பொம்மை வரை நீங்கள் கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமே. அதுவே ஆசையுடன் உங்களை பள்ளி செல்லத் தூண்டியிருக்குமே. பெற்றோர் வாங்கித் தந்த புதிய புத்தகப்பையை மாட்டிக்கொண்டு ஜாலியாக பள்ளிக்குப் புறப்படுங்கள். பள்ளிக்குப் போனால் நான் கேட்டதெல்லாம் அப்பாவும் அம்மாவும் வாங்கித் தருவார்கள் என எல்லோரிடமும் மகிழ்ச்சியுடன் சொல்லுங்கள். நன்றாகப் படித்தால் நினைத்ததெல்லாம் வாழ்வில் கிடைக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு நன்றாகப் படியுங்கள்.

ஆசிரியை அடிப்பார் என அஞ்ச வேண்டாம். உங்களை நல்வழிப்படுத்தவே ஆசிரியர் கண்டிப்புடன் நடந்து கொள்வார். நீங்கள் நல்லவிதமாக நடந்து கொண்டால் உங்களை ஆசிரியர் திட்டவே மாட்டார். நீங்கள் சமத்தாக நடந்துகொண்டு, வகுப்பில் சேட்டை செய்யாமல், வீட்டுப்பாடங்களை ஒழுங்காக முடித்துக் கொண்டு சென்றால் ஆசிரியர் உங்களுக்கு ‘வெரிகுட்’ மற்றும் ‘ஸ்டார்’ வழங்கி பாராட்டுவார்களே, தவிர உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். எனவே நீங்கள் அச்சமின்றி பள்ளி செல்லுங்கள்.

படிப்பதில் எவ்வளவு ஆனந்தம் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் பள்ளி செல்வதை வெறுக்க மாட்டீர்கள்.படிப்பதால் அறிவு வளர்ச்சி அடைகிறது, மனதில் மகிழ்ச்சி பெருகுகிறது. வாழ்க்கைச் சூழலை அறிந்து கொண்டு எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்க்கிறது. புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். விளையாட்டுகளையும், விஞ்ஞானத்தையும் அறிந்து கொள்கிறோம். சவால்களை சந்திக்கும் சாதுரியத்தை கல்வியாற்றல் பெருக்குகிறது. கல்வி சாதாரண நிலையில் இருப்பவர்களை வாழ்வில் உச்சம் தொட வைக்கிறது. இப்படி வாழ்க்கையில் மாற்றம் தரும் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக தவறாமல் பள்ளி செல்வோம், வாழ்வில் உயர்வோம்!

பெற்றோர் கவனத்துக்கு...

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடிக்க பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் பயமே அதற்கு அடிப்படையாக இருப்பதால், நிஜமான பயத்திற்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதை அகற்றப் பாருங்கள்...

வயிறு வலிக்கிறது, பல் வலிக்கிறது என்று குழந்தைகள் ஏதாவது காரணம் கூறி பள்ளி செல்வதை தவிர்க்கவும், தாமதப்படுத்தவும் செய்கிறார்கள் என்றால் அதற்கு வளர்ப்பு முறை அல்லது பள்ளிச்சூழலில் ஏற்படும் விருப்பமற்ற நிகழ்வுகள் காரணமாக இருக்கலாம். புதிய நண்பர்கள், ஆசிரியர்களின் அணுகுமுறைகூட அவர்களின் அச்சத்திற்கு காரணமாக இருக்கலாம்.

‘நீ சேட்டை செய்தால் பள்ளியில் டீச்சர் திட்டுவார்கள், அடிப்பார்கள்’ என்று நாம் பயமுறுத்தி வளர்ப்பது அவர்கள் பள்ளியை வெறுக்க காரணமாக இருக்கலாம். இப்படி தவறான வழிகாட்டலை பெற்றோர் கைவிட வேண்டும்.

