Wednesday, October 1, 2025

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்


இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம். தினமணி செய்திச் சேவை Updated on: 01 அக்டோபர் 2025, 4:09 am

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், புதன்கிழமை (அக். 1) முதல் அக். 6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வடக்கு அந்தமான் கடலில் செவ்வாய்க்கிழமை (செப். 30) நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், புதன்கிழமை (அக்.1) மத்திய வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வியாழக்கிழமை(அக்.2) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை(அக்.3) கரையை கடக்கக்கூடும். இதனால், வியாழக்கிழமை(அக்.2) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், வெள்ளிக்கிழமை(அக்.3) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை (அக்.1) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றத்தில் 30 மி.மீ மழை பதிவானது.

மணலி(சென்னை), கத்திவாக்கம், அமைந்தகரை, மணலிபுதுநகரம், நுங்கம்பாக்கம், செங்குன்றம், திருவொற்றியூா், சோழவரம்(திருவள்ளூா்) -தலா 2 மி.மீ.மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:மத்திய- வடக்கு வங்கக்கடலின் பல பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், மத்திய-வடக்கு வங்கக்கடலின் ஏனைய பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் பல பகுதிகள், ஆந்திரம்-ஒடிஸா-மேற்கு வங்க கடலோரப்பகுதிகள் மற்றும் அந்தமான் கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...