Sunday, September 30, 2018

மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் மாரடைப்பு




சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பதிவு: செப்டம்பர் 30, 2018 04:15 AM

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூருக்கு 248 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் சிங்கப்பூர் நாட்டு பிரஜையான புதுச்சேரியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 80), அவருடைய மனைவி ஆதியம்மா (74) ஆகியோர் பயணம் செய்தனர்.

விமானம் நடுவானில் பறந்து சென்றபோது ராமச்சந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதியம்மா, இதுபற்றி விமான பணிப்பெண்ணுக்கு தகவல் கொடுத்தார். அவர், விமானிக்கு தகவல் தெரிவித்தார்.

அவசரமாக தரை இறங்கியது

உடனே விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பயணி மாரடைப்பால் துடித்துக்கொண்டு இருப்பதாகவும், விமானத்தை அவசரமாக சென்னைக்கு திருப்பி கொண்டு வருவதாகவும் கூறினார். இதையடுத்து விமானத்தை அவசரமாக சென்னையில் தரை இறக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இதையடுத்து நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த விமானம், மீண்டும் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த விமான நிலைய டாக்டர்கள் குழுவினர், விமானத்தில் ஏறி ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மனைவி ஆதியம்மா ஆகியோரை கீழே இறக்கி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர்.

உயிரிழந்தார்

இதையடுத்து அந்த விமானம் 246 பயணிகளுடன் நள்ளிரவு 1.20 மணிக்கு மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இறந்தார். இது பற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...