விமானத்தை இயக்கும் பெண் விமானிகள்
Added : மார் 08, 2019 06:23
சென்னை:சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விமானங்களை இன்று பெண்கள் இயக்க உள்ளனர்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைமை பெண் விமானி தீபா மற்றும் துணை விமானி விருந்தா தலைமையிலான குழுவினர் டில்லி செல்லும் ஏர் இந்தியா' விமானத்தை இன்று இயக்க உள்ளனர்.இந்த விமானம் இன்று காலை 6:10 மணிக்கு சென்னை உள்நாட்டு முனையத்தில் புறப்பட்டு காலை 9:00 மணிக்கு டில்லி செல்கிறது.பின் அதே விமானம் காலை 9:50 மணிக்கு டில்லியில் புறப்பட்டு மதியம் 12:40 மணிக்கு சென்னை வந்தடைகிறது.
No comments:
Post a Comment