Friday, January 30, 2015

அமெரிக்காவில் 95 அரங்குகளில் 'என்னை அறிந்தால்'

அமெரிக்காவில் 95 அரங்குகளில் 'என்னை அறிந்தால்'

வாஷிங்டன் (யு.எஸ்): அஜீத்தின் என்னை அறிந்தால் படம் அமெரிக்காவில் 95 அரங்குகளில் வெளியாகிறது. அரங்குகள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கணிசமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர் அஜீத். எந்த பின்புலமும் இல்லாமல் திரையுலகில் முன்னேறி வந்ததும், ரசிகர் மன்றங்களை கலைத்து உட்பட அவருடைய வெளிப்படையான அணுகுமுறையுமே அவருக்கு அங்கே உள்ள ஆதரவுக்கு முக்கிய காரணமாகும். இந் நிலையில் அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் 95 தியேட்டர்களில் அமெரிக்காவில் வெளியாகிறது.

முன்னதாக 'ஆரம்பம்' 78 தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. வீரம் படம் 80 அரங்குகளில் வெளியானது. இப்போது 95 அரங்குகளில் என்னை அறிந்தால் வெளியாகிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக 9 தியேட்டர்களிலும், இலனாய்-ல் 8, டெக்சாஸில் 5, நியூ ஜெர்சியில் 5, ஒஹயோவில் 5, ஃப்ளோரிடாவில் 4, பிலடெல்பியாவில் 4 , மிசிகன் 4 உட்பட 36 மாகாணங்களில் என்னை அறிந்தால் படத்தை. அட்மஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

Read more at: http://tamil.filmibeat.com/news/yennai-arinthaal-release-95-screens-usa-032984.html

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...