Friday, September 15, 2017

மாவட்ட செய்திகள்
வக்கீல் உள்ளிட்ட 3 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு


போர் நினைவு சின்னம் அருகே போலீஸ்காரரை தாக்கிய வக்கீல் உள்ளிட்ட 3 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செப்டம்பர் 15, 2017, 03:45 AM
சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேசன் (வயது 39). வக்கீலான இவர் ஒரு அரசியல் கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்கள் குமார் (45), விக்னேஷ் (19) ஆகியோருடன் 2 மோட்டார் சைக்கிளில் புளியந்தோப்பு பகுதியில் இருந்து மயிலாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கொடிமரச்சாலையில் சென்றபோது, போர் நினைவு சின்னம் அருகே கோட்டை போக்குவரத்து போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த லிங்கேசன் மற்றும் அவரது உறவினர்களை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தர்மஅடி

உடனே போலீசார் அவர்களை கண்டித்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அப்போது லிங்கேசனுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் லிங்கேசன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து, சதீஷ்குமார் என்ற போலீஸ்காரரை தாக்கியதாக தெரிகிறது. உடனே சதீஷ்குமார் அடி தாங்க முடியாமல், அருகே உள்ள அன்னை சத்யா நகருக்கு ஓடிச்சென்று சத்தமிட்டார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிலர் போலீசை தாக்கிய 3 பேருக்கும் தர்ம அடி கொடுத்தனர். அதில் அவர்கள் 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்டரை தாக்கினர்

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி அவர்கள் 3 பேரையும், போலீஸ்காரர் சதீஷ்குமாரையும் மீட்டு கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் போலீஸ்காரர் சதீஷ்குமாரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு, மற்ற 3 பேரையும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லிங்கேசன் உள்ளிட்ட 3 பேரும் பணியில் இருந்த பிரபு(27) என்ற பயிற்சி டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கினர். தகவல் அறிந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

டாக்டர்கள் போராட்டம்

தாக்கப்பட்ட போலீஸ்காரர் சதீஷ்குமார், கோட்டை போலீஸ் நிலையத்திலும், பயிற்சி டாக்டர் பிரபு பூக்கடை போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பணியில் இருந்த பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் மற்றும் டாக்டர்கள் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மருத்துவமனை டீன் நாராயணபாபு பேச்சுவார்த்தை நடத்தி, பணியின்போது உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மாநில செய்திகள்

தலைமை செயலக ஊழியர் சங்கத்தில் திடீர் பிளவு ஒரு பிரிவினர் இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு



தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 15, 2017, 04:15 AM

சென்னை,

தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு பிரிவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கணேசன் செயல்பட்டார். இந்த அமைப்பினர் கடந்த 7-ந் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முடிவு செய்தனர்.

ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஈரோட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டத்தை 15.10.17 வரை தள்ளி வைக்கலாம் என்று கணேசன் கருத்து தெரிவித்தார். ஆனால் இதற்கு மற்றவர்கள் உடன்படவில்லை. இதனால் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டது. ஒரு அணியினர் வேலைக்கு சென்று விட்டனர். மற்றவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கணேசன் உள்பட போராட்டத்தில் ஈடுபடாத ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேற்று தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.

அதன் பின்னர் தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தலைமை செயலக திறந்தவெளி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது போராட்டத்தை தள்ளி வைத்தது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

எனவே பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்பட்டது. சங்கத்துக்குள் ஆமைகள் நுழைந்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்தனர். கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கவேண்டும் என்று பலர் குரல் எழுப்பினர். அந்த கருத்தின் அடிப்படையில் தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தில் பிளவு ஏற்பட்டது.

அந்த சங்கத்தின் ஒரு பிரிவினர், 15-ந் தேதியில் இருந்து (இன்று) தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்தனர். ஏற்கனவே ஜாக்டோ-ஜியோ நடத்தி வரும் காலவரையற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பட்டைகளை தலைமை செயலக ஊழியர்கள் பலர் அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தலையங்கம்
இது தேவை இல்லை; திரும்பப்பெறுங்கள்!




போக்குவரத்து என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. தரைவழி, வான்வழி, ரெயில்வழி போக்குவரத்து என்றாலும், சாலைபோக்குவரத்துத்தான் முதன்மையான போக்குவரத்து ஆகும்.

செப்டம்பர் 15 2017, 03:00 AM

போக்குவரத்து என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. தரைவழி, வான்வழி, ரெயில்வழி போக்குவரத்து என்றாலும், சாலைபோக்குவரத்துத்தான் முதன்மையான போக்குவரத்து ஆகும். சாலைபோக்குவரத்தில் சரக்குகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து முக்கிய பங்கு வகிப்பதுடன், சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணியாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 62,468 கி.மீட்டர் நீளமுள்ள தேசிய, மாநில, மாவட்ட, இதரசாலைகள் உள்ளன. கடந்த மார்ச் மாத கணக்குப்படி, இந்த சாலைகளில் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 38 லட்சத்து 45 ஆயிரத்து 64 வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில், கார் மற்றும் லாரி, பஸ், டிராக்டர் போன்ற கனரக வாகனங்கள் எல்லாவற்றையும் உரிமையாளர்களே ஓட்டுவதில்லை. டிரைவர்களையும் வேலைக்கு வைத்து ஓட்டுகிறார்கள். இதன்மூலம் டிரைவர்களுக்கும் பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், டிரைவர்கள் வேலைவாய்ப்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், கடந்த மாதம் 24–ந் தேதி மாநில போக்குவரத்து ஆணையம், அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து ரக மோட்டார் வாகனங்களையும் பதிவு செய்யும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அந்த வாகனங்களை வாங்கிய உரிமையாளர்கள் டிரைவிங் லைசென்சு அதாவது, ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தால் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுப்படி, கையில் டிரைவிங் லைசென்சு இல்லையென்றால் வாகனம் வாங்கமுடியாது. இதை எதிர்த்து மோட்டார் வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த ஒரு வழக்கில் நீதிபதி எம்.துரைசாமி இடைக்கால தடை விதித்துள்ளார். இந்த முடிவை எடுப்பதற்கான காரணத்தை தமிழக அரசு போக்குவரத்துத்துறை கூறும்போது, பெருகிவரும் மோட்டார் வாகனங்களின் விபத்துக்களை தடுப்பதற்காகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தது. மோட்டார் வாகன சட்டத்தில், வாகனங்களை பதிவு செய்வதற்கு இப்படி ஒரு நிபந்தனை இல்லை என்பதுதான் விற்பனையாளர்களின் கூற்றாகும். தமிழக அரசின் இந்த உத்தரவு நிச்சயமாக தேவையற்றதாகும். ஒரு மோட்டார் வாகனத்தை வாங்குபவர் வயதானவராகவோ அல்லது உடல் ஊனமுற்றவராகவோ இருந்தால், நிச்சயமாக அவர்களால் டிரைவிங் லைசென்சு வாங்கமுடியாது. அதுபோல, ஏதாவது நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அடிக்கடி செல்லவேண்டிய நிலையில், ஒரு மோட்டார் வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களாலும் முடியாது. இதுமட்டுமல்லாமல், சிறு குழந்தைகளை வீட்டில் உள்ளவர்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்காக டிரைவர் வைத்துக்கொண்டு அனுப்ப கார் வாங்கும் நிலையில் அவர்களும் இந்த உத்தரவால் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகளை எடுத்துக்கொண்டால், டிராக்டர் போன்ற விவசாயத்துக்கு தேவையான வாகனங்களை வாங்கும்போது, எல்லா விவசாயிகளும் டிரைவிங் படித்திருப்பார்கள் என்று கூறமுடியாது.

அரசிலும், தனியார் நிறுவனங்களிலும், உயர் அதிகாரிகளுக்கு டிரைவர்கள் ஓட்டத்தக்கவகையில், கார்களை வழங்கி வருகிறார்கள். இப்படி அரசும், தனியார் நிறுவனங்களும் தங்கள் அலுவலர்களுக்காக வாங்கும் கார்களுக்கு யாருடைய டிரைவிங் லைசென்சை காட்ட முடியும்? டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருப்பவர்கள் ஒரே லைசென்சை வைத்துக்கொண்டு எத்தனையோ வாகனங்களை வாங்கமுடியும். இப்படி இந்த உத்தரவில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதால், இதை நிறைவேற்றுவது என்பது நிச்சயமாக சாத்தியமாகாது. விபத்துகளை குறைப்பதற்காக இந்த உத்தரவு என்றால், போக்குவரத்து விதிகளைத்தான் கடுமையாக அமல்படுத்தவேண்டுமே தவிர, இந்த உத்தரவு நிச்சயமாக பலன் அளிக்காது. எல்லோரும் லைசென்சு வாங்கிக்கொண்டுதான் மோட்டார் வாகனங்கள் வாங்க வேண்டுமென்றால் டிரைவிங் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் டிரைவர்களின் வாழ்க்கை என்னவாகும்? எனவே, இந்த வி‌ஷயத்தில் கோர்ட்டு தீர்ப்பு கூறும் முன்பே, அரசே கவுரவம் பார்க்காமல் இந்த உத்தரவை திரும்பப்பெறுவதுதான் நல்லது.









Thursday, September 14, 2017

Divorced Daughter Eligible For Appointment On Compassionate Grounds: Calcutta HC (FB) [Read Judgment] | Live Law

Divorced Daughter Eligible For Appointment On Compassionate Grounds: Calcutta HC (FB) [Read Judgment] | Live Law: A Full Bench of Calcutta High Court, on Wednesday, held that a divorced daughter would come under the definition of an “unmarried daughter” and would be eligible for appointment on compassionate grounds. “The beneficent scheme underlying the settlement would be thrown out of gear in the event, a restrictive meaning is applied and benefits are …

No Application From Medical Colleges For Grant Of LOP For 2017-18 Shall Be Entertained: SC To Centre [Read Judgment] | Live Law

No Application From Medical Colleges For Grant Of LOP For 2017-18 Shall Be Entertained: SC To Centre [Read Judgment] | Live Law: The Supreme Court on Tuesday directed the government that no petition shall be entertained from any medical institution/ college/ society/ trust or any party for grant of Letter Of Permission (LOP) for the academic session 2017-2018. A three-judge bench of Chief Justice Dipak Misra, Justice Amitava Roy and Justice AM Khanwilkar held:“We direct that the …

A medical college up for sale

The advertisement that appeared in Malayalam daily seeking prosepective buyers.  

