Sunday, May 5, 2019

‘SULLY’ RERUN: US JET LANDS ON RIVER IN FLORIDA



ANOTHER MIRACLE AFTER 10 YRS: In a rerun of the famous 2009 emergency landing of a US Airways flight on the Hudson river in New York, a chartered jet carrying 143 people from the US military base in Cuba to north Florida tried to land in a thunderstorm and ended up in the river at a naval air station in Jacksonville on Friday. Everyone on board emerged without critical injuries and lined up on the wings, waiting to be rescued. The 2009 landing, popularly known as the “miracle on the Hudson”, had inspired the Clint Eastwood-directed Hollywood movie, ‘Sully’, starring Tom Hanks

Saturday, May 4, 2019

NEET 2019 Mop up Round

Read more at Education Medical Dialogues: MCC issues Notice for NRI candidates for Mop up Round 

Read more at Education Medical Dialogues: MCC issues Notice for NRI candidates for Mop up Round https://education.medicaldialogues.in/mcc-issues-notice-for-nri-candidates-for-mop-up-round/
Read more at Education Medical Dialogues: MCC issues Notice for NRI candidates for Mop up Round https://education.medicaldialogues.in/mcc-issues-notice-for-nri-candidates-for-mop-up-round/
Read more at Education Medical Dialogues: MCC issues Notice for NRI candidates for Mop up Round https://education.medicaldialogues.in/mcc-issues-notice-for-nri-candidates-for-mop-up-round/

'A Statement Is Not True Merely Because It Is In Print;Not False Merely Because It Is Online' : Bombay HC [Read Order]

'A Statement Is Not True Merely Because It Is In Print;Not False Merely Because It Is Online' : Bombay HC [Read Order]: 'Calling out someone, with fair comment and justification, is not defamation. To put it differently: to say the emperor has no clothes is not defamation. It never has been', observed Justice G S
'தலப்பாகட்டு' பெயரை பயன்படுத்த ஸ்டார் பிரியாணி கடைக்கு தடை

Added : மே 04, 2019 02:46

சென்னை:சென்னையை அடுத்த தண்டலத்தில், பெங்களூரு பை - பாஸ் சாலையில் உள்ள, 'ஸ்டார் தலப்பாகட்டு பிரியாணி' கடை, 'தலப்பாகட்டு' என்ற பெயரை பயன்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தலப்பாகட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஓட்டல் சார்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு:திண்டுக்கல் நகரில்,1957ல், நாகசாமி நாயுடு என்ற தலப்பாகட்டி நாயுடு, பிரியாணி ஓட்டலை துவக்கினார். அவர், தலையில் தலப்பா அணிந்திருப்பார். அதனால், தலப்பாக்கட்டி நாயுடு என, அழைக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பின், ஓட்டலுக்கும், தலப்பாக்கட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஓட்டல் என, பெயர் வைக்கப்பட்டது.

இந்த தலப்பாக்கட்டி பெயரை, சிலர் ஆதாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களின் ஓட்டல், விடுதிகளுக்கு, தலப்பாக்கட்டி அல்லது தலப்பாக்கட்டு என பெயர் வைக்கின்றனர். சென்னையை அடுத்த தண்டலத்தில், பெங்களூரு பை - பாஸ் சாலையில், ஸ்டார் தலப்பாகட்டு பிரியாணி என்ற பெயரில், கடை உள்ளது.எங்கள் கடை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். 

எனவே, தலப்பாகட்டு என்ற பெயரை பயன்படுத்த, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி, தலப்பாகட்டு பெயரை பயன்படுத்த, ஸ்டார் பிரியாணி கடைக்கு, நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதில் அளிக்க, ஸ்டார் பிரியாணி கடைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன், 14க்கு, தள்ளி வைத்தார்.
ஆறு மருத்துவ கல்லுாரிகளில்

Added : மே 04, 2019 02:45

சென்னை, மே ௪-

தடை விதிக்கப்பட்ட தனியார் கல்லுாரி மாணவர்கள், 108பேரை, வேறு ஆறு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்க, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, மறு ஆய்வு மனுவை, உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லுாரி  2016 - 17ம் ஆண்டில், புதிதாக துவங்கப்பட்டது. அதே ஆண்டில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

தடை விதிப்பு

இந்திய மருத்துவக் கவுன்சில் சுட்டிக் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாததால், 2018 18மற்றும் ௨௦18 - 19ம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, இந்தக் கல்லுாரியில் சேர்ந்த, ௧௦௮ மாணவர்கள், தங்களை வேறு கல்லுாரிகளுக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்களை, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்ற உத்தரவிட்டது.மேல் முறையீடுஇதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

மனுவை, நீதிபதி, எம்.சத்தியநாராயணன் தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து, பிறப்பித்த உத்தரவு:தமிழகத்தில் உள்ள, ௨௨ அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இந்த மாணவர்களை சேர்ப்பதற்கான புதிய பரிந்துரையை, இந்திய மருத்துவக் கவுன்சில் ஆட்சி மன்ற குழுவுக்கு, தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். 

