Tuesday, September 26, 2017

Health condition of Sasikala’s husband Natarajan worsens

Pushpa Narayan| TNN | Sep 25, 2017, 18:49 IST




CHENNAI: Health condition of M Natarajan - husband of jailed AIADMK leader V K Sasikala-- who has been admitted to Gleneagles Global Health City at Perumbakkam in Chennai has worsened.

Natarajan has been undergoing treatment in the hospital for the past nine months for liver failure.

A bulletin issued by Institute of Liver Diseases and Transplantation director Dr K Illankumaran on Monday said the 74-year-old had been advised a combined kidney and liver transplant.

"Currently he is admitted to the liver intensive care unit with worsening liver failure, kidney failure and lung congestion. His condition remains critical," it said.

It said while he was receiving dialysis and liver failure, he was not on ventilator support and was awaiting the organs for a transplant.

On February 5, he was brought to Apollo Hospitals on the Greams Road after reportedly complaining of breathing problems. He then moved to Global Hospital and has been under the care of liver transplant surgeon Dr Mohamed Rela.

On September 10, the hospital said Natarajan had registered with the Tamil NaduOrgan Sharing Registry for deceased donor liver transplant.

TOP COMMENTWhy is he not taking treatment from Appollo and shifted from there?Dhanvanthri Giri

According to hospital sources, Natarajan's condition has worsened in the past two weeks. The hospital has been giving him a slow, low, efficient, daily dialysis (SLEDD) -- a form of therapy done in the intensive care unit on a regular basis to remove excess fluid from the body.

"He will need a dual transplant before his lung function deteriorates further," a senior doctor said.

COURT ORDER

ஆயுளை நீட்டிக்கும் உறவு

Published : 23 Sep 2017 10:38 IST




பல் துலக்கும் பிரஷ்சை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம். ஒரு பிரஷ்சை தொடர்ந்து பயன்படுத்தும் போது, அதன் முனைகள் தேய்ந்து பல்லிலுள்ள கறைகளை நீக்குவதற்கான வல்லமையை இழந்துவிடுகின்றன. கடையில் ‘சாஃப்ட்’ பிரஷ்களை வாங்குங்கள். பல்லின் முழுவட்ட மேற்பரப்பையும் அவைதான் வளைந்து சுத்தம் செய்யும்.

ஒரு மனிதரின் ஆயுளை நீட்டிப்பதில் முக்கிய அம்சம் வகிப்பது எது?

ஒரு மனிதன் நீண்ட நாள் வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவோ, உடலிலுள்ள கொழுப்பின் அளவோ, உடற்பயிற்சியோ முதன்மையான காரணங்கள் அல்லவென்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் 80 ஆண்டு ஆய்வு கூறுகிறது. ஆத்மார்த்தமான உறவுகள்தான் ஒருவரின் ஆயுளை நீட்டிக்கும் முக்கியமான அம்சம் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
முக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க தேவையில்லை - உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன்.

''தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும்,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில், 2012 - 2014 வரையிலான, அறிவியல் அறிஞர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை, அண்ணா பல்கலையில், நேற்று நடந்தது. இதில், 29 அறிவியல் அறிஞர்களுக்கு, விருதுகள் வழங்கி, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் பேசினார்.
பின், நிருபர்களிடம் கூறியதாவது:

பொறியியல் கலந்தாய்வு, 'ஆன் - லைன் 'முறையில் நடத்தப்படும். பொறியியல் படிப்பில், 'நீட்' தேர்வு வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலை மாணவர்கள், தங்களின் சான்றிதழ்கள் தொலைந்தால், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். இரண்டு நாட்களில், நகல் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது. ஒரு பல்கலையில் இருந்து, பிற பல்கலையில் சேர இடப்பெயர்வு சான்றிதழ் பெற தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
டில்லிக்கு இன்று சிறப்பு ரயில்

பதிவு செய்த நாள்25செப்
2017
20:32

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து, டில்லி, ஹஜ்ரத் நிஜாமுதீனுக்கு, இன்று சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்ட்ரலில் இருந்து, மதியம், 1:00க்கு புறப்பட்டு, 28ம் தேதி அதிகாலை, 3:20 மணிக்கு, ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும். கூடூர், விஜயவாடா உட்பட, 11 நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இதற்கான முன்பதிவு துவங்கி விட்டது. இவ்விவரத்தை தெற்கு ரயில்வே அளித்துள்ளது.
கடைசி நேர முறையீடு : சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு
பதிவு செய்த நாள்25செப்
2017
20:23

புதுடில்லி: கேரளாவில், சில தனியார் மருத்துவக் கல்லுாரிகள் தொடர்பான வழக்கில், மருத்துவ கவுன்சில் கடைசி நேரத்தில், மேல்முறையீடு செய்ததை ஏற்று உத்தரவு பிறப்பிக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
கேரளாவில், சில தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி, மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்தது. 

இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில், மருத்துவக் கல்லுாரிகள் மனு தாக்கல் செய்தன. மருத்துவ கவுன்சிலின் உத்தரவை ரத்து செய்து, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி, பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், தற்போது எந்த உத்தரவு பிறப்பித்தாலும், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களிடையே தேவையற்ற பீதியையும், குழப்பத்தையம் ஏற்படுத்தும்.
இறுதி நேரத்தில் செய்யப்படும் இந்த மேல்முறையீட்டு மனுவின் கீழ், உடனடி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மருத்துவ கவுன்சில் கல்வியாண்டு துவங்குவதற்கு முன், இந்த விஷயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை, டிசம்பருக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
ரயில் இயக்க மறுத்து தூங்கிய உதவி டிரைவர்! : பொள்ளாச்சி - திருச்செந்தூர் பயணியர் தவிப்பு

பதிவு செய்த நாள்25செப்
2017
22:36




பொள்ளாச்சி: பொள்ளாச்சி - திருச்செந்துார் ரயிலில், பணிபுரிய மறுத்து, உதவி டிரைவர் துாங்கியதால், ரயில் ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. நுாற்றுக்கணக்கான பயணியர், பொறுமையிழந்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சியில் இருந்து தினமும் காலை, 6:20 மணிக்கு, திருச்செந்துாருக்கு பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை, குறிப்பிட்ட நேரத்துக்கு ரயில் புறப்படவில்லை. 

ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானதால், பயணியர், நிலைய மேலாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உதவி டிரைவர், ஓய்வு நேரம் போதவில்லை எனக்கூறி, பணிக்கு வர மறுத்ததால் ரயில் புறப்பாடு தாமதமானது தெரியவந்தது. குறிப்பிட்ட நேரம் ஓய்வெடுத்த பின், உதவி டிரைவர் பாலமுருகன் பணிக்கு வந்தார். அதன்பின், ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் தாமதமாக, காலை, 7:40 மணிக்கு ரயில் புறப்பட்டது. 

திருச்செந்துாரில் இருந்து பொள்ளாச்சி வரும் ரயில், வழக்கமாக இரவு, 9:30 மணிக்கு வந்தடையும். நேற்று முன்தினம், கோவில்பட்டி, நல்லி, குமாரபுரம் பகுதிகளில் தண்டவாள பணி நடந்ததால், இரண்டு மணி நேரம் தாமதமாக, இரவு, 11:45 மணிக்கு தான் பொள்ளாச்சி வந்தது. ரயில் டிரைவர் நாகராஜ் மற்றும் உதவி டிரைவர் பாலமுருகன், அதன்பின் துாங்கச் சென்றனர். இரவு ஓய்வுக்கு செல்ல தாமதமானதால், உதவி டிரைவர் பாலமுருகன், எட்டு மணி நேர ஓய்வுக்கு பிறகே பணிக்கு வர முடியும் என, கூறி விட்டார். இதனால், பொள்ளாச்சியில் இருந்து ரயில் கிளம்ப தாமதமானது.

