Saturday, April 22, 2017

Court thanks convict

In a rare gesture, the Madras High Court Bench here on Friday thanked a convict prisoner for having deposited Rs. 1,000 in a bank account opened by the court last month exclusively for the purpose of mobilising money from various sources to eradicate seemai karuvelam trees from the State.
“A life convict by name Selvaraj from Central Jail, Palayamkottai has donated a sum of Rs. 1,000 from his hard earned money for the purpose of eradication of seemai karuvelam trees and this court expresses its special thanks to him,” a Division Bench of Justices A. Selvam and P. Kalaiyarasan observed in their interim order.
Further, stating that Rs. 24,28,837 had been deposited by various persons in the bank account as on April 20, the judges said that Rs. 14.09 lakh of that amount had been given to various Collectors so far for uprooting the seemai karuvelam trees.
They also expressed their “immense thanks” to all the donors.
275 engineering colleges seek closure
Coimbatore:


TN, AP Top List In Country

A total of 275 engineering colleges across the country have applied for closure this year, said the chairman of All India Council for Technical Education (AICTE) Anil D Sahasrabuddhe in Coimbatore on Friday . Tamil Nadu and Andhra Pradesh top the list of states with the highest number of institutions that have come forward to close down.

“Tamil Nadu and Andhra Pradesh have more such institutions than other states,“ Sahasrabuddhe said. In the past two years, the AICTE has been actively working on reducing the quantity of engineering institutions across the country . The regulatory body had also reduced the penalty for closing down an engineering institution that remained a deterrent for many colleges who were willing to shut in the midst of poor demand.

Sahasrabuddhe was in Coimbatore to inaugurate a teacher training programme on e-learning at Sri Krishna College of Engineering and Technology . An initiative of the AICTE under the Union ministry of human resource and development, the teacher training programme is a pan-India exercise.

“A total of eight programmes are being conducted wherein we train faculty members from selected institutions on e-learning. These faculty members will in turn train their colleagues at their respective institutions,“ the director of AICTE Mandeep Singh Manna said.

The teacher training programme aims at equipping faculties of engineering institutions for using digital platforms like Study Webs of Active-Learning for Young Aspiring Minds (SWAYAM) for higher education. “There are about 280 subjects in SWAYAM so far and about 350 subjects are ready to be introduced. We are looking at having 2,000 subjects in the next two years,“ said the chairman of AICTE.

The Union ministry of human resource and development has passed a regulation to introduce choicebased credit system where a student is allowed to choose courses of his choice from SWAYAM and earn credits for it.

Faculty members from institutions across the country are working or preparing the modules for each subject.“Anyone interested has to first send a three-minute video to us about the module which will be scrutinized by an expert committee. Thereafter, we will decide if the faculty member can be allowed to prepare the module for that particular subject,“ said Sahasrabuddhe.

Asked if faculty members will get credits during appraisal for preparing a module for SWAYAM, he said, “We will introduce it in the appraisal system soon.Anybody who has taken efforts to prepare a module should be rewarded for it.“
Madras univ VC convenor committee reconstituted
Chennai:
TIMES NEWS NETWORK


The syndicate of University of Madras reconstituted the vice-chancellor convenor committee, which discharges the duties in absence of the VC, on Friday.

Two additional syndicate members, Professor S S Sundaram, head of the history department, and S Murugesan, principal of Thiruthangal Nadar College, have been added to the committee. It is headed by higher education secretary Sunil Paliwal, the director of collegiate education, and Ajeet Prasad Jain, principal of a school in Chennai.

It was a long-pending demand of syndicate members to reconstitute the committee as it was bereft of academicians or professors from the university . Syndicate members felt the committee was not being apprised of routine issues in the University because of this. The syndicate also passed a resolution allowing 10 research institutes affiliated to the University to guide PhD students. It appointed a joint secretary-level officer as the convenor of the four-member committee formed to investigate the illegalities in `47 crore fund diversions in the University's finances. A month has passed since it was formed, but the committee has not met even once. Registrarin-charge S Karunanidhi, head of the economics department Jothi Sivagnanam, and governor nominee Vishal Kumar are the other members in the committee.

The syndicate also reconstituted 10 syndicate sub-committees in Friday's meeting as a section of the members felt that its original formation was done on an ad-hoc basis.
Another contentious administrative decision, the appointment of university-nominated members to the governing council of affiliated colleges, was also reversed.Around 43 members had been appointed without the approval of the syndicate in February . Seniority was also bypassed in this decision, syndicate members said.

The syndicate deferred the ratification of this decision and sent the list back to the College Development Council for a review to ensure that the preference was given to seniority in university professors and then to retired professors on the syndicate.







ஆதாரை கட்டாயம் ஆக்கியது ஏன்?  அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
புதுடில்லி: 'வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் கார்டு வாங்குவதற்கு, ஆதார் எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கியது ஏன்?' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.



பான் கார்டுகள் மூலம் மோசடி நடப்பதைதடுக்கும் வகையில், பான் கார்டு வாங்கு வதற்கும், வருமான வரி கணக்கு தாக்கலுக்கும், ஆதார் எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்கி, நிதி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள் ளது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி, ஏ.கே. சிக்ரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பான் கார்டுக்கு விண்ணப்பிக் கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதைகட்டாய மாக்கியது ஏன்' என, அமர்வு கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறிய தாவது: பொய்யான தகவல்கள் அளித்து, பலர் பான் கார்டு பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள் ளது. பல்வேறு போலி பெயர்களில், பொய்யான விலாசத்தை காட்டி, ஒருவரே பல பான் கார்டுகளை

பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், போலி நிறுவனங்களில் கறுப்புப் பணத்தைபதுக்கி வைப்பதும் நடந்துள்ளது.

