Thursday, January 30, 2020

பஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு அபராதம்

Updated : ஜன 29, 2020 22:21 | Added : ஜன 29, 2020 22:13





புவனேஸ்வர்: நகர பஸ்களில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் விதிக்க, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள ஆட்சி நடக்கிறது.தலைநகர் புவனேஸ்வரில், போலீஸ் கமிஷனர் தலைமையில், நகர பஸ் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பஸ்களில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது. அவர்கள், ஆண்களின் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக கூறப்பட்டது.

இதையடுத்து, பஸ்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் ஆண்களுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், பஸ்களில் தொல்லை தரும் ஆண்கள் பற்றி புகார் செய்ய, பெண்களுக்கு என தனி தொலைபேசி எண் தரவும் முடிவு செய்யப்பட்டது என, புவனேஸ்வர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...