Saturday, June 26, 2021

ஒரே ஒரு பயணியுடன் பறந்த 'ஏர் இந்தியா' விமானம்

ஒரே ஒரு பயணியுடன் பறந்த 'ஏர் இந்தியா' விமானம்

Added : ஜூன் 25, 2021 21:35

புதுடில்லி:அமிர்தசரசில் இருந்து துபாய் வரை சென்ற 'ஏர் இந்தியா' விமானத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் முன் பதிவு செய்திருந்ததை அடுத்து, அவருக்காக விமானம் இயக்கப்பட்டது.

பஞ்சாபைச் சேர்ந்தவர்எஸ்.பி.சிங் ஓபராய். இவர், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் தொழில் செய்து வருகிறார். இவர் சமீபத்தில் பஞ்சாப் வந்து மீண்டும் துபாய் செல்வதற்காக 'ஏர் இந்தியா' விமானத்தில் சமீபத்தில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தார்.அன்று அதிகாலை 3:45க்கு விமானத்தில் ஏறியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விமானத்தில் அவரை தவிர வேறு பயணியர் இல்லை.

இருந்தாலும் அவர் ஒருவருக்காக விமானம் இயக்கப்பட்டது. மூன்று மணி நேர பயணத்தில், அவர் விமானத்தில் அங்கும் இங்கும் அலைந்தபடி விமான ஊழியர்களுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தார். கொரோனா இரண்டாம் அலையின் போது ஏப்ரல் - மே மாதங்களில் வெளிநாட்டு பயணியர் விமான சேவை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஐந்து வாரங்களில் நம் நாட்டில் இருந்து துபாய் சென்ற மூன்று விமானங்கள், தலா ஒரு பயணியுடன் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...