Tuesday, June 9, 2020

தமிழகத்தில் மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் - முழு விவரம் இங்கே


தமிழகத்தில் மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் - முழு விவரம் இங்கே

IRCTC: கோயம்புத்தூர் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் கோவை விரைவு ரயில் சிறப்பு ரயிலாக அரக்கோணம் - கோயம்புத்தூர் வழித்தடத்தில் இயங்கும்

June 09, 2020 05:24:43 pm 

Tamil Nadu Latest Special Trains: தமிழகத்தில் மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 12-ம் தேதி இந்த சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதில் திருச்சி – செங்கல்பட்டு – திருச்சி (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்), அரக்கோணம் – கோவை -அரக்கோணம் (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்), திருச்சி – செங்கல்பட்டு – திருச்சி (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) உள்ளிட்ட 3 ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கைக்கு மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா லாக் டவுன் காலம் முடிந்த பிறகு, கடந்த மாதம் 12-ம் தேதி முதல், பயணியர் வசதிக்காக டெல்லியிலிருந்து 15 நகரங்களுக்கு ‘ஏசி’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் சேவையை மீண்டும் துவக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இன்று முதல் 200 ரயில்களை அட்டவணைப்படி ரயில்வே இயக்குகிறது. தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

அதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதன்படி கோவை -காட்பாடி, திருச்சி -நாகர்கோவில், மதுரை -விழுப்புரம், கோவை -மயிலாடுதுறை ஆகிய நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும் ஜூன் 12-ம் தேதி முதல் இயங்க உள்ளன. இந்த ரயில்களில் ஏசி அல்லாத, முன்பதிவு இல்லாத பெட்டிகள் நீக்கப்படும். இந்த ரயிகளுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. அதன் விவரம்,

திருச்சி – செங்கல்பட்டு

திருச்சி – செங்கல்பட்டு இடையே சூப்பர் ஃபாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயங்க உள்ளது. அதாவது காரைக்குடி முதல் சென்னை எழும்பூர் வழித்தடத்தில் இயங்கும் பல்லவன் விரைவு ரயில் சிறப்பு ரயிலாக இந்த வழித்தடத்தில் இயங்கும். இந்த ரயில் அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சியில் காலை 7 மணிக்கு கிளம்பி 11.30 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மீண்டும் செங்கல்பட்டில் மாலை 4.45 மணிக்கு கிளம்பி இரவு 9.05 மணிக்கு திருச்சி சென்றடையும்.


அரக்கோணம் – கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் கோவை விரைவு ரயில் சிறப்பு ரயிலாக அரக்கோணம் – கோயம்புத்தூர் வழித்தடத்தில் இயங்கும். இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 7 மணிக்கு அரக்கோணத்தில் கிளம்பி மதியம் 2.05 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மீண்டும் கோவையில் இருந்து மாலை 3.15 மணிக்கு கிளம்பி இரவு 10 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.



செங்கல்பட்டு – திருச்சி

திருச்சி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் சிறப்பு ரயிலாக செங்கல்பட்டு – திருச்சி இன்டர்சிட்டி இடையே சிறப்பு ரயிலாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இந்த ரயில் செங்கல்பட்டில் மதியம் 2.10 மணிக்கு கிளம்பி மாலை 8.10 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மீண்டும் திருச்சியில் காலை 6.30 மணிக்கு கிளம்பி 12.40 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...