Faced with severe cash crunch, some managements looking for sale or takeover

In what could well be a symptom of a widespread rot, a medical college in Kerala has advertised that it is up for sale.
The advertisement appeared in a leading Malayalam daily on September 13 and reads that a “reputed well-run medical college in Kerala for sale/takeover.” The advertisement asks “financially sound parties” to respond via email.
The advertisement flies in the face of the accepted logic in Kerala that it is only the engineering colleges that are in a corner and that the medical colleges are doing far better. But is it the paucity of students that plagues medical colleges in the State? Are there other reasons for medical colleges to throw in the towel and call it a day?
According to those associated with the running of medical colleges, the prime problem is cash crunch. Back when managements could admit students to the management quota, they could collect money by way of donations, capitation fee, upfront fee and bank guarantees for all the five years of the MBBS programme. That era is over. Now all students are being admitted by the Commissioner for Entrance Examinations from the NEET rank list according to merit and on the basis of a pre-declared fee, except where the matter is with the courts.
Strict action
The other day when some managements started asking for blank cheques from parents, the Admission Supervisory Committee reacted with alacrity and issued an order that the collecting of blank cheques or asking for an upfront fee (of all the five years together) would come under the definition of capitation fee and that action would be taken under the relevant rules.
“The fact is that all the newcomer colleges have a cash crunch,” Fazal Gafoor, spokesperson of the MES, told The Hindu. “On the one hand we are asked to reduce the fee and on the other we have to keep the college going. This is no joke. The managements are left with no option to raise money. It is my understanding that at least a handful of medical colleges are contemplating a sale or takeover,” he said.
Anilkumar Vallil, Secretary of the Self-financing Medical Colleges Management Association, told The Hindu that many medical colleges were today finding it difficult to stay afloat.

Academics for subject-wise categorisation of UGC-approved journals

Universities face difficulties due to non-categorisation

Although the University Grants Commission (UGC) has prepared a revised approved list of journals that needs to be considered for appointment and promotion of teaching faculty, academics here say there are still difficulties in going about the task.
Recommendations for 7,255 additional journal titles were received from 141 universities during the second phase of opening of the ‘recommendation platform’ between June 16 and 22. All recommended journal titles were subjected to a checklist devised by the UGC Standing Committee. After the removal of journals that were of poor quality, duplicates and failed to fulfil the criteria, 2,407 unique journal titles were included in the UGC-approved list.
During the first phase, more than 800 journal titles of poor quality were removed by the Standing Committee from the list of 6,507 journals on the basis of feedback from individuals and institutions.
However, universities and colleges say difficulties persist because the journal titles have not been categorised subject-wise for reference at the time of approving teachers for the Career Advancement Scheme (CAS) and Direct Recruitment of Teachers and other academic staff as required under the UGC (minimum qualifications for appointment of teachers and other academic staff in universities and colleges) Regulation, 2016.
The UGC-approved list of journals consists of those indexed in WoS (Science Citation Index, Social Science Citation Index and Arts and Humanities Citation Index); journals indexed in Scopus; journals indexed in Indian Citation Index ; journals recommended by the Members of the UGC Standing Committee and Language Committee; and journals recommended by the universities during the two phases.
“The UGC crackdown on predatory journals has been long overdue. There have been many instances of teachers securing promotion based on publication of their papers in fake and predatory journals,” a senior professor of Bharathidasan University said, adding that journals started after 2000 needed to be scrutinised thoroughly.
At present, the UGC has instructed the academic community to route complaints about predatory, fake or questionable journals found in the UGC-approved list through universities or through research guide or faculty in a university.
It has given an opportunity to universities to double-check their recommendations and pass on the information about the ISSN/EISSN number, publisher's name and remarks, in case an undeserving journal has been inadvertently included in the list submitted by them.
டிங், டிங், டிங்... உருகவைக்கும் குல்ஃபி விற்பவர்களின் சோகக்கதை!

VIKATAN

இரா. குருபிரசாத்
தே.அசோக்குமார்

குல்ஃபி என்ற பெயரைக் கேட்ட உடனே, உங்கள் நாக்கில் எச்சில் ஊறுகிறதா? மொபைல் ரிங் சத்தத்தைவிட, காலிங்பெல் சத்தத்தை விட, டிங், டிங், டிங் என்று அடிக்கும் குல்ஃபி விற்பவர் எழுப்பும் சத்தத்துக்குக் காத்திருந்து சந்தோஷப்படுபவரா நீங்கள்? அப்ப, சியர்ஸ் போடுங்க... குல்ஃபி ஆர்மியில் இருக்கும் கோடானு கோடிப் பேரில் அடியேனும் ஒருவன். இளையராஜாவுக்கு அடுத்ததாக, என் இரவுகளை இனிமைப்படுத்தியது இந்த குல்ஃபி-க்கள்தான்.



ஒவ்வொரு முறை குல்ஃபி சாப்பிடும்போதும், சொர்க்கத்தின் வாசலை எட்டிப்பார்த்துவிட்டுதான் வருகிறோம். அப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கும் அந்த குல்ஃபி விற்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ற கேள்வி, என் மெடுலா ஆப்லகெட்டாவில் நீண்ட நாள்களாக தட்டிக்கொண்டே இருந்தது. சரி, இந்தக் கேள்விக்கு விடை தேட, பைக்கை எடுத்து மெரினாவை நோக்கிக் கிளம்பினோம்.



அகன்று விரிந்த வாலாஜா சாலையின் ஓரமாக குல்ஃபி விற்பவர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை அலேக்காகப் பிடித்து பேசத்தொடங்கினோம். நாம் முதலில் பேசியவர், இம்ரான். இவர், இரண்டாவது தலைமுறையாக குல்ஃபி விற்பனை செய்கிறார். இவரது தந்தை, கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் குல்ஃபி விற்றவர். இரண்டாவது தலைமுறையாக குல்ஃபி வியாபாரத்தில் இறங்கியுள்ள இம்ரான், நான்கு குல்ஃபி வண்டிகளுக்குச் சொந்தக்காரர்.

இம்ரானிடம் பேசினோம், "புளியந்தோப்புல இருந்து வரேன் சார். 15 வருஷமா இதுதான் பொழப்பு. அப்பாகிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். கொஞ்சநாள்ல அப்பா இறந்துட்டாரு. அப்பறம் நானே முழுசா இறங்கிட்டேன். குல்ஃபி விக்கிறது நைட் டைமா இருந்தாலும், காலைல 8 மணில இருந்தே எங்களுக்கு வேலை ஆரம்பிச்சுரும். பாலை சுண்ட வெச்சு, தண்ணீரைக் கலக்கி, அதை ஐஸ் ஆக்கறதுக்கு எப்படியும் மதியம் 1 மணி ஆய்டும்.



அதுக்கப்பறம், சாய்ங்காலம் 7 மணிக்கு சைக்கிள் எடுத்துட்டு வியாபாரத்துகுப் போவோம். எங்களுக்குள்ளயே ஏரியா பிரிச்சுப்போம். நைட்டு 1.30 மணிக்கு ஏரியா முடிச்சுட்டு, இங்க வந்து கணக்குப் பார்ப்போம். வீட்டுக்குப் போய் தூங்க 3 மணி ஆய்டும். ஒரு நாள் நல்லா வியாபாரம் ஆவும். ஒரு நாள் சுத்தமா வியாபாரம் ஆவாது. மழை வந்தா ரொம்ப கஷ்டம். சில பேரு மழை டைம்ல வாங்கண்ணு சொல்வாங்க. ஆனா, அப்ப வியாபாரம் பண்றதுல சிக்கல் இருக்குது. வெள்ளம் வந்தப்ப எல்லாம் சுத்தமா வியாபாரமே இல்ல. சராசரியா ஒரு நாளைக்கு 300 ரூபா லாபம் கிடைக்கும். வேலைக்கு வரவங்களுக்கு கமிஷன் அடிப்படைல காசு கிடைக்கும்.



பாதாம், பிஸ்தா, சாக்லேட்னு 5, 6 ஃப்ளேவர் விற்போம். ரெகுலர் கஸ்டமர்ஸ் நிறைய இருக்காங்க. அவங்க டீசன்ட்டா காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவாங்க. ஆனா, எல்லா ஏரியாலயுமே ரவுடிங்க தொல்லையும் இருக்கு. கத்தியக் காட்டி, மிரட்டி குல்ஃபி வாங்குவாங்க. சிலர் அடிச்சும் குல்ஃபி வாங்குவாங்க. சிலர், டேய் நாளைக்கு வந்து காசு வாங்கிக்கோன்னு சொல்லி மிரட்டுவாங்க. ஒருசிலர், பைக்ல இருந்து இறங்காமயே குல்ஃபி கேட்பாங்க. குல்ஃபி கொடுத்தா, திரும்பி காசு கொடுக்காம அப்டியே பைக்ல சல்லுனு பறந்துருவாங்க. எப்டியும் ஒரு நாளைக்கு 50 ரூபாக்கு மேல இப்படி நட்டம் ஆகும். அதுவும் இந்த சனி, ஞாயிறு வந்தா எங்க பாடு ரொம்பவே திண்டாட்டம்தான். சனி, ஞாயிறுல குறைஞ்சது 300 ரூபா நட்டம் ஆகும்



ஜனவரி மாசம் நல்ல சீசன். அப்போ, நல்லா வியாபாரம் ஆகும். ஆனா, இந்த ஆகஸ்ட் செப்டம்பர்ல வியாபாரம் கொஞ்சம் டல்லாதான் இருக்கும். சீசன் டைம்ல வட நாட்டுக்காரங்க தொல்லை வேற. அவங்க கரெக்டா இந்த சீசன் டைம்லதான் குல்ஃபி விற்க வருவாங்க. நம்ம செய்யற அளவுக்கு குவாலிட்டியும், டேஸ்ட்டும் அவங்கக்கிட்ட வராது. நம்மளவிட குறைஞ்ச காசுக்கு வித்துட்டு காசு பார்த்துடுவாங்க. அதனாலயும் நம்ம பொழப்பு அடிவாங்கும்" என்று முடித்தார்.

இம்ரானிடம் வேலை செய்யும் இக்பால், "இந்த போலீஸ்காரங்கதான் சார் எங்களுக்குப் பாதுகாப்பே. ஆனா, ரவுடிங்க பிரச்னை பண்ற இடத்துல அவங்க அதிகமா இருக்க மாட்டாங்க. போன மாசம் கூட நாலு ரவுடிங்க வந்து காசு கொடுக்காம குல்ஃபி கேட்டாங்க. நா இன்னும் போனி ஆகலைணு சொன்னேன். அதுக்கு என்னை அடுச்சுட்டாங்க. நிறைய போலீஸ்காரங்க காசு கொடுத்து குல்ஃபி வாங்குவாங்க. ஆனா, சில போலீஸ்காரங்க காசு கொடுக்க மாட்டாங்க.



மெரினால வியாபாரம் பண்றப்ப சில நேரம் பிரச்னை வரும். அங்க இருக்கிற வியாபாரிங்க சிலர், இங்க வியாபாரம் பார்க்ணும்ணா, சங்கத்துல ரிஜிஸ்டர் பண்ணணும்னு சொல்லி, குல்ஃபி டப்பால மண் அள்ளிப் போட்டுருவாங்க. இத்தனையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுதான் வியாபாரம் நடத்தறோம்" என்று விரக்தியாகச் சொன்னார்.




ஆண்களை விட பெண்களே, அதுவும் திருமணம் ஆன பெண்கள் குல்ஃபிக்கு முரட்டு ரசிகர்கள் என்ற ரகசியத்தையும் அவர்கள் நம்மிடம் உடைத்தனர். இவர்களிடம் பேசியதில் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது. இவர்களது வாழ்க்கை குல்ஃபியைப் போல இனிமையான ஒன்று இல்லை. அதில், கசப்புகளே அதிகம் உள்ளன.
'போராட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி பதில்

பிரேம் குமார் எஸ்.கே.

தமிழகத்தில் தற்போது, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதுதொடர்பான வழக்கில்,“போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது” என்று உயர் நீதிமன்றத்தில் இன்று, தமிழகக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்தார்.



புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து, பழைய திட்டத்தின் அடிப்படையிலேயே ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் இன்று, உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த மாநிலக் கல்வித்துறை, “போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. பணிக்கு வராத நாள்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறையாகத்தான் கணக்கில் கொள்ளப்படும் ” எனக் கூறியது. இது,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது.
“ ‘சுருட்டை முடி அழகு’, ‘ஹேர் ஸ்ர்ரெய்டனிங்’, உயர, நிற சீண்டல்!” கொந்தளிக்கும் தமிழிசை செளந்தரராஜன்

ANANDA VIKATAN
வே.கிருஷ்ணவேணி

NAGAMANI V



கடந்த சில நாள்களாகச் சமூக வலைதளங்களில் தமிழிசை செளந்தரராஜன்தான் ஹிட் டாபிக். திருச்சியில் நடந்த பா.ஜ.க மாநாட்டில் அவர் பேசிய வீடியோ வைரலானது. அவரது ஹேர்ஸ்டைலும் மாறியிருப்பதாக சோஷியல் மீடியாக்கள் சொல்லிவருகின்றன. இதுகுறித்து அவரிடம் பேசியபோது...

''உங்க ஹேர்ஸ்டைல் பற்றி அடிக்கடி விமர்சனம் வருதே...''

''சமூகத்துக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன். நான் எப்பவும் எதார்த்தமா இருக்க நினைக்கிறேன். ஜெயலலிதா இறந்ததும் அவரை மாதிரியே புடவை, ஜாக்கெட், ஹேர்ஸ்டைல் என மாத்திக்கிட்ட சசிகலா மாதிரியான ஆள் நானில்லை. நான் எப்பவும் நானாகவே இருப்பேன். 'ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் ஆகிட்டீங்க, ஹேர்ஸ்டைலை மாத்திக்கலாமே'னு பலரும் என்கிட்டே சொல்லியிருக்காங்க. அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்றால் இப்படித்தான் இருக்கணும்னு பிக்ஸ் பண்றாங்க. தேவைப்படுற நேரங்கள்ல தோற்றத்துல மாற்றம் செய்துகொள்வது தவறில்லை. ஆனால், அதைப் போலித்தனமா வலிந்து செய்யக் கூடாது.''

''ஆனால் நீங்கள் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்துகிட்டதா சொல்றாங்களே...''

''எனக்கு நடிக்கத் தெரியாது. நான் நானாதான் இருக்கேன். ஏசியில் உட்கார்ந்திருக்கும்போது தலைமுடி கலையாமல் இருக்கும். வெளியில் ஃபீல்டுக்கு வரும்போது கலைஞ்சு இருக்கும். அதையெல்லாம் போட்டோ எடுத்துப் போட்டு கலாய்க்கிறாங்க. 'உனக்குச் சுருட்டை முடிதான் அழகு'னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்க. அதனாலேயே என்னோட இயற்கையான சுருட்ட முடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். தலைவர்னா இப்படித்தான் இருக்கணும் ஏன் பிக்ஸ் பண்றீங்க? இறைவன் கொடுத்த ஒரு விஷயத்தை நீங்க எப்படி விமர்சிக்கலாம்? என் தோற்றம், முடி, நிறத்தைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறதுதான் உங்க நாகரிகமா? நான் ஊழல் செய்திருந்தாலோ, தவறான வார்த்தைப் பிரயோகித்திருந்தாலோ விமர்சிக்கலாம். இப்படி உணர்வு சார்ந்த விஷயத்தில் என்னைக் குத்திக் கிழிக்கிறது சரியா?''

''அரசியல்வாதிகளின் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கிறீங்க?''

''நான் கொஞ்சம் ஷார்ட்டாக இருப்பதால் மேடையில் பேசும்போது, எல்லோருக்கும் தெரியணும்னு ஒரு ஸ்டூல் போட்டு அதுக்கு மேலே ஏறி நின்னு பேசுவேன். அதுக்கும், 'பிஜேபியின் வளர்ச்சி இப்படித்தான் இருக்கு'னு கிண்டல் பண்றாங்க. எவ்வளவு மையை எடுத்துப் பூசினாலும் இதுக்கெல்லாம் அசரக்கூடிய ஆள் நானில்லை. 'டாக்டர் அக்கா' என அன்போடு கூப்பிடறவங்க ஒரு பக்கம் இருந்தாலும், 'பரட்டை அக்கா'னு கூப்பிடறவங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் பொதுச்சேவையில் இருக்க முடியாது.''

''சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி மீம்ஸ்களும் விமர்சனங்களும் வர்றது பற்றி என்ன நினைக்கிறீங்க?''

''அந்த நண்பர்களின் கற்பனைத் திறனைப் பாராட்டுறேன். மீம்ஸூக்கான ஒவ்வொரு படங்களையும் சரியான இடத்தில்வெச்சு கலாய்க்கறாங்க. ஆனால், சில கட்சிகள் சம்பளம் கொடுத்து எங்களை கலாய்க்கிறதையே வேலையாக்கி வேற மாதிரி மீம்ஸ் போடுறதை கண்டிக்கிறேன்.''



''நீங்க கோடி ரூபாய் கொடுத்துதான் டாக்டரானதா சொன்னீங்களாமே...''

''அப்படி நான் சொல்லவே இல்லை. நீங்க வீடியோவை சரியா பாருங்க. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு கோடி ரூபாய் இல்லாமல் சீட் வாங்க முடியாதுனு பொதுவாக சுட்டிக்காட்டியிருப்பேன்.''

''ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சது பற்றி...''

''கலைஞர் போட்ட பிச்சையில்தான் நான் டாக்டரானே'னு ஸ்டாலின் சொல்லியிருக்கார். நான் என்னுடைய திறமையால்தான் மருத்துவச் சீட்டு வாங்கினேன். ஒருவேளை கலைஞரின் திட்டத்தால்தான் மருத்துவரானேனு வெச்சுக்கிட்டாலும் அதுக்காக அவங்களுக்கு அடிமையாக இருக்கணுமா என்ன?''

''ஒரு ரேடியோ பேட்டியில், 'நான் அந்தப் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்திருந்தா இறந்திருப்பாங்க'னு சொல்லியிருந்தீங்களே...''

''அது ஒரு ஜாலி புரோகிராம். ஜாலியாகக் கேள்விகள் கேட்டாங்க. அதற்குப் பதில் சொன்னேன். அவ்வளவுதான். ஒருமுறை ரோட்டுல பிரசவ வலியில் துடிச்சுட்டு இருந்த ஒரு பெண்மணியை கார்ல போன நான் பார்த்துட்டு, உடனே இறங்கி அவங்களை என் காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவெச்சுட்டு, மழையில் நின்னுட்டிருந்தேன். அதைத் தெரியப்படுத்தினப்ப, இதெல்லாம் விளம்பரம், அது இதுனு கேலி பண்ணினாங்க. உண்மையாக ஒருத்தருக்கு உதவினதையும் இப்படிச் சொன்னா எப்படி? இப்படி எந்த ஒரு நல்ல விஷயம் செய்தாலும், அதை நெகட்டிவாக விமர்சனம் செய்யறாங்க. அதையும் நான் பெருசா எடுத்துக்கலை. அந்த மருத்துவமனையில் வேலைப் பார்த்த அந்தப் பெண்ணின் சகோதரர்தான், 'தமிழிசை அட்மிட் செய்தது என் சொந்தத் தங்கை. அவருக்கு என் நன்றிகள்' என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.”

''நீங்கள் இப்பவும் மருத்துவம் பார்க்கறது உண்டா?''

''பிஜேபியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரான பிறகு மருத்துவம் பார்க்கிறதை நிறுத்திட்டேன். இரண்டிலும் முழுமையாக ஈடுபட முடியாது என்பதற்காகத்தான் அந்த முடிவை எடுத்தேன். வேலையில்லாத மருத்துவர் அல்ல நான். என் காலகட்டத்தில் ஸ்கேன் படிப்பைப் பெரிதாக யாரும் எடுத்துப் படிக்காதபோது, நானும் சென்னை மெடிஸ்கேன் சுரேஷூம்தான் ஸ்கேன் சம்பந்தமான படிப்பைப் படிச்சிருந்தோம். அல்ட்ரா சவுண்ட்ல என்னை மாதிரி ஒரு டாக்டரை பார்த்திருக்கவே முடியாது. இதுவரை நான் ஸ்கேன் பார்த்து எந்தவொரு லிட்டிகேஷனும் வாங்காதவள். அந்த அளவுக்கு நான் சொல்றது துல்லியமாக இருக்கும். நான் ஸ்காலர் முடிச்சது எல்லாமே கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும்தான். தஞ்சை மருத்துவக் கல்லூரியில பயிற்சியில் இருந்தபோது, ஏசி இல்லாமல் ஸ்கேன் மிஷின் பயன்படுத்தப்படாமல் இருந்துச்சு.

என் அப்பாவுக்கு போன் பண்ணிச் சொன்னேன். சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசினார். அதனால், மிஷினைப் பயன்படுத்துறதுக்கான ஏற்பாட்டை செஞ்சாங்க. அதிகம் ஸ்கேன் இல்லாத காலத்திலேயே ஃப்ரீ ஸ்கேன் செய்த மருத்துவர் நான். தஞ்சையில் இருக்கும்போது, '100 ரூபாய் ஸ்கேன் சென்டர்'னு சொல்வாங்க. ஆயிரம் ரூபாய் வாங்கவேண்டிய விஷயத்துக்கு நூறு ரூபாய் வாங்கினேன். சென்னைக்கு வந்ததும், கோடம்பாக்கம், கே.கே நகர் போன்ற இடங்களில் இருக்கும் கிளினிக்கில் நூறு ரூபாய் மட்டுமே வாங்கினேன். பிரசவப் பெண்களுக்குத் தினமும் மூன்று முதல் நான்கு மணி வரை இலவச ஸ்கேனும் செய்திருக்கேன். குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போதே குறைபாடுகளைப் போக்கக்கூடிய விஷயங்களை நான்தான் கையிலெடுத்தேன். பல மருத்துவமனைகளுக்கு ஸ்பெஷலிஸ்டா இருந்திருக்கேன். அதனால், என்னை விமர்ச்சிக்கிறவங்க பேசுறவங்க இதையெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சுட்டுப் பேசினால் நல்லா இருக்கும்.''
ஒலிம்பிக் போட்டியை நடத்தத் தயாராகும் பாரீஸ் நகரம்!

ராகினி ஆத்ம வெண்டி மு.

ஒலிம்பிக் கமிட்டியின் ஒப்புதலுடன் 2024-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை பாரீஸ் நகரம் நடத்தவுள்ளது.



சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெற்றது. இப்பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் 2024-ம் ஆண்டில் பாரீஸ் நகரம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பாரீஸ் மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஒப்புதல் அளித்த நிலையில் 2024 போட்டியை பாரீஸ் நடத்தவுள்ளது.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இதற்கிடையில் வரும் 2020-ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு, தயாராகிவருகிறது உலகின் டிஜிட்டல் நகரமான ஜப்பான். அதன் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள, ஒலிம்பிக் போட்டிகளின் ஒவ்வோர் அம்சத்திலும், டிஜிட்டல் மயம் வெளிப்படும் என டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
வீட்டு பட்டாவுக்காக 24 ஆண்டுகள் போராடிய பெண்... சாட்டையைச் சுழற்றிய நீதிபதி!

