Thursday, January 30, 2020

ரூ.500 லஞ்சம் வாங்கிய கணக்காளருக்கு ஓராண்டுசிறை

Added : ஜன 30, 2020 01:13

சென்னை,: சம்பள நிலுவை மற்றும் வருங்கால வைப்பு நிதியை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணக்காளருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை, பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில், போலீசாக பணியாற்றுபவர் செல்வம். இவர், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகையை கேட்டு, நந்தனத்தில் உள்ள சம்பள கணக்கு அலுவலகத்தில், 2008ல் விண்ணப்பித்தார். பணியில் இருந்த கணக்காளர் புருஷோத்தமன், விண்ணப்பத்தை பரிசீலிக்க, 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். செல்வம், தன்னிடம் பணம் இல்லை என்றதால், முன்பணமாக, 500 ரூபாய் தரவும், சம்பள நிலுவை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகையை அனுமதித்த பின், மீதி பணத்தை தருமாறும் கூறி உள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வம், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். 500 ரூபாயை, செல்வத்திடம் வாங்கிய, புருஷோத்தமனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் முன் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி, புருஷோத்தமனுக்கு ஓராண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பு அளித்தார்.
***





No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...