பரிந்துரையை பெற்ற பின், விதிமுறைகளின்படி பரிசீலித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்.அதன்பின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், சட்டப்படி பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுஇருந்தது.
இதையடுத்து, மறு ஆய்வு மனுவை, தமிழக அரசு தாக்கல் செய்தது. மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தில், ஆறு தனியார் மருத்துவக் கல்லுாரி களில், மாணவர்களை சேர்ப்பதற்கு, அனுமதி அளிக்கப் பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.மத்திய அரசின் கடிதத்தை பதிவு செய்து, மறு ஆய்வு மனுக்களின் விசாரணையை, டிவிஷன் பெஞ்ச் முடித்து வைத்தது.
நாளை, 'நீட்' தேர்வு: 15 லட்சம் பேர் பங்கேற்பு

Added : மே 04, 2019 01:25

சென்னை:நாடு முழுவதும், 'நீட்' நுழைவு தேர்வு நாளை நடக்கிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, நாளை நடக்கிறது. நாடு முழுவதும், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் எழுத உள்ளனர்; அவர்களுக்காக, 2,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 1.40 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுத, 200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு, மதியம், 2:00 மணிக்கு துவங்கி, 5:00 மணிக்கு முடிகிறது. தேர்வில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆடைகள், ஆபரணங்களுக்கும், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய, கலாசார மற்றும் மத ரீதியான உடை உடுத்தும் மாணவர்கள், கூடுதல் சோதனைகளுக்காக, மதியம், 12:30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' மற்றும் புகைப்படம், கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். தேர்வு மையத்துக்குள், தண்ணீர் பாட்டிலுக்கு அனுமதி கிடையாது. மாணவியரை சோதிக்க, பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, கண்காணிப்பு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தயார் செய்ய வேண்டியது!

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் முகவரிகள், ஹால் டிக்கெட்டில் தரப்பட்டுள்ளன. 

முகவரி அறிவதில் சிரமம் தவிர்க்க, தேர்வு மையங்களை இன்றே பார்த்து வைப்பது நல்லது. 

அதேபோல, நீண்ட துாரம் பயணம் செல்வதாக இருந்தால், இன்றே சென்று விடுவது நல்லது.

ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட பின், சில மாணவர்களுக்கு தேர்வு மையங்களை மாற்றியுள்ளதாக, என்.டி.ஏ., என்ற, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

.புகைப்படம்தேர்வு மையத்தின் பெயர், முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் போன்றவற்றை, ஹால் டிக்கெட்டிலும், என்.டி.ஏ., இணையதளத்திலும், ஒரு முறை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, வழங்கப்பட்ட புகைப்படத்தை, தேர்வு மையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். 

ஒரு புகைப்படம் தேவைப்படும் நிலையில், கூடுதலாக ஒன்றோ, இரண்டோ புகைப்படம் வைத்திருப்பது நல்லது

.ஹால் டிக்கெட்டின் நகலை, கூடுதலாக பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஆடை பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்க, கையில், ஒரு சாதாரண ஆடை வைத்திருந்தால் உதவியாக இருக்கும்

.தேர்வு மையத்துக்கு செல்வதற்கு முன், சரி விகிதத்தில் உணவு சாப்பிட்டு கொள்ள வேண்டும்.

 உடல் உபாதை தராத வகையில், எளிதான உணவை எடுத்துக் கொள்வது சிறந்தது. 

தேர்வு மையத்திற்குள், 11:30 மணியில் இருந்து, மாலை, 5:30 மணி வரை, ஆறு மணி நேரம் வரை இருக்க வேண்டும்.

அதற்கேற்ற சக்தி கிடைக்கும் உணவு அல்லது பழச்சாறு உட்கொண்டிருக்க வேண்டும். 

மையத்துக்கு செல்லும் முன், அரசு அங்கீகரித்த அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும். 

வருமான வரித்துறையின், 'பான்' கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ரேஷன் அட்டை, 'ஆதார்' அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஒன்று, கட்டாயம் வேண்டும் என, என்.டி.ஏ., தெரிவித்துள்ளது.

இந்த ஆவணங்களில், ஒன்றுக்கு மேல் இருந்தால், அதை மாற்று உபயோகம் கருதி, பெற்றோர் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

தேர்வு மையம்; திடீர் மாற்றம்நாளை நடக்கவுள்ள, 'நீட்' நுழைவு தேர்விற்கு, தமிழகத்தில், 200 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில், மதுரையில், 35 மையங்களில், 6,853 மாணவர்கள், 11 ஆயிரத்து, 147 மாணவியர் என, மொத்தம், 18 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், மதுரை மண்டலத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டும், தேர்வு மையங்களில், மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட சில மையங்கள் ரத்து செய்யப்பட்டு, மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளன. மையங்கள் மாற்றப்பட்ட மாணவர்களின் பதிவு எண்கள், தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ.,வின், www.ntaneet.nic.in என்ற, இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

 மாணவர்கள் புதிய ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதற்கான அறிவிப்பை, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஹம்சபிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது 29-ந்தேதி வரை நீடிக்கிறது
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று (சனிக் கிழமை) முதல் தொடங்குகிறது.

பதிவு: மே 04, 2019 06:59 AM
சென்னை,

தமிழகத்தை நோக்கி வந்த பானி புயல் நேற்று ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற போதிலும் புயலின் திசைவேக மாற்றம் காரணமாக நிலக் காற்றை கடற்பகுதிக்குள் இழுத்துச் சென்றதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

சென்னையை பொறுத்தவரையில், வழக்கமாக பிற்பகலில் இருந்து கடற்காற்று வீச ஆரம்பித்து விடும். இதனால் சென்னையில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் கடற்காற்று காரணமாக மாலை மற்றும் இரவு நேரத்தில் வெப்பத்தின் அளவு ஓரளவு குறைந்து காணப்படும்.

ஆனால், பானி புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பத்தின் அளவு வழக்கத்தைவிட கூடுதலாகவே இருந்தது. இதனால், இரவு நேரத்தில் மக்கள் தூங்குவதற்கு சற்று சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று முதல் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நீடிக்கிறது. இதனால், இந்த காலக்கட்டத்தில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

அதே நேரத்தில் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இது குறித்து வானிலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பானி புயலின் தாக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை. துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை மணிக்கூண்டுகள் அகற்றப்பட்டுவிட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்.

ஒருவேளை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

NEWS TODAY 04.10.2026