எம்.குமரேசன்

லஞ்சமில்லாமல் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் வேலை நடக்காது. புரசைவாக்கம் சிவசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் எல்லையம்மாள் (வயது 53). இவருக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான பத்திரத்தைப் பெற ஓராண்டு ஈராண்டுகள் போராடவில்லை. 1993-ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகள் உரிமையாளர் பத்திரம் கேட்டு குடிசை மாற்று வாரியத்துக்கு நடையாய் நடந்தார் எல்லையம்மாள்.



மனம் நொந்துபோன எல்லையம்மாள், சென்னை சட்ட உதவி மையத்தை நாடி மனு அளித்தார். எல்லையம்மாளின் மனுவைப் படித்த நீதிபதி ஜெயந்தி வியப்படைந்தார். பட்டா பெற ஒரு மனுஷி, 24 ஆண்டுகள் போராடிக்கொண்டிருக்கிறாரா என அவருக்குள் ஆற்றாமை ஏற்பட்டது. குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு போன்செய்து, உடனடியாக ஆவணங்களைத் தயார் செய்து எல்லையம்மாளுக்கு வழங்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவுக்கும் பலனில்லாமல், எல்லையம்மாள் மீண்டும் அலைக்கழிக்கப்பட்டார்.

நீதிபதியிடம் எல்லையம்மாள் மீண்டும் முறையிட, இந்த முறை நீதிபதி ஜெயந்தி அவருடன் சேர்ந்து ஆட்டோவில் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருந்த அலுவலர்களை லெப்ட் ரைட் வாங்கினார். நீதிபதி ஆடிய ருத்ரதாண்டவத்தைக் கண்டு மிரண்டு போன அலுவலர்கள் தீயா வேலை பார்த்தனர். சுமார் 2 மணி நேரத்தில் எல்லையம்மாளுக்கு வீட்டு உரிமையாளருக்கான பத்திரம் வழங்கப்பட்டது.

தன்னுடன் ஆட்டோவில் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக வந்து பத்திரம் வாங்கிக் கொடுத்த நீதிபதி ஜெயந்திக்கு எல்லையம்மாள் கண்ணீர் மல்க நன்றி சொன்னார். எல்லையம்மாளின் அதிர்ஷ்டம் நான்கு மாதத்துக்கு முன்புதான் நீதிபதி ஜெயந்தி இங்கு பணி மாற்றலாகி வந்திருந்தார்.
Medico uses app to mask number, abuses teachers

Shimona Kanwar| TNN | Sep 12, 2017, 00:49 IST

Chandigarh: A third-year MBBS student at Government Medical College and Hospital (GMCH), Sector 32, was recently caught using a mobile application that can flash a different phone number while making a call and change the voice of the caller. The student had misused this application and abused his teachers. He also tried to blackmail his junior. But she recognised him and reported the matter to director-principal Dr A K Janmeja. The student is the son of a well-known city-based doctor.

The case has been forwarded by the complainant to cyber cell. The police are also checking if the phones were hacked, said Harinder Singh Sekhon, in-charge, cyber cell, Chandigarh Police. "We are examining the case. Earlier, there was an app which used proxy settings of someone else. It is no more available."

However, students in the medical college have informed that teachers that the accused used a caller mask app available in the US for 300$.

This is the first incident of its kind to have taken place in the medical college. "We are supposed to have ethics as an important aspect in our profession. If this is what students have started doing now, what kind of doctors will they become?" said a senior doctor.

Sources in the police said the student had used the app to abuse a demonstrator (tutor). The number which flashed on his mobile screen was of a senior faculty member. "The student continued to make such calls and used one faculty against the other by calling names. Humiliated by this act, when one of the doctors spoke to the caller (whose number flashed on his cell), it was revealed that someone was playing a prank," said a doctor at GMCH.

The identity of the student was revealed when the junior student recognised the voice despite its modification. "The student has not even been reprimanded or asked for an explanation. The student confessed and wrote a letter of apology to the director-principal. But nothing has been done so far. Surprisingly, one of the doctors who was abused is a member of the faculty welfare committee," said a doctor.

When Dr Janmeja was contacted, he said, "We will look into the matter and go by the set procedures. An inquiry has already been marked."

MEDICAL

Read more at Medical Dialogues: High Court to Medanta- How many poor patients have you treated?? 

செயலி புதிது: மாணவர்களுக்கான செயலி

Published : 08 Sep 2017 10:07 IST

சைபர்சிம்மன்





மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பொழுதுபோக்கு நோக்கில் மட்டும் பயன்படுத்துவதில்லை. கல்வி தொடர்பான பணிகளுக்கும் பயன்படுத்தலாம். இதற்கு உதவ எண்ணற்ற செயலிகள் இருக்கின்றன. இதில் டைம்டேபிள் செயலியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இந்தச் செயலி வகுப்பு பாட அட்டவனையைக் குறித்து வைத்துக்கொண்டு, வகுப்புகளை மறக்காமல் இருக்க உதவுகிறது. இதில் வகுப்புகள் நடைபெறும் நேரத்தை குறிப்பிடுவதோடு, மாணவர்கள் தங்களுக்கு தரப்படும் வீட்டுப்பாடங்கள், விடுமுறை நாட்கள் போன்றவற்றையும் குறித்துக்கொள்ளலாம். வகுப்பில் எடுக்கும் குறிப்புகளையும் இதில் சேமிக்கலாம். முக்கியமாக வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது போனில் அழைப்பு வந்தால், அதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது.

பள்ளி அல்லது கல்லூரி பாடத்திட்டங்களை நிர்வகிப்பதில் இந்தச் செயலி மிகவும் உதவியாக இருக்கும். எந்தச் சாதனத்திலிருந்து வேண்டுமானாலும் இதில் உள்ள தகவல்களை அணுகலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.gabrielittner.timetable&hl=en_GB
அடேங்கப்பா ‘அவேர்னஸ் அப்பா’- சிலிர்க்க வைக்கும் சிவசுப்பிரமணியம்!

Published : 14 Sep 2017 09:56 IST

கா.சு.வேலாயுதன்



சிவசுப்பிரமணியம்


சிவசுப்பிரமணியத்தின் பிரச்சார வாகனம்

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில், மக்கள் கூடும் இடங்களில் அடிக்கடி அவர் தென்படுவார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு, புதுச் சேரியின் பிற முக்கிய நகரங்களிலும் அநேகம் பேர் இந்த ‘அவேர்னஸ் அப்பா’வை பார்த்திருக்கலாம். அண்மையில் ஒருநாள் நாமும் அப்படித்தான் கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் அவரைப் பார்த்தோம்.

அவரது மொபெட் முழுக்க, ’கண் தானம் செய்யுங்கள்.. ரத்த தானம் செய்வோம்.. புற்றுநோய்க்கு உதவ முடி தானம் செய்வீர்..’ என ஏகத்துக்கும் விழிப்புணர்வு வாசகங்கள். அவரது சட்டை, பேன்ட், தொப்பி அனைத்திலும் இதே போன்ற வாசகங்கள் இருக்கவும் நாம் அவரைச் சற்றே வித்தியாசமாகப் பார்த்தோம்.

எதுவும் எனதில்லை

அவ்வளவுதான்.. சம்மனே இல்லாமல் அவரே ஆஜரானார். ”என்ன சார் ஒரு மாதிரியா பாக்கறீங்க, அது ஒண்ணுமில்லீங்க.. ‘கண் தானம், உடல் தானம், கூந்தல் தானம், உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய் யுங்க’ன்னு ஆளாளுக்கு எப்படியெப்படியோ பிரச்சாரம் செய்வாங்க. அதையேதான் நான் இப்படி என்னோட நடை, உடை, வாகனம் என அனைத்திலும் வித்தியாசமான முறையில பிரச்சாரம் செஞ்சுட்டுத் திரியறேன்!” என்று கடகடத்தவர், தொடர்ந்தும் தானே பேசினார்.

”இப்படி வாசகங்கள் பிரின்ட் செஞ்ச சட்டை பேன்ட் மட்டும் எங்கிட்ட 10 செட் இருக்கு. அதோட, நான் சாப்பிடுற தட்டு, தண்ணி டம்ளர், போர்வை, விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ்கள், உடல் உறுப்பு தானம் செய்யுறதுக்கான விண்ணப்பங்கள் எல்லாமே இந்தப் பெட்டிக்குள்ளதான் இருக்கு. இப்போதைக்கு எனக்கிருக்கிற ஒரே சொத்து இந்தப் பெட்டி மட்டும்தான். இந்தப் பெட்டி, இதுக்குள்ள இருக்கும் பொருட்கள், இந்த மொபெட், அட, இந்த செல்போன்கூட நான் வாங்கினது இல்லீங்க; எல்லாமே என்னோட பிரச்சாரத்தை பார்த்துட்டு மத்தவங்களா வாங்கித் தந்தது.

அவேர்னஸ் அப்பா

இதா.. இந்த நேரச் சாப்பாட்டையே எடுத்துக்குங்க. இப்ப நீங்க சாப்பாடு வாங்கிக் குடுத்தா எனக்கு உணவு வழங்கியவங்க லிஸ்ட்ல நீங்க 1,261-வது நபரா வருவீங்க. அத அப்படியே ‘வாட்ஸ் அப்’லயும் போட்டுருவேன். பெட்ரோல் பங்க்ல இலவசமா பெட்ரோல் அடிச்சா, அவங்க பேரையும் ‘வாட்ஸ் அப்’ல போட்டுருவேன்.” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சிவசுப்பிரமணியம் என்ற இந்த அவேர்னஸ் அப்பா !

‘அவேர்னஸ் அப்பா’ என்று கொங்கு இளைஞர்களால் கொண்டாடப்படும் இவரது சொந்த ஊர் நாமக்கல். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், சிறுவயதிலேயே பிழைப்புக்காக திருப்பூர் வந்தவர். தொடக்கத்தில், திருப்பூரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர், பிறகு 20 ஆண்டுகள் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்பதால் இயலாதவர்களுக்கு உதவும் சுபாவம் இவருக்குள் இயல்பாகவே இருந்தது.

2007-ல் புறப்பட்டோம்

கடந்த 20 ஆண்டுகளில் 27 முறை ரத்த தானம் செய்திருக்கும் 58 வயது சிவசுப்பிரமணியம் தன்னைப் பற்றிப் பேசுகையில், “என்னோட மூன்று பெண் பிள்ளைகளையும் கட்டிக்குடுத்து 4 பேத்திகளும் வந்தாச்சு. இப்படியே இருந்து என்ன செய்ய.. நானும் என் மனைவியும் ராணுவ வீரர்களுக்காக உடல் உறுப்பு தானம் செய்தவங்க. அதையே பிரச்சாரம் பண்ணி மக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்னுதான் 2007-ல் நானும் அவளும் புறப்பட்டோம்.

