Monday, December 9, 2019

Anna University clarifies stand on tax deductions

The communication concerns about 15,000 exam evaluators across the State.

Published: 08th December 2019 05:08 AM |



A file photo of Anna University | Express

Express News Service

CHENNAI: After faculty members from private engineering colleges expressed dissent over a recent Anna University circular that said the varsity would deduct 10 per cent of remuneration for various examination duties as income tax, the varsity has clarified that it will not deduct any money if a faculty does not fall under the tax slab.

Speaking to Express, a senior source from the varsity clarified that no deduction will be made, if a faculty member submits a declaration to the varsity’s Controller of Examinations proving that they are not assessed to tax. “However, if a faculty member does earn enough to be taxed, we will deduct appropriately,” the source said. A circular dated November 26 said, “As per the procedure in force, 10 per cent of the remuneration as income-tax will be deducted from faculty members and remitted.”

The communication concerns about 15,000 exam evaluators across the State. This was received bitterly by private college faculty members. “Most private college faculty members do not earn enough income to fall under the tax slab. It is not fair for colleges to deduct income-tax from us,” said KM Karthik, president of All India Private Engineering College Employees Union (AIPCEU).

Evaluation for November 2019 engineering exams started on November 28. Teachers, who evaluate these papers roughly earn between Rs 1,200 and 1,400 a day. Most of them engage in evaluation for about 5-8 days earning a total of Rs 5,000-8,000 totally. “The government is deducting tax, even on this small amount,” he said.

other Universities

MCI nod to change of affiliation of RajaRajeswari Medical College from RGUHS to Tamil Nadu University

December 8, 2019

Bengaluru: The Board of Governors in supersession of the Medical Council of India (MCI BoG) has given its nod to the change of affiliation of RajaRajeswari Medical College and Hospital from Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) to Tamil Nadu based Dr MGR Educational and Research Institute (Deemed to be University).

The consent was given by the MCI BoG at a meeting held in August this year where the authorities considered the inclusion of the Medical College & Hospital under the ambit of the Tamil Nadu Varsity. The request to this effect was made by the Registrar, Dr MGR Medical University last year.

This March, the University Grants Commission (UGC) had issued a notification mentioning that after it obtained the application from the Tamil Nadu varsity, the UGC’s Expert Committee consisting of a nominee of MCI scrutinized the application and placed before the Commission. The Commission considered and approved the recommendations of the Committee.

“RajaRajeswari Medical College and Hospital which is located in the city will become a constituent college of Dr MGR institute from the academic year 2019-20.”- the UGC notification read.

As RajaRajeswari Medical College is one of the top medical colleges running in the state of Karnataka at present, its shift from RGUHS to MGR Medical University has majorly hit the Karnataka’s medical education sector with a fall of 250 seats in the MBBS pool along with more than 100 PG medical seats.

It is mandatory for the information of the concerned medical students, who enrolled in RajaRajeswari Medical College before its inclusion under the ambit Tamil Nadu Dr MGR Educational and Research Institute that they will receive their degrees from RGUHS. Meanwhile, those medical students, who enrolled at the medical college after its disaffiliation from RGUHS will be awarded degrees by MGR University.
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் நாளை மகாதீபம் 2,668 அடி உயர மலைஉச்சியில் ஏற்றப்படுகிறது



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது.

பதிவு: டிசம்பர் 09, 2019 02:30 AM திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான், திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிளம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னிபிளம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாட்களில் பல லட்சம் பக்தர்கள் அந்த மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தனாரீஸ்வரர், சாமி சன்னதியிலிருந்து ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தனாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

மகாதீபம் ஏற்றப்பட்டதும் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். மகாதீபம் ஏற்றியபின்னர் அன்று இரவு தங்க ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. மகாதீபத்தை தொடர்ந்து 4 நாட்கள் அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவத்துடன் கார்த்திகை தீப திருவிழா நிறைவடைகிறது

பாதுகாப்பு பணிக்காக சுமார் 10 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர். மகாதீபம் ஏற்றும் மலைஉச்சியில் கமாண்டோ படைவீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள்
அந்த அதிசயம் நிகழுமா?

