Thursday, August 26, 2021

ஆர்.டி.ஐ., பதிலில் அதிகாரியின் கையெழுத்து ஆதார் எண் அவசியம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆர்.டி.ஐ., பதிலில் அதிகாரியின் கையெழுத்து ஆதார் எண் அவசியம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 26, 2021 01:22

சென்னை:'தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும், பொது தகவல் அதிகாரியின் கையெழுத்துடன், அவரின் ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அயனாவரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சில தகவல்களை வழங்கக் கோரி, சிற்றரசு என்பவர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். உரிமைஆனால், அவர் கேட்ட விபரங்கள் வழங்கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு, தொடர்ந்து தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:தகவல் ஆணையம் அளிக்கும் தகவல்களில், ஏதேனும் குறைகள் இருந்தால், அதை எதிர்த்து மேல் முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்ய, தகவல் அறியும் உரிமை சட்டம் அதிகாரம் வழங்கிஉள்ளது.

சுற்றறிக்கை

தவறான தகவல்களை அளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வசதியாக, விண்ணப்பங்களுக்கு அளிக்கும் பதில்களின் ஒவ்வொரு பக்கத்திலும், சம்பந்தப்பட்ட அதிகாரி கையெழுத்திடுவதுடன், அவரது ஆதார் விபரங்களையும் வழங்க வேண்டும். இது தொடர்பாக, தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...