குழந்தைகள் பள்ளி கிளம்பும் சமயத்தில் பல் துலக்குவது, குளிப்பது, சாப்பிடுவது என எல்லா செயல்களையும் அவர்களே சொந்தமாக செய்யப் பழக்கப்படுத்துவது அவசியமாகும். நேரமாகிறது, அவசரம் என்று நீங்களே குளிப்பாட்டிவிடுவது, உணவு ஊட்டிவிடுவது என வழக்கப்படுத்துவது குழந்தைகளை சோம்பேறியாக்கிவிடும். அவை தாங்கள் செய்ய வேண்டிய கடமை என்பதை அவர்கள் மறந்து செயல்பட ஆரம்பிப்பார்கள். அதேபோல பொது இடங்களில் பேண வேண்டிய சுத்தம், சுகாதாரம் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இரவில் சீக்கிரம் தூங்க வைக்க வேண்டும். அதற்கு நேரத்திற்கு வீட்டுப்பாடம் முடித்து, இரவு உணவு கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு செயலும் தாமதமானால், தூங்குவதும் எழுவதும் தாமதமாகும், பின்னர் கிளம்புவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு புலம்ப வைத்துவிடும்.

புதிதாக பள்ளி செல்கிறார்களா?

இப்போதெல்லாம் 2½ வயது முதலே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தொடங்கிவிடுகிறோம். சின்னஞ்சிறு வயதில் பள்ளி செல்ல தொடங்கும் குழந்தைகள், பெற்றோரை பிரிய மனமின்றி அதிகம் அழுவார்கள். அவர்களின் அச்சம்போக்கும் வகையில் பேச வேண்டும். வகுப்பு ஆசிரியர் மற்றும் சக மாணவ-மாணவிகளுடன் சகஜமாக பழகும் சூழலை உருவாக்க வேண்டும்.

குழந்தைகளை மற்றவர்களுடன் சேரவிடாமல் அறைக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்ப்பது இதுபோன்ற சிக்கல்களை உருவாக்கலாம். பூச்சாண்டி வருகிறான் பாரு, சேட்டை செய்தால் டீச்சரை அடிக்கச் சொல்வேன் என்பதுபோன்ற மிரட்டல்களுடன் குழந்தைகளை வளர்க்கக்கூடாது.

பள்ளியில் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், ஆசிரியர் சொல்வதுபோல நடக்காவிட்டால் அடிப்பார் என்றெல்லாம் பயமுறுத்தக் கூடாது.
மாநில செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: அ.தி.மு.க. அரசுக்கு தற்காலிக நிம்மதி




18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கூறி இருப்பது, அ.தி.மு.க. அரசுக்கு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, 3-வது நீதிபதியின் இறுதி தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையே நீடிக்கும்.

ஜூன் 15, 2018, 05:45 AM
சென்னை,


முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனி சாமியை நீக்க கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க் கள் 19 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.

இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க் களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று மதியம் 1 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக ஏராளமான வக்கீல்களும், பத்திரிகை, தொலைக் காட்சி நிருபர்களும் கோர்ட்டு அறையில் கூடி இருந்தனர். இதனால் கோர்ட்டு அறையில் கூட்டம் நிரம்பி இருந்தது.

மதியம் 1.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதாவது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறினார்.

அதேசமயம், 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு வழங்கினார்.
முதலில், தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தீர்ப்பை வாசித்தார். ‘இந்த வழக்கில் எனது கருத்து என்னவென்றால்...’என்று கூறி அவர் தீர்ப்பை வாசிக்க தொடங்கியதுமே கோர்ட்டில் இருந்த பலருக்கு, இந்த தீர்ப்பு மாறுபட்ட தீர்ப்பாகத்தான் இருக்கும் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி, “18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும்” என்று தீர்ப்பு கூறினார்.

பொதுவாக 2 நீதிபதிகள் அமர்ந்து ஒரு வழக்கை விசாரிக்கும்போது மூத்த நீதிபதியின் தீர்ப்பில் உடன்படுவதாக இருந்தால் அவருடன் அமர்ந்து வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மூத்த நீதிபதி வாசித்த தீர்ப்பில் கையெழுத்திடுவது வழக்கம். மூத்த நீதிபதியின் தீர்ப்பில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி, மூத்த நீதிபதியின் தீர்ப்பில் இருந்து மாறுபடுவதாக கூறி தனது தீர்ப்பை வாசிப்பார்.

அதன்படி நீதிபதி எம்.சுந்தர், தலைமை நீதிபதியின் தீர்ப்பில் இருந்து மாறுபடுவதாக கூறி தனது தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.

