Sunday, June 21, 2020

பிரபல மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு


பிரபல மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு

Added : ஜூன் 20, 2020 23:44 |

சென்னை; விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சரத் ரெட்டி, 43; சுந்தரம் பாஸ்டனர்ஸ் நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன், 55, ஆகியோர், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

சென்னை, வடபழநியில் உள்ள, விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சரத் ரெட்டி. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், அதே மருத்துவமனையில், சில தினங்களுக்கு முன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பிரபல மருத்துவமனை இயக்குனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சு

ந்தரம் நிறுவனம்சென்னை, 'சுந்தரம் பாஸ்டனர்ஸ்' நிறுவனத்தின் தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன், 55. இவர், இரண்டு நாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர், நேற்று உயிரிழந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026