மாற்று ஏற்பாடு இல்லை! : ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: இரவு தாமதமானதால், எட்டு மணி நேர ஓய்வுக்கு பிறகே, பணிக்கு வர முடியும் என, உதவி டிரைவர் பாலமுருகன், அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில், மாற்றுப் பணியாளரை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
காலையில் பாலமுருகனுக்கு தேவையான ஓய்வு கொடுக்காமல், பணிக்குச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. மாற்றுப் பணியாளரை ஏற்பாடு செய்திருந்தால், தாமதம் ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'நள்ளிரவில் டிரைவர்கள் ஓய்வுக்கு சென்றனர். காலையில், மறுபடியும் திருச்செந்துாருக்கு ரயில் இயக்க வேண்டும். இடைப்பட்ட இரவு நேரத்தில், அந்த வழித்தடத்தில் பயிற்சி பெற்ற மாற்று டிரைவரை, உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை' என்றனர்.
பைக்கில் சென்றவருக்கு 'சீட் பெல்ட்' அபராதம்

பதிவு செய்த நாள்25செப்
2017
21:45




தஞ்சாவூர்: பைக்கில் சென்ற வாலிபர், 'சீட் பெல்ட்' அணியவில்லை எனக்கூறி, போலீசார், 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

தஞ்சை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி பாண்டியராஜன், 29. இவர், 21ம் தேதி, 'பேஷன் புரோ' பைக்கில், பை - பாஸ் சாலையில் வந்தார்.
தஞ்சை தாலுகா போலீசார், பாண்டியராஜன் வாகனத்தை நிறுத்தி, ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர், அனைத்து ஆவணங்களையும் காட்டிஉள்ளார். மேலும், 'ஹெல்மெட்' அணிந்திருந்தார்.

உடனே போலீசார், அவர் சீட் பெல்ட் அணிந்து வரவில்லை என மிரட்டி, 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துஉள்ளனர். 

அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன், நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் அண்ணாதுரையிடம் புகார் அளித்தார்.
பின், பாண்டியராஜன் கூறுகையில், ''பைக்கில் செல்ல, எதற்கு சீட் பெல்ட் என, தெரியவில்லை. பொதுமக்களை மிரட்டி, அபராதம் என்ற பெயரில், வசூல் வேட்டையில் ஈடுபடும் போலீசார், மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்,'' என்றார்.
கவுரவம் காக்க பலியான 6 உயிர்கள் : நெருக்கடியை சமாளிக்கும் மனம் தேவை

பதிவு செய்த நாள்25செப்
2017
23:29


மதுரை: 'வாழ நினைத்தால் வாழலாம்; வழியா இல்லை பூமியில்...' என்ற கண்ணதாசன் வரிகள் எந்த மனநிலைக்கும் பொருந்தும். மதுரையில் தற்கொலை செய்து கொண்ட குறிஞ்சிகுமரன், வேல்முருகன் குடும்பத்தினருக்கு எப்படி மனம் ஒத்துக்கொண்டது. எறும்பு கூட வாழ வழிதேடும்போது மனிதனால் முடியாதா. எந்த சூழலிலும் நெருக்கடியை சமாளிக்கும் மனம் தேவை என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
மதுரை சவுராஷ்டிராபுரம் குறிஞ்சிநகர் 4வது தெருவை சேர்ந்த குறிஞ்சிகுமரன்,45, அவரது சகோதரர் வேல்முருகன்,47, ஆகியோர் கடன் தொல்லையால் அவதிப்பட்டனர். இவர்கள் இருவர் உட்பட குடும்பத்தை சேர்ந்த 6 பேர் நேற்றுமுன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். நர்சரி பள்ளியை நடத்தி வந்த இவர்கள், பள்ளி விரிவாக்கத்திற்காக பலரிடமும் பல லட்சம் ரூபாய் பெற்றிருந்தனர். தவிர, தீபாவளி பண்டு, ஏலச்சீட்டு போன்றவற்றையும் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்று கடனை அடைக்குமாறு கடிதம் எழுதிவைத்து இரு குடும்பமும் விஷம் குடித்தது. இப்படி கடிதம் எழுதியவர்கள் அந்த சொத்துக்களை விற்று கடனை அடைத்துவிட்டு உயிர் வாழ்ந்திருக்கலாமே. இவர்களின் தற்கொலை முடிவு குறித்து மதுரை அரசு மருத்துவமனை மனநல நிபுணர் குமணன் கூறியதாவது:
இது மனநோயை சார்ந்தது. மனச்சிதைவு, அழுத்தம், உடல் ரீதியான பாதிப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர். மனஉளைச்சல், மனம் சரியில்லாத போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பிரச்னைக்கு நண்பர், உறவினர்கள் மூலம் தீர்வு காணவேண்டும். உணர்ச்சி வசப்படும் போது தான் தற்கொலை முடிவு எடுப்பர். நீண்ட நாளாக திட்டமிட்டே இக்குடும்பத்தினர் முடிவை எடுத்திருப்பர்.

குடும்பத்தில் உள்ள ஒருவர் தற்கொலை முடிவை எடுத்து, அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு மற்ற அனைவரும் சம்மதித்திருப்பர். தொழில் ரீதியாக சூழலை அறிந்து தங்களை தயார்படுத்த வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமானதை சிந்தித்து புத்திசாலித்தனமாக செயல்பட்டால், தொழில், குடும்பம் சிறக்கும். நெருக்கடியை சமாளிக்கும் மனம் தேவை.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை அனைத்து விஷயத்திற்கும் நல்லது தான். ஆனால், அக்குடும்ப தலைவர் திடமாக இருத்தல் வேண்டும். அவர் தவறான முடிவு எடுத்தால் குடும்பத்திற்கே பாதிப்பு வரும். கவுரவம் காக்கவே மதுரையில் 6 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. 

தொழில், குடும்ப செலவிற்கு கடன் பெறுவோர், தங்களின் குடும்ப சூழல் அறிந்து கடன் பெற்றால் பிரச்னையை சமாளிக்கலாம், என்றார்.
போலீசார் கூறியதாவது: சகோதரர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் யாரும் நேற்று மாலை வரை புகார் கொடுக்க வரவில்லை. பண்டு சீட்டு போட்டவர்களுக்கு, நேற்று மதியம் 12:30 மணிக்கு பணம் தருவதாக குறிஞ்சிகுமரன் தெரிவித்துவிட்டு தற்கொலை முடிவை
தேடி இருக்கின்றனர், என்றனர்.

நேற்று மதியம் 6 பேரின் உடலும் கீரைத்துறை மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. விருதுநகர் பொறியியல் கல்லுாரி விடுதியில் தங்கி படிக்கும் வேல்முருகன் மகன் பிரவீன், இறுதி சடங்குகளை செய்தார்.
'தொலைந்த சான்றிதழ் பெற ஆதார் போதும்'
பதிவு செய்த நாள்25செப்
2017
22:59

சென்னை: ''தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும்,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில், 2012 - 2014 வரையிலான, அறிவியல் அறிஞர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை, அண்ணா பல்கலையில், நேற்று நடந்தது. இதில், 29 அறிவியல் அறிஞர்களுக்கு, விருதுகள் வழங்கி, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் பேசினார்.

