Wednesday, December 26, 2018

முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.3.03 லட்சம் கோடி!

Added : டிச 26, 2018 07:20




புதுடில்லி : இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் வரிசையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 11வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, 3 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். நடப்பு ஆண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 65 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இப்பட்டியலில் விப்ரோ அதிபர் அசிம்பிரேம்ஜி (ஒரு லட்சத்து 47 கோடி ரூபாய்) இரண்டாவது இடத்தையும், ஆர்சலர் மிட்டல் தலைவர், லட்சுமி மிட்டல் (1 லட்சத்து 28 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து 'டாப் -10'ல் இந்துஜா சகோதரர்கள், பலோன்ஜி மிஸ்திரி, ஷிவ் நாடார், கோத்ரேஜ் குடும்பத்தினர், திலிப் சங்வி, குமாரமங்கலம் பிர்லா, கவுதம் அதானி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025