Tuesday, June 16, 2020

ஊழல் குற்றச்சாட்டில் உள்ளவர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதா?: அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு


ஊழல் குற்றச்சாட்டில் உள்ளவர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதா?: அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

2020-06-16@ 09:47:05

சென்னை: ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக அரசு சமீபத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 59 ஆக உயர்த்தியுள்ளது.நேர்மையாக, நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை ஒரு ஆண்டு நீட்டிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலுவையில் உள்ளவர்களுக்கும் ஓய்வு பெறும் வயது நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழல் குற்றச்சாட்டில் இருப்பவர்கள் தொடர்ந்த அதே ஊழலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

எனவே, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளவர்களுக்கான ஓய்வு பெறும் வரை நீட்டித்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அரசு உரிய அறிவிப்பை வெளியிடுமாறும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து 2 வாரத்திற்குள் தமிழக அரசு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...