பின், நிருபர்களிடம் கூறியதாவது
:
பொறியியல் கலந்தாய்வு, 'ஆன் - லைன் 'முறையில் நடத்தப்படும். பொறியியல் படிப்பில், 'நீட்' தேர்வு வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலை மாணவர்கள், தங்களின் சான்றிதழ்கள் தொலைந்தால், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்கலாம். இரண்டு நாட்களில், நகல் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது. ஒரு பல்கலையில் இருந்து, பிற பல்கலையில் சேர இடப்பெயர்வு சான்றிதழ் பெற தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பாண்டியன் உட்பட 9 ரயில்கள் வேகம் அதிகரிப்பால் நேரம் மாற்றம்
பதிவு செய்த நாள்25செப்
2017
22:20

பாண்டியன், வைகை உட்பட, ஒன்பது ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதால், நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு, அக்., 15ல் வெளியாகிறது.
தெற்கு ரயில்வேயின், ரயில் கால அட்டவணை, ஆண்டுதோறும், அக்., 1ல் வெளியிடப்படும். 

அப்போது, குறிப்பிட்ட சில ரயில்களின் வேகத்தை அதிகரித்தல்; முக்கிய நிலையங்கள் இடையேயான, ரயில்களை நீட்டித்தல் மற்றும் ரயில்களின் நேரத்தை மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 'இந்தாண்டு, அக்., 1ல், ரயில் கால அட்டவணை வெளியிடப்படாது; அக்., 14 வரை, தற்போதுள்ள அட்டவணைப்படியே, ரயில்கள் இயக்கப்படும். அக்., 15ல், புதிய அட்டவணை வெளியிடப்படும்' என, தெற்கு ரயில்வே, சமீபத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், ரயில்வே போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: விழுப்புரம் - திருச்சி இடையே, இரண்டாவது ரயில் பாதை பணி முடிந்து, இருவழி பாதையில், ரயில் போக்குவரத்து நடப்பதால், மலைக்கோட்டை, பாண்டியன், வைகை, பல்லவன் சூப்பர் பாஸ்ட் உட்பட, ஒன்பது ரயில்களில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், இந்த ரயில்களின் பயண நேரம், 10 - 30 நிமிடங்கள் வரை குறையும்.

தாம்பரம் முனையம் : தாம்பரம் முனையத்தில் இருந்து, தற்போது, அசாம் மாநிலம், திப்ரூகர் மற்றும் கவுகாத்திக்கு, வாராந்திர ரயில்கள் சோதனை ரீதியாக இயக்கப்படுகின்றன. 

அத்துடன், எழும்பூரில் இருந்து, மும்பை தாதருக்கு இயக்கப்படும், தாதர் எக்ஸ்பிரஸ்; பீஹார் மாநிலம், கயாவுக்கு இயக்கப்படும், கயா வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் போன்றவையும், தாம்பரம் முனையத்தில் இருந்து இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், விரிவான தகவல்களை, தற்போது தெரிவிக்க இயலாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


ஜெ., மரணம் குறித்து விசாரணை :  நீதிபதி பெயரை அறிவித்தது அரசு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.






முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்; டிச., 5 இரவு இறந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர் தொடர்பான புகைப்படம் எதுவும், அரசு தரப்பிலோ, மருத்துவமனை தரப்பிலோ வெளியிடப்படவில்லை. அவருடன், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.

ஜெ.,யின் கைரேகை

ஆனால், 'மருத்துவமனையிலேயே, அதிகாரிகளுடன் ஜெ., ஆலோசனை நடத்தினார்' என, செய்திக்குறிப்பு வெளியானது. அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், 'ஜெ., குணமடைந்து வருகிறார். இட்லி சாப்பிட்டார்; கிச்சடி சாப்பிட்டார்' என்றனர். தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான, அங்கீகாரப் படிவங்களில், ஜெ.,யின் கைரேகை பதிவு பெறப்பட்டது. அப்போது, அவர் சுயநினைவோடு இருந்ததாக,மருத்துவர்கள்  தெரிவித்தனர்.

சி.பி.ஐ., க்கு பரிந்துரை

இந்நிலையில், ஜெ., மறைவுக்கு பின், பல்வேறு சந்தேங்கள் எழுந்தன. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, பன்னீர்செல்வம், 'ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என, கோரினார்.
அப்போது, அமைச்சர்கள், 'ஜெ., மறைவில் சந்தேகம் இல்லை' என, விளக்கம் அளித்தனர்.

அதேநேரத்தில், அ.தி.மு.க., அணிகள் இணைந்த போது, பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று, 'ஜெ., மறைவு குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தற்போது, அமைச்சர்கள், 'நாங்கள் யாரும்,மருத்துவமனையில் ஜெ.,வை பார்க்கவில்லை; சசிகலா குடும்பத்தினர் மட்டுமே பார்த்தனர். ஜெ., இட்லி சாப்பிட்டதாக, நாங்கள் கூறியது பொய். அதற்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளனர்.மேலும், ஜெ., அண்ணன் மகன், தீபக்கோ, 'மருத்துவமனையில் மூன்று நாட்கள் மட்டுமே, ஜெ., நினைவுடன் இருந்தார்' என்ற, அதிர்ச்சி தகவலை, இப்போது வெளியிட்டுள்ளார்.

மர்மம் விலகுமா

இதனால், மருத்துவமனையில் ஜெ., இருந்த போது நடந்தது என்ன என்ற சந்தேகம், அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதில் கிடைக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது.
கோவையை சேர்ந்த, நீதிபதி ஆறுமுகசாமி, 65, மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 2014 ஏப்., 17ல், ஓய்வு பெற்றார். இவரது விசாரணைக்கு பின், ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுமுகசாமி பின்னணி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தமிழக அரசின் விசாரணை கமிஷனுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

* 1952 ஏப்., 28ம் தேதி கோவையில் பிறந்தார். கோவை நகராட்சி பள்ளியில் படித்தார்.
* 1971 : அரசு கலைக்கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்தார்.
* 1974ல் சட்டப்படிப்பு முடித்தார். பின் வழக்கறிஞர் பயிற்சியில் சேர்ந்தார்.
* 1986 மே 16 : ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முனிசிபல் பதவியை ஏற்றார்.
* 1991 ஜூன் 3: அந்நீதிமன்றத்தில் உதவி நீதிபதியானார்.
* 1998 ஜன., 19: மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றினார்.
* 2009 மார்ச் 31: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரானார்.
* 2010 பிப்., 17: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு.
* 2014 ஏப்., 27: நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு
* 2014 ஏப்., 28 ---- 2016 பிப்., 8: மும்பையில் கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாணைய தலைவராக இருந்தார்.
* 2016 மார்ச் 21 : மத்திய தீர்ப்பாணையத்தின் சென்னை பெஞ்ச் உறுப்பினராக பொறுப்பேற்பு.- நமது நிருபர் -
குறைந்தபட்ச இருப்பு தொகை : எஸ்.பி.ஐ., புதிய அறிவிப்பு

பதிவு செய்த நாள்25செப்
2017
22:58

மும்பை: சேமிப்பு கணக்குகளில், குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகையை குறைத்து, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடந்த ஏப்ரல் மாதம், சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை புதிதாக நிர்ணயித்தது. மாநகரங்களில், 5,000ரூபாய்; நகர் மற்றும் பேரூராட்சிகளில், 3,000ரூபாய்; கிராமங்களில், 1,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை மாற்றி அமைக்கும்படி, தேசிய வங்கிகளின் குழுமம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, மாநகரங்களில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை, 5,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக குறைத்து, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நகர், பேரூராட்சி, கிராமங்களிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு, குறைந்தபட்ச இருப்புத் தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கான அபராதத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. மாநகரம், நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இனி, 30 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விதிக்கப்படும். பேரூராட்சி மற்றும் கிராமங்களில், 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியம் சரியாக வருவதில்லை: மக்கள் புகார்
பதிவு செய்த நாள்26செப்
2017
03:52