அதை தடுக்கும் வகையிலேயே, பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்து, மொபைல் இணைப்பு பெறுவது தொடர் பான வழக்கில், மோசடியை தடுக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

அதுபோலவே, வருமான வரி கணக்கில் மோசடி செய்வதை தடுக்கவும், போலியான பெயர்களில் பான் கார்டு வாங்குவதை தடுக்க வும், ஆதார் எண் குறிப்பிடுவது அவசியம் என்று கூறப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் வாதிட்டார். அதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை, 25க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு : குஜராத் நிறுவனம் அசத்தல்

பதிவு செய்த நாள்22ஏப்
2017
00:14

சூரத்: குஜராத்தில் செயல்படும், வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலையில், சிறப்பாக பணியாற்றிய, 125 ஊழியர்களுக்கு, அந்நிறுவனத்தின் சார்பில், அதிநவீன ஸ்கூட்டர்கள் பரிசளிக்கப்பட்டுள்ளன.

குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள், சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு, பைக், கார், வீடு, பணம் உள்ளிட்டவற்றை போனசாக வாரி வழங்கி வருகின்றன. 

சூரத்தைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் லக்சிதாஸ் வெகாரியாவும், இந்த பட்டியலில் இணைந்துள்ளார். வைரம் பட்டை தீட்டும் தன் தொழிற்சாலையில், சிறப்பாக பணியாற்றிய, 125 ஊழியர்களுக்கு, அதிநவீன ஸ்கூட்டர்களை, லக்சிதாஸ் வெகாரியா வழங்கியுள்ளார்.
ஊழியர்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெகாரியா தெரிவித்துள்ளார்.
அரசு டாக்டர்கள் புறக்கணிப்பு : புற நோயாளிகள் கடும் பாதிப்பு
பதிவு செய்த நாள்21ஏப்
2017
23:34

சென்னை: அரசு டாக்டர்கள், இரண்டாவது நாளாக, பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 50 சதவீத முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. 'இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், அதிருப்திஅடைந்த டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

நேற்று முன்தினம், தமிழகம் முழுவதும், இரண்டு மணி நேரம், புற நோயாளிகள் பிரிவில், பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று முதல், புற நோயாளிகள் பிரிவில், முற்றிலுமாக பணி புறக்கணிப்பு போராட்டத்தை, டாக்டர்கள் நடத்தினர். 

இதனால், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலுார், காஞ்சி புரம், திருவள்ளூர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், புற நோயாளிகள் கடும் அவதிகுள்ளாகினர்.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் கைகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்திலும், டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறுகையில், ''மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள், புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளித்தனர். அரசு டாக்டர்களின் போராட்டத்தால், நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லை. போராட்டத்தை கைவிடக் கோரி, தொடர்ந்து
டாக்டர்களிடம் பேசி வருகிறோம்,'' என்றார்.

'அப்பீல்' மனு : சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''இட ஒதுக்கீட்டை ரத்து செய்த, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு, ஓரிரு நாளில் விசாரணைக்கு வர உள்ளது.
டாக்டர்கள் கோரிக்கைகளின் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.
சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி : சென்னை, காஞ்சி கலெக்டர்கள் தொய்வு

பதிவு செய்த நாள்21ஏப்
2017
23:50


மதுரை: 'சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் கலெக்டர்களின் பணி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
அதிருப்தி தெரிவித்துள்ளது.

'ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, 'சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்திருந்தார். அவரை போல் திருப்புவனம் கருப்புராஜா, மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் மனு செய்திருந்தனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்; சீமைக் கருவேல மரங்கள் வளர்க்க தடை மற்றும் தண்டனை விதிக்கும் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்; இம்மரங்களை அகற்ற, அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான நிதியை அரசு வழங்க வேண்டும். இம்மரங்களை அகற்றும் பணியை கலெக்டர், வருவாய்த் துறை அதிகாரி கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்; மாவட்ட முதன்மை நீதி
பதிகள், முன்சீப்கள், வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.இதன் பின், ஏற்பட்டுள்ள நிலை குறித்து, நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அவர்கள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் இதுவரை, 40 சதவீத சீமைக் கருவேல மரங்கள்
அகற்றப்பட்டுள்ளன. விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலுார், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் கலெக்டர்களின் பணி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் ரயில்வே துறை ஆர்வம் செலுத்தாதது, சிறப்பு ஆய்வில் தெரிய வந்தது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜூன், 9ல் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற மறுக்கும் தனியார் நில உரிமையாளர்களை, இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைக்க வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னையாபுரம் அதியனுாத்தில் மவுனகுருசாமி அறக்கட்டளைக்கு சொந்தமான, 500 ஏக்கரில் சீமைக் கருவேல மரங்களை அகற்றவில்லை. அந்த அறக்கட்டளையை இவ்வழக்கில் நீதிமன்றமே தானாக முன்வந்து எதிர்மனுதாரராக இணைத்து கொள்கிறது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற செலவிடுவதற்காக, இந்நீதிமன்ற வளாகத்திலுள்ள
வங்கியில் தனி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இதில், ஏப்., 20 வரை, 24.29 லட்ச ரூபாயை பல்வேறு தரப்பினர், 'டிபாசிட்' செய்துள்ளனர். இதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற, 14.9 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி சிறையிலுள்ள ஆயுள்
தண்டனை கைதி செல்வராஜ், 1,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். அவரையும், இதுவரை நன்கொடை அளித்தவர்களையும் இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. மக்கள் நலன் கருதி, சீமைக் கருவேல மரங்களை வளர்க்க தடை மற்றும் தண்டனை விதிக்கும் சட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும் என, இந்நீதிமன்றம் நம்புகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் 9ல், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
60 வயதானால் 50 சதவீத கட்டணம்