அந்த சமயத்துல, ஒருத்தர் எங்களுக்கு நோட்டீஸ் அச்சடித்துக் கொடுத்தார். டெய்லர் ஒருத்தர் இந்த மாதிரி டிரெஸ் தைச்சுக் கொடுத்தார். பனியன் பிரிண்டிங் வெச்சிருக்கிறவர், இந்த வாசகங்களை டிரெஸ்ஸில் பிரிண்ட் பண் ணிக் கொடுத்தார். நாங்க பிரச்சாரத்தை ஆரம்பிச்சோம். இடையில், நுரையீரல் புற்று நோயால பாதிக்கப்பட்ட எம் மனைவி ஜானகி 3 வருஷம் முன்னே என்ன விட்டுப் போயிட்டா. அவளோட கண்களை மட்டும்தான் தானமா கொடுக்க முடிஞ்சுது” என்று வேதனையை வெளிப்படுத்தியவர், தற்போதைய தனது பிரச்சார பயணம் குறித்தும் பேசினார்.


வண்டி போன போக்குல..

“வண்டி போன போக்குல ஊர், ஊரா போறேன். போலியோ பாதிப்பு, மது அருந்துவதால், புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பத்தியெல்லாம் விழிப்புணர்வு நோட்டீஸ் களைக் கொடுக்கிறேன். கண் தான, உடல் தான, உடல் உறுப்பு தான விண்ணப்பங்களையும் கேக்குறவங்களுக்குக் கொடுப்பேன். அனைவரும் ஏன் உடல் தானம், உறுப்பு தானம், கண் தானம் செய்யவேண்டும் என்பது குறித்தும் பிரச்சாரம் செய்வேன்.

முன்பு, நடந்தே செல்வேன். அப்புறம் சைக்கிள் கிடைச்சுது. ஒரு வருஷமாத்தான் இதோ இந்த மொபெட்ல போறேன். தமிழகம், புதுச்சேரியில் என்னோட வண்டி போகாத மாவட்டமே இருக்காது. போற இடங்கள்ல, ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் பார்ப்பேன். பல இடங்கள்ல அவங்களே என்னோட பிரச்சாரப் பயணத்தை வாழ்த்தி வழியனுப்பியும் வெச்சிருக்காங்க.

பயணத்துல பெருசா திட்டமிடலெல்லாம் இருக்காது. கிடைக்கிற இடத்துல தங்கிக்குவேன். பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் இருந்தா அங்கேயும் அனுமதி கேட்டுப் படுத்துக்குவேன். எதுவும் கிடைக்கலியா.. இருக்கவே இருக்கு பிளாட்பாரம்!” என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினார் சிவசுப்பிரமணியம். அவரிடம் ஒரு வேளை சாப்பாட்டுக்கான ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு நாமும் நகர்ந்தோம்.

அடுத்த சில நிமிடங்களில், ‘இன்று மதிய உணவு அளித்தவர்’ என நமது பெயரைக் குறிப்பிட்டு ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ் செய்தியை தட்டி விட்டிருந்தார் வித்தியாசமான இந்த அவேர்னஸ் அப்பா!
தேனீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள்

Published : 14 Sep 2017 09:54 IST

மு.செல்லா




ஓவியம்: வெங்கி


எப்படி இழந்தோம்

என்பது தெரியாமலேயே


தொலைந்து போய்விட்டன

அந்த இனிய நாட்கள்.

கணக்கன் தோட்டத்து

உப்புநீரில் குளித்தால்

மேனி கருக்குமென்ற

அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி

வியாபாரி தோட்டத்து

நன்னீர் கிணறு அதிர

குதித்தாடிய ஈர நாட்கள்...

ஓடைநீர் ஊற்றில் சிக்கிய

உறுமீனுக்காய்த் துள்ளி

விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப்

பீற்றிக்கொண்ட நாட்கள்...

கவட்டைக் கொம்பொடிய

நுங்கு மட்டை வண்டியுருட்டி

சக நண்பர்களுடன்

தோற்றும் ஜெயித்தும்

விளையாடிய நாட்கள்...

மொட்டுவிட்ட

தட்டாஞ்செடிகளில்

பிஞ்சுவிட்டுக் காய்க்கும்வரை

காத்துக் கிடந்து

நாவூறப் பறித்து

ருசித்த நாட்கள்...

நினைத்தாலே நினைவுகளில்

ஈரம் சுரக்கும்

பிள்ளைப் பிராய நாட்களை

தொலைத்துவிட்டு

*கைகளை விரித்தபடி

ஓடிவரும் குழந்தைகளை

வெறுமை பூசிய நாட்களால்

வாரியணைத்துக் கொண்டிருக்கிறோம்

இப்போது!

மருத்துவர்கள் ஆவதற்காக மட்டுமா மாணவர்கள் போராடுகிறார்கள்?

Published : 14 Sep 2017 09:05 IST

தங்க. ஜெயராமன்





நீட் தேர்வை விலக்கிக்கொண்டால் தாங்களும் மருத்துவர்களாகிவிடலாம் என்ற தன்னலச் சிந்தனையில் மாணவர்கள் போராடுகிறார்கள் என்றே ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அது தவறு. மருத்துவர்களுக்குப் பொதுவாகவே இருக்கும் சமூக அந்தஸ்து என்ற மாயை மாணவ சமுதாயத்தைக் கவர்ந்திருக்கிறது என்றும் நினைத்து சமூகவியலின் கற்பனை நுட்பங்களில் இறங்கக் கூடாது. மாணவர்களின் நியாய உணர்வு புண்பட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் நீட் தேர்வின் புள்ளிவிவரங்களை வைத்து அது செய்யவிருக்கும் நன்மைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். பொதுத்தேர்வில் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு மதிப்பெண்கள் பெற்ற மாணவி மற்றொரு போட்டித் தேர்வு எழுதித் தன் தகுதியை மூதலிக்க வேண்டுமென்றால் மாணவர்களின் நியாய உணர்வு புண்பட்டுத்தான் போகும். நீட் தேர்வு அந்த மாணவிக்கு வைத்த தேர்வு அல்ல. அவர் அதற்கு முன்பே எழுதிய பொதுத்தேர்வின் முடிவை நிராகரிப்பதற்காக வைத்த தேர்வு.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தப்போகிறோம், நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை உருவாக்குவோம் என்பதெல்லாம் புண்பட்ட நியாய உணர்வின் குமுறலுக்கிடையில் எடுபடாது. நீட் தேர்வு இருந்தால் எத்தனை பேருக்கு, அது இல்லாவிட்டால் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று அந்த உணர்வு எண்ணிக்கொண்டிருக்காது. யாருக்குக் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது என்று வகைப்படுத்திப் பார்க்காது. ஏறிக் கடந்துவிடலாம் என்று நம்பியிருந்த ஏணியை யாரோ தட்டிவிட்டது போன்ற ஏமாற்றம். மாணவர்கள் கேட்பது மனதுக்கு மட்டுமே தெரிந்த நியாயம். ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் பள்ளிச் சிறுமிகள் சாலையில் அமர்ந்து நியாயம் கேட்கிறார்கள். அவர்களின் நியாய உணர்வு எப்படியோ புண்பட்டுள்ளது என்று சொல்லாமல் இதை வேறு எப்படிச் சொல்ல முடியும்? இளைஞர்களுக்கு லட்சிய வேகம் குறைந்துவருகிறது என்று கவலைப்பட்டவர்கள் விழிதிறந்து பார்க்க வேண்டிய தருணம்.


நூற்றுக்கணக்கில் பள்ளிச் சிறுமிகளே போராட்டம் நடத்துவதைப் பார்க்கும்போது நான் பள்ளிக்குச் சென்ற காலம் நினைவுக்கு வருகிறது. எங்கள் பள்ளியின் மாணவர்கள் ஆயிரத்துக்கும்மேல். ஆனால், மாணவிகளின் எண்ணிக்கை முப்பது என்ற அளவில் இருந்தது. இதுவே அப்போது பெரிய எண்ணிக்கை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இன்று எந்த வகுப்பை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களைவிட மாணவிகளின் எண்ணிக்கை அதிகம். ஆக, இளைய சமுதாயத்தினர், குறிப்பாகப் பெண்கள், கல்வியை எப்படிக் கணிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கல்வி அறிவைத் தேடும் வழியாக மட்டுமல்ல, தங்களைக் கட்டிவைத்திருக்கும் சமுதாயத்தின் பழந்தளைகளை உடைத்து மேலெழும்ப உதவும் ஒரே சாதனமாகக் கல்வியை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த விடுதலை முயற்சிக்கு நீட் தேர்வு ஒரு தடை என்ற அச்சம் அவர்களைப் பற்றிக்கொண்டிருக்கிறது.

இது மாணவர்களின் சூட்டிப்பு

மைய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வுப் பிரச்சினையில் கல்வி சிக்கிக்கொண்டது. அந்தப் பின்னணியில்தான் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது என்றும் ஆட்சியாளர்கள் காரணம் கற்பிக்கலாம். அரசியல் தொடர்பில்லாமலேயே கல்விப் பிரச்சினைகளில் தமிழக மாணவர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். 1970 என்று நினைவு. கல்லூரிகளில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்குமாறு அப்போதைய தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. நான் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்தேன். அன்றைய மாணவர்கள், கல்வியாளர்கள் இத்திட்டத்தை ஏற்கவில்லை. தமிழில் போதுமான தரமான பாடநூல்கள் அப்போது இல்லை என்பதால் ஆங்கிலமும் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து. சிதம்பரம் கோட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பெரிய ஊர்வலம் ஒன்றை நாங்களே நடத்திச்சென்று அந்தத் திட்டத்தை எதிர்த்தோம். ஊர்வலத்துக்காக நாங்கள் எந்த முயற்சியும் செய்து கூட்டம் சேர்க்கவில்லை. தமிழக மாணவர்களின் சூட்டிப்பை நாம் என்றைக்குமே குறைத்து மதிப்பிடக் கூடாது.

நீட் தேர்வு மருத்துவப் படிப்புக்குத் திட்டமிடுபவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் அக்கறை காட்ட வேண்டியதல்ல என்பதைக் கல்வியாளர்கள் ஏற்பார்கள். சில ஆயிரம் மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு பற்றியது என்று நாம் இதனை எளிமைப்படுத்தி ஒதுக்கிவிட முடியாது. நீட் தேர்வு இப்போதே கச்சிதமாகத் தனது நோக்கத்தைச் சாதித்துக்கொண்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக, அல்லது அந்த ஆதர்ச பாடத்திட்டத்தை நோக்கிச் செல்வதாக எல்லா மாநிலப் பாடத்திட்டங்களும் புனரமைக்கப் படும்.

நாடு முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற சூழல் விரைவிலேயே உருவாகும். நமது சந்ததியினரின் சிந்தனை வளத்தைத் தான் நிர்ணயிக்கும் இலக்கு நோக்கித் திருப்பவும், கட்டுப்படுத்தவும் தேசிய அளவிலான அதிகார மையத்துக்கு இதை விடச் சிறந்த சாதனம் வேறென்ன வேண்டும்? கல்வித்திட்டமும் (curriculum), அதன் நோக்கத்தை அடைய உதவும் பாடத்திட்டமும் (syllabus) கற்பிக்கும் முறையும் கற்கும் முறையும் தேர்வு முறையும் மதிப்பீட்டு முறையும், கேள்வித்தாளின் வடிவமைப்பும்-- எல்லாமே எட்டாம் வகுப்பிலிருந்தே நீட் தேர்வை முன்மாதிரியாகக் கொண்டு அமைந்துவிடும். இப்படி, ஒரு தேர்வை நோக்கியே பயணிக்கும் கல்விமுறையை கல்வியாளர்கள் ஏற்பார்களா? எந்த மட்டத்திலும் ஒரு மாற்று முறையை, மாற்றுக் கல்வித்திட்டத்தை மாணவர்களிடையே சோதித்துப்பார்க்க சுதந்திரம் தராத கல்வி முறையை என்னவென்று சொல்லலாம்? எதிர்ப்பையும் ஆதரவையும் தன்னை நோக்கியே ஈர்த்துக்கொண்டு நீட் தேர்வு தானே கல்வி பற்றிய சிந்தனையின் மையமாகிவிட்டதல்லவா? அதற்கு உருவாகும் எதிர்ப்பும் கல்விச்சிந்தனையை நீட் தேர்வின் மீது மையங்கொள்ளச் செய்யும் விந்தையாக மாறியது.

