Friday, November 1, 2019

நான் நலமாக இருக்கிறேன்: வீடியோவில் பரவை முனியம்மா பேச்சு 

 Published : 01 Nov 2019 17:19 pm



கோப்புப் படம்

மதுரை

பிரபல நாட்டுபுறபாடல் கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மா மறைந்துவிட்டதாக வதந்திகள் வெளியான நிலையில் அவரே வீடியோவில் தான் நலமாக இருப்பதாகப் பேசியுள்ளார்.


அந்த வீடியோவில் முதலில் பரவை முனியம்மாவின் மகள் ராக்கு பேசுகிறார். அவர், என் அம்மா நன்றாக இருக்கிறார். ரத்தம் ஏற்றியுள்ளோம். ஸ்கேன் எடுத்துள்ளார்கள் என சிகிச்சையை விவரிக்கிறார்.

பின்னர் பேசும் பரவை முனியம்மா, "நான் நல்லா இருக்கிறேன். இங்க மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க. ரத்தம் ஏத்திக்கிட்டு இருக்காங்க. நல்லா இருக்கிறேன்" எனக் கூறுகிறார்.

பரவை முனியம்மாவின் உடல்நிலை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "பரவை முனியம்மா அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



பரவை முனியம்மா (இடது); அவரின் மகள் ராக்கு (வலது)

அவர் தற்போது வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்களால் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை மூலம் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளார்.

அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகமே ஏற்று சிகிச்சை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மதுரையில் நீதிமன்றத்தில் சொந்த வழக்குக்காக ஆஜராக வந்த நடிகர் அபி சரவணன் பரவை முனியம்மா நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...