Friday, September 21, 2018

சிவகங்கையில் மர்ம காய்ச்சல் பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு

Added : செப் 20, 2018 22:30

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில், பல கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எந்த வகை காய்ச்சல் என்பதை அறிய, நான்கு மண்டல பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்கின்றனர்.சிவகங்கை, சாக்கோட்டை, தேவகோட்டை, கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர் காய்ச்சலும், கை, கால் மூட்டுகளில் வலியும் ஏற்பட்டன.சிக்குன்குனியா, டைபாய்டாக இருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பக்கத்து கிராமங்களுக்கும் காய்ச்சல் பரவியது.எந்த வகை காய்ச்சல் என்பதை அறிய திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர் மண்டல பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்கின்றனர். அவர்கள் கொசு, வைரஸ் வகைகளை கண்டறிதல், காய்ச்சல் பரவும் விதம் ஆகியவற்றை வைத்து, ஆய்வு செய்கின்றனர்.சுகாதாரத் துறையினர் கூறியதாவது:குடிநீரை குளோரினேட் செய்யாதது, கழிவு கலந்தது, தண்ணீரை தேக்கி வைத்தது, குளத்து நீரை அருந்தியது போன்ற காரணங்களால், காய்ச்சல் பரவியுள்ளது.ஒரே வகையான காய்ச்சலாக இருந்தால் எளிதில் கட்டுப்படுத்தலாம். ஆனால், ஒரே கிராமத்தில் பலவகை காய்ச்சல் பாதிப்பு இருப்பது போல் தெரிகிறது. அதனால், பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
28ம் தேதிமருந்து கடைகள்அடைப்பு

Added : செப் 20, 2018 20:53

சென்னை, :மருந்து, மாத்திரையை,'ஆன்லைனில்' வாங்கிக்கொள்ள வழி செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மருந்துக் கடைக்காரர்கள், தங்களின் வணிகம் பாதிக்கப்படும் என்கின்றனர்.மத்திய அரசு, அதை திரும்ப பெறக்கோரி, 28ம் தேதி நாடு முழுவதும், மருந்துக் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். தமிழகத்தில் மருந்து கடைகள் மூடப்படும் என, தெரிகிறது.
விமானத்தில் பறக்க ஊழியர்களுக்கு சலுகை

Added : செப் 20, 2018 19:56


புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை கால பயணச்சலுகை கட்டணத்தில், ஜம்மு - காஷ்மீர், அந்தமான் தீவுகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு, விமானத்தில் சென்று வர, இரண்டு ஆண்டுகளுக்கு சலுகை நீட்டிக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை கால பயணச்சலுகை கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி, அவர்கள் வசம் உள்ள, சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினத்தை ஒப்படைத்து, அவர்கள், குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம். இதற்கான பயணச் செலவை, அரசு ஏற்கும்.இந்த திட்டத்தில், 2014ல், புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் அந்தமான் தீவுகளுக்கு சென்று வர, விமான கட்டணம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்த சலுகை, 2018 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த மாதத்துடன், இந்த சலுகை முடிவடையும் நிலையில், அதை மேலும் இரண்டு ஆண்டு களுக்கு நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.விடுமுறை கால பயணச்சலுகை கட்டணத்தில் மோசடி செய்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நர்சிங்கிற்கு, 'நீட்' கிடையாது அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

Added : செப் 20, 2018 22:10 | கருத்துகள் (1)

சென்னை, ''பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெறாது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தமிழகம் - புதுச்சேரி மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான, 'மெட்ரனலைன் - 18' என்ற, கருத்தரங்கை துவக்கி வைத்து, அவர் கூறியதாவது:தமிழக மாணவர்களுக்கு, நீட் தேர்வில்இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான், அரசின் நிலைப்பாடு. எனவே, பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, நீட் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறாது. இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு, சுகாதாரத் துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். தேவைப்பட்டால், முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்தி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்.இவ்வாறு, விஜயபாஸ்கர் கூறினார்.

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்

Added : செப் 21, 2018 02:34 |



கோல்கட்டா : மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, ஜாதவ்பூர் பல்கலை சார்பில் வழங்கப்பட இருந்த, கவுரவ டாக்டர் பட்டத்தை, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 45, ஏற்க மறுத்துவிட்டார்.

