Saturday, September 29, 2018

குழந்தைகளை கொன்ற குன்றத்தூர் அபிராமி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்

Added : செப் 28, 2018 22:17






ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துாரில், தன் இரண்டு குழந்தைகளை கொன்ற கொடூர தாய், அபிராமி, கள்ளக்காதலன் சுந்தரத்துடன், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார், மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர், விஜய், 30; தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி அபி ராமி, 25. இவர்களுக்கு அஜய், 7, மற்றும் கார்னிகா, 4, என்ற ஆண், பெண் குழந்தைகள் இருந்தன.குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர், சுந்தரம், 27, என்பவனுடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த மாதம், 31ல், குழந்தைகள் இருவருக்கும் பாலில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொலை செய்தாள்.கள்ளக்காதலன், சுந்தரத்தை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அபிராமியை, நாகர்கோவிலில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணைக்காக, புழல் சிறையில் இருந்து, அபிராமியையும், கள்ளக்காதலன் சுந்தரத்தையும், ஒரே வாகனத்தில் நேற்று அழைத்து வந்த போலீசார், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட், சிவசுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின், இருவரின் நீதிமன்ற காவலை, அக்.,12 வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, கள்ளக்காதலர்கள் அபிராமியும், சுந்தரமும் மீண்டும் புழல் சிறைக்கு, பலத்த பாதுகாப்புடன், ஒரே வேனில் அழைத்து செல்லப்பட்டனர்.ஒரே வேனில் வந்த போதிலும், இருவரும் தனித்தனியாக, சுற்றிலும் ஏராளமான போலீசாருடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். வேனில் இருந்து இறங்கி, நீதிமன்றத்திற்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும், அபிராமி தன் முகத்தை கருப்பு துப்பட்டாவால் மூடியிருந்தாள்.வழக்கு முடிந்து, புழல் சிறைக்கு செல்வதற்காக, வேனில் அபிராமி அமர்ந்து இருந்த போது, கண் கலங்கிய படி, சோர்வாக இருந்தாள். சுந்தரத்தை பார்ப்பதற்காக, அவனின் காதல் மனைவியும், நீதிமன்றம் வந்திருந்தார். அவர் மிகவும் சோகமாக இருந்தார்.
சரணமய்யப்பா!, சபரிமலைக்கு, அனைத்து, வயது ,பெண்களும் செல்ல, அனுமதி
 dinamalar 29.09.2018

புதுடில்லி:'கேரளாவில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகளில் நால்வர், 'மாதவிடாய் காலத்தை காரணம் காட்டி, 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கும் தேவஸ்வம் போர்டின் செயல், அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என தீர்ப்பளித்துள்ளதால், ஆண்கள் மட்டுமே செல்லலாம் என்ற நடைமுறை தகர்க்கப்பட்டுள்ளது.

'தீர்ப்பு விபரங்களை முழுவதும் படித்த பின், மேல்முறையீடு செய்வது அல்லது தீர்ப்பை அமல்படுத்துவது போன்ற அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்' என, கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில், வனம், மலைப் பகுதியில், சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வகிக்கிறது.

அடர்ந்த காட்டுப் பகுதியை கடந்து, மலைப் பாதையில் சென்றால் தான், கோவிலை அடைய முடியும் என்பதாலும், காட்டுப் பகுதியில் புலிகள், யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் காரணத்தாலும், சபரிமலை கோவிலில், ஆண்டின், நான்கு மாதங்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

வழக்கம்

தவிர, ஒவ்வொரு மாதமும், தமிழ் மாதப் பிறப்பு நாளை ஒட்டி நடக்கும் சிறப்பு பூஜையில், குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்வதும் வழக்கம்.இந்த கோவிலின் வழிபாட்டு தெய்வமான அய்யப்பன், திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக கருதப்படுவதால், 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள், கோவிலுக்கு வர, தேவஸ்வம் போர்டு சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பல நுாறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் இந்த நடைமுறையை எதிர்த்து, ஒரு சில அமைப்பின் சார்பிபல், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகிய, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், பெண் நீதிபதியான, இந்து மல்ஹோத்ரா தவிர, மற்ற நான்கு நீதிபதிகளும் ஒரே மாதிரியான



தீர்ப்பு வழங்கினர்.

அதன் விபரம்:

சபரிமலையில், பெண்களுக்கு தடை விதிக்கும் நடைமுறையை ஏற்க முடியாது. குறிப்பிட்ட வயதில், பெண்களுக்கே உரிய, உடல் ரீதியான மாற்றங்களை காரணம் காட்டி, சபரிமலை கோவிலில் நுழைய அவர்களுக்கு தடை விதிப்பது, பெண்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்.

