Monday, November 20, 2017


ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை ஏன்? ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

Published : 18 Nov 2017 18:27 IST
 


குருமூர்த்தி (கோப்பு படம்)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ள நிலையில் இதுகுறித்து, ஆடிட்டர் குரூமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘‘ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மன்னார்குடி மாபியா மோசடிக்கான ஆதாரங்களை மின்னணு வடிவில் வைத்திருந்தது. சசிகலாவிடம் சாவி உள்ளதால், ஜெயாவின் கோட்டைக்குள் யாரும் நுழைய முடியாது என அவர்கள் நினைத்திருந்தனர். வருமான வரித்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வருமான வரித்துறைக்கு பாராட்டுகள்’’ என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 31.01.2026