Saturday, January 12, 2019

VIT founder bestowed with lifetime award

TIMES NEWS NETWORK

Chennai:12.01.2019

G Viswanathan, founder and chancellor of Vellore Institute of Technology, has been bestowed with the Jeevan Gaurav Puraskar – Lifetime Award for teaching, research and institution building.

The award ceremony took place at the 3rd Global National Teachers’ Congress held at MIT World Peace University, Kothrud, Pune, on January 6.

A citation, signed by Anil Kakodkar, renowned atomic energy scientist and RA Mashelkar, founding patron of NTC,and other eminent academicians was presented to Viswanathan during the ceremony.

The event was supported by Maharashtra state government, All India Council for Technical Education and UNESCO Chair for Human Rights among others.

NTC, founded in 2016, to inspire teaching community across streams.

Over 5,000 teachers participated in the said event with the theme -- 'Leap-Frogging to Future Ready Higher Education'.
Docs remove bone-eating tumour from teen’s leg
TIMES NEWS NETWORK

Chennai:12.01.2019

Last February, doctors told a teenager from Bangladesh that a tumour was eating into his leg. On Friday, the 19-year-old walked into the press conference with a slight limp and a big smile. His surgeons had saved his leg and tests showed he did not have cancer.

Rifat Ibane Iqbal had a cricket ballsized tumour — desmoplastic fibroma was rare, fibrous and benign — that was aggressively eating into his bones. “He had terrible pain in his left leg and was not able to walk. He came to us after visiting several other hospitals. All of them had suggested amputation. But during our initial screening we realised the tumour did not seem cancerous,” senior consultant orthopaedic surgeon Dr Kosygan. Less than 10 cases of desmoplastic fibroma in the leg had been documented in medical literature. “We did not have literature to lean on. So we decided to take it step by step. In a four-hour surgery, we removed a cricket ball sized tumour. Nearly 25% of the ankle bone was destroyed,” he said.

Although doctors debated radiation post-surgery, they decided to give him

medicine to help the bone grow and let surgical wounds heal in a conventional way. “His wounds have healed very well,”, said plastic surgeon Dr Kannan Prema.

Her colleague and vascular surgeon Dr K Shashibhushan said medical literature spoke of 15% chances of tumour recurrence. “We will be monitoring him closely at least once every five or six months,” he said. But Iqbal is happy to get back to academics. “I have been away from college for a long time. I want to get back to my BBA course,” he said.

Rifat Ibane Iqbal had a cricket ball-sized tumour that was aggressively eating into his bones
HC clears govt’s ₹1,000 cash gift for ‘sugar card’ holders

TIMES NEWS NETWORK

Chennai:12.01.2019

Two days after restricting distribution of Rs1,000 Pongal cash gift to ration card holders belonging to below poverty line, low and middle-income group only, the Madras high court modified its order on Friday and permitted the state to extend the gift to ‘sugar card’ holders also.

“Since a responsible officer has submitted through a sworn affidavit that those with non-priority household only for sugar (NPHH-S) cards also fall under the below poverty line category, we are permitting the government to distribute the cash gift to balance 5,98,772 falling under this category,” a division bench of Justice M Sathyanarayanan and Justice P Rajamanickam said.

The bench passed the order while allowing a modification application moved by the Tamil Nadu government.

When the plea came up for hearing, advocate-general Vijay Narayan submitted that most of the families in NPHH-S category also belonged to economically weaker background.

“The number of such families cannot be arrived at this juncture as the economic indices are not available. Out of 10,11,330 NPHH-S card holders, as on Thursday, 4,12,558 card-holders have received the gift. The balance card holders under this category, most of whom are also from below poverty line category, are adversely affected and are highly disappointed by non-receipt of the benefit,” Narayan said.

Friday, January 11, 2019

பெற்றோரை இழந்த மாணவிக்கு காதணி விழா நடத்திய ஆசிரியர்கள்

By கோவை | Published on : 11th January 2019 07:35 AM



கோவை, பேரூர் பகுதியில் பெற்றோரை இழந்த 4ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியர்களே காதணி விழாவை நடத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம், பேரூரை அடுத்துள்ள ராமசெட்டிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வருபவர் வினோதினி. பெற்றோரை இழந்த இவர் தனது பாட்டி பாப்பம்மாளின் பாதுகாப்பில் இருந்து வருகிறார். பாப்பம்மாள் கூலி வேலை செய்து பேத்தியை படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில், சக மாணவிகள் காதணி அணிந்து கொண்டு பள்ளிக்கு வரும் நிலையில் தனக்கும் காது குத்தி விடும்படி தனது பாட்டியிடம் வினோதினி கேட்டுள்ளார்.