வீட்டு சமையல், 'காஸ்' சிலிண்டர் மானியம், முறையாக வருவதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசு, ஆண்டுக்கு, 12 வீட்டு சமையல் காஸ் சிலிண்டருக்கு, மானியம் வழங்குகிறது. தமிழகம் உட்பட, நாடு முழுவதும், 2015 ஜன., முதல், காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, வாடிக்கையாளர்கள், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியத்தை, அவர்களின் வங்கிக் கணக்கில், எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும். இந்நிலையில், தற்போது, பலரின் வங்கிக் கணக்கிற்கு, மானிய தொகை முறையாக வருவதில்லை என, புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, பாதிக்கப்பட்டோர் கூறுகையில், 'துவக்கத்தில், காஸ் மானியம், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அந்த விபரம், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்பட்டது. மூன்று மாதங்களாக, மானிய தொகையும் வரவில்லை; எஸ்.எம்.எஸ்.,சும் வரவில்லை. வங்கி மற்றும் காஸ் ஏஜன்சியில் கேட்டால், சரியான பதில் தருவதில்லை' என்றனர்.

இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேரடி மானிய திட்டம் துவங்கிய போது, வாடிக்கையாளரிடம் இருந்து, 'ஆதார்' அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் போன்றவற்றின் நகல்கள் வாங்கப்பட்டன. காஸ் ஏஜன்சிகள், அந்த விபரங்களை சம்பந்தப்பட்ட வங்கியில் வழங்கி, அதனுடன், ஆதார் எண்ணை இணைத்தன. அந்த வங்கிக் கணக்கு எண்ணிற்கு, 'நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' என்ற நிறுவனம் வாயிலாக, மானிய தொகை செலுத்தப்படுகிறது. ஏற்கனவே, வங்கியில் ஆதார் விபரத்தை இணைத்த பலரும், தற்போது, வேறு வங்கிகளில் கணக்கு துவக்குகின்றனர். அங்கும், ஆதார் தருகின்றனர்.

கடைசியாக, எந்த வங்கியில் கணக்கு துவக்கி, ஆதார் வழங்குகின்றனரோ, அங்கு தான், மானிய தொகை செலுத்தப்படும். இந்த விபரம் தெரியாமல், திட்டம் துவக்கிய போது தந்த வங்கிக் கணக்கில், மானியம் வரவில்லை என, சிலர் கூறுகின்றனர். ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின் விபரங்களை, வருமான வரித்துறையில் இருந்து வாங்கும் மத்திய அரசு, அவர்களுக்கான மானியத்தை நிறுத்தி விடுகிறது. மானிய விபரம், எஸ்.எம்.எஸ்., வரவில்லை எனில், வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும். மானிய திட்டத்தில் இணைந்த, அனைவரின் வங்கிக் கணக்கிற்கும், முறையாக மானிய தொகை செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
சட்டீஸ்கர் விவசாயிக்கு ரூ.76.73 கோடிக்கு மின்கட்டணம்
பதிவு செய்த நாள்25செப்
2017
16:16




ரூ.,76 கோடி மின்கட்டணம்; விவசாயி அதிர்ச்சி

ராய்பூர் : சட்டீஸ்கர் மாநிலம் மகாசமுத் மாவட்டத்தில் விவசாயி ராம் பிரசாத் என்பவருக்கு செப்டம்பர் மாத மின்கட்டணமாக ரூ.76.73 கோடி செலுத்தும்படி பில் அனுப்பப்பட்டுள்ளது. 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி ராம் பிரசாத், மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இது தொழிற்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு என கூறி, சரியான மின்கட்டண தொகையான ரூ.1820 க்கான பில்லை ராம் பிரசாத்திடம் அதிகாரிகள் அளித்துள்ளனர். அதிலும் முந்தைய மாதத்தில் எப்போது மின்கட்டணம் சரிபார்க்கப்பட்டது என குறிப்பிடவில்லை.

இது குறித்த ராம் பிரசாத் கூறுகையில், இத மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே நான் மின்சாரம் பயன்படுத்துகிறேன் என்றார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து இந்த தவறுக்கு காரணமான கிளாக்குகள் இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்திருப்பதாக மின்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

விவசாயி ராம் பிரசாத்திற்கு தவறான மின்கட்டண பில் அனுப்பப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சட்டசபை கூட்டத் தொடரில் எழுப்பின. இது முதல் முறையல்ல எனவும், அந்த மாவட்டத்தை சேர்ந்த பல விவசாயிகளுக்கு ரூ.76 கோடிக்கும் மேலாகவே மின்கட்டணம் செலுத்த பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர். இதற்கு மின்துறை அலுவலர்களின் கவனக்குறைவே காரணம் என குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சிகள், அரசின் இந்த அலட்சியத்தை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தடைன்றி ஏ.டி.எம்.,ல் பணம்: ரிசர்வ் வங்கி உத்தரவு

பதிவு செய்த நாள்
செப் 26,2017 01:19



மதுரை: விடுமுறை நாட்களில் ஏ.டி.எம்.,களில் தடையின்றி பணம் கிடைக்க செய்யவேண்டுமென வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள் மூலம் 21 ஆயிரம் ஏ.டி.எம்., மையங்கள் செயல்படுகிறது. சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்திக்கு செப்., 29, அக்., 2 மற்றும் சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை. மாத சம்பளம் எடுத்தல், தீபாவளி ஆடை வாங்க ஏ.டி.எம்.,களை அதிகம் நாடும்போது பணதட்டுப்பாடு அதிகரிக்கும். இதை தவிர்க்க உரிய ஏற்பாடு செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தேசிய வங்கியின் மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஏ.டி.எம்.,களில் பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க, ரிசர்வ் வங்கி உத்தரவுபடி, பணம் வழங்கும் வங்கி இயங்கும். அங்கு பணத்தை எடுத்து ஏ.டி.எம்.,களில் நிரப்புவோம். ஏ.டி.எம்.,ஒன்றில் 2,000, 500, 100 ரூபாய் வீதம் 54 லட்சம் வரை வைக்கப்படும்,'' என்றார்.
மாநில செய்திகள்
கல்லீரல், சிறுநீரகம் செயல் இழப்பு: ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்



கல்லீரல் செயல்திறன் குறைந்ததால், ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் கூறினர்.

செப்டம்பர் 26, 2017, 05:30 AM
சென்னை,

அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் (வயது 74), கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 10-ந்தேதி திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங் மருத்துவ கல்லூரி மற்றும் குளோபல் மருத்துவமனையில் பணியாற்றும் கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா தலைமையிலான குழுவினர் ம.நடராஜனை பரிசோதித்து ‘தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில்’ அனுமதித்திருந்தனர்.பல உறுப்புகள் செயல் இழப்பு ஏற்பட்டு ம.நடராஜனுக்கு அங்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று உடல்நிலை முன்னேற்றம் இருந்தது. இந்தநிலையில் நேற்று மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.