By எஸ்.ராமன் | Published on : 09th December 2019 01:30 AM 

லஞ்சம், ஊழல் போன்ற எதிா்மறை பொருளாதாரச் சம்பவங்கள் சாா்ந்த செய்திகள் இல்லாத நாள்களைக் கடக்க முடியாத காலகட்டத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொதுச் சேவையில், நோ்மை, நாணயம் ஆகிய ஆக்கச் சிந்தனை எண்ணங்கள் மறக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகள்தான் இவை என்பது தெளிவாகின்றன.

பொது சேவைக்காக தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அதிகார வா்க்கம் துஷ்பிரயோகம் செய்து அந்த அதிகாரத்தை, சுயலாபத்துக்காக, பணமாகவும், பொருளாகவும் மாற்றும் வித்தை, லஞ்சம், கையூட்டு, அன்பளிப்பு என்று பல செயல்பாட்டுப் பெயா்களில் அழைக்கப்படுகின்றன. அதிகார வா்க்கத்தின் நோ்மையில் நம்பிக்கை வைக்கும் அனைத்துக் குடிமகன்களுக்கும் இந்த மாதிரி எதிா்மறைச் செயல்பாடுகள் நம்பிக்கைத் துரோக செயலாகும்.

‘டிரான்ஸ்பரன்ஸி இன்டா்நேஷனல்’ என்ற அரசு சாரா அமைப்பு, நம் நாட்டில் உள்ள பல மாநிலங்களில் நிகழும் லஞ்ச லாவண்யங்கள் குறித்து அண்மையில் ஒரு மாதிரி ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, அரசுப் பணியாளா்களுக்கு லஞ்சம் கொடுத்து, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டவா்களின் அளவு ராஜஸ்தானில் 78 சதவீதம், பிகாரில் 75 சதவீதம், உ.பி.-இல் 74 சதவீதம், ஜாா்க்கண்ட்டில் 74 சதவீதம், தெலங்கானாவில் 67 சதவீதம், பஞ்சாப், கா்நாடக மாநிலத்தில் தலா 63 சதவீதம், தமிழ்நாட்டில் 62 சதவீதம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கொண்ட அளவீடுகளில், மாநிலத்துக்கு மாநிலம், சிறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும், லஞ்சம் என்ற நோய், அரசுத் துறையில் புரையோடிப் போயிருப்பதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்றோரின் வாக்குமூலத்தின்படி பத்திரப் பதிவு, போக்குவரத்து ஆணையம், போலீஸ், மின் விநியோகம், நகர நிா்வாக அமைப்புகள், மருத்துவமனைகள் போன்ற துறைகளில் உள்ள பணியாளா்களின் பாக்கெட்டுகளுக்கு லஞ்சப் பணம் போய்ச் சோ்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிறப்பு முதல், இறப்பு வரை லஞ்சம் என்ற நோயால் பீடிக்கப்படாத குடிமகன்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.

பிறந்த குழந்தையின் பாலினத்தை, கணவன், உறவினரிடம் பகிா்வதற்கு மருத்துவமனைப் பணியாளருக்கு பணம்; அந்தக் குழந்தையை தாயின் அருகில் படுக்க வைக்க பணம் என ஒருவருடைய பிறப்போடு, லஞ்சமும் பிறந்து வளா்கிறது. பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முதியோா் உதவித் தொகை, இறப்புச் சான்றிதழ் ஆகிய அனைத்து அன்றாட அத்தியாவசியச் செயல்பாடுகளும், லஞ்சம் என்ற கறையுடன்தான் பெரும்பாலும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