பதிவு செய்த நாள்22ஏப்
2017
00:00

புதுடில்லி: மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணத்தை பெறும் வயது வரம்பை, 63ல் இருந்து, 60 ஆக குறைத்துஉள்ளது, 'ஏர் இந்தியா' விமான நிறுவனம்.இது குறித்து, ஏர் இந்தியா, நேற்று வெளியிட்டுள்ள செய்தி:விமான பயணத்துக்கான மூத்த குடிமக்களுக்கு, பயணக் கட்டணத்தில், 50 சதவீதம் சலுகை பெறுவதற்கான வயது, 63ல் இருந்து, 60 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு விமான பயணம் செய்வோருக்கு, இந்த சலுகை அளிக்கப்படும். வயது குறித்த தகுந்த ஆதாரத்துடன் இந்த சலுகையை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துணைவேந்தர்களுக்கு மீண்டும் 'செக்' : இஷ்டத்துக்கு நியமனம் செய்ய தடை
பதிவு செய்த நாள்22ஏப்
2017
01:10

மதுரை: 'துணைவேந்தர் பணிக்காலம் முடியும் மூன்று மாதங்களுக்கு முன்பல்கலையில் எவ்வித பணி நியமனங்களும் மேற்கொள்ளக்கூடாது' என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 24 அரசு பல்கலைகள், 2500க்கு மேற்பட்ட அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. 'இவற்றில் 2017 ஏப்.,௧௨ க்கு பின் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை மறுஉத்தரவு வரும் வரை நிரப்பக்கூடாது' என உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவிட்டார்.இதன் பின்னணியில், 'சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் 1,031ஆசிரியர், 4,722 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவற்றில் முறையே 545 மற்றும் 2,643 பணியிடங்களை தமிழகத்தில் உள்ள பல்கலை, அரசு, உதவி பெறும் கல்லுாரிகள், பாலிடெக்னிக்கு களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி முடியும் வரை புதிய பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.இதனால், பெரும்பாலான துணைவேந்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் இருந்து மீள்வதற்குள், 'துணைவேந்தர் பதவி காலம் முடியும் நிலையில், கடைசி மூன்று மாதங்களில் பணிநியமனம் செய்யக்கூடாது' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:பல்கலைகளில் பணி நியமனங்களில் பல லட்சம் ரூபாய் பேரம் நடக்கிறது. இதன் பின்னணியில் பெரும்பாலும் துணைவேந்தர்கள் உள்ளனர். இஷ்டத்திற்கும் பணி நியமனம் நடந்ததால்தான், அண்ணாமலை பல்கலை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான உபரி பணியிடங்களை மற்றும் நடவடிக்கையால், அரசு கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.ஒரு பல்கலையில் எத்தனை பணியிடங்களை நிரப்பலாம் என்பதை பொறுத்தே, துணைவேந்தர் பதவிக்கு மறைமுகமாக விலை நிர்ணயிக்கப்படுகிறது.'கேட்டதை' கொடுத்து துணைவேந்தர் பதவியை பிடித்து ஒன்றுக்கு இரண்டு மடங்காக 'கல்லா' கட்டிக்கொள்ளும் நடைமுறை இருப்பதால்தான் உயர்கல்வி தரம் கேள்விக்குறியாகி வருகிறது.மேலும், 'துணைவேந்தர் பதவிக்காலம் முடியும் கடைசி மூன்று மாதங்களில் தான் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன' என்ற தகவலும் உள்ளது.இதனால்தான் இதுபோன்ற தடைகள் அடுத்தடுத்து விதிக்கப்படுகிறது. உயர்கல்வியில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், துறை செயலர் சுனில்பாலிவலின் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது; இதுதொடர வேண்டும்.இவ்வாறு கூறினார்.
இ - சேவை மையங்களில் புதிய ரேஷன் கார்டு
பதிவு செய்த நாள்21ஏப்
2017
23:37




சென்னை: அரசு இ - சேவை மையங்களில், புதிதாக ரேஷன் கார்டு பெறவும், ரேஷன் கார்டில் திருத்தம் செய்யவும், 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அரசு இ - சேவை மையங்கள் உள்ளன.இம்மையங்களில், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற, வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும், புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், மொபைல் எண் மாற்றம் போன்ற சேவைகளை, 24ம் தேதி முதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'மொபைல் ஆப்'பில் ஊழியர் விபரம் - உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது வினியோக திட்டத்துக்கு, 'tnepds' என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், ரேஷன் கடையில் பதிவு செய்த, மொபைல் போன் எண்ணை பதிவிட்டதும் செயல்பட துவங்கும். ரேஷன் ஊழியரின் பெயர், மொபைல் போன் எண், உணவுப் பொருட்கள் இருப்பு, கடை விடுமுறை உள்ளிட்ட விபரங்கள், மொபைல் ஆப்பில் இருக்கும். வேலை நேரத்தில் ஊழியர்கள் கடையை விட்டு, எங்கும் செல்லக் கூடாது; அவ்வாறு சென்றிருந்தால், மக்கள், மொபைல் ஆப்பில் உள்ள, போன் எண் மூலம் ஊழியர்களை தொடர்பு கொள்ளலாம். அது குறித்த புகாரையும், போன் மூலமே தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் ஆதரவு கூடுதலாக உண்டு’ மோடி பேச்சு

