Friday, June 22, 2018

மாநில செய்திகள்

ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது




ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ஜூன் 22, 2018, 05:00 AM

மதுரை,

ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்பி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதனை ஒரு விதமான மனநோய் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த மனநோய் ரெயில் பயணிகளையும் விட்டுவைக்கவில்லை.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கேமராக்கள், வீடியோ கேமராக்களுக்கு பதிலாக செல்போன்கள் மூலம் இத்தகைய காட்சிகளை படமாக்கி மலரும் நினைவுகளாக்க முயலுகின்றனர். ஆனால் சிலர் பாலங்களில் ரெயில் செல்லும் போதும், ரெயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் ‘செல்பி’ எடுக்கின்றனர்.

இதனால், ரெயில்வேயில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை தடுக்க, ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரெயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் ‘செல்பி’ எடுப்பவர்கள், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க பறக்கும் படை டிக்கெட் பரிசோதகர்கள் தயாராக உள்ளனர். ஆனால், இது குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் ரெயில் நிலையங்களில் வைக்கப்படவில்லை.

No relief fir SBI customer who put amount in wrong account


No relief for SBI customer who put ₹49k in wrong a/c

Petlee.Peter@timesgroup.com

Bengaluru:22.06.2018

Keying in 8 instead of 0 on the cash deposit machine (CDM) left a State Bank of India customer poorer by ₹49,500 and brought nearly a year of his efforts to nought at the consumer court. While the bank said he was not eligible for a refund as his complaint lacked specifics, the court dismissed the case as one of human error.

The “error” was committed by Mahindra Kumar Yamanappa when he deposited the amount purportedly into his savings account through a CDM in Kalaburagi in Karnataka on July18, 2017.
Having made the deposit that afternoon, Yamanappa waited for the amount to show up in his account. When two days passed and no money was credited, Yamanappa approached his branch in Kalaburagi and lodged a complaint on July 20.

Apparently unaware of his mistake, Yamanappa cited his account number and sought to know why the amount had not been credited. The branch responded on August 30, 2017, after Yamanappa’s second complaint. By then, he had also gone to police, suspecting his account had been hacked.
Little did he know that it was a lost case. On August 3, 2017 — 14 days after he had informed bank authorities — Khan Shabab, an SBI customer in Adilabad in Telangana, swiped his card at an ATM, found an excess of ₹49,500 in his account and withdrew the entire sum.

In its response, SBI said the money had gone to Shabab’s account as Yamanappa had mistakenly keyed in 8 instead of 0. The SBI branch manager claimed that the bank authorities had written to the Adilabad branch on August 16 — 27 days after Yamanappa’s first complaint — and asked their counterparts in Telangana to retrieve the cash. That was that.

After four months of running around to retrieve his money, Yamanappa filed a complaint against SBI at the District Consumer Disputes Redressal Forum in Kalaburagi on November 28. In the litigation that ensued, he accused SBI authorities of failing to act in time to block his money though he had lodged a complaint within 48 hours of the deposit.

SBI’s counsel argued that the bank was not at fault since the customer had entered the wrong account number. Further, it was stated that Yamanappa, in his initial CDM complaint, failed to mention the erroneous account number and insisted that the money had been deposited to his account.

Thursday, June 21, 2018

அனுபவப் பகிர்வு: அன்பும், மனிதமுமே மாணவர்களை வழிநடத்தும்

Published : 19 Jun 2018 19:12 IST

சேகரன்

 


மூதாட்டி சாலையைக் கடக்க உதவிய மாணவர்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தைச் சார்ந்தவன் நான். சென்னையைப் பற்றிய மிகப் பெரிய பிம்பம் எனக்கு உண்டு. ஆனாலும் நான் சென்னையில் படிப்பதற்கான வாய்ப்பு உருவாகவில்லை. இதோ இப்போது நாற்பதுகளின் நடுவில் ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். எனக்கும்

சென்னைக்குமான உறவு பெரிதாக இல்லை என்றாலும் சென்னைக்கு மிக அருகில் வசிப்பவன் என்ற பெருமை ஒன்றே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.

நதிமூலம், ரிஷிமூலம் தேடினால் என் முன்னோர்கள் தொழில் நிமித்தமாகப் போய் வரும் இடம் சென்னையாகவே இருக்கிறது. இன்னும் எங்கள் ஊரில் சென்னையைப் பட்டணம் என்றே அழைக்கும் அளவுக்கு புராதன காலத்துடன் எங்களுக்குத் தொடர்பு உண்டு. அதனாலேயே என்னவோ யாராவது சென்னை பற்றி தப்பாகப் பேசினால் நடிகர் சந்தானத்தைப் போல எனக்கும் கோபம் வரும்.