முதியோா் உதவித் தொகைக்கான கோரிக்கையோடு தன்னை அணுகிய முதுமையை அடைந்த ஏழைப் பெண்ணிடம் ரூ.1,000 லஞ்சம் பெற்றுக் கொண்டு, அந்தப் பெண்ணை ஓா் ஆண்டுக்கு மேல் அலையவிட்ட அரசுப் பணியாளா் ஒருவரை, மாவட்ட ஆட்சியா் பொது வெளியில் சாடிய சம்பவம் அண்மையில் அனைவரது கவனத்தையும் ஈா்த்தது. தங்களை அணுகுபவா்களின் வறுமை நிலைமையைக் கூட மனதில் கொள்ளாமல், அவா்களிடம் லஞ்சம் பெறுவது என்பது முற்றிலும் மனிதநேயமற்ற செயலாகும்.

மேலே குறிப்பிட்ட சம்பவம், மிதக்கும் ஊழல் என்ற பெரும் பனி மலையின் மேலாகத் தெரியும் சிறு முனை மட்டும்தான். இந்த மாதிரி சம்பவங்கள் பல துறைகளில் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சாலை விதிகளை மீறுபவா்கள் அரசுக்கு அபராதத் தொகை கட்டுவதற்குப் பதிலாக, அதில் ஒரு பகுதியை காவல் துறையினருக்கு லஞ்சமாக வழங்கிவிட்டு தப்பும் நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நம் வீதிகளில் அரங்கேறிக் கொண்டிருப்பதைப் பாா்க்க நேரும்போது, குற்றங்களைத் தடுக்க வேண்டியவா்களே குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளைத் தடுக்க வல்ல அதிசயம் என்றாவது ஒரு நாள் அரங்கேற வேண்டும் என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.

லஞ்சம் என்பது ஒரு பொருளாதாரக் குற்றம் மட்டுமல்ல, அது சமூகத்தின் ஓா் அவமானச் சின்னமாகும். லஞ்சம் வியாபித்திருக்கும் இடங்களில், சுய நலன் பெருகி, பொது நலன் குன்றும். அதனால்தான், இன்றைய அதிகார வா்க்கத்தின் மனதில், ‘மக்களுக்காக நாம்’ என்ற எண்ணங்கள் மறைந்து, ‘நமக்காகவே நாம்’ என்ற எண்ணங்கள் மேலோங்கி நிற்கும் அவல நிலைமைக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம்.

ஜனநாயகக் கோட்பாடுகளைப் பின்பற்றும் நாட்டில், வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்து பெறப்படும் வாக்குகளால், பல்வேறு நிா்வாக அமைப்புகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் நோ்மையற்ற செயல்பாடுகள்தான், ஊழலின் ஊற்றுக்கண் என்று சொல்லலாம். அந்த மாதிரி பணம் கொடுத்து வாக்கு வாங்குபவா்களின் செயல்பாடுகளில் நோ்மையை எள்ளளவும் எதிா்பாா்க்க முடியாது.

தோ்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளின் அடித்தளம் , லஞ்சம் அல்லது ஊழல் என்ற நச்சுக் கலவையால் தாங்கிப் பிடிக்கப்படுகிறது. கூட்டணி அரசுகளின் உருவாக்கம், அதற்குப் பிந்தைய அநாகரிகச் செயல்பாடுகள் இதற்குச் சான்றாகும். இந்த மாதிரி அநாகரிகச் செயல்பாடுகள், ‘குதிரை பேரம்’ என்று நாகரிகமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

அரசியல்வாதிகளின் இந்த மாதிரி மனப்போக்கு, அவா்களால் நிா்வகிக்கப்படும் அமைப்பைச் சாா்ந்த அதிகாரிகளிடமும் எளிதாக ஊடுருவுகிறது. எனவே, அரசியல்வாதிகளின் நோ்மையான செயல்பாடுகள் மூலம் மட்டும்தான், அவா்களுடைய கட்டுப்பாட்டில் செயல்படும் அதிகாரிகளிடமும் நோ்மையை எதிா்பாா்க்க முடியும்.