‘நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் ஆதரவு கூடுதலாக உண்டு’ மோடி பேச்சு
ஏப்ரல் 22, 05:30 AM

புதுடெல்லி,

நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் ஆதரவு கூடுதலாக உண்டு என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி கூறினார்.குடிமைப்பணிகள் தினம்

சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய குடிமைப்பணி அதிகாரிகள் (ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) அணியின் மத்தியில், முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல் உரை ஆற்றிய தினம் (1947, ஏப்ரல் 21–ந் தேதி), குடிமைப்பணிகள் தினமாக 2006–ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் 11–வது குடிமைப்பணிகள் தினம் டெல்லியில் நேற்று நடந்தது. சாதனை படைத்த குடிமைப்பணி அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்கி பேசினார்.கூடுதல் ஆதரவு

அப்போது அவர் கூறியதாவது:–

இந்த நாள், மறு அர்ப்பணிப்பு நாள். குடிமைப்பணி அதிகாரிகள் தங்கள் பலம், திறமைகள், சவால்கள், பொறுப்புகள் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள்.

இப்போது நிலவுகிற சூழல்கள், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல்களில் இருந்து மாறுபட்டதாகும். இனி வரும் ஆண்டுகளில் இந்தச் சூழல்கள் இன்னும் மாற்றம் பெறும்

நேர்மையான, உண்மையான ஈடுபாடுள்ள குடிமைப்பணி அதிகாரிகளுக்கு எனது நிர்வாகம் கூடுதல் ஆதரவு தர விருப்பம் கொண்டுள்ளது. இது அதிகார வர்க்கத்துக்கான நேரம்.விரைவான முடிவு

நீங்கள் விரைவான முடிவுகளை எடுக்கலாம். அரசு அதிகாரிகள் மீதான பொறுப்புகள் அதிகரித்துள்ளது. இது வேலைகளில் மட்டுமல்ல, சவால்களிலும்தான்.

அரசியல் தலைமை சீர்திருத்தங்களை கொண்டு வரலாம். ஆனால் அதிகார வர்க்கம்தான் செயல்படுத்த வேண்டும். அதில் பொதுமக்களின் பங்களிப்பு மாற்றத்தை கொண்டு வரும். எல்லோரையும் ஒரே அலைவரிசையில் கொண்டு வர இருக்கிறோம். அதன் பின்னர் நாம் நல்ல பலன்களை அடைய முடியும்.நான் உங்களுடன் இருக்கிறேன்

அதிகாரிகள் சரியான முடிவுகளை எடுக்கிறபோது, அதனால் பாதிப்பு வருமோ என நினைக்க தேவையில்லை. நேர்மையான நோக்கத்துடனும், உண்மையுடனும், மக்கள் நலனுக்காக ஒரு முடிவு எடுத்தால், உங்களை நோக்கி இந்த உலகின் எந்தவொரு சக்தியாலும் விரல்களை உயர்த்த முடியாது.

என்ன நடந்தாலும், நான் உங்களுடன் இருக்கிறேன்.2022–ம் ஆண்டுக்குள்...

நீங்கள் வேலை செய்கிற பாணியையும், சிந்திக்கும் பாங்கையும் மாற்றிக்கொண்டால் நல்லது.

மூத்த அதிகாரிகள் நமக்கு எல்லாம் தெரியும் என்ற உணர்வில் இருந்து கொஞ்சம் விலகி இருங்கள். இளைய அதிகாரிகளின் யோசனைகளை கேட்டு செய்யுங்கள். அதிகாரிகள் ஏதோ பள்ளத்தில் இருந்து வேலை செய்வது போல தனிமையில் செய்ய வேண்டாம். அனைவரும் ஓரணியாக செயல்படுங்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகள்படி இந்தியாவை 2022–ம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்கு குடிமைப்பணி அதிகாரிகள் சூளுரை எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
தலையங்கம்
‘ஆமாம் சாமி’ போடாதீர்கள்


ஏப்ரல் 22, 02:00 AM

‘ஜனநாயகம் என்ற மாளிகை’ சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம், பத்திரிகை ஆகிய 4 தூண்களால்தான் தாங்கப்படுகிறது. ஒவ்வொரு அமைப்பும் தனித்தனி அங்க மாக தனக்குரிய தனித்துவத்துடன் செயல்படுகிறது என்றாலும், சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களா னாலும் சரி, நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளா னாலும் சரி, பத்திரிகைகள் தரும் ஆலோசனைக ளானாலும் சரி, அவற்றை செயல்படுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு நிர்வாகத்திடம்தான் இருக்கிறது. அதனால்தான், சர்தார் வல்லபாய் பட்டேல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய பணிகளான சிவில் சர்வீசஸ் பணிகளை இரும்புச் சட்டம் என்று வர்ணித்தார். பல நேரங்களில் அரசு ஊழியர்களும், அதிகாரவர்க்கங்களும், அரசியல்வாதிகளின் சட்டத்துக்கு புறம்பான ஆணைகளுக்கு அடிபணிந்து செல்வதால்தான் நிர்வாகத்தில் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. ஊழலுக்கு வித்திடுகின்றன.