விழா நடத்தி பேத்திக்கு காது குத்த முடியாததால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பாட்டி கூறியதாகத் தெரிகிறது. குடும்ப சூழல் காரணமாக வினோதினியின் காது குத்து தள்ளிப் போவதை மாணவிகள் மூலம் அறிந்த தலைமை ஆசிரியர் கெளசல்யா உள்ளிட்ட ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் வினோதினிக்கு பள்ளியிலேயே காதணி விழாவை நடத்த முடிவு செய்தனர். இதற்காக ஊர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், பள்ளி மாணவ, மாணவியர் சீர் வரிசைத் தட்டு ஏந்தி வர, ஆசிரியர்கள் குத்துவிளக்கேற்ற காதணி விழா வியாழக்கிழமை காலை தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, வட்டாரக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி மடியில் அமர வைக்கப்பட்ட வினோதினிக்கு தங்கக் காதணிகள் அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், உள்ளூர் பொதுமக்கள், மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர். சிறுமியின் தனிமை உணர்வைப் போக்கவும், அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சிக்கு வாழ்த்து!
By ஆசிரியர் | Published on : 10th January 2019 01:35 AM

விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை இதனால் 33-ஆக உயர்கிறது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதில் அளிக்கும்போது முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
மக்கள்தொகைப் பெருக்கமும், கிராமப்புற வளர்ச்சியின் தேவையும், மாநிலங்களும் மாவட்டங்களும் பிரிக்கப்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன. முந்தைய தென்னாற்க்காடு கடலூர், விழுப்புரம் என்று 1993-இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பிறகுதான் இரண்டு மாவட்டங்களுமே ஓரளவு வளர்ச்சியைப் பெற்றன. 

இப்போதைய விழுப்புரம் மாவட்டம் என்பது மயிலம், திண்டிவனம், வடலூர், வானூர், செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 12 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாகத் திகழ்கிறது. இந்த மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது.
1993-ஆம் ஆண்டு செப்டம்பர் 31-ஆம் தேதி உருவாக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் 7,217 ச.கி.மீ. பரப்புடன் 34,58,873 மக்கள்தொகையுடன் நான்கு வருவாய்க் கோட்டங்கள், ஒன்பது தாலுகாக்கள், மூன்று நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், 1,099 ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய மாவட்டமாக இருந்தும்கூட, பெரிய அளவில் வளர்ச்சி அடையாத மாவட்டமாகவே தொடர்ந்து வருகிறது என்பதால், இந்த மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை வரவேற்காமல் இருக்க முடியவில்லை. 

கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது. எழுத்தறிவின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், கள்ளச் சாராய வணிகம், மருத்துவ வசதி இல்லாமை, பெரும்பாலான இடங்களில் முறையான சாலைப் போக்குவரத்து இல்லாமல் இருப்பது என்று தமிழகத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பகுதி தொடர்ந்து வருகிறது.
இந்த மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலைப் பகுதி கிராமங்கள் விழுப்புரத்திலிருந்து 150 கி.மீ. தொலைவில் இருக்கின்றன. அங்கே இருக்கும் 30 கிராமங்களில், வெள்ளிமலைக்கு மட்டும்தான் சாலை வசதி இருக்கிறது. அதற்கும்கூட, தினந்தோறும் நான்கு முறை சிற்றுந்துகள் மட்டும்தான் விடப்படுகின்றன. கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன் மலைப் பகுதி, இந்தியா விடுதலை பெற்று 63 ஆண்டுகள் கழிந்த பிறகுதான் மின்சார வசதியைப் பெற்றது எனும்போது, எந்த அளவுக்கு புறக்கணிக்கப்பட்டதாக விழுப்புரம் மாவட்டத்தின் இந்தப் பகுதி தொடர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய ஐந்து கிராமப்புறத் தொகுதிகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் வளர்ச்சி அடையாத பிற்ப்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதிகளில் மிகக் குறைந்த அளவில்தான் அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்கின்றன. தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்துதான் இந்தப் பகுதியிலுள்ள மக்கள் வாழ வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. 

கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாகும்போது, மாநில அரசின் கொள்கைப்படி இங்கே தொழிற்பயிற்சி நிலையம், தொழிற் பயிற்சிக் கல்லூரி, கலை - அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி ஆகியவை அரசால் ஏற்படுத்தப்படும் என்பதால் இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு அவை பெரிய அளவில் உதவும். 

இப்போது புதிதாக உருவாகி இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்க காலத்தில் மலையமான் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. சேதிரையன் என்கிற பட்டத்துடன் இந்தப் பகுதியை ஆண்டவர்களில், கடையேழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையமான் அரசர்களின் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்கள் இந்தப் பகுதியிலிருந்து கிடைத்திருக்கின்றன. முதலாம் ராஜராஜ சோழனின் தாயாரான வானவன் மகாதேவி மலையமான் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதிலிருந்து இந்தப் பகுதியின் தொன்மையை அறியலாம். சங்கப் புலவர்களில் முதன்மை முக்கியத்துவம் பெறும் குறிப்பிடத்தக்க ஒருவரான கபிலர் வாழ்ந்த பூமி இது. 