மேற்கு வங்கத்தில், உள்ள ஜாதவ்பூர் பல்கலையின், 63ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, டிச., 24ல் நடக்கவுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் நட்சத்திர வீரர், சச்சின் டெண்டுல்கருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, பல்கலை நிர்வாகம் முடிவு எடுத்தது. இது குறித்து, சச்சினுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க, சச்சின் மறுத்து விட்டார்.

ஏற்கப்போவதில்லை:

இது குறித்து, பல்கலை துணை வேந்தருக்கு, அவர் அனுப்பிய கடிதத்தில், கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது, தார்மீக ரீதியில் தனக்கு சரியாக படவில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள, ஆக்ஸ்போர்டு பல்கலை, தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் தர முன் வந்தபோதும், அதை ஏற்க சச்சின் மறுத்து விட்டார். வேறெந்த பல்கலை இந்த நடவடிக்கை மேற்கொண்டாலும், அதை ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
சிறப்புக் கட்டுரைகள்

மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, ஜியோமி நிறுவனம்




ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவின் ஜியோமி நிறுவனம் கடந்த வாரம் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 19, 2018 13:02 PM

‘ரெட் மி 6’, ‘ரெட் மி 6 ஏ’ மற்றும் ‘ரெட் மி 6 புரோ’ என்ற பெயரிலான இந்த ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டிருப்பதோடு வெவ்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற விலையிலும் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட் மி 6

‘ரெட் மி 6’ ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா மற்றும் ஆக்டோ கோர் புராஸெசர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் 12 என்.எம். செயலி இருப்பதால் இது 48 சதவீதம் குறைவான சக்தியைப் பயன்படுத்துகிறது. இதன் தொடு திரை 5.45 அங்குலம் கொண்டது. இதன் மேல் பாகம் பாலி கார்பனேட்டால் ஆனது. இதன் பின்பகுதியில் 12 மெகாபிக்செல் மற்றும் 5 மெகாபிக்செல் திறன் கொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன. இதனால் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முடியும். இதன் முன்பகுதியில் உள்ள 5 மெகா பிக்செல் கேமரா செல்பி பிரியர்களுக்கு வரப்பிரசாதமாகும்.





இது இரண்டு வகைகளில் வருகிறது. முதல் இரண்டு மாதங்களுக்கு அறிமுக விலையாக 3 ஜி.பி.ரேம் மற்றும் 32 ஜி.பி. உள்நினைவகம் கொண்ட மாடல் ரூ.8 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. அதேசயம் 3 ஜி.பி.ரேம், 64 ஜி.பி. உள்நினைவக மாடல் ரூ. 9,499 ஆகவும் இது விற்பனைக்கு வந்துள்ளது.

ரெட் மி 6 ஏ

‘ரெட் மி 6 ஏ’ மாடல் 5.45 அங்குல தொடு திரை கொண்டது. இதன் விலை ரூ. 5,999 ஆகும். இதில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதில் 13 மெகா பிக்செல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்செல் முன்புற கேமரா உள்ளது.




இதில் முகத்தை அடையாளம் கண்டு திறக்கும் ‘பேஸ் அன்லாக் சிஸ்டம்’ உள்ளது. இதில் இரண்டு சிம் ஸ்லாட்கள் உள்ளன. இது தவிர மைக்ரோ எஸ்.டி. கார்டுக்கென தனி ஸ்லாட் உள்ளது. இதில் மற்றொரு மாடலின் விலை ரூ. 6,999. இதில் 2 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. திறன் கொண்டது.

ரெட் மி 6 புரோ

‘ரெட் மி 6 புரோ’ இது ஸ்டைலான வடிவமைப்போடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோகோர் செயலியுடன் வந்துள்ளது. இதில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி இருப்பது சிறப்பம்சமாகும். இதன் பேட்டரி இரண்டு நாள் வரை செயல்படும்.





பின்பகுதியில் 12 மெகா பிக்செல் மற்றும் 5 மெகாபிக்செல் ஏஐ (கிமி) கேமரா உள்ளது. உலோக வடிவமைப்பு இதற்கு ஸ்டைலான தோற்றப் பொலிவை அளிக் கிறது.

3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. உள்நினைவகம் மற்றும் 4 ஜி.பி.ரேம், 64 ஜி.பி. உள்நினைவகம் என இரு மாடல்களில் இது வந்துள்ளது. 3 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 10,999-க்கும் மற்றும் 4 ஜி.பி.ரேம் மாடல் ரூ.13 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது.