இந்திய குடிமைப்பணிகள் தினம் என்று அழைக்கப் படும் சிவில் சர்வீசஸ் தினத்தில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, ‘சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ‘‘ஆமாம் சாமி’’ போடுபவர்களாக அதாவது, ‘யெஸ் மேன்’களாக இருக்கக்கூடாது. அரசியல் வாதிகள் ஏதாவது தவறான உத்தரவுகளை பிறப்பித்தால், தைரியமாக அதை செய்யமுடியாது என்று கூறி, அதற்கான விதிகளை எடுத்துக்காட்டுங்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படாதீர்கள். அரசியல்வர்க்கம் தவறு இழைக்கும்போது, அவர்கள் தவறை சட்டப்பூர்வமாக தவறு என்று சுட்டிக்காட்டி, அந்த கோப்புகளில் கையெழுத்து போடாதீர்கள். அரசின் பொதுவான நலனையும்,
ஏழை மக்களின் நலனையும் மனதில் வைத்துக் கொண்டு எந்த முடிவையும் எடுப்பதில் தயக்கம் காட்டாதீர்கள். பாரபட்சம் இல்லாமல், உங்களுக்கு ‘பொறுப்பு கடமை’ இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்’ என்று அறிவுரை கூறினார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற இந்திய ஆட்சிப்பணிகள் அதிகாரிகள் எப்படி செயல்படு கிறார்களோ, அதை பின்பற்றித்தான் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் தங்கள் பணியை ஆற்று வார்கள். பல அதிகாரிகள் தாங்கள் நேர்மையாக இருக்கும் போது, திறமையாக இருக்கும்போது, முதல்–அமைச்சரோ, அமைச்சர்களோ மற்றும் அரசியல் ரீதியான தலைவர்களோ சொல்வதற்கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போடாமல் தைரியமாக பணியாற்றிய பல உதாரணங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது.

பெருந்தலைவர் காமராஜர் முதல்–அமைச்சராக இருந்தபோது, திருநெல்வேலியில் ஒரு காங்கிரஸ்காரரின் சினிமா தியேட்டரை காலையில் திறந்தார். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த பசுபதி இதை சற்று நேரத்துக்கு முன்பு காமராஜரின் கவனத்துக்கு கொண்டு சென்று, ‘ஐயா இந்த தியேட்டரில் சில அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை’ என்று மிக துணிச்சலோடு தெரிவித்தார். உடனே காமராஜர், ‘நான் திறந்து வைக்கிறேன்; நீங்கள், உங்கள் கடமையைச் செய்யுங்கள்’ என்று கூறினார். அதன்படி காமராஜர் காலையில் தியேட்டரை திறந்து வைத்தார். அடுத்த சில மணி நேரத்தில் மாவட்ட கலெக்டர் பசுபதி அந்த தியேட்டருக்கு ‘சீல்’ வைத்தார். இப்படிப்பட்ட முன்உதாரணங்களை இப்போதுள்ள சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பின்பற்றினால், காலம்காலமாக அந்த அதிகாரிகளின் பணி மக்களால் போற்றப்படும், பின்பற்றப்படும். நேர்மையும், துணிச்சலும், ஊழலும் இல்லாதவகையில், உயர் அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கேப்டன் நாகராஜன் எப்போதும் சொல்வதுபோல, ‘ஆளும்வர்க்கம் சொல்வதையெல்லாம் கேட்கவில்லை என்று இடமாறுதல் செய்தாலும், அவர்களுக்கு பின்னால் இருக்கிற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அடைமொழிகளை அவர்களைவிட்டு யாராலும் எடுக்க முடியாது. உச்சகட்டமாக ஒரு பணியி லிருந்து இன்னொரு பணிக்குத்தான் மாற்ற முடியுமேதவிர, வேறு எதுவும் செய்யமுடியாது. தவறுக்கு துணை போக மாட்டோம்’ என்ற உறுதியை அனைத்து சிவில் சர்வீசஸ் அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டால், நிர்வாகம் தூய்மையாக இருக்கும், வேகமாக செயல்படும்.

Friday, April 21, 2017

நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா?... அப்ப துடைப்பத்தால் அடி வாங்குங்க!

 ஓசூரை அருகே உள்ள தர்மராஜா கோயில் திருவிழாவில் துடைப்பம், முறத்தால் அடித்து நூதன முறையில் வழிபாடு நடத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி: ஓசூரை அடுத்த டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள தர்மராஜா சுவாமி கோயில் தேர்த் திருவிழாவில் துடைப்படம், முறத்தால் அடித்து வழிபாடு நடத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான தர்மராஜா சுவாமி கோயில் உள்ளது. இங்கு தேர்த் திருவிழா மற்றும் மஞ்சு விரட்டு விழா, கடந்த, 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

. அதைத்தொடர்ந்து, சித்திரை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தர்மராஜா சுவாமி மற்றும் திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று தேரோட்டம் நடந்தது. 377-ஆம் ஆண்டாக நடைபெற்ற தேர் திருவிழாவில் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. தேர் திருவிழாவின்போது துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியின்போது பெண் வேடமணிந்து வந்த பூசாமி சாமி ஆடியவாறு பழைய துடைப்பம், முறத்தால் அடிவாங்குவதற்கு கூடி நின்ற பக்தர்கள் தலையில் அடித்தார். இதில் சிறியவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் அடிவாங்கினர்.

