Thursday, May 30, 2019

Read more at Medical Dialogues: Pharma D can now use DR prefix, Doctors cry foul https://medicaldialogues.in/pharma-d-can-now-use-dr-prefix-doctors-cry-foul/
Read more at Medical Dialogues: Pharma D can now use DR prefix, Doctors cry foul https://medicaldialogues.in/pharma-d-can-now-use-dr-prefix-doctors-cry-foul/
Read more at Medical Dialogues: Pharma D can now use DR prefix, Doctors cry foul https://medicaldialogues.in/pharma-d-can-now-use-dr-prefix-doctors-cry-foul/

Public Notice 29.05.2019


சிங்கப்பூருக்கு கடத்த முயற்சிசென்னை விமான நிலையத்தில் 64 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்


சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்புள்ள 64 கிலோ சுறா மீன் துடுப்புகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பதிவு: மே 30, 2019 03:45 AM மாற்றம்: மே 30, 2019 04:12 AM
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சிங்கப்பூருக்கு செல்ல வந்த சென்னையை சேர்ந்த மதார்(வயது 25), மதுரையை சேர்ந்த ஷேக்மதார்(35) ஆகியோரது உடைமைகளை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.

அதில் அவர்களிடம் இருந்த அட்டைபெட்டிகளில் சுறா மீனின் துடுப்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். இதுபற்றி மத்திய வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சுறா மீனின் துடுப்புகளை ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 2 பேரின் விமான பயணத்தை ரத்து செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரிடம் இருந்தும் ரூ.32 லட்சம் மதிப்புள்ள 64 கிலோ எடை கொண்ட சுறா மீனின் துடுப்புகளை பறிமுதல் செய்தனர். சுறா மீனின் துடுப்புகள் சீனாவில் மருத்துவ சூப்பாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

பின்னர் மேல் விசாரணைக்காக பிடிபட்ட 2 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீனின் துடுப்புகள் மத்திய வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலையங்கம்

2–வது இன்னிங்சை தொடங்குகிறார் மோடி



இந்தியாவின் 14–வது பிரதமரான நரேந்திரமோடி 2–வது முறையாக இன்று மாலை பிரதமராக பொறுப்பு ஏற்கப்போகிறார்.

மே 30 2019, 04:00

இந்தியாவின் 14–வது பிரதமரான நரேந்திரமோடி 2–வது முறையாக இன்று மாலை பிரதமராக பொறுப்பு ஏற்கப்போகிறார். பொதுவாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடுதான் தேர்தலின்போது காணப்படும். ஆனால், பா.ஜ.க.வோ கடந்த தேர்தலின்போது 282 இடங்களில் தனித்து வெற்றிபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 303 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியாவை மட்டுமல்லாமல், உலகத்தையே வியக்கவைக்கிறது. நரேந்திரமோடி இன்று மாலைதான் பதவி ஏற்கிறார் என்றாலும், பதவி ஏற்றவுடன் மிக மின்னல்வேகத்தில் செயல்படப்போகிறார் என்பதை பிரதமரின் அலுவலகம், தற்போது பல்வேறு துறைகளுடன் தொடர்புகொண்டு அடுக்கடுக்காக பல தகவல்களை கேட்கும் வேகத்திலேயே தெரிகிறது.

பதவி ஏற்பு விழாவுக்கு கடந்தமுறை சார்க் நாடுகளை சேர்ந்த தலைவர்களை அழைத்திருந்தார். இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, ‘பிம்ஸ்டெக்’ என்று கூறப்படும் வங்காள விரிகுடா கடலின் ஓரமாக உள்ள வங்காளதேசம், இலங்கை, பூடான், நேபாளம், மியான்மர், தாய்லாந்து நாடுகளின் தலைவர்களையும், கிர்கிஸ்தான், மொரீசியஸ் தலைவர்களையும் அழைத்திருக்கிறார். இந்த பட்டியலின் அடிப்படையில், அவர் அழைப்புவிடுத்திருப்பதால், பாகிஸ்தான் இந்த பட்டியலில் வரவில்லை. இன்று பதவி ஏற்றதும், பிரதமர் அடுக்கடுக்கான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறார். அடுத்த சிலநாட்களில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டிய கட்டாயம் இருப்பதால், உடனடியாக பிரதமரும், புதிதாக பொறுப்பேற்கப்போகும் நிதி மந்திரியும் பட்ஜெட் தயாரிப்பில் மிகத்தீவிரமாக ஈடுபட வேண்டியநிலை உள்ளது. ஒவ்வொரு துறையிலும் அடுத்த 100 நாட்களில் நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பாஜ.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நிறைவேற்றவேண்டும். முதல்கட்டமாக வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தொழில்துறையிலும் வேலைவாய்ப்புகள் வேண்டும், வேளாண்துறையிலும் வேலைவாய்ப்புகள் வேண்டும், தொழில்துறையில் வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கவேண்டுமென்றால், தனியார் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். வெகுநாட்களாக தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பான நிறுவன வரிகுறைப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்புகள்.