கலைப் பாடங்களின் இடம் என்ன?

மற்ற பாடங்களை விரும்பிப் படிப்பவர்களை நாங்களா தடுக்கிறோம் என்பார்கள் நீட் ஆதரவாளர்கள். மாணவர்களின் மனத்தளவிலேயே “இதைத் தவிர வேறு எதைப் படிப்பது?” என்று நீட் பாடங்கள் பரிசீலனைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையாகி ஒரு போலியான உயர்ச்சியைப் பிடித்துவிடும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவ்வப்போது தேவைப்படும் திறன்களும், பொருள் சார்ந்ததல்லாத இதர தேவைகளும் உண்டு. அதற்கான மனிதவளமும் வேண்டும் என்பது மறந்துபோனது போலாயிற்று. ஏற்கெனவே, இங்கு மொழி, அரசியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடங்களும் மற்றவையும் கல்வித்திட்டத்தில் அவற்றுக்கு உரிய இடத்தைச் சுருக்கிக்கொண்டன. நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் இவற்றை மேலும் ஒதுக்கிவிடும். பிறகு நாட்டின் மனிதவள மேம்பாடு எப்படியிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். நீட் தேர்வை மருத்துவப் படிப்பு என்ற எல்லைக்குள் மட்டுமே விவாதிப்பது பொருந்தாது. பள்ளிக் கல்வியின் தளத்தை முழுதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளும் நீட் தேர்வு நமது மனிதவள முயற்சிகளை எப்படித் திசை மாற்றும் என்பதையும் கவனிக்க வேண்டும். மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதற்கு மட்டுமே போராடவில்லை.

-தங்க. ஜெயராமன்,

ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரிக் கரையில் அப்போது...’ நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
இப்போதுதான் ஜன்னலோர இருக்கை கிடைத்தது

Published : 14 Sep 2017 09:14 IST




குழந்தைகளுக்கும் ஜன்னலோர இருக்கைகளுக்கும் என்றுமே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. ஒரு குடும்பம் ரயிலிலோ பேருந்திலோ ஏறினால், உட்கார்வதற்கு இருக்கைகள் இருந்தால் அங்கே குழந்தைகள்தான் முதலில் ஓடிப்போய் ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்துகொள்ளும். எனினும், குழந்தைகளுக்கு ஜன்னலோர இருக்கைகளை விட்டுக்கொடுக்கும் அளவுக்குப் பெரியவர்கள் ஒன்றும் ஜன்னலோரத்தின் மீது ஈடுபாடு இல்லாதவர்கள் அல்ல என்பதை தினந்தோறும் ரயிலிலும் பேருந்துகளிலும் பார்க்கலாம்.

குழந்தைப் பருவத்தில் நம்மிடம் பல ஆர்வங்கள், ஈடுபாடுகள் இருக்கும். அவற்றில் பலவற்றுக்கும் நாம் விடைகொடுக்கும் நிலையை ‘முதிர்ச்சி அடைதல்’ என்கிறோம். அதுவரை குழந்தைத்தனம் என்பது ரசிக்கக்கூடிய விஷயமாகவும் அதற்குப் பிறகு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவும் மாறுகிறது. அப்போது அதை வேறு ஒரு சொல்லால், அதாவது ‘சிறுபிள்ளைத்தனம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். ஆனால், நமக்குள் உள்ள குழந்தை, நமக்கு எத்தனை வயதானாலும் விடாப்பிடியாக நமக்குள் ஒட்டிக்கொண்டிருப்பதன் அடையாளங்களுள் ஒன்று ஜன்னலோர இருக்கை மீதான காதல். ஆகவே, ‘உலகளாவிய பண்பாக’ இருப்பதால் ஜன்னலோர இருக்கைக்கான போராட்டத்துக்கு ‘பெரிய மனுசத்தன’ அடையாளம் ஏற்பட்டுவிட்டது.


ஜன்னலோர இருக்கை மீதான நமது காதலை, ஏக்கத்தை நம்முள் இருக்கும் குழந்தையின் அடையாளமாக மட்டுமே சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. ஜன்னலோர இருக்கையின் நாட்டத்தை வீட்டின் ஜன்னலிலிருந்தே தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். வீட்டின் ஜன்னலோ பேருந்து, ரயில்களின் ஜன்னலோ காற்றோட்டத்துக்காக அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், மனிதர்களின் தேவை எப்போதும் தோற்றத்தில் தென்படுவதை, எளிய நடைமுறைப் பயன்பாட்டைத் தாண்டியதாகவும் இருக்கிறது.

ஜன்னல் தரும் விடுதலை

நாடோடியாகத் திரிந்த மனிதர்கள் ஒரு இடத்தைத் தம்முடையதாக ஆக்கிக்கொண்டு அந்த இடத்தின் மீதான தம் உடைமையுணர்வின் அடையாளமாகவும் தமது பாதுகாப்பின் அடையாளமாகவும் வீடு கட்டிக்கொண்டாலும்கூட தம் பாதுகாப்பு வட்டத்துக்குள் இருந்துகொண்டு சூழ உள்ள உலகைத் தரிசித்துக்கொள்ள, அடைத்துவைக்கப்பட்ட உணர்வைத் தவிர்த்துக்கொள்ள, அடைப்புக்குள்ளும் ஒரு விடுதலையுணர்வை அனுபவிக்க அவர்கள் உருவாக்கிக்கொண்டவைதான் ஜன்னல்கள்!

ஒரே இடத்துக்குள் இருந்தாலும் சரி ‘நகரும் இடமான’ வாகனங்களுக்குள் இருந்தாலும் சரி ஜன்னல்கள் இல்லையென்றால் அவற்றுக்குப் பெயர் ‘சிறை’. சிறைக்குள் இருப்பவருக்கு ஜன்னல் கொடுக்கும் ஆசுவாசத்தை ஆல்பெர் காம்யு தன் ‘அந்நியன்’ நாவலில் அழகாக விவரித்திருப்பார். ஆகவேதான், மூச்சு முட்டும் நம் சிறு உலகத்திலிருந்து அது வீடோ, பயணமோ ஜன்னல்கள் மீட்டெடுக்கின்றன. ஆனால், இன்று அதிவிரைவான நகரமயமாதலின் விளைவாலும் மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் இடைவெளியற்ற வீடுகள், அதனால் ஜன்னல்கள் இல்லாத நிலை, அப்படியே இருந்தாலும் அடுத்த வீட்டுச் சுவர் நம் ஜன்னலுக்குள் எட்டிப்பார்க்கும் நிலை. ஜன்னல்களை நம் நகரங்கள் இழந்துகொண்டிருக்கின்றன. காற்றோட்டமான ஜன்னல் என்பது பெரும்பாலும் வசதிபடைத்தோரின் விஷயமாகிவிட்டது.

ஜன்னல்களை அடைத்த கைபேசிகள்

இன்னும் பேருந்து, ரயில்களின் ஜன்னல்கள் அடைபடவில்லை. ஆயினும், ஜன்னல் இருக்கை கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயமாகவும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் கைபேசி வருடல்களில் நாம் நம்மை இழக்க, பயணநேர ஜன்னல்கள் என்பவை இன்று காற்றோட்டத்துக்கு மட்டுமே என்றாகிவிடுகின்றன. மெய்யுலகில் மெய்நிகர் உலகால் ஜன்னல்களை இழந்துகொண்டிருக்கிறோம். ரயில் பயணத்தில் புத்தகம் படிப்பதையே மகா குற்றம் என்பார் கி.ரா. புத்தகம் படித்தால்கூட பரவாயில்லை என்று தோன்றும்படி இன்று கைபேசிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறோம், ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டும்.

பேருந்தில் ஒரு குழந்தைக்கு ஜன்னலோர இருக்கை கிடைப்பது பற்றி முகுந்த் நாகராஜன் அழகான கவிதையொன்று எழுதியிருப்பார்:

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கேதான் இருக்கிறதாம்…

இதெல்லாம் ஒரு காரணமா?

குழந்தை இப்படியெல்லாம் தன் ஜன்னல் சீட் மகிழ்ச்சியைக் கவிதையாக வெளிப்படுத்துமா என்ற கேள்வி எழலாம். குழந்தையால் வெளிப்படுத்த முடிகிறதோ இல்லையோ வீடு நெருங்கிவிட்டது என்பதைவிட ஜன்னல் சீட் கிடைத்துவிட்டதில்தான் குழந்தை அதிக மகிழ்ச்சி கொள்ளும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்த மகிழ்ச்சியைத்தான் கவிஞர் தன் புகைப்படக் கருவியால் படம் பிடித்திருக்கிறார். கருவி கவிஞருடையது என்றாலும் மகிழ்ச்சி குழந்தையுடையதுதான். அதாவது, பேருந்தில் இடம் கிடைத்த குழந்தையுடையதும், கவிஞருக்குள் இருக்கும் குழந்தையுடையதுமான மகிழ்ச்சி.

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
மது, செல்போன், புடவை, கொலுசு வாங்க 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற தந்தை

Published : 14 Sep 2017 08:27 IST

புவனேஸ்வரம்

மது, செல்போன், புடவை, கொலுசு வாங்க தனது 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற தந்தையை போலீஸார் கைது செய்துள் ளனர்.

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலராம் முகி. இவரது மனைவி சுகுடி. இவர்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். மூன்றாவதாக கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் சுகுடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார் பலராம். தகவல் அறிந்த போலீஸார் பலராம் முகியை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து பத்ராக் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனுப் சாகு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பலராம் முகிக்கு நிரந்தர வருமானம் இல்லை. அத்துடன் குடிப்பழக்கமும் உள்ளவர். அதனால் 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தில் ரூ.2 ஆயிரத்தில் செல்போன், மகளுக்கு ரூ.1,500-ல் வெள்ளி கொலுசு, மனைவிக்கு புடவை ஆகியவற்றை வாங்கி உள்ளார். மீதி பணத்தில் மது வாங்கி உள்ளார். இதுகுறித்து பலராமின் மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்.