வரலாற்றுப் புகழ் பெற்ற இந்தப் பகுதி சங்கப் புலவர்களால் பாடப்பட்ட பகுதி. கடையேழு வள்ளல்களின் வரலாற்றுப் பதிவுள்ள பகுதி. இப்போது புறக்கணிக்கப்பட்ட பகுதியாக பின்தங்கியிருக்கும் இந்தப் பகுதிகள் கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் ஆவதன் மூலம், இழந்த வரலாற்றுப் பெருமையை மீட்டெடுக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதே கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தார். அதை இப்போது எடப்பாடி பழனிசாமி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இதன் மூலம் புதிய மாவட்டத்தில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், விவசாய மேம்பாட்டுக்கான திட்டங்களின் மூலம் கிராமப்புற வேளாண் இடருக்குத் தீர்வும் காணப்படுமேயானால், அவை இன்றைய அரசின் சாதனைகளாக வரலாற்றில் நினைவுகூரப்படும்.
நீண்ட நாள் கோரிக்கை, நீண்ட நாள் தேவை நிறைவேறி இருக்கிறது.
மாறிப்போன வாழ்த்து முறை..!

By தி. நந்தகுமார் | Published on : 11th January 2019 02:50 AM

ஆங்கிலப் புத்தாண்டு அண்மையில் கொண்டாடப்பட்டது. அந்தப் புத்தாண்டு நாளன்றும், முந்தைய நாளன்றும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), முகநூல் (பேஸ்புக்) போன்ற சமூக ஊடகங்களில் தனித் தகவல்களாகவும், குழுவிலும் குவிந்த வாழ்த்துகளோ ஏராளம். சமூக வலைதளக் கணக்கே திணறும் அளவுக்கு அனைவரும் வாழ்த்து மழையில் நனைந்துவிட்டிருந்தனர்.
முன்பெல்லாம், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது, புத்தாடைகள் அணிதல், இனிப்புகள் வழங்குதல், பரிசுகளைப் பரிமாறிக் கொள்ளுதல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இருக்கும்.

ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது என்பதும் அதில் அடக்கம். பல ஆண்டுகளுக்கு முன் வரை, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்காக நூற்றுக்கணக்கான அச்சகங்களில் இருந்து அச்சிடப்பட்ட லட்சக்கணக்கான வாழ்த்து அட்டைகள் உள்ளூர் கடைகளில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரே விற்பனைக்கு வந்திருக்கும்.
கடவுள்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரின் உருவப் படங்கள் அச்சிட்ட வாழ்த்து அட்டைகளும், இயற்கைக் காட்சிகள், முக்கிய சுற்றுலாத் தலங்கள், வெளிநாட்டிலுள்ள முக்கிய இடங்கள் போன்றவற்றின் புகைப்படங்களும், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் என விதவிதமான வாழ்த்து அட்டைகள் ஒவ்வொரு கடைகளிலும் ஆயிரக்கணக்கில் குவித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த அட்டைகளில் அழகிய தமிழில் எழுதப்பட்ட வாசகங்களும், கவிதைகளும் இடம்பெற்றிருக்கும். 

ஒவ்வொருவரும் வாழ்த்து அட்டைகள் விற்பனைக் கடைகளுக்குச் சென்று மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிட்டு, தங்களது பிடித்தமானவரின் மனதைக் கவர்ந்தவற்றை ஞாபகமிட்டு, வாழ்த்து அட்டைகளைத் தேர்வு செய்வர். 

இது மட்டுமன்றி, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் தங்களது வாடிக்கையாளர்களுக்கும், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் தங்களது ஆதரவாளர்கள் அல்லது தலைவர்களுக்கும் என ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் சுற்றத்துக்கும், நட்புக்கும் என வாழ்த்து அட்டைகளை அனுப்புவதில் ஆர்வம் கொண்டிருப்பர். பலரும் தங்களது விருப்பமான படங்களையும், வாசகங்களையும் அச்சகங்களில் அச்சிட்டு, வாழ்த்துகளைப் பரிமாறியவர்களும் உண்டு. 

