Monday, July 6, 2015

திருமணமான பெண், கருணை அடிப்படையில் அரசு வேலைபெற சட்டப்படி உரிமை உள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டத்தின் முன் ஆணும், பெண் ணும் சமம் என்பதால், திருமண மான பெண்ணுக்கும் கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப் பித்துள்ளது.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் நொச்சிக்குப்பை கிராமத் தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்:-
எனது தந்தை அரசு மலைவாழ் உறைவிடவாழ் பள்ளியில் சமையல்காரராகவும், காவல் காரராகவும் பணியாற்றினார். கடந்த 2003-ல் அவர் இறந்துவிட் டார். அதனால், கருணை அடிப் படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிக்கு மனு கொடுத்தேன். எனக்கு திருமணமாகிவிட்டதால் மனுவைப் பரிசீலிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் மீண்டும் அதிகாரிகளிடம் முறையிட்டேன். எந்தப் பலனும் இல்லை. எனவே, கருணை அடிப் படையில் எனக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு இவ் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞர் ஜெயப் பிரகாஷ் நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “கடந்த 2010 ஆகஸ்டு 30-ம் தேதி தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட அர சாணையின்படி, திருமணமான பெண்களுக்கு கருணை அடிப் படையில் வேலை வழங்கலாம். ஆனால், வேலைக்காக அவர் விண்ணப்பிக்கும்போது திருமணம் ஆகியிருக்கக்கூடாது. மனுதா ரரைப் பொருத்தவரை அவருக்கு திருமணம் ஆகும்போது அவரது தந்தை உயிருடன் இருந்தார். எனவே, கருணை அடிப்படையில் அவர் வேலை கோர உரிமை இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:-
ஆண்களைப் பொருத்தவரை திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும் கருணை அடிப்படையில் வேலையைப் பெற உரிமை உள்ளது. பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது பாரபட்சமானது. அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சம அந் தஸ்து, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த வழக்கில், திருமணத்தைக் காரணம் காட்டி பாகுபாடு காட்டுவதை ஏற்க முடியாது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்க ளைப் பாதுகாக்க வேண்டியது அவர்களது மகன் அல்லது மகளின் கடமை என்று சொல்லப் பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத் தில் பாகுபாடு காட்டப்படவில்லை. கருணை அடிப்படையில் வேலை என்று வரும்போது, பாகுபாடு காட்டப்படுகிறது.
மனுதாரரின் அப்பாவுக்கு ஆண் வாரிசு இல்லை. மனுதாரர் மட்டுமே (ஒரே பெண்) உள்ளார். இப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் ஆண் அல்லது பெண் என்று ஒரேயொரு குழந்தைதான் இருக்கிறது. ஒரு அரசு ஊழியருக்கு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அவர் மரணத்துக்குப் பிறகு அம்மாவைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மகளுக்குத்தானே வருகிறது. இந்த மாதிரியான சூழலில் மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தர முடியாது என்பது ஏற்புடையதல்ல.
எனவே, மனுதாரருக்கு கருணை அடிப்படையில் 8 வாரங்களுக்குள் வேலை வழங்க வேண்டும். மனுதாரர் மனுவை நிராகரித்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், அரசு தலைமைச் செயலாளர் தகுந்த மாற்றம் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஹரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...