அவர், “சபாநாயகரின் நடவடிக்கை இயற்கை நீதிக்கு புறம்பானது; உள்நோக்கம் கொண்டது. எனவே, 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது” என்று தீர்ப்பு கூறினார்.

இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்ட இருப்பதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கை மாற்றம் செய்வதாகவும், ஏற்கனவே இந்த வழக்கை நான்(தலைமை நீதிபதி) விசாரித்து உள்ளதால் மூத்த நீதிபதியான ஹுலுவாடி ஜி.ரமேஷ், 3-வது நீதிபதி யார் என்பதை முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் கோரிக்கை ஒன்றை வைத்தார். 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் ஏற்கனவே ஐகோர்ட்டு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், எனவே 3-வது நீதிபதியின் விசாரணை முடிவடையும் வரை இந்த இடைக்கால உத்தரவு தொடர உத்தரவிடவேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு தலைமை நீதிபதி, 3-வது நீதிபதியின் விசாரணை முடிவடைந்து இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த இடைக்கால உத்தரவு (தற்போதைய நிலை) தொடரும் என்று உத்தரவு பிறப்பித்தார். தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரின் தீர்ப்பு மொத்தம் 327 பக்கங்களை கொண்டதாக இருந்தது.

முதலில் தலைமை நீதிபதியின் தீர்ப்பை கேட்டதும் அ.தி.மு.க. வக்கீல்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதேசமயம் டி.டி.வி.தினகரன் ஆதரவு வக்கீல்கள், தி.மு.க. வக்கீல்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

தலைமை நீதிபதியின் தீர்ப்பில் இருந்து மாறுபடுவதாக நீதிபதி எம்.சுந்தர் கூறியதும், குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு கோர்ட்டு அறையில் அமைதி நிலவியது. நீதிபதி எம்.சுந்தர் தனது தீர்ப்பை வாசித்து முடித்ததும் அந்த மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் முடிவுக்கு வந்தது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை கூறி இருப்பது, அ.தி.மு.க. அரசுக்கு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 3-வது நீதிபதியின் இறுதி தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையே நீடிக்கும் என்பதால், அதுவரை அரசுக்கு நெருக்கடி எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
தலையங்கம்

வங்கி சேவைக்கு கட்டணமா?




வங்கிகள் என்பது பொதுமக்களின் சேமிப்பு பணத்தை பாதுகாக்கவும், அவர்கள் விரும்பும்போது பணத்தை போடவும், வேண்டியநேரத்தில் திரும்ப எடுக்கவும் வகைசெய்யும் ஒரு அமைப்பாகும்.

ஜூன் 15 2018, 03:00

வங்கிகள் என்பது பொதுமக்களின் சேமிப்பு பணத்தை பாதுகாக்கவும், அவர்கள் விரும்பும்போது பணத்தை போடவும், வேண்டியநேரத்தில் திரும்ப எடுக்கவும் வகைசெய்யும் ஒரு அமைப்பாகும். பொதுமக்களின் சேமிப்பை பாதுகாப்பதோடு அதன் கடமை முடிந்துவிடுவதில்லை. விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர் ஆகியோர்களின் அன்றாட வரவு–செலவுகளை பாதுகாப்பாக நடத்துவதற்கும் பயன்படுகிறது. பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில்அதிபர்கள் போட்டுவைக்கும் பணத்தை கொண்டுதான், மீண்டும் கல்விக்கடனாக, நகைக்கடனாக, விவசாயகடனாக, வாகனகடனாக, தொழில் தொடங்கும் கடனாக, தனிநபர் கடனாக என்று வழங்கி வட்டியோடு திரும்ப பெறுகிறது. ஆக, பொதுமக்களின் பணத்தை எடுத்துக்கொண்டு, மீண்டும் அவர்களில் தேவைப்பட்டவர்களுக்கு கடனாக வழங்கிக்கொண்டே இந்த சேவைகளை வங்கிகள் செய்கிறது. 2014–ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றும்போது, ‘இந்தியாவில் 80 சதவீத குடும்பங்களில் செல்போன்கள் இருக்கின்றன, ஆனால் வங்கிக்கணக்கு இல்லை’ என்று பேசியிருக்கிறார். அதன் காரணமாகத்தான் ‘ஜன்தன் யோஜனா’ என்ற அனைவருக்கும் வங்கிகணக்கு திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் ஏறத்தாழ இப்போது 10 கோடிபேர் புதிய வங்கி கணக்கை தொடங்கியிருக்கிறார்கள்.

