Wednesday, February 1, 2017

வங்கிக்கணக்கில் இருமுறை பணம் வரவு : இன்ப அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்

தேனி: பொங்கல் போனஸ், சரண்டர் உள்ளிட்டவற்றுக்காக வங்கிக்கணக்கில் இருமுறை பணம் வரவு ஆனதால், தேனி அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பயணப்படி, சரண்டர், போனஸ் ஆகியவற்றுக்காக கருவூலம் மூலம் 'பில்' பாஸ் செய்து விபரங்கள் 'சிடி'க்களாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு அனுப்பப்படும். அங்கிருந்து அரசு ஊழியர்கள் வங்கி கணக்கிற்கு பிரித்து அனுப்பப்படும்.

ஜன. 27ல் தேனி மாவட்ட கருவூலத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் போனஸ், சரண்டர், டி.ஏ., மற்றும் சில்லரை செலவினங்கள் என பல லட்சம் ரூபாய்க்கான பில் பாஸ் செய்து பழனிச்செட்டிபட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வங்கியில் இருந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களின் வங்கி கணக்கில் பணம் வரவானது.

பணம் திரும்ப வரவு: இதன்பின் 30ம்தேதி மீண்டும், அதே ஊழியர்களின் வங்கி கணக்குகளில் திரும்ப பணம் வரவு வைக்கப்பட்ட தகவல் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., சென்றது. இதனை அறிந்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினர். ஊழியர்கள் சிலர் பொங்கல் போனஸ் எடுத்து செலவு செய்த நிலையில் எஸ்.எம்.எஸ்., பார்த்து மீண்டும் பணம் எடுத்துள்ளனர். சில அலுவலர்களுக்கு 55 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பணம் வரவு ஆனது. 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பில் பாஸ் ஆகியதாக தெரிகிறது. 

குளறுபடி ஏன்: ஜன. 27ம்தேதி கருவூலம் வழங்கிய 'சிடி' யை பழனிச்செட்டிபட்டி வங்கியில் இரண்டாவது முறையாக 30ம்தேதி ஆன்லைனில் ஏற்றி பணம் அனுப்பியுள்ளனர். வங்கி ஊழியர் தவறால் இருமுறை ஊழியர்களின் கணக்கில் பணம் வரவு ஆனது தெரிய வந்தது.தேனி மாவட்ட கருவூல அலுவலர் நாகராஜன் கூறுகையில், “கருவூலத்தில் இருந்து தினமும் பில் பாஸ் ஆகி செல்லும். இருமுறை பணம் வரவு ஆனது குறித்து வங்கிக்கு தகவல் தெரிவித்து விட்டோம். உடனே 'சாப்ட்வேர்' மூலம் பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. இதனால் அரசு பண இழப்பு ஏதும் ஏற்படவில்லை,” என்றார்.

அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில், ' இரண்டாவதாக வரவு வைத்த பணத்தை ஊழியர்கள் எடுத்து செலவு செய்து இருந்தால் அடுத்த மாத சம்பளத்தில்தான் பிடித்தம் செய்ய முடியும். அதனை ஒருசிலர் உடனே எடுத்துள்ளனர்,' என்றார்

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...