குழந்தையை விற்க பலராமின் மைத்துனர் பாலியாதான் உதவி செய்துள்ளார். இவர் அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். சோம்நாத் சேத்தி என்பவர் அரசு ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய 24 வயது மகன் கடந்த 2012-ம் ஆண்டு இறந்துள்ளார். ஒரே மகனை பறி கொடுத்த சோகத்தில் சோம்நாத் சேத்தியின் மனைவி மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

ஆண் குழந்தையைத் தத்தெடுத்தால் அவருடைய மனநிலை மாற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். அதை அறிந்த பாலியா, பலராமிடம் பேசி குழந்தையை விற்க ஏற்பாடு செய்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீஸ் கண்காணிப்பாளர் அனுப் சாகு கூறினார்.- ஏஎன்ஐ
ரவுடிகளும், சமூக விரோதிகளும் ஊழியர்களாக நியமனம்: சுங்கச் சாவடிகள் முறையாக இயங்குவதில்லை - உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

Published : 14 Sep 2017 09:22 IST

மதுரை
தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் சுங்கச் சாவடி பணியாளர்களாக நியமனம் செய்கின்றனர். அவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை 67-ல் பெட்டைவாய்த்தலை முதல் குளித்தலை வரை சாலையில் இருபுறமும் மணல் லாரிகள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால், திருப்பராய்த்துறை, மனவாசி சுங்க மையங்களில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘சேலம் செல்லும் வழியில் திண்டுக்கல் - கரூர் சாலையில் அரவக்குறிச்சி சுங்க மையத்தில் அடையாள அட்டை கேட்டு தன்னை 20 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்ததாகவும், தனது காரில் தேசிய கொடி பறக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதி என முத்திரை இடம் பெற்றுள்ளது. இருப்பினும் தன்னிடம் அடையாள அட்டை கேட்டதாகவும்’ நீதிபதி கே.கே.சசிதரன் தெரிவித்தார்.

பின்னர், தேசிய நெடுஞ்சாலை குழுமத்தின் தலைமை பொது மேலாளர் மற்றும் கரூர்- திண்டுக்கல் சுங்க மையங்களை நிர்வகித்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டின் (டிகே) எக்ஸ்பிரஸ்வேஸ் மதுகான் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொது மேலாளர், அரவக்குறிச்சி சுங்கச் சாவடி பொறுப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, ‘தமிழகத்தில் சுங்க மையங்களில் ரவுடிகளும், சமூக விரோதிகளும் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலத்தவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழி தெரிவதில்லை. சுங்க மையங்களில் நீதிபதியையே நிறுத்தும்போது, சாதாரண மக்களின் நிலைமை பரிதாபகரமானது.

நடவடிக்கை எடுப்பதில்லை

இந்த விதிமீறல் தொடர்பாக சுங்க மைய ஒப்பந்ததாரர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை குழுமம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் சுங்க மையங்கள் முறையாக செயல்படுவதில்லை. கேரளாவில் சுங்க மையங்களில் முறைகேடு நடந்தபோது மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுத்த உதாரணம் உள்ளது.

தமிழகத்தில் சுங்க மையங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழியில்லை. நோயாளிகளுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் சுங்கச் சாவடி பணியாளர்களாக நியமனம் செய்கின்றனர். அவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை 67-ல் பெட்டைவாய்த்தலை முதல் குளித்தலை வரை சாலையில் இருபுறமும் மணல் லாரிகள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால், திருப்பராய்த்துறை, மனவாசி சுங்க மையங்களில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘சேலம் செல்லும் வழியில் திண்டுக்கல் - கரூர் சாலையில் அரவக்குறிச்சி சுங்க மையத்தில் அடையாள அட்டை கேட்டு தன்னை 20 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்ததாகவும், தனது காரில் தேசிய கொடி பறக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதி என முத்திரை இடம் பெற்றுள்ளது. இருப்பினும் தன்னிடம் அடையாள அட்டை கேட்டதாகவும்’ நீதிபதி கே.கே.சசிதரன் தெரிவித்தார்.

பின்னர், தேசிய நெடுஞ்சாலை குழுமத்தின் தலைமை பொது மேலாளர் மற்றும் கரூர்- திண்டுக்கல் சுங்க மையங்களை நிர்வகித்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டின் (டிகே) எக்ஸ்பிரஸ்வேஸ் மதுகான் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொது மேலாளர், அரவக்குறிச்சி சுங்கச் சாவடி பொறுப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, ‘தமிழகத்தில் சுங்க மையங்களில் ரவுடிகளும், சமூக விரோதிகளும் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலத்தவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழி தெரிவதில்லை. சுங்க மையங்களில் நீதிபதியையே நிறுத்தும்போது, சாதாரண மக்களின் நிலைமை பரிதாபகரமானது.

நடவடிக்கை எடுப்பதில்லை

இந்த விதிமீறல் தொடர்பாக சுங்க மைய ஒப்பந்ததாரர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை குழுமம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் சுங்க மையங்கள் முறையாக செயல்படுவதில்லை. கேரளாவில் சுங்க மையங்களில் முறைகேடு நடந்தபோது மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுத்த உதாரணம் உள்ளது.

தமிழகத்தில் சுங்க மையங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழியில்லை. நோயாளிகளுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்சன் திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், இவற்றுக்குரிய அகவிலைப்படி (டி.ஏ.) ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை அரசு தன் பங்கிற்கு செலுத்துகிறது. இவ்வாறு சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் வழங்கப்பட்டுவிடும்.
எஞ்சிய 40 சதவீத தொகை பங்குசந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.
 புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
பழைய பென்சன் திட்டப்படி, அரசு ஊழியர் ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர் முழு ஓய்வூதியம் பெறலாம். முழு ஓய்வூதியம் என்பது அவர் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அதற்கு உரிய அகவிலைப்படி ஆகியவற்றை உள்ளடக்கியது. 30 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் பணிக்காலத்துக்கு ஏற்ப ஓய்வூதிய தொகை நிர்ணயிக்கப்படும். இதற்கென தனி கணக்கீடு உள்ளது.
புதிய பென்சன் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியத்தொகை கிடைக்கும் என்று வரையறுக்க இயலாது. ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டின் பலனை பொருத்தது. பணிக்கொடை (கிராஜுவிட்டி), சிபிஎப் தொகையில் கடன் மற்றும் முன்பணம் பெறும் வசதி, குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு இவை எதுவும் கிடையாது என்பதால்தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பென்சன் திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி முடிவு 100 சிறிய பேருந்துகள் 2 மாதங்களில் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்

Published : 14 Sep 2017 09:42 IST

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மாதங்களில் 100 சிறிய பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி முடிவடைந்துள்ளது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து இணைப்பில்லாத பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் சுமார் 200 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5, அதற்கு மேல் ரூ.6, ரூ.8 ரூ.9 என வசூலிக்கப்படுகிறது.

இந்த பேருந்துகளில் 27 பேர் அமர்ந்து செல்லலாம். இந்த பேருந்துகள் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றதையடுத்து மேலும், 100 சிறிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தினமும் ரூ. 3,500 வசூல்

சென்னையில் இயக்கப்படும் சிறிய பேருந்துகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. ஆட்டோ மற்றும் கால்டாக்சியை நம்பியிருந்த மக்கள், தற்போது சிறிய பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். சிறிய பேருந்துகள் மூலம் தினமும் தலா ரூ.3,500 வசூலாகிறது.

இதற்கான பராமரிப்பு செலவும் குறைவு என்பதால், போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருவாய் பெற உதவியாக இருக்கிறது. அடுத்தகட்டமாக 100 சிறிய பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கான வழித்தடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 20 சிறிய பேருந்துகள் இயக்கப்படும். உட்புறம், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் 80 சிறிய பேருந்துகளும் அடுத்த 2 மாதங்களில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏழைகளுக்கு சேவை செய்யவே சிறப்பு நேர்காணல் மூலம் மருத்துவ மாணவர் தேர்வு: சிஎம்சி முதல்வர் அன்ன புலிமூட் விளக்கம்

Published : 14 Sep 2017 09:20 IST


வ.செந்தில்குமார்

வேலூர்




வேலூர் சிஎம்சி மருத்துவமனை. - படம்: விஎம். மணிநாதன்


அன்ன புலிமூட்

ஏழைகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுள்ள மருத்துவ மாணவர்களை தேர்வு செய்யவே எங்களுக்கு அனுமதியளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளோம் என்று சிஎம்சி முதல்வர் அன்ன புலிமூட் தெரிவித்தார்.

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, ‘நீட்’ தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது. ‘நீட்’ தேர்வுடன் தாங்கள் நடத்தும் சிறப்புத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களை மட்டுமே சேர்ப்போம் என்று வலியுறுத்தியுள்ளது.

100 மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓரிடத்தை மட்டும் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்காக ஒதுக்கீடு செய்து அதன்படி, மும்பையைச் சேர்ந்த சித்தாந்த் நாயர் என்ற ஒரே மாணவரை சேர்த்துள்ளது.

இதுகுறித்து, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி முதல்வர் அன்ன புலிமூட் கூறும்போது, ‘ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே எங்கள் கல்லூரியின் நிறுவனர் (ஐடா ஸ்கடர்) அமெரிக்காவில் இருந்து இங்கு மருத்துவமனையையும் கல்லூரியையும் தொடங்கினார். அவரது எண்ணங்களை இதுவரை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

எங்கள் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்காக கூடுதல் நிதிச் சுமையை கொடுப்பதில்லை. எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டு கட்டணம் ரூ.3,000, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ.400, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கு ரூ.500 மட்டுமே வசூலிக்கிறோம்.

இங்கு, கிறிஸ்துவர்கள் மட்டும்தான் படிக்கிறார்கள் என்பது தவறானது. ஆண்டுதோறும் 15 இதரப் பிரிவினரையும் சேர்க்கிறோம். தென்னிந்தியாவில் அதிக மிஷனரிகள் இருப்பதால் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர்.

‘நீட்’ தேர்வின் மூலம் வரும் சிறந்த மாணவர்களில் சேவை மனப்பான்மையுள்ள மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, சிறப்பு நேர்காணல் நடத்த அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மாணவர் சேர்க்கை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் விதிகளை மீறவில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பலமுறை கூறியுள்ளனர்’ என்றார்.
பதிவுத்தபாலில் அனுப்பாத நோட்டீசை அரசு ஊழியர்கள் பெறக்கூடாது : 'ஜாக்டோ- ஜியோ' அறிவுரை

பதிவு செய்த நாள்13செப்
2017
23:21

தேனி: 'பதிவுத்தபாலில் அனுப்பாத வேலை நிறுத்த விளக்க நோட்டீசை பெற்றுக் கொள்ளக் கூடாது', என ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 முதல் ஜாக்டோ-, ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.செப்.8ல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு அரசு சார்பில் 17ஏ (விளக்கம் கேட்கும் குறிப்பாணை) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த நோட்டீசை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வருவாய்த் துறை, வளர்ச்சித் துறை, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேசிய, மாவட்ட 'ஜாக்டோ ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள், விளக்க குறிப்பாணை நோட்டீசை தலைமை ஆசிரியரிடம் இருந்தோ, உயரதிகாரிகளிடம் இருந்தோ பெறக் கூடாது. முறைப்படி பதிவுத் தபாலில் மட்டுமே பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.இதனால் அவர்களுக்கு நோட்டீஸ் தருவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு  உள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஊழியர்களின் வீடுகளுக்கு சென்று நோட்டீஸ் ஒட்ட அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட செய்திகள்

ஒப்பந்த தொழிலாளிக்கு மீண்டும் பணி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது


ஒப்பந்த தொழிலாளிக்கு மீண்டும் பணி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி மண்டல சுகாதார ஆய்வாளர் மற்றும் அவருடைய உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

செப்டம்பர் 14, 2017, 07:45 AM

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்துக்கு உட்பட்ட 18, 19 மற்றும் 20–வது வார்டு சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாலன் (வயது 42).

