Monday, July 27, 2020

2 கோடி முக கவசம்


2 கோடி முக கவசம்

Added : ஜூலை 26, 2020 23:58

திருப்பூர் : ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, இரண்டு கோடி முக கவசங்கள் தயாரிக்கும் 'ஆர்டர்' திருப்பூர் நிறுவனத்துக்கு கிடைத்து உள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது. மொத்தம், 2.08 கோடி கார்டுதாரர்களுக்கு, 13.48 லட்சம் முக கவசங்கள் வழங்கப்பட உள்ளன.இதற்கான முதல் டெண்டரில், திருப்பூரைச் சேர்ந்த, ஒரு ஆடை உற்பத்தி நிறுவனம், இரண்டு கோடி முக கவசங்கள் தயாரிக்கும் வாய்ப்பை பெற்று உள்ளது. ஓவன் ரக துணியில், இளம் பச்சை, இளநீல நிறத்தில், பின்புறம் கட்டும் வகையில், இந்த முக கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.இந்த ஆர்டர், திருப்பூர் பின்னலாடை துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

No comments:

Post a Comment

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது...

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது... செயற்கை நுண்ணறிவு  Din Updated on:  03 ஏப்ரல் 2025, 6:15 am  எஸ். எஸ்...