Saturday, September 29, 2018

செத்தவருக்கு 3 நாள் சிகிச்சை ரமணா பட பாணியில், 'பகீர்'

Added : செப் 28, 2018 22:19






தஞ்சாவூர், தஞ்சையில், மூன்று நாட்களுக்கு முன், இறந்தவருக்கு சிகிச்சை அளித்து, ரமணா பட பாணியில் பணம் பறித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.நாகை, கீழைஈசனுார் கிராமத்தைச் சேர்ந்தவர்,சேகர், 55. இவரது மகன் மற்றும் உறவினர்கள், நேற்று மாலை, தஞ்சை தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:

நாகை அரசு போக்குவரத்து கழகத்தில், சேகர் கண்டக்டராக பணியாற்றினார். சில மாதங்களாக குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு, நாகையில் உள்ள தனியார் மருத்துவனையில், செப்., 7ல், சேர்க்கப்பட்டார். அங்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டது.அதன்பின்னும், ரத்தக்கசிவு இருந்தது. டாக்டர்கள் பரிந்துரைப்படி, தஞ்சையில் உள்ள, கே.ஜி., தனியார் மருத்துவமனையில், 8ம் தேதி அனுமதித்தோம். முதல் தவணையாக, 2.50 லட்சம் ரூபாய் கட்டினோம்.தொடர்ந்து சிகிச்சை அளித்தும், நேற்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை. 'சேகரை, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்' என கூறினோம். அப்போது, 5 லட்சம் ரூபாயை கட்டும்படி கூறினர்.நாங்கள், 50 ஆயிரம் ரூபாய் கட்டி, 'மீதி தொகையை, இன்னும் சில தினங்களில் கட்டி விடுகிறோம்' என எழுதி கொடுத்து, சேகரை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், 'சேகர் இறந்து, மூன்று நாட்கள் ஆகிவிட்டது' என்றனர்.

இதுவரை, சேகர் சிகிச்சைக்காக, 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். தவறுதலாக சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் உடலை வைத்து, சிகிச்சை அளிப்பதாக கூறி, பணம் கேட்டு மிரட்டிய மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சேகர், திருத்துறைப்பூண்டி இந்திய, கம்யூ., முன்னாள், எம்.எல்.ஏ., பழனிசாமியின் நெருங்கிய உறவினர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...