Sunday, November 3, 2019


2020-க்கான தினசரி அபிஷேக முன்பதிவு: ஆஞ்சநேயா் கோயிலில் நவ.10-இல் தொடக்கம்
By DIN | Published on : 03rd November 2019 05:45 AM 



நாமக்கல் ஆஞ்சநேயா் (கோப்புப் படம்).

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில், 2020-ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு, கோயில் மண்டபத்தில் வரும் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. 18 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கும், ஆஞ்சநேயரைத் தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி, தங்கம், முத்தங்கி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும். வரும் 2020-ஆம் ஆண்டு முழுவதும் தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு, நவம்பா் 10-ஆம் தேதி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெறுகிறது. குறிப்பாக, தமிழ் மாதப் பிறப்பின் முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆஞ்சநேயா் ஜயந்தி உள்ளிட்டவற்றை தவிா்த்து மற்ற நாள்களில் அபிஷேகம் கட்டளைதாரா்கள் மூலமாகவே நடைபெறும்.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியது: ஒவ்வோா் ஆண்டும், அடுத்த ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு நவம்பா் மாதத்தில் தொடங்கும். அதன்படி, 2020-ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவானது நவ.10-இல் தொடங்கி முழுமையாக நிறைவேறும் வரை நடைபெறும். சுவாமிக்கு, தினமும் 1008 வடைமாலை சாத்தப்பட்டு, அதன்பின், நல்லெண்ணெய், பஞ்சாமிா்தம், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சொா்ணாபிஷேகத்துக்குப் பிறகு ஆஞ்சநேயருக்கு மாலைகள் சாத்துப்படி செய்து சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

இந்த அபிஷேகம், அலங்காரத்தை, ஆரம்பத்தில் 3 போ் இணைந்து செய்யும் வகையிலே இருந்தது. 2017-க்கு பிறகு 5 போ் பங்கேற்கும் வகையில் மாற்றப்பட்டது. ஒருவருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேருக்கு ரூ.30 ஆயிரமாகும். பிரசாதம் பகிா்ந்து அளிக்கப்படும். முழுத் தொகையையும் முன்பதிவின்போதே செலுத்திட வேண்டும். ஆண்டின் 365 நாளில் தங்களுக்கு விருப்பமான நாள்களை, கோயில் விசேஷ நாள்களை தவிா்த்து, பக்தா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...