இவ்வாறான வாழ்த்து அட்டைகள் அனுப்பும்போது, அருகேயுள்ள நண்பர்களுக்கு அனுப்ப தேர்வு செய்ததைக்கூடச் சொல்லாமல் ரகசியம் காப்போரும் உண்டு. பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன், தேர்வு செய்த வாழ்த்து அட்டைகளை அஞ்சல் தலைகள் ஓட்டி, தபால் நிலையங்களுக்குச் சென்று சேர்ப்பர். பண்டிகை நாளன்று அந்த வாழ்த்து அட்டைகள் சரியாகச் சென்று சேருமா என்பதை அஞ்சல் நிலைய ஊழியர்களிடம் உறுதி செய்வர்.
பண்டிகைக்கு சில நாள்கள் முன்பும், பின்பும் தபால்காரர் சைக்கிளில் ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டைகளை எடுத்துக் கொண்டு, வீடு, வீடாக விநியோகம் செய்வார். அப்போது சிலர் தனக்கு இத்தனை வாழ்த்துக் கடிதம் வந்தது; அவருக்கு இத்தனை வந்தது என மகிழ்ச்சியுடன் பேசி மகிழ்வர்.
இப்போதைய இளைஞர்களுக்கு இதெல்லாம் புதியதாய் இருக்கும். இப்போது அலைபேசியில் குறுந்தகவல்கள் மூலமும், மின்னஞ்சல்கள் மூலமும் வாழ்த்துப் பரிமாற்றம் நடக்கிறது.

இந்த வாழ்த்துகளில் தமிழில் வாழ்த்து என்பது காணாமல் போனது. தமிழ் புத்தாண்டு வாழ்த்தையும் கூட ஆங்கிலத்தில் எழுதி அல்லவா சொல்கிறார்கள். இந்த வாழ்த்து மொழி தமிங்கலீஷ் என்றே அழைக்கப்படுகிறது.

இணையதளத்தில் மின்னஞ்சல் மூலம் தகவல்கள், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வோரும், குறுஞ்செய்தி முறையில் தகவல் பரிமாற்றம் செய்வோரும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் நண்பர்களையும், உறவினர்களையும் முகம் பார்த்து முகம் பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தும்தான் வருகின்றனர்.

இப்போது இணையதளத்தில் உள்ள பல்வேறு வலைதளங்களில், ஆங்கில மொழியில் அடங்கிய வாசகங்களைத்தான் வாழ்த்துகளாகப் பரிமாறி வருகின்றனர். காலங்கள் மாறலாம்; வாழ்த்துகள் மாறலாம்; ஆனால், பண்டிகைகள், பழக்கவழக்கங்கள் என்றும் மாறுவதில்லை.இருந்தாலும், அடுத்து வரும் ஆண்டுகளில் வாழ்த்துகள் பரிமாற்றம் எப்படியிருக்குமோ?
அண்மைக்காலமாக நவீன நடைமுறைகளுக்கு விடை சொல்லிவிட்டு, பழமையான விஷயங்களை இப்போது நினைவுகூர்ந்து வருகிறோம். வாழ்த்து அட்டைகளிலும், கடித முறையிலான வாழ்த்துகள் காலப் பொக்கிஷங்கள். இப்போதும் பலரும் பல ஆண்டுகளாகப் பத்திரப்படுத்தி வருகின்றனர். இணையதளத்திலும், சமூக வலைதளங்கள் வாயிலான வாழ்த்துகள் அழியக் கூடியன.

மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு போன்ற தேசத் தலைவர்கள் சுதந்திரப் போராட்டக் காலத்தின்போது, அவர்கள் குடும்பத்தினருக்கும், போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கும் அனுப்பிய கடிதங்கள் இன்றும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

பாரம்பரியமான அஞ்சல் துறையும் கடிதப் பரிமாற்றங்கள் மறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் கடிதம் எழுதுவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரங்கள் நடத்துகின்றன.
பிளாஸ்டிக் பைகளுக்கு விடை சொல்லிவிட்டு, மஞ்சள் பைகளையும், பாத்திரங்களையும் இப்போது ஆங்கிலப் புத்தாண்டு முதல் கைகளில் எடுத்துள்ளோம். இதுபோன்று இனிவரும் காலங்களில், வாழ்த்து அட்டைகளில் வாழ்த்துச் சொல்லும் நடைமுறையையும் தொடர்வோமே...

குமரி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம்

Added : ஜன 11, 2019 04:17


நாகர்கோவில்:கன்னியாகுமரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில், 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஏழுமலையான் கோவில், 22.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் நடந்தன.பணிகள் முடிந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான, சென்னை தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் ஸ்ரீகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.பின், அவர்கள் அளித்த பேட்டி:

கோவில் திருப்பணிகள் முழுமையாக முடிந்துஉள்ளன. 22-ம் தேதி மாலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கின்றன. 27ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகம் முடிந்து, மதியம், 12:30 மணிக்கு மேல், பக்தர்கள் தர்ம தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

ஆகம விதிகளின் படி, அனைத்து பூஜைகளும் நடக்கும். கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு, தமிழக, ஆந்திர முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEWS TODAY 25.08.2026