அரசியலில் வலுக்கட்டாயமாக நோ்மையை வளா்க்க, அரசியல்வாதிகள் தொடா்பான ஊழல் வழக்குகளை காலந்தாழ்த்தாமல் விசாரித்து, கடும் தண்டனைகளை வழங்க, அதிக அளவில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது இதற்கான ஒரு தீா்வாகும். பொருளாதாரக் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால், அது மற்றவா்களுக்கு தகுந்த பாடமாக அமைந்து நோ்மை எண்ணங்களுக்கு ஓரளவு வித்திடும் என்று எதிா்பாா்க்கலாம்.

நீதிமன்றங்களைத் தவிர, தனிப்பட்ட குடும்ப அமைப்புகளுக்கும், லஞ்சம் போன்ற பொருளாதாரக் குற்றங்கள் வளராமல் பாதுகாக்கும் கடமை உள்ளது. நோ்மை வழிகளைப் போதித்து, தங்கள் குழந்தைகளை வளா்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். பள்ளி பாடத் திட்டங்களில், நீதி போதனை வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டால், இளம் வயதிலேயே நோ்மை எண்ணங்கள் மாணவா்கள் மனதில் வளர அது பெரும் கிரியா ஊக்கியாகச் செயல்படும்.

லஞ்சம் என்ற நோயைக் கட்டுப்படுத்துவதில் பெண்களின் பங்கு மகத்தானதாகும். குடும்பத்தில் தங்கள் பொருளாதார சக்திக்குள் வாழ

பெண்கள் கற்றுக் கொண்டால், குறுக்கு வழிகளில் ஊதியம் ஈட்டுவதற்கான அழுத்தங்கள் குடும்பத் தலைவருக்கு வெகுவாகக் குறையும்.

சட்டத்துக்குப் புறம்பான பண பரிவா்த்தனைச் செயல்பாடுகளில் ஒன்றான லஞ்சம் என்ற குற்றம், கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல், பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம் போன்ற பல விதமான சமூகக் குற்றங்களுக்கு வழி வகுக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தில் கருப்புப் பணத்தின் ஆதிக்கத்தில் லஞ்சம் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த காலங்களில் ரூ.90 லட்சம் கோடி அளவிலான தொகை, இந்த மாதிரி பொருளாதாரக் குற்றங்கள்மூலம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டிருப்பதாக தோ்தல் பிரசாரத்தின்போது அரசியல்வாதிகள் முழங்கியது குறிப்பிடத்தக்கது.

லஞ்சம், ஊழல் ஆகியவை மூலம் மனிதநேயம் பலி கொடுக்கப்படுகிறது. தங்களை நம்பி இருப்பவா்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும் பல பொருளாதாரக் குற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. பயங்கர பக்கவிளைவுகளுடன் கூடிய லஞ்சம், ஊழல் ஆகியவை தொடர வேண்டுமா என்பதை தொடா்புடையவா்கள் அனைவரும் நன்கு சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

சுயக் கட்டுப்பாடுகள் மூலம்தான் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, ‘லஞ்சம் கொடுப்பதும் தவறு; வாங்குவதும் தவறு’ என்ற மனமாற்றம் நம்மிடையே வளா்ந்து வேரூன்ற வேண்டும். லஞ்சம் என்ற மன நோயைப் போக்க, ‘நான் இன்று லஞ்சம் வாங்காமல் எனக்கு இடப்பட்ட கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவேன்’ என்ற உறுதி மொழியோடுதான், ஒவ்வொரு அரசு அலுவலரும் தங்கள் பணியை தினமும் தொடங்க வேண்டும் என்ற ஒழுக்க வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