இந்த சூழலில் என் பக்கத்து வீட்டுப் பையனைக் கல்லூரியில் சேர்ப்பதற்கு என்னையுடம் உடன் அழைத்திருந்தார்கள். ஓரளவு சென்னையில் சுற்றித் திரிந்திருந்தாலும் நுட்பமாக எனக்கு எதுவும் தெரியாது என்பதால் ஆரம்பத்தில் தயங்கினேன். அந்தப் பையன் கவுன்சிலிங் செல்ல என்னையே நம்பி இருந்ததால் பலத்த யோசனைக்குப் பிறகு சம்மதம் சொன்னேன். ரயிலில் எங்கள் பயணம் தொடர்ந்தது. இதெல்லாம் கொஞ்சம் அவுட் ஆஃப் சிலபஸ்தான். இன்ட்ரோ என்பதால் கொஞ்சம் பொறுத்தருள்க.

எந்த கெடுபிடியும் இல்லாமல் இலவசமாகக் கொடுக்க முடிவதும், கேட்க முடிவதும் அட்வைஸ்தான் என்று நம்பிக்கொண்டிருந்தவன் நான். 3 மணி நேரத்தைக் கழிக்க வேண்டுமே என்று பையனிடம் எனக்குத் தெரிந்ததையெல்லாம் அறிவுரை என்ற பெயரில் பேச ஆரம்பித்தேன். ஆனால், பசங்களுக்குப் பிடிக்காதே ஒரே விஷயம் அட்வைஸ் என்று அந்தப் பையனிடம் பேசிய பிறகுதான் தெரிந்தது. வாய்ப்புகளின் தேசம் சென்னை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என ஒவ்வொரு இளைஞனின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான தன்னம்பிக்கை முனை சென்னை என்று நான் கதையளக்க, அந்தப் பையன் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு வாட்ஸ் அப்பில் வம்பளந்து கொண்டிருந்தான்.

ஒருகட்டத்தில் அறிவுரை பகர்வது அலுத்துப் போக, அவனின் ஒத்துழையாமை இயக்கம் அப்பட்டமாகத் தெரிய, தலைமுறை இடைவெளி தர்மசங்கடப்படுத்த, மீசையில் மண் ஒட்டாத வெற்று சமாளிப்புடன் செய்தித்தாளில் முகம் புதைத்தேன்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்ட செய்தியைப் படித்த போது எனக்கு மாணவர்கள் குறித்த கவலை அதிகரித்தது. கல்லூரி திறந்த முதல் நாளிலேயே மாணவர்கள் சிலர், பேருந்துகளின் கூரையில் ஏறி கத்திகளைச் சுற்றியபடி ரகளையில் ஈடுபட்டதும், பொதுமக்களும் பயணிகளும் அச்சமடைந்ததும் வருத்தத்தை ஏற்படுத்தின.

ரயிலில் கத்தியைச் சுழற்றி சாகசம் காட்டும் மாணவர்கள், தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடும் மாணவர்கள் என அடுத்தடுத்து மாணவர்கள் குறித்த நெகட்டிவ் செய்திகள் கால சுழற்சியில் என்னை பின்னோக்கி நகர்த்தின. பார்க்கிற காட்சிகள், படிக்கிற செய்திகள், கேள்விப்படும் தகவல்கள் என எல்லாமே

மாணவர்களுக்கு எதிராகவே இருக்கிறதே. ஆறுதலுக்காவது ஒரு சின்ன நல்ல விஷயம் நடந்துவிடக் கூடாதா என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்படி ஒரே விஷயத்தை அதி ஆழமாக இப்போது ஏன் சிந்திக்க வேண்டும்? அது ஆரோக்கியத்துக்கான ஆபத்து என்பதை உணர்ந்து உடனே அந்தச் சிந்தனைக்கு அணை போட்டேன். ரயில் சென்ட்ரல் வந்தடைந்தது.

அங்கிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரியை நோக்கிப் பேருந்தில் சாலையேயே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சி என்னை நெறிப்படுத்தியது. என் பார்வையை மாற்றியமைத்தது.