இழுக்கு

மத ரீதியிலான வழிபாட்டு நடைமுறைகள் என்ற பெயரில், பெண்களுக்கான வழிபாட்டு உரிமைகளை மறுப்பது, அவர்களின் அடிப்படை உரிமையை தட்டிப் பறிப்பதோடு, பெண்களின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவது போன்றது.வழிபாட்டு நடைமுறைகளில், ஆணும், பெண்ணும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில், சபரிமலையில், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

வழிபாட்டு நடைமுறை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்றவற்றை காரணம் காட்டி, சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிப்பது, அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. அய்யப்ப பக்தர்கள் சங்கத்தினர், தங்களுக்கென தனியான வழிபாட்டு நடைமுறை விதிகளை அமல்படுத்த முடியாது.இவ்வாறு, நான்கு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கினர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்து மல்ஹோத்ரா, இவர்களின் தீர்ப்பிலிருந்து மாறுபட்டார்.இந்து மல்ஹோத்ரா, தீர்ப்பில் கூறியதாவது:நம் நாட்டில் பல்வேறு மதங்களை சேர்ந்தோர் வசிக்கின்றனர். பல வகை வழிபாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆழமான மத நம்பிக்கை அடிப்படையிலான விஷயங்களை, மதசார்பற்ற நிலைப்பாட்டுடன் தொடர்பு படுத்த முயற்சிக் கூடாது. அய்யப்ப பக்தர்கள், அவர்களின் வழிபாட்டு நடைமுறையை பின்பற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.

ஐவரில், நான்கு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 'சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு வழங்கியது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அய்யப்ப தர்ம சேனா அமைப்பின் சார்பில், மேல்முறையீடு செய்யப்படும் என, அந்த அமைப்பின் தலைவர், ராகுல் ஈஸ்வரா தெரிவித்துள்ளார். இவர், சபரிமலை கோவிலின் முன்னாள் தந்திரி கண்டாரு மகேஸ்வரருவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்பு மிக்கது!

கேரள மாநில தேவஸ்வம் அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:வழிபாட்டு முறையில் பெண்களுக்கான சம உரிமையை பெறுவதற்காக நடந்த சட்டப்போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. சபரிமலையில் மட்டுமின்றி, வழிபாடு நடக்கும் அனைத்து இடங்களிலும், பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு!

சபரிமலை கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம், பெண்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. இது, ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நம்புகிறேன்.
மேனகா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,

சிரமம் உள்ளது!

சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனினும், நீதிமன்றதீர்ப்பை மதிக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் செய்வதில் சிரமம் உள்ளது. இது குறித்து, தேவஸ்வம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டரரு ராஜீவரு, சபரிமலை தலைமை தந்திரி

தேவஸ்வம் போர்டு அதிருப்தி

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாக, தேவஸ்வம் போர்டு தலைவர், பத்மகுமார் தெரிவித்துள்ளார்.இது

குறித்து, பத்மகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது. தீர்ப்பு நகல் கிடைத்ததும், தீர்ப்பின் முழு விபரங்களையும் படித்து பார்த்து, சட்ட
வல்லுனர்கள், மதத் தலைவர்களுடன் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.மேல்முறையீடு செய்வதா அல்லது தீர்ப்பை அமல்படுத்துவதா என, உடனடியாக முடிவு செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கு கடந்து வந்த பாதை...

1991

சபரிமலையில் வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2006

ஜோதிடர் உன்னி கிருஷ்ண பணிக்கர், சபரிமலையில் நான்கு நாள் பூஜை நடத்தினார். கோயிலுக்குள் வயதுக்கு வந்த பெண் ஒருவர் வந்த அறிகுறி தென்படுவதாக கூறினார்.

2006

கன்னட நடிகை ஜெயமாலா, சபரிமலை கோயிலுக்குள் 1987ல் 28 வயதில் சென்றதாக கூறினார். இது குறித்து போலீசார் விசாரிக்க கேரள அரசு உத்தரவு. சில மாதங்களில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரளாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

2008

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு சென்றது. ஏழு ஆண்டுகள் விசாரிக்கப்பட வில்லை.

2016

ஜனவரி 11ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

2017

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது. விசாரணையில், கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என மாநில அரசு தெரிவித்தது. கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது.

2018

செப். 28ல் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிஅளித்து உச்சநீதி
மன்றம் உத்தரவு.
செத்தவருக்கு 3 நாள் சிகிச்சை ரமணா பட பாணியில், 'பகீர்'

Added : செப் 28, 2018 22:19






தஞ்சாவூர், தஞ்சையில், மூன்று நாட்களுக்கு முன், இறந்தவருக்கு சிகிச்சை அளித்து, ரமணா பட பாணியில் பணம் பறித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.நாகை, கீழைஈசனுார் கிராமத்தைச் சேர்ந்தவர்,சேகர், 55. இவரது மகன் மற்றும் உறவினர்கள், நேற்று மாலை, தஞ்சை தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:

நாகை அரசு போக்குவரத்து கழகத்தில், சேகர் கண்டக்டராக பணியாற்றினார். சில மாதங்களாக குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு, நாகையில் உள்ள தனியார் மருத்துவனையில், செப்., 7ல், சேர்க்கப்பட்டார். அங்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டது.அதன்பின்னும், ரத்தக்கசிவு இருந்தது. டாக்டர்கள் பரிந்துரைப்படி, தஞ்சையில் உள்ள, கே.ஜி., தனியார் மருத்துவமனையில், 8ம் தேதி அனுமதித்தோம். முதல் தவணையாக, 2.50 லட்சம் ரூபாய் கட்டினோம்.தொடர்ந்து சிகிச்சை அளித்தும், நேற்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை. 'சேகரை, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்' என கூறினோம். அப்போது, 5 லட்சம் ரூபாயை கட்டும்படி கூறினர்.நாங்கள், 50 ஆயிரம் ரூபாய் கட்டி, 'மீதி தொகையை, இன்னும் சில தினங்களில் கட்டி விடுகிறோம்' என எழுதி கொடுத்து, சேகரை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், 'சேகர் இறந்து, மூன்று நாட்கள் ஆகிவிட்டது' என்றனர்.