 பூசாரியிடம் பழைய துடைப்பம் முறத்தால் அடிவாங்கினால் பேய், காத்து கருப்பு அண்டாது. நினைத்த காரியங்கள் கைகூடும். திருமணம் தடை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கொழிக்கும் என்பது கிராமமக்களின் நம்பிக்கையாகும். இதைத் தொடர்ந்து இன்று திரௌபதி அம்மன் அக்னி குண்ட தீமிதி பிரவேசம், பூங்கரகம், வாண வேடிக்கை, சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/different-temple-function-done-krishnagiri-280365.html

அமேஸான் அறிமுகம் செய்துள்ளது புதிய அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக்

By DIN  |   Published on : 20th April 2017 05:42 PM  |
amazon_fire_tv_stick
புதிய அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் ஒன்றை அமேஸான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இதன் விலை ரூபாய் 3,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் மூலம் 
அமேஸான் பிரைம் வீடியோக்களை எளிதாக கண்டு களிக்கலாம். ரூபாய் 499 கேஸ்பேக் சலுகையை பிரைம் சந்தாதாரர்கள் பெறலாம். ஏர்டெல் 100 ஜிபி இலவச டேட்டாவை மூன்று மாதங்களுக்கு வழங்குகின்றது.  யூ பிராட்பேண்ட் 240 ஜிபி இலவச டேட்டாவை மூன்று மாதங்களுக்கு வழங்குகின்றது.
பல்வேறு விதமான உயர்தர சேனல்கள் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, ஆப்ஸ், நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், ஹாட்ஸ்டார், யூரோஸ் நவ் , கானா போன்ற பலவற்றை மிக சுலபமாக HDMI போர்ட் உள்ள டிவிகள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் பெறும் வகையில் வைஃபை வசதியும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கில் வழங்கப்பட்டுள்ளது.
அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் உடன் வழங்கப்படுகின்ற ரிமோட்டில் குரல் வழி தேடல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 3,000க்கு மேற்பட்ட ஆப்ஸ், கேம்ஸ் உள்பட பலதரப்பட்ட சேவைகளை பெற குறைந்தபட்ச இணைய வேகம் 4Mbps ஆக இருக்க வேண்டும்.
அமேஸான் பிரைம் வீடியோ உறுப்பினர்களுக்கு ரூபாய் 499 வரை கேஸ்பேக் சலுகை கிடைக்கின்றது. மேலும் அமேசான் தவிர க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளிலும் இது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கொலைக்கு காரணம் விபரீத வீடியோ கேமா? அல்லது புரிதலற்ற கடுமையான பெற்றோரா?

