Wednesday, November 22, 2017

தூக்க மாத்திரை சாப்பிட்டு ரோட்டில் பெண்கள் ரகளை

Added : நவ 21, 2017 22:14

சேலம்: சேலத்தைச் சேர்ந்த துரைசாமி மனைவி கவிதா, 22; தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிகிறார். அதே மருத்துவமனையில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிபவர், ராமமூர்த்தி மனைவி சுகுணா, 21. இருவரும், ஒரே அறையில் தங்கி உள்ளனர்.
கடந்த மாதம் கவிதா, தான் தங்கியிருந்த அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.குடும்பத்தினரை அழைத்து, மருத்துவமனை நிர்வாகம் பேச்சு நடத்தி, கவிதா மன்னிப்பு கேட்டதால், மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டது.


இந்நிலையில், நேற்று கவிதா, சுகுணா இருவரும், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில், அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். 


அரை மயக்க நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர்கள், அரிசி பாளையம் நான்கு ரோடு பகுதியில், மது அருந்தியவர்கள் போல், கூச்சலிடுவதும், தள்ளாடுவதுமாக இருந்தனர். பள்ளப்பட்டி போலீசார், பொதுமக்கள் துணையுடன், இரண்டு பெண்களையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026