Sunday, November 26, 2017

மூதாட்டியை 17 வயது குமரியாக்கிய, 'ஆதார்'

Added : நவ 26, 2017 01:01


பெரம்பலுார் பெரம்பலுாரில், 60 வயதாகும் மூதாட்டி, 2000ல் பிறந்ததாக பதிவு செய்து, 'ஆதார்' கார்டு கொடுத்து உள்ளனர். 


அதை திருத்தம் செய்யக் கோரி, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில், மூதாட்டி மனு
கொடுத்தார்.


பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த, செல்வாம்பாள் என்ற, 60 வயது மூதாட்டிக்கு வழங்கிய ஆதார் கார்டில், 19.10.2000 என, பிறந்த தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கணவர் பெயர், கருப்பையா என்பதற்கு பதிலாக, காருப்பையா என, அச்சிடப்பட்டிருக்கிறது.
அதனால், பிறந்த தேதி, கணவர் பெயர் ஆகியவற்றை திருத்தம் செய்ய, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, ஆதார் கார்டு போட்டோ எடுக்கும் மையத்தில், செல்வாம்பாள் மனு கொடுத்தார்.


அப்போது, அவர் கூறுகையில், ''ஏற்கனவே, இந்த ஆதார் கார்டை பெற, நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று பதிவு செய்தேன். ஆறு மாசம் ஆச்சு கார்டு வர. அதிலும் என்னை குமரியாக்கிவிட்டனர். வயதான காலத்தில், கலெக்டர் அலுவலகத்திற்கு அலைகிறேன்,'' என்றார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026