19–வது வார்டு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டு வந்த சரவணன் என்ற தொழிலாளி, ஒழுங்காக வேலை செய்யவில்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் தன்னை மீண்டும் பணியில் சேர்க்கும்படி சுகாதார ஆய்வாளர் பாலனிடம் கோரினார். அதற்கு அவர், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்கிறேன் என கூறியதாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், இதுபற்றி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சுகாதார ஆய்வாளரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை சரவணனிடம் கொடுத்து அதை சுகாதார ஆய்வாளர் பாலனிடம் லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

அந்த பணத்துடன் மாநகராட்சி வார்டு அலுவலகம் சென்ற சரவணன், அலுவலகத்துக்கு வெளியே நின்றபடி பாலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாலன், தனது உதவியாளர் லட்சுமிபதி(40)யை அனுப்பிவைக்கிறேன். அவரிடம் பணத்தை கொடுக்கும்படி கூறினார்.

இதையடுத்து சுகாதார ஆய்வாளர் பாலனின் உதவியாளர் லட்சுமிபதி வெளியே வந்து சரவணனிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கிச் சென்று பாலனிடம் கொடுத்தார்.

இவற்றை அங்கு மறைந்து நின்று கண்காணித்துக்கொண்டு இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் விஸ்வநாத் ஜெயன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சுகாதார ஆய்வாளர் பாலன் மற்றும் அவரது உதவியாளர் லட்சுமிபதி 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கியதாக கைதான பாலன், சுதந்திர தின விழாவின் போது சென்னை மாநகராட்சியின் சிறந்த சுகாதார ஆய்வாளர் என்ற விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலையங்கம்

தமிழ்நாட்டில் ‘நவோதயா’ பள்ளிக்கூடங்கள்



1986–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் முட்டி மோதிக்கொண்டு, நவோதயா பள்ளிக்கூடங்கள் திறக்காத ஒரு நிலைக்கு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இப்போது ஒரு விடையை அளித்துள்ளது.

செப்டம்பர் 14 2017, 03:00 AM
1986–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் முட்டி மோதிக்கொண்டு, நவோதயா பள்ளிக்கூடங்கள் திறக்காத ஒரு நிலைக்கு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இப்போது ஒரு விடையை அளித்துள்ளது. அப்போதைய புதிய கல்விக் கொள்கையில் நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசாங் கத்தின் உதவியுடன், மாவட்டத்திற்கு ஒரு ஜவகர் நவோதயா பள்ளிக்கூடம் தொடங்கப்படவேண்டும். இந்த பள்ளிக் கூடங்கள் உண்டு, உறைவிடப் பள்ளிக்கூடங்களாக இருக்கும். ஆண், பெண் இருபாலாரும் கல்வி கற்கக்கூடிய இந்த பள்ளிக்கூடங்களில், 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை கல்வி கற்றுக்கொடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட மலைவாழ் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு தவிர,

75 சதவீதம் இடஒதுக்கீடு கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கப்படும். முழுக்க முழுக்க இலவசமான இந்த பள்ளிக்கூடங்களில் 9 முதல் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த கல்விவசதி, விடுதி வசதிக்காக மாதம் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த நவோதயா பள்ளிக் கூடங்கள் தொடங்க மாவட்டந்தோறும் மாநில அரசுகள் 30 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும். மத்திய அரசாங்கம்

3 ஆண்டுகளுக்குள் ரூ.20 கோடி வழங்கி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி கல்வி கற்றுக் கொடுக்கப்படும். இந்த பள்ளிக்கூடங்களில் மும்மொழி பாடத்திட்டம் அடிப்படையில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தமிழக அரசு இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதால், தொடக்கம் முதலே நவோதயா பள்ளிக் கூடங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட அனுமதிக்க வில்லை. இந்தியா முழுவதிலும், தமிழ்நாட்டை தவிர, எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப் பட்டுவிட்டன. இந்தநிலையில், தமிழ்நாட்டிலும் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படவேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்

கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட பெஞ்சு, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படவேண்டும். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க தமிழக அரசு 8 வாரத்திற்குள்

முடிவெடுக்கவேண்டும். மத்திய அரசாங்கம் உயர்நீதி மன்றத்திலேயே எழுத்துப்பூர்வமாக இந்த பள்ளிக்கூடங் களில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று உறுதி அளித் திருக்கிறது. 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்புவரை தமிழ் கட்டாய மொழியாக கற்றுக்கொடுக்கப்படும். 11, 12–ம் வகுப்புகளில் விருப்பமொழியாக தமிழ் கற்றுக்கொடுக் கப்படும். உள்கட்டமைப்பு வசதிகளையும் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருக்கிறது. பொதுவாக நவோதயா பள்ளிக்கூடங்களில் உயர்தரகல்வி கற்றுக்கொடுக்கப் படுகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மருத்து வக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள 598 நவோதயா பள்ளிக்கூடங்களில் படித்த 14 ஆயிரத்து 183 பேர் ‘நீட்’ தேர்வு எழுதியநிலையில், 11 ஆயிரத்து 875 பேர் வெற்றிபெற்றுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களில் 5 பேர்தான் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டும் பிளஸ்–2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்த நிலையில் கூட 30 பேர்தான் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தி வேண்டாம் என்று ஒருபக்கம் சொன்னாலும், பாரத இந்தி பிரசார சபா நடத்தும் இந்தி படிப்புகளில், தென்மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள். நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்குவதில் அரசியலை கலந்துவிடாமல், படிக்கப்போகும் மாணவர்கள், அவர் களை படிக்கவைக்கும் பெற்றோர்களின் கருத்துகளை அறிந்து, இதுபற்றி ஒரு திட்டவட்டமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
உலக செய்திகள்

மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 மாணவர்கள் 2 வார்டன்கள் பலியாகியுள்ளனர்.
செப்டம்பர் 14, 2017, 08:43 AM

கோலாலம்பூர்,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 23 மாணவர்கள், 2 வார்டன்கள் என மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளனர். பள்ளியின் மூன்றாவது மாடி கட்டிடத்தில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து இது என்று மலேசிய தீ அணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா

DINAKARAN
2017-09-14@ 00:22:10




சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலீமா யாகோப் தேர்வாகியுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஹலீமா யாகோப்புக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூர் அதிபராக இருந்த டோனி டான் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். சிங்கப்பூரில் அதிபராவது என்பது கெடுபிடிகள் நிறைந்தது என்ற நிலையில் தற்போது மலாய் இனத்தை சேர்ந்தவர்களே தேர்தலில் போட்டியிடலாம் எனவும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், ஆளும் மக்கள் செயல்பாட்டு கட்சி உறுப்பினருமான ஹலீமா யாகோப்(63) உள்பட 5 பேர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 3 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. தொழிலதிபர்கள் முகமது சலே மரிக்கான் மற்றும் பரீத் கான் ஆகிய இருவரின் மனுக்கள், தகுதிக்கு குறைந்தபட்ச தேவையான 2 விதிமுறைகளில் ஒன்றை பூர்த்தி செய்யாததால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அந்த 2 போட்டியாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மலாய் இனத்தை சேர்ந்த ஹலீமா யாகோப் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலை சந்திக்காமலே அவர் சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். இவருக்கு இன்று இஸ்தானாவில், மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டின் 8வது அதிபராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹலீமா யாகோப் தனது வெற்றி குறித்து கூறுகையில், ‘`நான் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கடும் முயற்சி மேற்கொள்வேன்’’ என்றார். ஹலீமாவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சேலம் பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் இருந்து நடிகையின் படம் நீக்கம்
2017-09-14@ 00:58:27




ஓமலூர்: ஓமலூர் அருகே ஒரு பெண்ணின் ரேஷன் கார்டில் நடிகை காஜல் அகர்வால் படம் இடம் பெற்றது. காஜல் படத்துக்கு மேல் சம்பந்தப்பட்ட பெண்ணின் படத்தை அதிகாரிகள் ஒட்டினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமம் ஆர்சி செட்டிப்பட்டி கோமாளி வட்டம் என்னும் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி சரோஜாவுக்கு கடந்த 11ம் தேதி ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. அதில், அவரது புகைப்படத்துக்கு பதில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இருந்தது.

இதுகுறித்த செய்தி, நாளிதழ்களில் நேற்று வெளியானது. இதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாஷ் நேற்று, சரோஜாவுக்கு வழங்கப்பட்டு ஸ்மார்ட் கார்டினை வாங்கி விசாரித்தார். பின்னர், அந்த கார்டை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மையத்தில் கொடுத்து நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் மறைக்கப்பட்டு, அதற்கு மேல் தற்காலிகமாக சரோஜாவின் புகைப்படத்தை அச்சிட்டு மீண்டும் அவரிடம் வழங்கப்பட்டது.
275 கி.மீ., தூரம் லாரியை ஓட்டி வந்த போதை டிரைவர்பெரும் விபத்து தவிர்ப்பு
பதிவு செய்த நாள்14செப்
2017
01:40

திருமங்கலம், நான்கு வழிச்சாலையில் 25 டன் எடையுள்ள 500 சிமென்ட் மூடைகளுடன் 14 சக்கரம் கொண்ட டைலர் லாரியை 275 கி.மீ., துாரம் போதையில் ஓட்டி வந்ததாக டிரைவர் சுவாமிநாதன்,37, கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலியை சேர்ந்த இவர், நேற்று அதிகாலை அரியலுார் அருகே உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் இருந்து 25 டன் எடையுள்ள 500 மூடைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கொல்லம் புறப்பட்டார். இந்த லாரி 14 வீல் கொண்ட டைலர் வகை லாரி.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: லாரி ஓட்டத்தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் சுவாமி
நாதன் போதை ஏறும் வகை குடித்தார். இந்த லாரி பெரும்பாலான பயணத்தை நான்கு வழிச்சாலையிலேயே கடந்துள்ளது. 

கட்டுப்பாடு இழந்த நிலையில் லாரி மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசார், திருமங்கலம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு தகவல்
கொடுத்தனர். அவர் சக போலீசாருடன் லாரியை விரட்டி ராஜபாளையம் ரோட்டில் மடக்கினார். அப்போதும் சுவாமிநாதன் போதையில் நிதானமின்றி காணப்பட்டார். அவரை கைது செய்தோம்.

டிரைவர் போதைக்கும், அவர் லாரி ஓட்டிய வேகத்திற்கும், லாரியின் வலுவான கட்டமைப்பிற்கும் எதிரே ஏதாவது வாகனம் சிக்கியிருந்தால் பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கும். அவரது
ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.
லண்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மல்லையா

பதிவு செய்த நாள்14செப்
2017
07:01




லண்டன்: மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா இன்று(செப்.,14) ஆஜராகிறார்.

பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் கடனாக வாங்கி திரும்ப செலுத்தாமல் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமறைவாக லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கு லண்டன் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மல்லையா ஆஜராக உள்ளார்.

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...