    By RKV  |   Published on : 18th April 2017 01:16 PM  | 
    cadele_raja

    இந்த விசயத்தை எப்படி விளங்கிக் கொள்வது என்று புரியவில்லை.
    இன்று கொலைக் குற்றவாளியாக மாறி இருக்கும் அந்த கேரள இளைஞனின் செயலுக்கு அவனை மட்டுமே காரணமாக்கி விட முடியாது. எனினும் இது போன்ற கொடூர குற்றங்கள், இப்படியான செய்திகள் வாசிப்பவர்களையே குலை நடுங்கச் செய்கின்றன எனில் கொலையானவர்களின் கதியை நினைத்துப் பாருங்கள். யூ டியூப்பில் அந்த இளைஞன் கொலைகாரனாக மாற இன்ஸ்பிரேஷனாக இருந்த வீடியோ கேமைத் தேடிப் பார்த்தால் ரத்தத்தை உறையச் செய்கிறது அந்த விபரீத விளையாட்டு. இன்றைய இளைஞர்களுக்கு பொழுது போக்க எத்தனையோ ஜாலியான, குதூகலமான விசயங்கள் இருக்கின்றனவே, ஏன் இந்த இளைஞன் தனது மனக் காயங்களுக்கு வடிகாலாக இப்படி ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்தான் எனில் அங்கிருக்கிறது விவகாரம்.
    கேரள மாநிலம் நந்தன் கோட்டில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் 29 வயது ஜென்சன் ராஜா. வீட்டில் இருக்கையில் இந்த இளைஞனின் ஒரே பொழுது போக்கு தனது அறையின் கதைவை அடைத்துக் கொண்டு கம்ப்யூட்டரில் கொடூரமான வீடியோ கேம்களை சளைக்காமல் விளையாடுவது. சமீப காலங்களில் ராஜாவின் வாழவில் பெரும்பாலான நாட்கள் இப்படி டார்க் டிஜிட்டல் ஃபேண்டஸி வீடியோ கேம்களில் மூழ்கிப் போவதாகவே இருந்திருக்கிறது. 
    ராஜா தான் கண்ட வன்முறையான வீடியோ கேம்களில் ஒன்றான ‘ஜோம்பி கோ பூம்’ எனும் வன்முறை மிக்க வீடியோ கேம் அடிப்படையில் திட்டமிட்டு கொலைகளை நிகழ்த்துவதற்காக ‘ஸ்டான்லி கேம்ப் ஆக்ஸ்’ எனும் கூர்மையான கோடாரியை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறான். அந்த கொடூர விளையாட்டில் கொலையாளி பின்புறமிருந்தே தாக்குவான் என்பதால் கொலையுண்டவர்கள் தாங்கள் தாக்கப் படுவது குறித்து அறிந்திருக்க வகையில்லை. அதோடு விளையாட்டின் அட்சரம் பிசகாமல் கொன்றவர்களை எரிப்பதையும் ராஜா அதே விதத்தில் பின்பற்றி இருக்கிறான். எனவும் அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
    இந்த வழக்கின் விசாரணையில் இது வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராஜா தனது பள்ளிப் பருவத்தில் நண்பர்கள் யாரையும் வீட்டுக்கு அழைத்து வந்து விளையாட அனுமதிக்கப் படவில்லை, தனது குழந்தைப் பருவம் மற்றும் பள்ளி நாட்கள் அனைத்துயுமே தான் தனியாகவே கழித்ததாக ராஜா கூறி இருப்பதாகத் தெரிய வருகிறது. அதோடு மட்டுமல்ல ராஜாவின் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள், மகனுக்கு பண்டைய வரலாறு படிக்க ஆசை இருந்தும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த தங்களது மகன் டாக்டர் ஆகியே தீர வேண்டும் எனும் பிடிவாதம் அவனது பெற்றோர்களுக்கு இருந்திருக்கிறது.
    முதலில் உக்ரைனில் மருத்துவம் படிப்பதற்காகப் பறந்த ராஜா, அங்கு நிலவிய நிற வெறியின் காரணமாக அங்கிருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்றான். அங்கேயும் சொற்பகாலம் தான். பின் அங்கிருந்து கல்வியில் தோற்றுப் போனவனாக இந்தியா திரும்பிய ராஜாவுக்கு தன்னை தனது பெற்றோர் ஏற்றுக் கொள்வார்களா? எனும் அச்சம் இருந்தது. பெற்றோரால் சரியான வகையில் அங்கீகரிக்கப் படாத நிலையில் தான் இப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறான் ராஜா!
    பெற்றோரின் அரவனைப்பு கிடைக்காத பட்சத்தில், தொடர்ந்து தனக்கான புகழிடமாக அந்த இளைஞன் தேர்ந்தெடுத்தது டார்க் ஃபேண்டஸி வகையைச் சார்ந்த கொடூரமான வீடியோ கேம்கள் விளையாடுவது. ஒரு கட்டத்தில் அதற்கு முழு அடிமையான ராஜா அடுத்த கட்டமாக தன்னை இந்தை நிலைக்கு ஆளாகச் செய்த, தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்த பெற்றோரை கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறான். என விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கொலையானவர்களின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் கிடைத்த விவரங்களின் படி ராஜா தனது பெற்றோர், சகோதரி மற்றும் கண் பார்வையற்ற அத்தை உள்ளிட்டோரை மீன் குழம்பில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொன்றிருக்கிறான். மேலும் விசாரணையின் போது ராஜா  ‘ தான் தனது பெற்றோரைக் கொலை செய்தது வேண்டுமானால் பழிவாங்குவதற்காக என்று சொல்லலாம், ஆனால் எனது சகோதரியையும், அத்தையையும் இப்படி ஒரு மோசமான தனிமை வாழ்வில் இருந்தும், தனது கடுமையான சுபாவம் கொண்ட பெற்றோரிடம் இருந்தும் காப்பாற்றி விடுதலை அளிக்கவே அவர்களையும் சேர்த்து கொலை செய்து விட்டதாக தெரிவித்ததாக காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
    காவல்துறையினர் வெளியிட்டு வரும் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் ராஜா கொலைகாரனாக மாற வீடியோ கேம் மட்டுமே காரணமல்ல என்பது தெளிவு. தன்னைப் புரிந்து கொள்ளாத, தான் அன்பாக அணுக வாய்ப்பே தராத, தன்னை தன் வாழ்நாளெல்லாம் கட்டுப்படுத்த நினைத்த தனது பெற்றோரின் அடக்குமுறைக்கு எதிரான வன்முறையாகவே இதை ராஜா குறிப்பிடுகிறான். இந்த இளைஞனுக்கு முதல் தேவை சிகிச்சையா? அல்லது தண்டனையா? என்பதை நீதிமன்றம் தீர்மாணிக்கும். ஆனால் இவனது இந்த கொடூரச் செயல்; குழந்தைகளிடத்தில் அனாவசியமாகக் கடுமை காட்ட நினைக்கும் பெற்றோர் அனைவருக்குமே ஒரு அபாய மணி! என்றே கருத இடமளிக்கிறது.

    சீமைக் கருவேல் அகற்றம்: ஏன் இந்த வேகம்?