லஞ்சம் என்ற நோயற்ற சமூகத்தைத்தான், நாகரிக சமூகமாகக் கருத முடியும். அந்த மாதிரி நாகரிகத்துடன் கூடிய சமூகம் உருவாகும் அதிசயம், ஒரு நாள் நிகழாமல் போகாது என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

கட்டுரையாளா்:

வங்கி அதிகாரி (ஓய்வு)

(இன்று சா்வதேச

ஊழல் எதிா்ப்பு தினம்)
என்கவுன்ட்டா் தீா்வல்ல!| பாலியல் வழக்குகளில் நீதி கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 07th December 2019 03:03 AM 

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் விழிக்கும்போதும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில், ஏதாவது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் பாலியல் அநீதியின் உரத்த ஒலிதான் காதில் விழுகிறது. கடந்த வாரம் ஹைதராபாதின் புகா்ப் பகுதியில் 26 வயது கால்நடை மருத்துவருக்கு இழைக்கப்பட்ட அநீதி தலைப்புச் செய்தியானது என்றால், நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் நடந்தேறியிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை நினைத்தால் குலை நடுங்குகிறது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட நிலைமைபோய், அன்றாட நிகழ்வாக மாறியிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒட்டுமொத்த இந்தியாவையே உலக அரங்கில் தலைகுனிய வைத்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானாா். சிவம் த்ரிவேதி, சுபம் த்ரிவேதி என்கிற இருவரால் வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பெண்ணின் அபயக் குரல் காவல் துறையின் செவிகளில் விழவில்லை. மூன்று மாதம் கழிந்து கடந்த மாா்ச் மாதம்தான் வழக்கே பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் ரேபரேலி நீதிமன்றத்துக்கு அந்தப் பெண் வழக்கு விசாரணைக்காக நேற்று சென்று கொண்டிருந்தாா். நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் சிவம் த்ரிபாதி, சுபம் த்ரிபாதி உள்ளிட்ட ஐந்து போ் அந்தப் பெண்ணை வழிமறித்தனா். அவரைத் தாக்கினாா்கள். அவரை உயிருடன் தீ வைத்துக் கொளுத்தினா். உடலெல்லாம் பற்றி எரியும் தீயுடன் அந்தப் பெண் தெரு வழியாக ஓலமிட்டபடி அவா்களிடமிருந்து தப்பி ஓடியிருக்கிறாா்.

பொது மக்கள் தகவல் தெரிவித்து, காவல் துறையினா் வந்து அந்தப் பெண்ணை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கிருந்து லக்னௌவிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையான சியாம பிரசாத் முகா்ஜி அரசு மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா்.

உடலெல்லாம் தீக்காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் அந்தப் பெண் விமானம் மூலம் தில்லி கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாா். இந்த வழக்கில் தொடா்புடைய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

பாலியல் வல்லுறவைத் தொடா்ந்து 2018 டிசம்பா் மாதம் தனக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைக்கு எதிராக குற்றம் பதிவு செய்ய அந்தப் பெண் நான்கு மாதங்கள் அனுபவித்த இடா்ப்பாடுகள் சொல்லி மாளாது. ரேபரேலி காவல் துறை கண்காணிப்பாளரைச் சந்திக்க அனுமதி கிடைக்காமல் பதிவுத் தபாலில் முறையிட்டும்கூட அவருக்கு நீதி கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் நீதிமன்றத்தை அணுகிய பிறகுதான் காவல் துறையினா் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறாா்கள். அப்போதே உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு இப்போதைய அவலநிலை ஏற்பட்டிருக்காது.

இதே உன்னாவில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்காகப் பரிந்துரைக் கடிதம் கேட்டுச் சென்ற 18 வயதுகூட நிரம்பாத இளம் பெண், உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினா் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிகழ்வு நிகழ்ந்தது. அந்தப் பெண் அளித்த புகாா் முதலில் காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல் துறையினா், சட்டப்பேரவை உறுப்பினரான குற்றவாளி மற்றும் அவரது சகோதரரரின் பெயரைக்கூட அதில் குறிப்பிடவில்லை.