இதுவரை, சேகர் சிகிச்சைக்காக, 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். தவறுதலாக சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் உடலை வைத்து, சிகிச்சை அளிப்பதாக கூறி, பணம் கேட்டு மிரட்டிய மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சேகர், திருத்துறைப்பூண்டி இந்திய, கம்யூ., முன்னாள், எம்.எல்.ஏ., பழனிசாமியின் நெருங்கிய உறவினர்.
காய்ச்சலுக்கு சிகிச்சைபெற முகவரி பதிவு கட்டாயம்

Added : செப் 28, 2018 23:02

சென்னை, 'காய்ச்சலுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருவோரின், முகவரி மற்றும் மொபைல் போன் எண்களை, கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2017ல் டெங்கு காய்ச்சலில், 22 ஆயிரம் பாதிக்கப்பட்டனர்; 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பன்றி காய்ச்சலில், 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணமாகக் கூறப்பட்டது.இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், 'காய்ச்சல் பாதிப்பிற்காக சிகிச்சை பெற வருவோரின் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட, முழு தகவலையும் பெற்று, கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, நோயாளியின் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வருவோருக்கு, உடனடியாக ரத்த பரிசோதனை செய்யப்படும்.டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வசிக்கும் பகுதியில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நிற்கும்

Added : செப் 29, 2018 05:07 |

சென்னை: சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, புதுச்சேரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் இன்று முதல், நின்று செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில், புதுச்சேரியில் இருந்து, தினமும் அதிகாலை, 5:35 மணிக்கு புறப்பட்டு, கிண்டிக்கு காலை, 9:03 மணி, மாம்பலத்தில், 9:10 மணி, எழும்பூரில், 9:40 மணிக்கும், சென்னை கடற்கரை நிலையத்துக்கு காலை, 10:00 மணிக்கும் சென்றடையும். சென்னை கடற்கரையில் இருந்து, மாலை, 5:35 மணிக்கு இயக்கப்படும் ரயில், எழும்பூருக்கு, 5:50 மணி, மாம்பலத்துக்கு, 6:23 மணி, கிண்டிக்கு, 6:31 மணி, திரிசூலத்துக்கு, 6:40 மணி மற்றும் தாம்பரத்துக்கு, 6:52 மணிக்கு செல்லும். புதுச்சேரிக்கு இரவு, 10:25 மணிக்கு ரயில் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் - அஜ்மீர் இடையே வாராந்திர 'ஏசி' ரயில் அறிமுகம்

Added : செப் 28, 2018 23:33


சென்னை, ராமேஸ்வரத்தில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீருக்கு வாராந்திர, 'ஏசி' ரயில் இயக்கப்படுகிறது.ராமேஸ்வரத்தில் இருந்து, செவ்வாய் தோறும், இரவு, 10:15க்கு புறப்படும், 19603 எண்ணுடைய ரயில், வியாழக்கிழமை இரவு, 11:25 மணிக்கு, அஜ்மீர் சென்றடையும். அஜ்மீரில் இருந்து, சனிக்கிழமை இரவு, 9:40க்கு புறப்படும், 19604 எண்ணுடைய ரயில், செவ்வாய்கிழமை அதிகாலை, 3:15 மணிக்கு, ராமேஸ்வரம் சென்றடையும்.இந்த ரயிலில், 16 'ஏசி' மூன்றடுக்கு பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். மானாமதுரை, திருச்சி, அரியலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், ஆந்திரா மாநிலம் கூடூர் உட்பட, 28 நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் அக்., 2; அஜ்மீரில் இருந்து, அக்., 6லும், துவங்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மருத்துவ பல்கலை துணைவேந்தர் தேர்வு குழு நியமனம்

Added : செப் 28, 2018 22:55

சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு, புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.தற்போதைய துணை வேந்தரின் பதவி காலம், டிச., 28ல், நிறைவடைகிறது. அதனால், புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, திருநெல்வேலி மருத்துவ கல்லுாரி முன்னாள் முதல்வர், சிதி ஆதிய முனவரா தலைமையில், தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஓய்வுபெற்ற மருத்துவ கல்வி இயக்குனர், செம்பன் டேவிட், சென்னையில் உள்ள, காது, மூக்கு, தொண்டை மருத்துவ ஆய்வு நிறுவன மேலாண் இயக்குனர், மோகன் காமேஸ்வரன் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இக்குழு, துணை வேந்தர் பதவிக்கு, தகுதியான மூன்று பேரை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும்.

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...