Sunday, August 29, 2021

அரசு அலுவலர்களுக்கு 'கம்ப்யூட்டர்'பயிற்சி சான்றிதழ் கட்டாயம்


அரசு அலுவலர்களுக்கு 'கம்ப்யூட்டர்'பயிற்சி சான்றிதழ் கட்டாயம்

Added : ஆக 29, 2021 02:25

பெங்களூரு : அரசு அலுவலர்கள் அனைவரும் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ் பெறுவதற்கு, 2022 வரை மாநில அரசு அவகாசம் அளித்துள்ளது.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால், அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால், துறை அலுவலர்களும் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில அரசு துறை அலுவலர்கள் அனைவரும், அடிப்படை கம்ப்யூட்டர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.மாநில அரசின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:மாநில அரசு துறை அலுவலர்கள், கர்நாடாக மாநில எலக்ட்ரானிக்ஸ் மேம்பாட்டு கழகத்தில், கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று, அதற்கான சான்றிதழ் பெறவேண்டும். சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசம், 2022 மார்ச் 22 வரை வழங்கப்படுகிறது. அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெறுவது கட்டாயம் மட்டுமின்றி, அடுத்தடுத்த நிலைக்கான பதவி உயர்வுகளுக்கும், பயிற்சி சான்றிதழ் கணக்கிடப்படுகிறது.கால அவகாசத்திற்குள் பயிற்சி முடிக்காதோருக்கு எந்தவித பதவி உயர்வுகளும் வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.கர்நாடகாவில், 2012ல் இதற்கான பொதுசட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டது. ஆனால், சட்டத்தை செயல்படுத்துவதற்கு 2017 வரை எந்த வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை.அதன்பின், பயிற்சியை முடிக்க காலக்கெடு நீடிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த அறிவிப்பு பல அலுவலர்களையும், பயிற்சி பெறும் கட்டாயத்தை ஏற்படுத்திஉள்ளது.அடிப்படையான பயிற்சிகளை அனைவரும் அறிந்திருந்தாலும், பயிற்சிக்கான சான்றிதழ் பெற வேண்டும் என்பதால், அலுவலர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...