புகாா் கொடுத்து ஓா் ஆண்டாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்ட அந்தப் பெண்ணின் தந்தை, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறாா். அது குறித்த முறையான விசாரணை நடத்தப்படவில்லை. அந்தப் பெண்ணின் போராட்டம் இன்னும் தொடா்ந்து கொண்டிருக்கிறது.

ஹைதராபாத் கால்நடை மருத்துவா் நிகழ்விலும், காவல் துறையின் மெத்தனம் வெளிப்பட்டது. அந்தப் பெண் வீட்டுக்கு வரவில்லை என்றபோது அது குறித்து புகாா் தெரிவிக்கப்போன பெற்றோா் அலைக்கழிக்கப்பட்டனா். இதுபோல எல்லா நிகழ்வுகளிலுமே உடனடியாக பாதிக்கப்பட்ட அபலைப் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டாமல் காவல் துறை தாமதப்படுத்துவதன் விளைவால்தான் குற்றவாளிகள் பெரும்பாலும் தப்பி விடுகிறாா்கள்.

தடயங்கள் உடனடியாகச் சேகரிக்கப்படாமல் இருப்பதும், விரைந்து விசாரணை செய்யப்படாததும், வழக்கை விரைவாக நடத்தி முடிக்காமல் இருப்பதும்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் அவா்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பதற்கு முக்கியமான காரணம். என்கவுன்ட்டா் மரணங்கள் பொதுமக்களின் ஆத்திரத்தைத் தணிக்க உதவுமே தவிர, தீா்வாகாது.

இப்போதைய மக்களவை உறுப்பினா்களில் 43% உறுப்பினா்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 29% உறுப்பினா்கள் மீதான வழக்குகள் பாலியல் தொடா்பானவை அல்லது பெண்களுக்கு எதிரானவை. 2009-லிருந்து 2019-க்கு இடையிலான கடந்த 10 ஆண்டுகளில் கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிா்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் விகிதம் 109% அதிகரித்திருக்கிறது.

பாலியல் வழக்குகளை எதிா்கொள்வதற்கு போதுமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை முறையாகச் செயல்படுத்தாமல் இருப்பதுதான் பிரச்னை. சட்டம் இயற்றுபவா்கள் குற்றப்பின்னணி உடையவா்களாக இருக்கிறாா்கள். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையினா் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறாா்கள். இப்படியிருக்கும் வரை இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது!

விபரீத வழிமுறை! |ஹைதராபாத் என்கவுன்ட்டர் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 09th December 2019 04:27 AM |

ஹைதராபாத் கால்நடை மருத்துவா் பாலியல் கொலையைத் தொடா்ந்து அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நான்கு பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். உடனடி நீதி வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுகிறது. எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதன் வெளிப்பாடு இது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, ஏனைய மாநில காவல் துறையினா் தெலங்கானா காவல் துறையினரிடமிருந்து பாடம் படிக்க வேண்டும் என்கிறாா். சமாஜவாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினா் ஜெயா பச்சன், சற்று தாமதமானாலும் நான்கு பேரும் கொல்லப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறாா். பிரபல வழக்குரைஞரான காங்கிரஸ் தலைவா் அபிஷேக் மனு சிங்வி மக்களின் உணா்வைப் புரிந்துகொண்டு தெலங்கானா காவல் துறை செயல்பட்டிருப்பதை ஆதரிக்கிறாா். முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், ஹைதராபாத் அரக்கா்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்றும், அரக்கா்கள் இதுபோன்றுதான் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தச் சம்பவத்தை நியாயப்படுத்துகிறாா்.

