Thursday, July 30, 2020

சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகளாகும்: சர்வதேச விமானப்போக்குவரத்து சங்கம்

சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்ப 4 ஆண்டுகளாகும்: சர்வதேச விமானப்போக்குவரத்து சங்கம்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, சர்வதேச அளவில் விமானப்போக்குவரத்து சேவை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் முன்பு திட்டமிடப்பட்டதை விட, விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்ப, 4 ஆண்டுகள் வரை ஆகலாம் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தத் தொடங்கியவுடன் மே 25 முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், "இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு மற்றும் இந்தியா வருவதற்கான சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ஜூலை 15-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. எனினும் தேவையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடத்தில் சிறப்பு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

ஜூலை 15 வரையிலான கட்டுப்பாடு, சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும். சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது" என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கரோனா பொது முடக்கத்தால், சர்வதேச அளவில் பயணிகள் விமான சேவை முடங்கியதால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் நடப்பாண்டில் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை சுமார் 86 புள்ளி 5 சதவீதமும், சர்வதேச விமானப்போக்குவரத்து சேவை சுமார் 97 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பயணிகள் விமானப்போக்குவரத்து சேவை, முன்பு திட்டமிடப்பட்டதை விட, 2024-ஆம் ஆண்டில்தான் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறப்பட்ட நிலையில், 2024-வரை தற்போதைய நிலை நீடிக்கலாம் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

பலவீனமான பயணிகளின் நம்பிக்கை: ​​வேலை பாதுகாப்பு மற்றும் அதிகரித்துவரும் வேலையின்மை, அத்துடன் கரோனா தொற்று அபாயங்களுக்கு மத்தியில் பயணிகளின் நம்பிக்கை பலவீனமாக உள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் ஜூன் மாத பயணிகள் கணக்கெடுப்புக்கு பதிலளித்தவர்களில் 55% பேர் 2020 இல் விமானத்தில் பயணம் செய்யத் திட்டமிடவில்லை. இதனடிப்படையில், 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 55% வீழ்ச்சியடையும் என்றும், 2019 உடன் ஒப்பிடும்போது இன்னும் 30% குறையும் என தெரிகிறது.

Dailyhunt

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...