Friday, November 10, 2017

வருமான வரித்துறை சோதனைகள் கன்னித்தீவு போல் தொடர்கிறது ஆனால் எடுத்த நடவடிக்கை என்ன? ஸ்டாலின் கேள்வி



வருமான வரித்துறை சோதனைகள் கன்னித்தீவு கதை போல் தொடர்கிறது ஆனால் எடுத்த நடவடிக்கை என்ன? மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்

நவம்பர் 09, 2017, 01:50 PM
சென்னை

சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் மேலும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 190 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வருமான வரி சோதனை குறித்து கூறியதாவது:-

`தமிழகத்தில் வருமான வரித்துறையின் ரெய்டு தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. குட்கா புகாரில் நடந்த ரெய்டு என்னவாயிற்று? ஆர்.கே.நகர் பணப்படுவாடா புகாரின் பேரில் நடந்த ரெய்டு என்னவாயிற்று? வருமானவரித்துறை சோதனை தொடர்பாக பேச என்னிடம் பெரிய பட்டியலே உள்ளது . இப்படி தொடர்ந்து நடந்து வரும் ரெய்டுகளின் நிலை என்ன என்பது குறித்து தெளிவு இல்லை. தினத்தந்தி 'கன்னித்தீவு' தொடர் போலத்தான் வருமானவரித்துறை சோதனைகள். இதைப் பற்றி கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை',

`ரெய்டு அரசியல் நோக்கத்தோடு நடத்தப்பட்டதா?' என்று கேட்டதற்கு, `என்னிடம் விளக்கம் கேட்பதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அவர் பதில் சொன்ன பிறகு, நான் கருத்து கூறுகிறேன்' என்று கூறினார்

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026