இதுகுறித்து குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இயக்குனர் டாக்டர் கே.இளங்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ம.நடராஜன் எங்கள் மருத்துவமனையில் கல்லீரல் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருகிறார். நாள்பட்ட கல்லீரல் நோய் காரணமாக அவருக்கு, கல்லீரல் செயல் இழந்ததுடன், சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. அத்துடன் நுரையீரல் நீர்தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக கல்லீரலும், சிறுநீரகமும் மாற்றப்பட வேண்டும் என்பதற்காக தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இருந்தும் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்றுவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம். அவருடைய குடும்பத்தினருக்கும் நிலைமையை தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,200 இடைக்கால நிவாரணம்


போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இந்த மாதம் முதல் மாதந்தோறும் ரூ.1,200 வழங்குவது எனவும், டிசம்பர் முதல் வாரத்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.

செப்டம்பர் 26, 2017, 05:45 AM
தாம்பரம்,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இந்த மாதம் முதல் மாதந்தோறும் ரூ.1,200 வழங்குவது எனவும், டிசம்பர் முதல் வாரத்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை 9 கட்டங்களாக நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தினர் 24-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் யாஸ்மின் பேகம் பேச்சுவார்த்தை நடத்தியதில், போக்குவரத்து அமைச்சர் தலைமையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 10-வது கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து கூடுதல் தலைமை செயலாளர் தேவிதார், நிதித்துறை துணை செயலாளர் அனந்தகுமார், போக்குவரத்து இணை செயலாளர் நடராஜன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை, தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 47 தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஐகோர்ட்டு விசாரணை முடியும்வரை வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.1,200 இந்த மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 9-ந்தேதி போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் குறித்து சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையின்போது உரிய தகவல்களை தெரிவிப்பது என்றும், கோர்ட்டு விசாரணைக்கு பிறகு டிசம்பர் முதல் வாரத்தில் ஊதிய ஒப்பந்தம் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இதனை அறிவித்தார். மேலும் அவர் கூறும்போது, “ஓய்வூதிய நிலுவைத் தொகையாக முதலில் ரூ.1,250 கோடி கொடுத்தோம். மீதம் உள்ள தொகையை எப்படி பிரித்துக் கொடுப்போம் என்பதை அக்டோபர் 9-ந்தேதி ஐகோர்ட்டில் தெரிவிப்போம். இடைக்கால நிவாரணம் ரூ.1,200 வழங்குவதால் மாதம் ரூ.15 கோடி கூடுதல் செலவாகும். டிசம்பர் மாதம் நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் நிலுவையில் உள்ள மற்ற பிரச்சினைகளுக்கு சுமுகதீர்வு காணப்படும்” என்றார்.
மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை



மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 25, 2017, 10:15 AM
புதுடெல்லி,

மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மொபைல் போனுக்கும் 15 இலக்கங்கள் கொண்ட தனிப்பட்ட ஐஎம்இஐ(IMEI) அடையாள எண் இருக்கும். இது பேட்டரியை பொருத்தும் இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அடையாள எண், சிம் கார்டு ஸ்லாட் உடன் தொடர்புடையது. ஒரே மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தினால் அந்த மொபைல் போன் இரண்டு ஐஎம்இஐ எண்களைக் கொண்டிருக்கும்.

இந்த நிலையில், மொபைல் போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. களவு போன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றி போலி ஐஎம்இஐ எண்ணை பொருத்தி வழங்கப்படுகிறது. பயங்கரவாதிகளும் இந்த வகையில் ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றுவதால் அவரகளை கண்காணிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதை இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் மொபைல் போன் திருடு போனால் அதனை முற்றிலும் செயலிழக்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது.
படிக்கத்தானே மாணவர்களை அனுப்புகிறோம்



பல நேரங்களில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புக்குப்பிறகு, அரசு நிர்வாகம் சில செயல்களை வேகமாக செய்யும்போது, இதை முதலிலேயே அரசு செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

செப்டம்பர் 26 2017, 03:00 AM

பல நேரங்களில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புக்குப்பிறகு, அரசு நிர்வாகம் சில செயல்களை வேகமாக செய்யும்போது, இதை முதலிலேயே அரசு செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது. அப்படி ஒரு வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. ஏ.பி.சூர்யபிரகாசம் என்ற ஐகோர்ட்டு வக்கீல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் மக்கள் எல்லோருடைய மனதிலும் குறிப்பாக மாணவர் மனதில் சுழன்று கொண்டிருந்த ஒரு பெரியகுறையை பிரதிபலித்துள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக அரசு சமீபகாலங்களில் கல்விசாராத அரசியல் பொதுநிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி அழைத்து வருகிறது. நிகழ்ச்சி நடப்பது மாலையில் என்றாலும், அந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் காலையிலேயே மாணவர்களை அழைத்து வந்து காத்திருக்க வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் முறையாக செய்துகொடுப்பதில்லை. அரசு நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மாணவர்களை அழைத்துச் செல்லும் போது அவர்களின் பெற்றோர்களிடம் முறையாக அனுமதியை பெறுவதில்லை. சில இடங்களில் மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மாணவர்கள் காயமடையும் நிலை ஏற்படுகிறது. மனதளவில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்புவது கல்வி கற்பதற்காகத்தானேயொழிய, இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அல்ல. எனவே, பள்ளிக்கூட மாணவர்களை கல்விசாராத அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்வதற்கு தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அக்டோபர் 6–ந் தேதி அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

வெகுகாலமாகவே மாணவர்களை அரசு நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சேருவதை காட்டுவதற்காக இவ்வாறு அழைத்துச்செல்லப்படும் நிலை உள்ளது. இப்போது அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். பொதுவாக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்துவரும் வழக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது. ஆனால், மாணவர்களை அழைத்து வந்தால் பணம் இல்லாமல் கொண்டுவரும் வேலை எளிதாக முடிவடைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாமல், அவ்வப்போது ஏதாவது போக்குவரத்து தினம், எய்ட்ஸ் ஒழிப்பு தினம், காசநோய் ஒழிப்பு தினம், குடிப்பழக்கம் தவிர்ப்பு, ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தும் நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை காரணமாக வைத்து மாணவர்களை பேரணியாக அழைத்துச்செல்கிறார்கள். மனித சங்கிலியாக சாலையில் நிற்க வைக்கிறார்கள். எய்ட்ஸ் பற்றி தெரியவேண்டிய அவசியம் இல்லாத பச்சிளம் வயது மாணவர்கள் கையில் எய்ட்சை ஒழிப்போம் என்ற பதாகைகளை வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும்போது சாலையில் செல்பவர்களின் மனமெல்லாம் பதறுகிறது. இந்த மாணவர்கள் எல்லாம் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் சோர்ந்து துவண்டு விடுகிறார்கள்.

காலையில் பேரணியில் நின்றுவிட்டு, பள்ளிக்கூடத்திற்கு சென்றால் எப்படி படிக்க முடியும்? அதுபோல, அரசு நிகழ்ச்சிகள் என்றாலும், இவ்வாறு அவர்களை கொண்டு போய் பல மணிநேரம் உட்கார வைத்து விட்டு, வீட்டிற்கு அனுப்பினால் அவர்களால் எப்படி படிக்க முடியும்?, படிக்க வேண்டிய வயதில் அவர்கள் படிப்பை சிதறவைக்கும் வகையில், இப்படிப்பட்ட செயல்களில் கல்வித்துறை ஈடுபடுத்தினால் மாணவர்களின் கல்வி நிச்சயமாக பாழாகி போய்விடும். எனவே, இந்த வி‌ஷயத்தில் நீதிபதி தீர்ப்பு கூறும் முன்பே, பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் இனி இவ்வாறு மனித சங்கிலியில் நிற்க வைக்கப்பட மாட்டார்கள், பேரணியில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள், படிப்புக்கு சம்பந்தமில்லாத அரசின் பொதுநிகழ்ச்சிகளிலோ, அரசியல் நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறும்வகையில், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் படிக்க மட்டுமே செல்லட்டும். அவர்களின் எண்ணங்களை சிதறடிக்கும், அவர்களை சோர்வடைய வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை இனி தமிழ்நாட்டில் பார்க்கும் நிலைமை வேண்டாம், வேண்டாம், வரவே வேண்டாம்.
வட தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு



மேற்கு வங்க கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.

