Thursday, October 3, 2019

அண்ணா பல்கலைக்கு உயரிய அந்தஸ்து

Added : அக் 03, 2019 01:09

சென்னை : அண்ணா பல்கலைக்கான உயரிய அந்தஸ்து குறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுத, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, அவற்றில் சிறந்த நிறுவனங்களுக்கு, மேம்பட்ட சீர்மிகு நிறுவனம் என்ற, 'இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்' அந்தஸ்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில், சென்னை ஐ.ஐ.டி.,க்கு இந்த அந்தஸ்து தரப்பட்டுள்ளது.அவற்றுடன், 'அண்ணா பல்கலைக்கும் உயரிய அந்தஸ்து வழங்கப்படும்; ஆனால், பல்கலையின் தரத்தை உயர்த்த, 2,750 கோடி ரூபாய் நிதியில், 70 சதவீதத்தை தமிழக அரசு வழங்க, முதலில் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கல்வியாளர்கள் மற்றும் அரசின் மேல்மட்ட அதிகாரிகளுடன், தமிழக அரசு, ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழக அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும்; ஐ.ஐ.டி.,க்களுக்கே தாய் நிறுவனமாக திகழும் அண்ணா பல்கலைக்கு, மத்திய அரசே முழு நிதியையும் வழங்க வேண்டும் என, உள்ளிட்ட கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து குறித்து, தமிழக உயர்கல்வி துறையினர், பலகட்ட ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் கோரிக்கைப்படி, தமிழக அரசே நிதி ஒதுக்கி, மத்திய அரசிடம் சான்றிதழ் பெற்றால் கூட, தமிழகத்தின் மாணவர் சேர்க்கை கொள்கைளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என, உயர்கல்வி துறையினர் அஞ்சுகின்றனர்.மேலும், தமிழக அரசு பின்பற்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு தலையிடுமா என, சட்டரீதியான ஆலோசனை நடத்தப்படுகிறது. இதையடுத்து, தமிழக அரசின் முடிவை கடிதமாக, மத்திய மனிவள அமைச்சகத்துக்கு அனுப்ப, தமிழக உயர்கல்வி துறை முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...