Friday, February 24, 2017

தமிழர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது உண்மையாகிறது

By DIN  |   Published on : 23rd February 2017 04:18 PM  |   
feb_23
சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் முன்கூட்டியே கணித்தது போலவே, மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல்  பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, மார்ச் முதல் வாரம் தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு வெதர்மேன் வானிலை ஆய்வுகளை கணித்து கடந்த 17ம் தேதி தனது பேஸ்புக்கில் மழை பற்றி பதிவு செய்திருந்தார்.
அதில், தமிழகத்தின் வேண்டுதலை இவ்வளவு சீக்கிரம் கடவுள் நிறைவேற்றுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கடந்த ஜனவரி மாதம் தமிழகத்துக்கு சிறந்த மாதமாக இருந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் மாநிலத்தை மிக மோசமான நிலையில் தான் விட்டுச் செல்லப் போகிறது. ஆனால், மேகங்களின் நகர்வுகளை கவனித்ததில், வரும் மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதை உறுதி செய்துள்ளது.
ஆனால், எவ்வளவு மழை பெய்யும், எந்த பகுதிகளுக்கு மழை கிடைக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது.  மழை குறித்த மேலதிகத் தகவல்களை அறிய இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவர் பதிவிட்டது போலவே, மார்ச் மாதத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு சற்று மன மகிழ்ச்சியை அளித்துள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...