வங்கிகளில் சேமிப்புகணக்குக்கு இலவசமாக ‘செக்புக்’ வழங்கப்படுகிறது. இதுதவிர, கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்., மையங்களில் இருந்து பணம் எடுத்தால் மாதம் 5 முறையும், பிற வங்கிகளின் ஏ.டி.எம்.–ல் இருந்து பணம் எடுத்தால் மாதம் 3 முறையும் இலவசமாக இந்த சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட சேவைகளுக்கு 2012–ம் ஆண்டு முதல் சேவைவரி, அதுமட்டுமல்லாமல் அதற்கு 18 சதவீத வட்டி, 100 சதவீத அபராதமும் சேர்த்து தற்போது செலுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியின் டைரக்டர் ஜெனரல் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சேவை கட்டணமே வசூலிக்காத ஏ.டி.எம். பணப்பரிமாற்றத்திற்கும், டெபிட் கார்டு பயன்பாடு போன்ற சேவைகளுக்கு பணம் வசூலிப்பது என்றால் எப்படி வாடிக்கையாளர்களை தேடிப்பிடித்து வங்கிகள் வசூலிக்க முடியும்? வசூலிக்காத சேவைகளுக்கு வரியையும், அபராதமும் விதிக்க சொல்லும் சூழ்நிலையில், இனிமேல் இந்த சேவைகளுக்கெல்லாம் கட்டணம் வசூலிப்பது குறித்து நிச்சயமாக வங்கிகள் பரிசீலிக்கும். இவ்வாறு ஒவ்வொரு சேவைக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வங்கிகள் முற்பட்டால் நிச்சயமாக வங்கிகள் மீது பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கையும், பிடிப்பும் இல்லாமல் போய்விடும். ஏற்கனவே வங்கிகளில் பொதுமக்கள் செய்யும் டெபாசிட்டுகளுக்கு குறைந்தளவுதான் வட்டி கிடைக்கிறது. குறைந்த வட்டியோடு கட்டணமும் வசூலித்தால் வங்கியில் பணம்போடுவதால் எந்தவித பயனும் இல்லை. எனவே மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும், மத்திய நிர்வாகங்களும் வாடிக்கையாளர்கள்மீது இத்தகைய சுமையை ஏற்றக்கூடாது. உடனடியாக இதை திரும்பப்பெற வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வங்கிகளில் தொடர்ந்து சேவைபெறும் வகையில் வங்கிகொள்கையையே மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கையை உடனடியாக மத்திய அரசாங்கம் பரிசீலித்து, வங்கி சேவைகள் எப்போதும்போல தொடர்ந்து கட்டணமில்லா சேவைகளாகவே இருக்க வேண்டும்.

Thursday, June 14, 2018

திருடு போன ஸ்மார்ட் சைக்கிள்கள்... முடங்கிய கோவை சைக்கிள் ஷேரிங் திட்டம்! 

இரா. குருபிரசாத்
தி.விஜய்
Coimbatore: 

vikatan 

பரபரப்பான வாழ்க்கையில் மக்கள் தொகைக்கு ஈடாக வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிஸி சிட்டியான கோவையின் மக்கள் தொகை 20 லட்சத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இதனால், சென்னையுடன் போட்டிபோடும் அளவுக்கு, கோவையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும், அதிகரிக்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.




இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சென்னையில் களமிறக்கப்பட்ட சீன நிறுவனமான ஓஃபோ (Ofo), பரீட்சார்த்த முறையில் கோவையிலும் சைக்கிள்களை களமிறக்கியது. ஜி.பி.எஸ் தொழில்நுட்பம், டிஜிட்டல் டிஸ்ப்ளே, மொபைல் ஆப் என `ஜென் Z' தலைமுறையினருக்குத் தகுந்த வடிவில், கோவையில் களமிறங்கியது சைக்கிள் ஷேரிங் திட்டம். சோதனை அடிப்படையில், மக்கள் பயன்பாட்டுக்கு விட்டு, பின்னர் மக்களின் எண்ண ஓட்டத்தைத் திரட்டும் பணியில் அந்நிறுவனம் இறங்கியது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தத் திட்டத்துக்காக ரூ.38 கோடியை ஓஃபோ நிறுவனம் ஒதுக்கியது. முதலில் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கல்லூரி வளாகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மற்ற பகுதிகளிலும் சைக்கிள் ஷேரிங் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆப்பை டவுன்லோடு செய்து, க்யூ. ஆர். கோட் மூலமாகவே சைக்கிளை அன்லாக் செய்ய முடியும். அதேபோல, ஜி.பி.எஸ் வசதி இருப்பதால், சைக்கிள் இருக்கும் இடத்தையும் கண்காணிக்க முடியும் என செக்யூரிட்டி வசதிகளும் இந்த சைக்கிளில் ஏராளம். ஆனால், நாளடைவில் ஓஃபோ நிறுவனத்துக்கு அடி மேல் அடி விழுந்தது. சிலர் அந்த சைக்கிளை உடைத்தனர். சிலர் சைக்கிளை தங்களது வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். சிலர், சைக்கிளுக்கு கலர் பெயின்ட் அடித்துப் பயன்படுத்தி வருகின்றனர். சைக்கிளை குளத்தில் போட்டவர்களும் உண்டு. இது ஒருபுறமிருக்க, ஓஃபோ நிறுவனத்தின் சைக்கிள் திட்டம், பல நாடுகளில் தோல்வியைத் தழுவி, மலையைப் போல சைக்கிள்கள் குப்பையாகக் குவிக்கப்பட்டிருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக, தங்களது குப்பைக் குவியலை இந்தியாவில் களமிறக்கவே ஓஃபோ இங்கு வந்துள்ளது எனவும் கூறப்பட்டது.



இதுகுறித்து ஸ்மார்ட்சிட்டி அதிகாரிகள் கூறுகையில், ``சைக்கிள் ஷேரிங் என்பது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முக்கியமான ஒன்று. இதற்காக ஓஃபோ நிறுவனம், கடந்த மூன்று மாதங்களாக சோதனை அடிப்படையில்தான் சைக்கிள்களை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. கடந்த, மூன்று மாதங்களாக மக்கள் இதைப் பயன்படுத்தும் செயல்பாடுகள் குறித்த தகவல்களை, அந்நிறுவனம் திரட்டியுள்ளது. இந்த மூன்று மாதங்களில் பல சைக்கிள்கள் சேதமடைந்தது உண்மைதான். ஆனால், இதை நினைத்து அந்நிறுவனம் வருத்தப்படவில்லை. `வெளிநாடுகளிலும், இதுபோன்ற சேதங்கள் ஏற்படுவது சகஜம்தான்' எனக் கூறுகிறார்கள். மேலும், கோவையில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், மிகவும் திருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

`தற்போது, திரட்டியுள்ள தகவல்களை வைத்து, கோவையில் சைக்கிள் ஷேரிங்கை எப்படிச் செயல்படுத்தலாம் என்ற தெளிவான திட்டத்தோடு மீண்டும் வருகிறோம்' என ஓஃபோ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கான, டெண்டரில் ஓஃபோ நிறுவனமும் கலந்து கொள்ளும். அதில், எங்களது விதிமுறைகளுக்குத் தயாராக உள்ள நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவோம். மீண்டும் ஓஃபோவே வருவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும், 'இந்த சைக்கிள் சேதங்களால் ஏற்படும் குப்பைகளுக்கு அந்தச் சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் பொறுப்பு' என்றும் கூறியுள்ளோம்" என்றனர்.




இதுதொடர்பாக கருத்துக் கேட்க ஓஃபோ நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை.

TIME SCHEDULE BDS 2018-19


DGHS NOTICE 13.06.2018


NEP degree students who exited after 3 years asked to do 4th

NEP degree students who exited after 3 years asked to do 4th  DEGREE UNCERTAIN  Sruthysusan.Ullas@timesofindia.com 24.07.2026 Bengaluru : Co...