Wednesday, November 22, 2017

9 சார் - பதிவாளர்கள் திடீர் இட மாற்றம்

Added : நவ 21, 2017 22:20

சென்னை: தமிழகத்தில், பதிவுத்துறை பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக, பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர், பல இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில், கிடைத்த விபரங்கள் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம், நாகை, திருவாரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருப்பூர், காரைக்குடி உள்ளிட்ட ஒன்பது அலுவலகங்களில், சார் - பதிவாளர் நிலையில், நிர்வாக பணியில் உள்ள அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் பிறப்பித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026