செப்டம்பர் 26, 2017, 04:15 AM
சென்னை,

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-


மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிகழ்வதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

அடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

31 சதவீதம் அதிகம்

சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு சில முறை மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜூன் 1 முதல் 25-ந் தேதி வரை 39 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 31 சதவீதம் அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மழை அளவு வருமாறு:-

அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங் களூர், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஆகிய இடங்களில் தலா 11 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் தலா 10 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

வடமாவட்டங்களில் மழை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 9 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரில் 8 சென்டி மீட்டர் மழை அளவும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சேலம் மாவட்டம் ஓமலூர், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.

இதே போன்று மேலும் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

Monday, September 25, 2017

Varsity to ensure completion of Ph.D. theses on time

University of Madras move to speed up progress of students

In a move to speed up the progress of students who spend more than the minimum period of three years in Ph.D programmes, the University of Madras has decided to bring in procedures to monitor the progress of their work.
“We will bring out criteria to be satisfied by the scholar for extending the registration beyond the period of three years. The Dean (Research) for university departments and the principal or the director of the institution will be a part of doctoral committee meetings that will decide on a recommendation for the extension of registration,” said Vice-Chancellor P. Duraisamy, speaking at the academic council meeting on Saturday.
This move is to ensure that the students complete their theses on time and to speed up their progress. The university has also already introduced an online monitoring system for Ph.D scholars, through which supervisors and scholars can check status from admission to the award of the degree.
Online repository
As a part of the university’s initiatives in research, Ph.D theses are being uploaded online in an electronic repository, Shodhganga @INFLIBNET. Stating that the university had initially begun to upload old theses online, they have now decided to start uploading doctoral research theses from the last couple of years on the repository and work backwards.
“Over the last few years, we have been receiving the theses on a CD and this makes for easy uploading on the repository. For theses from many years back that we were uploading, it was taking a lot more time since all the pages had to be scanned individually,” Mr. Duraisamy said, speaking on the sidelines of the meeting. The online repository, which is an initiative of the University Grants Commission (UGC), aims to create a repository of theses from across the country.
While over 180 theses that had been submitted over the last three months have gone through the anti-plagiarism software in place at the university, concerns were raised at the meeting about the software detecting standard definitions and scientific names which were commonly used, which could result in the theses being disqualified.
However, the Vice-Chancellor said that the theses, once submitted, would be run through the software and if there were high levels of plagiarism detected, the student and the guide would be notified.
We will bring out criteria for extending courses beyond three years
P. Duraisamy
V-C, University of Madras

Can’t Extend Time For Filling Vacant Seats In Super-Specialty, PG & MBSS Courses: SC [Read Judgment] | Live Law

Can’t Extend Time For Filling Vacant Seats In Super-Specialty, PG & MBSS Courses: SC [Read Judgment] | Live Law: The Supreme Court, on Friday, refused to extend the time for filling up the vacant seats in super-specialty, post-graduate and MBBS courses. The Interlocutory Applications demanding an extension were filed in the case titled, Ashish Ranjan and Ors. v. Union of India & Ors., wherein the Court had earlier laid down a time schedule to …

SC OKAYS MBBS FOR COLOR- BLIND

Erode

பிறந்த குழந்தைக்கு 6 நிமிடத்தில் ஆதார் அட்டை!

By DIN  |   Published on : 25th September 2017 01:43 AM 
AadharCard

மகாராஷ்டிர மாநிலம், உஸ்மானாபாத் மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு 6 நிமிடத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ண காமே கூறியதாவது:
உஸ்மானாபாத் மாவட்ட மகளிர் சிறப்பு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.03 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாவனா சந்தோஷ் ஜாதவ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்தக் குழந்தைக்கு ஆதார் எண் கோரி பெற்றோர் பதிவு செய்தனர். அந்த மருத்துவமனையில் இருந்த ஆதார் அதிகாரிகள் 12.09 மணிக்கு ஆதார் அட்டையை ஆன்லைன் மூலம் வழங்கினர். பிறந்த சான்றிதழும் பாவனாவுக்கு அளிக்கப்பட்டது. குழந்தை பிறந்த சில நிமிடங்களுக்குள் ஆதார் வழங்கப்படுவது அரிதான நிகழ்வாகக் கருதுகிறேன்.
உஸ்மானாபாதில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் விரைவில் ஆதார் எண் வழங்கப்படும். அத்துடன், குழந்தைகளின் ஆதார் எண் அவர்களது பெற்றோரின் ஆதார் எண்களுடன் இணைக்கப்படும் என்றார் ராதாகிருஷ்ண காமே. 
அந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டில் பிறந்த சுமார் 1,300 குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று அந்த மருத்துவமனை மருத்துவர் ஏக்நாத் மாலே தெரிவித்தார்.

தனி நபர் பட்டாசுகள் வாங்க புதிய கட்டுப்பாடுகள்


By DIN  |   Published on : 25th September 2017 04:37 AM  
crackers

தயாரிப்பாளர்களிடமிருந்து தனி நபர்கள் நேரடியாக பட்டாசு வாங்க வேண்டும் என்றால் ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் அவசியம் என பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியூர்களில் உள்ள தொழிலதிபர்கள், பிரபலமானவர்கள் உள்ளிட்டோர் பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களிலிருந்து நேரடியாக தங்களுக்குத் தேவையான பட்டாசுகளை வாங்குவது வழக்கம். இவை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இவ்வாறு வாங்குவதென்றால் ஆதார் மற்றும் பான் எண்கள் தேவை என பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 
ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளதால், பட்டாசு விற்பனையில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பட்டாசு ஆலைகளில் இருந்து வியாபாரிகள் வாங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில் அவர்களிடம் ஜிஎஸ்டி எண் இருக்கும். ஆனால் தனிநபர்கள் வாங்குவதாக இருந்தால், அவர்கள் ஆதார் அடையாள அட்டையின் நகல், பான் கார்டு நகல் உள்ளிட்டவற்றை ஆர்டர் தரும்போது அதனுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். 
இது குறித்து பட்டாசு தயாரிப்பாளர்களில் ஒருவரான இளங்கோ கூறியதாவது: 
லாரியில் பட்டாசு அனுப்ப வேண்டும் என்றால், பட்டாசு பெறுபவர்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி. எண் இல்லாத பில்களை லாரி செட் உரிமையாளர்கள் வாங்குவதில்லை. 
பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து தனிநபர் வாங்க வேண்டும் என்றால், அவர்களின் ஆதார் எண்ணையும், பான்கார்டு எண்ணையும் பில்லில் குறிப்பிட வேண்டும். அது மட்டுமே லாரி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனை பட்டாசு தயாரிப்பாளர்களும் கடைப்பிடித்து வருகிறோம். எனவே, சிவகாசியில் இருந்து மொத்தமாக பட்டாசு வாங்க விரும்பும், ஜிஎஸ்டி எண் இல்லாத, தனி நபர்கள் தங்களின் ஆதார் மற்றும் பான் எண்களுடன் வர வேண்டும் என்றார்.
இணைய வழி விற்பனை: 
சில ஆண்டுகளாக இணைய வழியில் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன்படி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் இணையதளம் மூலம் விற்பனையைத் தொடங்கியுள்ளன. இதைத் தவிர சில நிறுவனங்கள் பட்டாசு ஆலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இணைய வழியில் விற்பனை செய்து வருகின்றன. 
பட்டாசுகளை நேரடியாக வந்து வாங்கிச் செல்லும் போது பாதுகாப்பு பிரச்னைகள், ஜி.எஸ்.டி. பிரச்னைகள் உள்ளதால் இந்த ஆண்டு இணைய வழி விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுக்கே பட்டாசு தேடிச்சென்று விடுவதால் இதற்கு வாடிக்கையாளர்கள் பெருகி வருகின்றனர் என இணைய வழி பட்டாசு விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.