மாணவர்கள் குறித்தும், அவர்களின் ஒழுக்கம் குறித்தும் நாமே சில முன்முடிவுகளால், கேள்விகளால் ஒட்டுமொத்தமாகக் கட்டியெழுப்பி நீ வேஸ்ட் என்று ஒரேயடியாக ஓரங்கட்டி விடுகிறோமோ என்று எனக்குத் தோன்றியது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு மூதாட்டி கடும் வெயிலில் சாலையைக் கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். யாராவது உதவிக்கு வருவார்களா என்று வழிமேல் விழி வைத்து அவர் காத்துக் கொண்டிருக்கையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் சகஜமாகப் பேச்சுகொடுத்தபடி அந்த மூதாட்டி சாலையைக் கடக்க உதவினர். சாலையைக் கடக்க வேண்டும் என்ற பரபரப்பிலும், பதற்றத்திலும் இருந்த அந்த மூதாட்டி அடுத்த நிமிடத்திலேயே எந்த அந்நியத்தன்மையும் இல்லாமல் இயல்பாக அவர்களுடன் நடந்தார்.

பாசாங்கு இல்லாத ஓர் அன்பின் நிமித்தமாய் மூதாட்டிக்கும், அந்த மாணவர்களுக்கும் இடையே சின்னதாய் ஓர் உரையாடல் அரங்கேறியது. சக உயிர் மீதான நேசத்தை இயல்பாக அங்கே மாணவர்கள் வெளிப்படுத்தியதைக் கண்டதும் எனக்குள் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி.

ஒரு குறிப்பிட்ட கல்லூரியோ, கல்லூரி மாணவர்களோ ஆபத்தானவர்கள், பிரச்சினை செய்பவர்கள், கலகம் விளைவிப்பவர்கள், ரவுடியிசம் செய்பவர்கள் போன்ற பிம்பம் உள்ளது. அதுவே ஒட்டுமொத்த கல்லூரியின் / மாணவர்களின் பிம்பமாக, அடையாளமாக, கற்பிதமாக கட்டமைக்கப்படுகிறது. அந்த பிம்பம் போலியானது அது நிரந்தரமல்ல வெகுவிரைவில் மாறும் என்ற நம்பிக்கை மூதாட்டிக்கு உதவிய மாணவர்களின் செயலால் துளிர்த்தது. அந்த சம்பவம் தந்த உற்சாகத்துடன் அவனைக் கல்லூரியில் சேர்த்துவிட்ட திருப்தியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

இப்போதும் சென்னையில் டிராஃபிக் நெரிசலை சரி செய்யும் மாணவர்கள் இருக்கிறார்கள், சக மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் உதவுகிறார்கள், பால் பாக்கெட், பேப்பர் போட்டு அதன்மூலம் தனக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துகிறார்கள், முதல் தலைமுறையின் அத்தனை கஷ்டங்களையும் தாங்கி தடைகளைத் தாண்டுகிறார்கள்.

அந்தப் பையனின் அம்மா, ''என் பையன் சேர்ந்திருக்கிறது நல்ல காலேஜ்தானா தம்பி'' என்று கேட்டார். நான் பார்த்த சம்பவத்தை மனதுக்குள் நினைத்தபடி, ''உங்க பையன் நல்ல ஆளுமையா வருவான். கவலைப்படாதீங்க அக்கா. அவன் சேர்ந்திருக்கும் இடம் அவனுக்கு நல்லதைக் கற்றுக்கொடுக்கும். நிச்சயம் பெரியவங்களை மதிச்சு நடக்கிற பையனா பேர் சொல்லும்படியா வருவேன்'' என்றேன்.

அந்த அக்காவும் ''சரி தம்பி'' என்று யோசனையுடனேயே நகர்ந்தார். அவர் கேட்டதும், நான் சொன்னதும் சம்பிரதாயமான கேள்வி பதில்தான் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காது. ஆனால், ஒன்றை மட்டும் ஒப்புக்கொள்ள வேண்டும். அரிய செயல்கள், சிறிய செயல்கள் என எதுவானாலும் மனிதத்தை நோக்கிய முதல் புள்ளி மாணவர்களிடமிருந்துதான் தொடங்குகிறது.

சின்ன விஷயத்தை பூதாகரமாகப் பெரிதுபடுத்தி வசைபாடுவதை விட, சின்னச்சின்ன நல்ல விஷயங்களை பெரிதாகப் பாராட்டினால், அங்கீகரித்தால் மாணவர்களிடையே மகத்தான மாற்றத்தைக் காணலாம். ஏனெனில், அன்பும், மனிதமுமே மாணவர்களை வழிநடத்தும். இது அனுபவ மொழி அல்ல. காட்சியின் மொழி.

ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி!


திருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரது காலை பிடித்து கொண்டு கண்ணீர்விட்டு கதறியது அனைவரையும் உருக வைத்துவிட்டது.

வெள்ளியகரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர் இருப்பதாக கூறி ஆங்கில ஆசிரியர் பகவானை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
 இதற்கான உத்தரவு நகலை வாங்கி கொண்டு செல்ல முயன்ற அவரிடம் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி மாணவர்கள் காலை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர். நீங்கள் பாடம் நடத்தினால் அனைவரும் தேர்ச்சி பெறுவோம் என்று கூறி மாணவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
மாணவர்கள் அழுவதை கண்ட ஆசிரியரும் கண்கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். மாணவர்கள் கதறி அழுததால் பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர்களும் செய்வதறியமால் திகைத்து நின்றனர். ஆசிரியர்கள் மாற்றப்படுவதை எதிர்த்து பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு நேற்று முன்தினம் போராட்டமும் நடத்தினர்.  இந்நிலையில் மாணவர்களின் பாசப்போரட்டதால் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தினகரன்

ஈக்காட்டுதாங்கலில் சாலை மறியல் ஈடுபட முயன்ற ஓலா கால்டாக்சி ஓட்டுனர்கள் கைது

தினகரன் 2 hrs ago  21.06.2018
 
சென்னை: சென்னை ஈக்காட்டுதாங்கலில் சாலை மறியல் ஈடுபட முயன்ற ஓலா கால்டாக்சி ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களை பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள மண்டபங்களுக்கு அழைத்து சென்றனர்.
சில்க்ஏரின் ஜெட் விமானங்களில் சில ஸ்கூட்டுக்கு மாற்றம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 

21/6/2018 20:44

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/singapore-airlines/4058442.html

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சில்க்ஏர் (SilkAir) ஜெட் விமானங்களில் சிலவற்றை சிங்கப்பூரின் மலிவுக்கட்டண விமான நிறுவனமான ஸ்கூட்டுக்கு (Scoot), மாற்றிவிடத் திட்டமிடுகிறது.

ஏர் ஏஷியா, லயன் ஆகிய மலிவுக்கட்டண விமானக் குழுமங்களால் எழுப்பப்படும் போட்டியைச் சமாளிப்பதே அதன் நோக்கம்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தனது செலவைக் குறைத்து, வருமானத்தை அதிகரிக்கும் 3 ஆண்டு முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறது.

மூவாண்டுத் திட்டத்தின், முதற்கட்ட முயற்சியாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே தென் கிழக்காசியப் பயணத் தடங்கள் ஐந்தை சில்க்ஏரிடமிருந்து ஸ்கூட்டுக்கு மாற்றிவிட்டது.

எத்தனை ஜெட் விமானங்கள், மாற்றிவிடப்படவுள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
அறுவை சிகிச்சைக்கு 4 ஆண்டுகள் காக்கவைக்கும் எய்ம்ஸ்

Published : 21 Jun 2018 10:39 IST


சந்தனார்




அறுவை சிகிச்சைக்காக ஒருவர் எத்தனைக் காலம் காத்திருக்கலாம்? டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கிறார்கள் நோயாளிகள். இதயத்தில் ஓட்டை இருப்பதால், அறுவை சிகிச்சை தேவைப்படும் ஆறு மாதக் குழந்தைக்கு 2023-ல்தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துவிட்டது. “தனியார் மருத்துவமனைகளில் பெரிய அளவில் செலவாகும். என்ன செய்வது, என் குழந்தையைக் காப்பாற்ற நான் கடன் வாங்கித்தான் தீர வேண்டும்” என்று புலம்புகிறார் அந்தப் பெண் குழந்தையின் தந்தை.

எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாகவே தொடரும் பிரச்சினை இது. புற்றுநோய், மூளையில் கட்டி போன்ற பாதிப்புகளுடன், இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகத் காத்திருந்து, கடைசி நேரத்தில் வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் பலர். எதிர்பாராத செலவால் பெருமளவில் கடன் வாங்க நேர்ந்தவர்களின் கதைகளும் ஏராளம். அம்மருத்துவமனைக்குத் தினமும் 10,000 புறநோயாளிகள் வருகிறார்கள். 2,000 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளின் மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு நோயாளிகளைப் பரிந்துரைப்பதால்தான் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது என்கிறார்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள். நாடு முழுவதும் ஏழே இடங்களில்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. எல்லா முக்கிய நகரங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் குறையும்.

NEWS TODAY 25.07.2026