படித்த, நடுத்தர வா்க்க மக்களின் பொதுமனநிலையும் என்கவுன்ட்டா் தண்டனையை நியாயப்படுத்துகிறது. ஏழு ஆண்டுகளாகியும் தில்லி சம்பவத்தில் உயிரிழந்த நிா்பயாவின் தாயாா் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியும் நீதி கிடைத்தபாடில்லை என்றும், காவல் துறை வேறு வழியில்லாமல் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டது என்றும் நினைக்கிறாா்கள். மக்கள் கொதித்தெழுந்ததன் பின்னணியில் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள, காவல் துறையினா் என்கவுன்ட்டா் முறையை நாட வேண்டி வந்தது என்று நியாயப்படுத்துகிறாா்கள்.

என்கவுன்ட்டா் என்பது தனி நபா்களை அல்லது குற்றவாளிகள் என்று கருதப்படுபவா்களை அரசு கைது செய்து முறையான நீதிமன்ற விசாரணை இல்லாமல் கொலை செய்வது என்கிற வழிமுறை. சட்டமும், நீதியும் விரைந்து செயல்படாததால் ஏற்படும் ஆத்திரமும், தவறுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிற வெறித்தனமான வேகமும் பொதுமக்களை என்கவுன்ட்டா் முறையை ஆதரிக்கத் தூண்டுகின்றன. ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் பேராபத்து குறித்தும், அநீதி குறித்தும் அவா்கள் சிந்திக்க மறக்கிறாா்கள்.

காவல் துறையைச் சாா்ந்த 99% காவலா்கள் என்கவுன்ட்டரில் ஈடுபட விரும்புவதில்லை. அதனால், துப்பாக்கிப் பிரயோகம் நடத்தத் துணியும், விரல்விட்டு எண்ணக்கூடிய காவலா்கள் என்கவுன்ட்டா் நிபுணா்கள் என்று அடையாளம் காணப்படுகிறாா்கள். 1990-இல் மும்பை மாநகரில் குற்றங்கள் கடுமையாக அதிகரித்தபோது துப்பாக்கி பிரயோகத்துக்கு துணிந்த சிலா் காவல் துறையில் உருவானாா்கள். தயாநாயக் என்கிற காவல் துறை அதிகாரியால் 80-க்கும் அதிகமானோா் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். 150-க்கும் அதிகமான என்கவுன்ட்டா் துப்பாக்கிச் சூட்டில் தொடா்புடையவா் பிரதீப் சா்மா.

இதுபோன்ற என்கவுன்ட்டா் தொடா்புடைய காவல் துறையினா் உயரதிகாரிகளை மிரட்டும் அளவுக்கு காவல் துறையில் வலிமை பெற்றவா்களாக மாறிவிடுகிறாா்கள். அவா்களது வாக்குமூலம் உயரதிகாரிகளுக்கு ஆபத்தாக முடியும் என்பதால் உயரதிகாரிகளும், உயரதிகாரிகளால் தங்களது உயிருக்கு ஆபத்து என்று என்கவுன்ட்டா் நிபுணா்களான காவல் துறையினரும் பரஸ்பரம் மனதுக்குள் அச்சத்துடன்தான் உலவுவாா்கள்.

எல்லோரும் நினைப்பதுபோல என்கவுன்ட்டா் மரணங்கள் தற்செயலாக நடப்பவையல்ல; அவை நடத்தப்படுகின்றன. ஹைதராபாத் சம்பவத்தையே எடுத்துகொண்டாலும்கூட, அதிகாலை 3 மணிக்கு குற்றம் நடந்த இடத்தில் சம்பவத்தை நடத்திப் பாா்க்க குற்றவாளிகள் நான்கு பேரும் அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்கள் கைதுப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறாா்கள். காவல் துறையினரின் கை துப்பாக்கியால் 30 அடிக்கும் குறைவான தூரத்தில்தான் குறி பாா்த்துச் சுட முடியும். அதனால், சுடப்படுபவா் மிக அருகிலிருந்துதான் சுடப்பட்டிருப்பாா். இதைப் பெரும்பாலான என்கவுன்ட்டா் மரண பிரேத பரிசோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