சலுகை

இந்த போன்களை பிளிப்கார்ட் இணையதளம் மூலம் வாங்க முடியும். ஹெச்.டி.எப்.சி. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குவோருக்கு ரூ.500 ‘கேஷ் பேக்’ சலுகையும் அளிக்கப்படுகிறது.
சிறப்புக் கட்டுரைகள்

வங்கிகள் இணைப்பு: யாருக்கு லாபம்?




மத்திய அரசு பரோடா வங்கி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி என்ற மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என்றும் இவை ஒரே பொதுத்துறை வங்கியாக செயல்படும் என்றும் திடீரென அறிவித்துள்ளது.
பதிவு: செப்டம்பர் 20, 2018 10:30 AM

வங்கிகள் இணைப்பு அறிவிப்பு என்பது மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை பிரதிபலிப்பதாகும். இன்றைய தேவையாக வங்கிகளை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும். இதற்கு பதிலாக இந்த இணைப்பினால் எந்தவித பலனுமில்லை.

முதலாவதாக வங்கிகள் இணைப்பின் மூலமாக வங்கிகள் நன்றாக செயல்படும் என்ற கருத்து தவறானது. கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் ஐந்தையும் இணைத்தது. ஆனால் இதன்பின் எந்தவித மாற்றங்களும் நடைபெறவில்லை. மாறாக கிளைகளை மூடுவது, வராத கடன் எண்ணிக்கை அதிகரிப்பு, வங்கி ஊழியர்களை குறைத்தது, வங்கியின் ஒட்டுமொத்த வியாபாரம் குறைந்தது போன்றவற்றையே பார்க்க முடிந்தது. இந்த இருநூறு ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி நஷ்டத்தையே அடையவில்லை. ஆனால் வங்கி இணைப்பிற்கு பிறகு கடந்த ஆண்டில் நஷ்டத்தில் உள்ளதை பார்க்க முடிந்தது. ஒட்டுமொத்த துணை வங்கிகளின் வராத கடன் 31.03.2017-ம் ஆண்டு வரை சுமாராக ரூ.65 ஆயிரம் கோடியும் பாரத ஸ்டேட் வங்கியின் வராத கடன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடியும், ஆக மொத்தம் ரூ. 1 லட்சத்து 77 ஆயிரம் கோடியாக இருந்தது. அது தற்போது 2018-ல் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே வங்கிகள் இணைப்பு வாராக்கடன் குறைய உதவாது என்பது தெளிவாகிறது.


வங்கித்துறையில் இன்று நாம் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாராக்கடனேயாகும்.

நமது முக்கிய கோரிக்கையே மத்திய அரசு வாராக்கடனை வசூலிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே. மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, வேணுகோபால் தூத் போன்றவர்கள் வங்கிகளை ஏமாற்றியது வங்கித்துறையே அதிரவைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது போன்ற ஏமாற்றும் பெரிய நிறுவனங்களின் பெயர்கள் இன்று தினம் தினம் பத்திரிகைகளில் பார்க்க முடிகிறது. பொதுத்துறை வங்கிகள் 21-ல் 19 வங்கிகள் நஷ்டத்தில் உள்ளன. 21 பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபம் 31.03.2018 அன்று ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 565 கோடி. வாராக் கடனுக்காக வங்கிகள் ஒதுக்கீடு செய்தது ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கோடி. இதன் காரணமாக வங்கிகளின் நிகர நஷ்டம் ரூ.85ஆயிரம் கோடியாகும்.

இதன் காரணமாக வங்கிகளில் வாராக்கடனை வசூலிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் முக்கியமாக அவர்களை குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அறிவிப்பதற்கு மாறாக இந்த 3 வங்கிகள் இணைப்பு என்பது மக்கள் மத்தியில் கவனத்தை திருப்பும் நடவடிக்கையாக பார்க்க முடிகின்றது.

பரோடா வங்கி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியின் மொத்த வாராக்கடன் ரூ.80 ஆயிரம் கோடியாகும். இதை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதே மத்திய அரசின் இந்த இணைப்பு நாடகம் என்பதை பார்க்க முடிகிறது.

எனவே மத்திய அரசின் இந்த இணைப்பை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பது மட்டுமல்லாமல் இதை திரும்ப பெறவேண்டும் மற்றும் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறது.

சி.எச்.வெங்கடாசலம்,
பொதுச்செயலாளர் ,
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...