விவசாயத்தை பொறுத்தமட்டில், கிராமத்தில் உள்ள விவசாயிகளின் பையில் பணம் இருந்தால் ஊரக பொருளாதாரம் உயரும் என்பது நியதி. எனவே, அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். 2022–ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போவதை ஒட்டி, அதை இலக்காக வைத்து பிரதமர் நரேந்திரமோடி 1,000 நாளில் அவரது அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய திட்டங்களை எல்லாம் வகுத்து செயல்படுவார் என்ற நம்பிக்கை நாட்டு மக்களுக்கு நிறைய இருக்கிறது. கடந்த தேர்தலின்போது அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘அனைவரோடும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம்’ என்ற முழக்கத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், இப்போது அவர் பேசும்போது, ‘இந்த முழக்கத்தோடு அனைவரின் நம்பிக்கையையும் பெற்று’ என்ற வாசகத்தை சேர்த்திருக்கிறார். ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களிடம் பேசும்போது, ‘நமக்கு எதிராக ஓட்டளித்தவர்களும் நம்மவர்கள்தான்’ என்று கூறியிருக்கிறார். இது தமிழக மக்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. தமிழக மக்களின் எதிர்பார்ப்பான கோதாவரி–காவிரி இணைப்பு திட்டத்துக்கான முயற்சிகளை உடனடியாக தொடங்கி, தமிழக மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும். மொத்தத்தில், இந்தமுறை அவரது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கப்போகிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அவரது 2–வது இன்னிங்சில் எத்தனை ரன்கள் குவிப்பார் என்பதை வருங்காலம் காட்டும்.
இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்ப பதிவுக்கு நாளை கடைசி

Added : மே 29, 2019 22:40

சென்னை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, விண்ணப்பப் பதிவுக்கு, நாளை கடைசி நாள். இதுவரை, 1.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தமிழக அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டாம். அதேபோல், நிகர்நிலை பல்கலைகளின் படிப்பில் சேரவும், தமிழக கவுன்சிலிங்கில், கலந்து கொள்ள வேண்டாம்.ஆனால், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு படிப்பில் சேர, தமிழக அரசு நடத்தும், ஒருங்கிணைந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். 2018 வரை, அண்ணா பல்கலை நடத்திய கவுன்சிலிங்கை, இந்த ஆண்டு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.

இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு, மே, 2ல் துவங்கியது. மாணவர்கள் தங்கள் விபரங்களை, https://tneaonline.in என்ற இணையதளத்தில், பதிவு செய்து வருகின்றனர். நேற்று மாலை வரை, 1.30 லட்சம் பேர், தங்கள் விபரங்களை பதிவு செய்து, கவுன்சிலிங்குக்கான கட்டணம் செலுத்தியுள்ளனர்.ஒரு மாதமாக நடந்து வரும் ஆன்லைன் பதிவு, நாளையுடன் முடிகிறது. மாணவர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், தங்கள் விபரங்களை விரைந்து பதிவு செய்யும்படி, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
தீயில் கருகியது 10 ஏக்கர் கரும்பு

Added : மே 29, 2019 23:17

ராஜபாளையம், ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுாரில் திடீர் தீ விபத்தில் 10 ஏக்கருக்கு மேற்பட்ட கரும்பு கருகியது.தெற்கு வெங்காநல்லுார் ரோட்டில் நக்கனேரி செல்லும் வழியில் பெரியகுளம் கண்மாய் மற்றும் அலப்பசேரி கண்மாய் பாசன நிலங்களில் பல ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேற்று இப்பகுதியில் திடீரென தீ பற்றியதில் 10 ஏக்கர் கரும்பு சேதமடைந்தது. மேலும் அருகில் உள்ள நெல்லித் தோப்பில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் கருகின. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். விபத்திற்கான காரணம் குறித்து தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.விவசாயி ரமேஷ் கூறுகையில், ''ஓர் ஆண்டு பாடுபட்டு விளைவித்த கரும்பு ஆலைக்கு அனுப்ப தயாரான நிலையில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை, வெயில் போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், இந்த இழப்பும் சேர்ந்து மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது,'' என்றார்.
பிசியோதெரபி படிப்பு 69 இடங்கள் நிரம்பின

Added : மே 29, 2019 22:48

சென்னை, முதுநிலை பிசியோதெரபி படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், 69 இடங்கள் நிரம்பின.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ் செயல்படும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், முதுநிலை இயன்முறை மருத்துவம் எனப்படும், பிசியோதெரபி படிப்புக்கு, 800 இடங்கள் உள்ளன. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 40 இடங்கள் உள்ளன.இந்த படிப்புக்கு, 74 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். இதற்கான கவுன்சிலிங், கீழ்ப்பாக்கம், மருத்துவ கல்வி இயக்குனரகத்தில், நேற்று நடந்தது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுடன் சேர்த்து, 69 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள இடங்களை, அந்தந்த கல்லுாரிகள் நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...