    By நமது நிருபர்  |   Published on : 20th April 2017 05:44 PM  |   
    karuvelam

    சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்பைவிடவும் உரத்துக் கிளம்பி இருக்கிறது. நீதிமன்றங்களும் மாதத்துக்கு ஒரு தீர்ப்பை மீண்டும் மீண்டும் கடுமையான அறிவுறுத்தல்களுடன் வெளியிட்டு வருகின்றன.
    கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவதில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் நிகழ்ந்திருக்கின்றன. பரபரப்புக்கேற்ற வேகம் இல்லையென்பதும் உண்மையே!
    மதுரையைச் சுற்றியுள்ள 13 மாவட்டங்களில் நீதிபதிகள் மேற்பார்வையில் அகற்றும் பணிகள் நடைபெற்றுள்ளன. பிரத்யேகமாக "வழக்குரைஞர் ஆணையர்' நியமிக்கப்பட்டு, அகற்றும் பணிகள் மேற்பார்வையிடப்பட்டுள்ளன.
    இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் இதேபோன்ற சுற்றறிக்கை அரசிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டு, நீதிபதிகளுடன் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைப் பார்வையிடும் படங்களும் வெளிவந்திருக்கின்றன.
    இந்த நடவடிக்கைகளில் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இவற்றையும் கவனத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோருகின்றனர்.
    வறட்சியைத் தாங்கி வளரும் சீமைக் கருவேல மரத்தை "வேரோடு பிடுங்கும்' பணிகள் பல இடங்களில் நடைபெறவில்லை என்கிறார்கள் விவசாயிகள். பல இடங்களில் மேலாக வெட்டிவிட்டு- வேரை எடுப்பதில்லை, இதில் எவ்விதப் பயனும் இல்லை என்கிறார் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி.
    மேலும், பல்லாண்டுகளாகப் பரவிக் கிடக்கும் சீமைக் கருவேல விதைகளை மீண்டும் முளைக்காமல் எப்படிக் கட்டுப்படுத்துவது? என்பது குறித்து எந்தப் பார்வையும் இல்லாமல் இருக்கிறோம். இதற்கும் சரியான தீர்வைக் காண வேண்டும் என்கிறார் சின்னசாமி.
    காலி மனைகளில் வளர்ந்துள்ளவற்றை அகற்றும்போது, அந்த இடத்தின் சொந்தக்காரரிடம் அதற்கான செலவுத் தொகை வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பையும் பொதுமக்கள் விரும்பவில்லை. எதிர்ப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.
    பல்வேறு பணிகளுக்கு மத்தியில் திடீர் திடீரென "நீதிமன்ற உத்தரவு' என்ற ஒற்றை வரியைச் சொல்லி வேலை வாங்க முற்படுவதால், கடுமையான வேலைப்பளு அதிகரிப்பதாகவும் வருவாய்த் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். "இதற்கான பிரத்யேக நிதி எதையும் உருவாக்காமல் உத்தரவுகளால் அழுத்தம் கொடுப்பது நல்லதல்ல' எனக் குறிப்பிட்டு உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் போராட்டங்களை நடத்தியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    கருவேல மரங்களை அகற்றும் கொள்கையோடு பிரத்யேக அமைப்புகளும் உருவாகியிருக்கின்றன. சூழலியலாளர்கள் சிலரும்கூட அரசு இதனைக் கொள்கைப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் யோசனைகளை முன்வைக்கிறார்கள்.
    இதற்கிடையே, சீமைக்கருவேலம் குறித்து பரபரப்பாகப் பேசப்படுவதை ஆச்சரியத்துடன் பார்ப்பதாகக் கூறுகிறார் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் "வானகம்' மையத்தின் செயலர் ம. குமார்.
    "தண்ணீரை அதிகம் உறிஞ்சுகிறது சீமைக் கருவேலம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை எவ்வித பாரபட்சமும் இன்றி- உடனடியாக எடுக்க வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
    ஆனால், மற்ற பொதுவான இடங்களில் உள்ள சீமைக் கருவேலத்தை அகற்றுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் ஹெக்டேர் சீமைக் கருவேல மரம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
    இத்தனை ஹெக்டேர் பரப்பளவிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டால், அந்த இடத்தை கட்டாந்தரையாக விட்டுவிடப் போகிறோமா? பசுமைப் போர்வையை அகற்றும் இந்தச் செயல் பூமியை மேலும் சூடாக்கி விடாதா? படிப்படியாகவாவது மாற்று மரங்களை வைப்பதற்கு எவ்வித முயற்சியும் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. அதுவும் இத்தனை வறட்சியான சூழலில். ஏன் இந்த வேகம்? இது சரியா?
    அடுத்து, இந்த மரத்தின் கரியை நம்பி வாழும் மக்களை தொடர்ந்து என்ன செய்யச் சொல்லப் போகிறோம்?
    லட்சக்கணக்கான மக்கள் சீமைக் கருவேல மரங்களின் கரிகளைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களையும் எரிவாயுவை நோக்கித் தள்ளிவிட்டு- பிறகு மீண்டும் "மீத்தேன்', "ஷேல்', "ஹைட்ரோ கார்பன்' எடுக்கும் திட்டங்களுக்காக நிலத்தைத் தோண்டுவதை ஆதரிக்கப் போகிறோமா?
    எனவே, சீமைக் கருவேல மரம் அகற்றுவதில் உள்ள சிக்கல்களை, அவசியத்தைப் புரிதலுடன் ஏற்றுக் கொண்டு, தமிழக அரசு நல்ல திட்டத்தை அறிவிக்க வேண்டும். வெறுமனே மரங்களை மட்டும் அகற்றுவது எனப் பேசி, ஒரு பெரும் தொகையை ஒதுக்குவது சரியான தீர்வாகாது. "கமிஷனுக்கு' மட்டுமே பயன்தரும்.
    சீமைக் கருவேல மரம் மற்ற மரங்களைக் காட்டிலும் உறுதியானது, எல்லா வகையான வீட்டு உபயோகப் பொருள்களும் செய்ய முடியும்.
    வெளிநாடுகளில் பழுத்த சீமைக் கருவேல காய்களில் இருந்து "பிஸ்கெட்', "ஜூஸ்' தயாரிக்கப்படுகிறது. பயனுள்ள வகையில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பரந்து விரிந்துக் கிடக்கும் சீமைக் கருவேலம் குறையும் என்கிறார் குமார்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

    DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...