இமெயில் சுருக்கங்களும் சுவாரசியங்களும்

Published : 22 Sep 2017 11:22 IST

சைபர்சிம்மன்





இமெயில் வாயிலாகத் தொடர்பு கொள்ளும்போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. உதாரணமாக யாருக்கு மெயில் அனுப்புவதாக இருந்தாலும் சரி, மெயிலில் என்ன இருக்கிறது என்பதை அதன் உள்ளட்டக்க தலைப்பு பகுதியிலேயே தெரிவித்துவிட வேண்டும். இமெயிலை பெறுபவர் இதன் மூலம் தலைப்பை பார்த்ததுமே மெயிலின் தன்மையை தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படலாம். அதே போல, ரிப்லை ஆல், எனும் அனைவருக்கும் பதில் அளிக்கும் வசதியை கவனமாக பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தில் குழு மெயில் அனுப்பும் போது, தேவையில்லாமல் மேலதிகாரியையையும் அதில் இணைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கொத்தாக மெயில் அனுப்பும் போது, பிசிசி (BCC ) வசதியை பயன்படுத்தினால், வேறு யாருக்கு எல்லாம் அதே மெயில் அனுப்ப பட்டுள்ளது என்பதை மெயிலை பெறுபவர்கள் பார்க்க முடியாது.

இமெயில் தொடர்பான நுணுக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். பொதுவாக இமெயில் நாகரீகம் இந்த நுணுக்கங்களைக் குறிப்பிடுகிறோம். நீங்கள் அனுப்பும் இமெயில் தவறாமல் வாசிக்கப்பட்டு பதில் அளிக்கப்பட விரும்பினால், இமெயில் நாகரிங்களை அறிந்து வைத்திருப்பது நல்லது. இந்தப் பட்டியலில் இமெயிலுக்கான சுருக்கப் பெயர்களையும் இனிச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதென்ன இமெயில் சுருக்கப் பெயர்கள்?

இமெயிலின் உள்ளடக்கத் தலைப்புடன் ஒட்டிக்கொள்ளும் வகையில் இடம்பெறச்செய்யும் முதல் எழுத்துச் சுருக்கங்களைத்தான் இப்படிக் குறிப்பிடுகின்றனர். நீங்களேகூட, இ.ஒ.டி., எல்.எம்.கே. போன்ற சுருக்கங்களை இமெயிலில் பார்த்திருக்கலாம். மெயிலைப் பார்க்கும்போதே அதன் உள்ளடக்கம், மெயிலின் நோக்கம் தொடர்பான தகவல்களை உணர்த்துவதற்காகவே இந்தச் சுருக்கப் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர். இதன் பயன்பாட்டில் நீங்களும் தேர்ச்சி பெற விரும்பினால், மெயிலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சுருக்கப் பெயர்களுக்கான விளக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் இல்லை

இமெயிலில் உள்ள அனுகூலம் என்னவெனில், எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் பதில் அளிக்கலாம். ஆக, அலுவலக மெயிலுக்கு நீங்கள் வீட்டிலிருந்தும் பதில் அளிக்கலாம். விடுமுறைப் பயணத்துக்கு இடையிலும் பதில் அளிக்கலாம். ஆனால், இவ்வாறு அலுவலகத்துக்கு வெளியிலிருந்து பதில் அளிக்கும்போது, நீங்கள் அலுவலகத்தில் இல்லை என்பதை உணர்த்திவிடுவது நல்லது. ஏனெனில், மெயிலைப் பெறுபவர் உடனடியாகப் பதிலை எதிர்பார்த்தால் அல்லது உங்களுடன் தொடர்புகொண்டு பேச முடிந்தால் சிக்கலாகலாம்.

எனவே, நீங்கள் அலுவலகத்துக்கு வெளியிலிருந்து மெயில் அனுப்புவதைக் குறிப்பிடுவது அவசியம். இமெயில் தலைப்புடன், அலுவலகத்தில் இல்லை என்பதை (அவுட் ஆப் ஆபிஸ் - OOO) எனும் சுருக்க எழுத்துகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உணர்த்திவிடலாம். இதைத் தானியங்கி பதிலாகவும் அமைத்துக்கொள்ளலாம். இதேபோல, வீட்டிலிருந்து பணியாற்றினால், ஒர்க்கிங் ஃபிரம் ஹோம் என்பதை WFH மூலம் உணர்த்தலாம்.

தலைப்பே செய்தி

சில நேரம் இமெயில் செய்தியை ரத்தினச்சுருக்கமாகச் சில வரிகளில் அனுப்பலாம். இன்னும் சில நேரம் தலைப்பிலேயே செய்தியைச் சொல்லிவிடலாம். அப்படியிருக்க, மெயிலைப் பெறுபவர் அதைத் தேவையில்லாமல் ஓபன் செய்ய வேண்டாமே. எனவேதான், தலைப்பில் செய்தியைச் சொல்லிவிட்டு, இறுதியில் எண்ட் ஆப் மெசேஜ் (EOM ) எனக் குறிப்பிட்டுவிடலாம்.

இதேபோல மெயிலுக்கு நிச்சயம் பதில் தேவையெனில், தயவுசெய்து பதில் அளிக்கவும் என்பதை ‘PRB’(Please revert back) எனக் குறிப்பிடலாம். தேவையெனில் பதில் எதிர்பார்க்கும் நேரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். மாறாக நீங்கள் தகவல்தான் தெரிவிக்கிறீர்கள் என்றால், அதற்கு அவசியம் பதில் எதிர்பார்க்கவில்லை என்பதைத் (நோ ரிப்ளை நெசஸரி- NRN) தெரிவிக்கலாம். உதாரணத்துக்கு மதியம் உணவுவேளையில் சந்திக்கிறேன், NRN எனக் குறிப்பிடலாம்.

வில்லங்க மெயில்

சில நேரம் அலுவலக சகாவுக்கு சும்மா ஜாலியான, கேளிக்கை மெயிலை அனுப்பி வைக்கலாம். அந்த மெயிலை உங்கள் சகா விஷயம் தெரியாமல் பலர் முன்னிலையில் திறந்து படித்தால், வில்லங்கமாகிவிடாதா? இதுபோன்ற மெயிலை அனுப்பும்போது அலுவலகச் சூழலில் பிரிப்பது பாதுகாப்பானது அல்ல என்பதை நாட் சேஃப் டூ ஓபன் இன் ஒர்க் - NSFW என உணர்த்தலாம். இன்னும் சில நேரம் பார்ப்பதற்கு வில்லங்கமாகத் தோன்றினாலும் பணிச்சூழலில் படிக்கும் வகையான தகவல்களை சேப் டூ ஓபன்- SFW என உணர்த்தலாம். இதேபோல பெறுபவருக்கு மட்டுமான தகவல் என்பதை ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன் - FYI எனக் குறிப்பிடலாம். மாறாக, இமெயில் தொடர்பான நடவடிக்கை தேவையெனில் அதையும் ஆக்‌ஷன் ரிக்வயர்டு -AR எனக் குறிப்பிடலாம்.