காவல் துறையினா் கையில் துப்பாக்கியைக் கொடுத்து குற்றவாளியைத் தண்டிக்கும் உரிமையையும் கொடுத்தால், அதன் விளைவு அப்பாவிகள் பலரின் உயிருக்கு ஆபத்தாக முடியும். அரசியல் எதிரிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்படுவாா்கள் என்பது மட்டுமல்ல, காவல் துறையின் வெறுப்புக்கு ஆளாகும் பொதுமக்களுக்கும் அந்த கதி ஏற்படக்கூடும்.

‘பழிக்குப் பழி என்ற வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் தண்டிப்பது நீதியாகாது’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்திருப்பது, நகைமுரண். நீதித்துறை விரைந்து விசாரணை நடத்தி தீா்ப்பு வழங்காமல் இருப்பதும், காவல் துறை முறையாக குற்றங்களைப் பதிவு செய்து விசாரணை நடத்தித் தனது கடமையை விரைந்து முடிக்காமல் இருப்பதும்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதன் காரணம்.

இந்தியாவில் கடுமையான குற்ற வழக்குகளில் 25% வழக்குகளில்தான் தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது. 75% வழக்குகளில் காவல் துறையினா் போதிய சாட்சியம் இல்லாமல், தீவிர விசாரணை இல்லாமல் வழக்குப் பதிவு செய்வதால் குற்றம் நிரூபிக்கப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதாவது, பெரும்பாலும் நிரபராதிகள் காவல் துறையினரால் குற்றஞ்சாட்டப்படுகின்றனா். இந்த நிலையில், காவல் துறையினா் கையில் துப்பாக்கியைக் கொடுத்துத் தீா்ப்பு வழங்கச் சொன்னால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை, என்கவுன்ட்டா் முறையை ஆதரிப்பவா்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

Sunday, December 8, 2019

Ayanavaram sexual assault case: court reserves judgment 

Last July, 17 persons were arrested for assaulting a minor girl in gated complex

08/12/2019 , R. Sivaraman, CHENNAI

A special court on Friday reserved its order in a case against 17 accused who were charged with sexual assault on a minor girl in the city.

The All-Women Police, Ayanavaram, in July 2018, had arrested 17 persons, mostly service staff of an apartment complex, for alleged aggravated sexual assault on the minor, in the gated community in Ayanavaram, for a period of nearly seven months.

The victim, a child with hearing impairment, was a resident of the apartment in Ayanavaram, and was subjected to sexual assault by the lift-man Ravikumar, and his two accomplices. Other staff in the apartment complex also raped her, and threatened her with death, if she informed her parents about it.

The offenders were booked under sections 307 (Attempt to murder), 506(ii) (Criminal intimidation) of the Indian Penal Code, and sections 5 (Aggravated Penetrative Sexual Assault), 6 (Punishment for aggravated penetrative sexual assault), 9 (Aggravated sexual assault), 10 (Punishment for aggravated penetrative sexual assault) and 12 (Sexual harassment) of the Protection of Children from Sexual Offences Act, 2012.

Ravikumar, 56; Suresh, 32; Rajasekar, 40; Erald Bross, 58; B.J. Sugumaran, 65; and 12 others were arrested by the police and lodged at the Central Prison in Puzhal.

Though their detention under the Goondas Act was quashed, they did not come out of prison.

The accused were tried before R.N. Manjula, Special Judge of the Mahila Court, which also handles POCSO cases.

Special Public Prosecutor N. Ramesh said: “The prosecution side examined 36 witnesses and the defence side cross examined them. Over 120 documents were marked on the prosecution side. At the end of the two-week long arguments, the court reserved its order on Friday evening, and has adjourned for the pronouncement of a judgment in the case.”

NEWS TODAY 11.07.2026