வெளியே செல்கிறேன்

அலுவலக விஷயம் தொடர்பாகக் காலையில் மெயில் அனுப்புகிறீர்கள். ஆனால், மாலையில் நீங்கள் சீக்கிரம் வீட்டுக்குச் செல்ல இருக்கிறீர்கள் எனில், அந்தத் தகவலையும் மெயிலில் லீவிங் ஏர்லி டுடே -LET எனக் குறிப்பிடலாம். முக்கியமாகத் தொடர்புகொள்ள வேண்டும் எனில், சக ஊழியர்கள் மாலைவரை காத்திருந்து ஏமாறாமல் இருக்க இந்தக் குறிப்பு உதவும்.

மிக முக்கியமான விஷயங்களை நீளமான மெயிலில் அனுப்புவதாக இருந்தால் டூ லாங் டூ ரீட்- TLTR எனக் குறிப்பால் உணர்த்தலாம். முதலில் அனுப்பிய மெயிலில் குறிப்பிட மறந்த விஷயத்தைத் தெரிவிக்க அடுத்ததாக ஒரு மெயில் அனுப்புவதாக இருந்தால், பை தி வே - BTW மூலம் அதைத் தெளிவுபடுத்திவிடலாம்.

என்ன பதில்?

சில சமயம் எல்லா மெயில்களுக்கும் பதில் தேவைப்படாது. இன்னும் சில மெயில்களுக்குப் பதிலை ஆம் அல்லது இல்லை எனத் தெரிவித்தால் போதும். பெரும்பாலும் மெயில் மூலம் கேள்வி கேட்கும்போது, ஆம் அல்லது இல்லை எனும் பதில் போதும் எனில், Y/N (Yes or No) எனக் குறிப்பிட்டால் விஷயம் முடிந்தது. அலுவலகரீதியாகவோ தனிப்பட்ட நோக்கிலோ இமெயிலைப் பயன்படுத்தும்போது, தகவல்தொடர்பை இன்னும் சிறப்பாக்கிக்கொள்ள இந்தக் குறிப்புகள் உதவும் என்கின்றனர் இமெயில் வல்லுநர்கள்.

நலம் தரும் நான்கெழுத்து- 2: மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?

நலம் தரும் நான்கெழுத்து- 2: மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?

Published : 23 Sep 2017 10:08 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்


‘மகிழ்ச்சி என்பது அதீதங்களில் இல்லை. அது சமநிலை, ஒழுங்கு, லயம் மற்றும் ஒத்திசைவில் உள்ளது’

– அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் மெர்டன்

கபாலிக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே பிடித்த வார்த்தை மகிழ்ச்சி! ஆனால் அதைத் தேடி ஓடும் ஓட்டத்தில் கவனம் செலுத்தும் நாம், ஓடுவதன் நோக்கத்தை மறந்து கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

சென்ற நூற்றாண்டில் அதிகம் பகிரப்பட்ட மருத்துவ நகைச்சுவை ஒன்று உண்டு. ஒரு அறுவைசிகிச்சை நிபுணர் சிக்கலான அறுவைசிகிச்சை ஒன்றைச் செய்தாராம். அப்போதெல்லாம் மயக்க மருத்துவர் எனத் தனியாக யாரும் கிடையாது. நோயாளியின் வயிற்றில் இருந்த கட்டியை அகற்றும் சிகிச்சை அது.

அறுவைசிகிச்சை செய்த குழு மிகவும் லயிப்புடன் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அந்த நிபுணர் ரொம்பத் திறமையுடன் அந்தக் கட்டியை அகற்றினாராம். பிறகு சட்டென்று ஞாபகம் வந்து, அந்த நோயாளியின் மூச்சைக் கவனித்தார்களாம். அது நின்றுபோய் பல நிமிடங்கள் ஆகியிருந்ததாம். ‘அறுவைசிகிச்சை வெற்றி. நோயாளி மரணம்’ என்ற பகடிச் சொற்றொடர், அதன் பின்புதான் தோன்றியிருக்க வேண்டும்.

தொலைந்து போகும் அடிப்படை

இது போலத்தான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, செய்யும் செயல்களில் அப்படியே மூழ்கிப் போய் அடிப்படை நோக்கத்தை மறந்து, நிம்மதியைத் தொலைத்துவிடுகிறோம். ஒரு புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளர் ஒரு பள்ளி ஒன்றில் உரையாற்றினார். தனது பேச்சிலே நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களை இடைவெளி இல்லாமல் வரிசையாகக் கட்டித் தொங்கவிட்டார். ஆனால், மாணவர்கள் மறந்தும்கூடச் சிரிக்கவில்லை. ஒரு வேளை அனைத்து மாணவர்களுக்கும் ஜெர்மன் அல்லது ஸ்பானிஷ்தான் தாய்மொழியாக இருக்குமோ என்றெல்லாம் பேச்சாளர் மனதுக்குள் குழம்பினார்.

உண்மையில் நடந்தது என்னவென்றால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். “நாளைக்கு நம்ம பள்ளிக்கூடத்துக்குப் பேச ஒரு பெரிய பேச்சாளர் வாறாரு. நீங்க யாராச்சும் கெக்கே பிக்கேன்னு சிரிச்சு வைச்சீங்க, தோலை உரிச்சிடுவேன்” என முந்தைய நாளே மாணவர்களிடம் எச்சரித்து வைத்திருந்தார். புதுப் பிரம்புடன் இரண்டு வாத்தியார்களை அதற்கான வேலையிலும் ஈடுபடுத்தியிருந்தார். பிறகு எந்த மாணவனுக்காவது சிரிப்பு வரும்?

நம்முடைய மனமும் பல நேரம் இந்தத் தலைமை ஆசிரியரைப் போன்றே வாழ்க்கையை ரசிக்க வேண்டிய நேரத்தில் ரசிக்காமல் எப்போது பார்த்தாலும் செய்ய வேண்டிய வேலைகளை, அடைய வேண்டிய லட்சியங்களை, கட்ட வேண்டிய மாதத் தவணைகளைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு, சிரிப்பதைத் தள்ளிப் போட்டுவிடுகிறோம். இந்த விஷயங்களெல்லாம் நடந்தால்தான் சிரிப்பேன் என மகிழ்ச்சியாக இருப்பதற்குச் சில முன்நிபந்தனைகளை வேலை வெட்டியில்லாமல் விதித்துக்கொள்கிறோம். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலேயே நமது மகிழ்ச்சியையும் தொலைத்துவிடுகிறோம்.

லட்சியமே வேண்டாமா?

அப்படியென்றால் வாழ்க்கையில் லட்சியங்களே இல்லாமல் இருப்பதுதான் நல்லதா டாக்டர் என்று என்னை மடக்குவதுபோல யாராவது கேள்வியை நீட்டலாம். அப்படியல்ல. லட்சியங்கள் மிகவும் முக்கியம்தான். எல்லா நாளையும் ஞாயிற்றுக்கிழமைபோல் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால், கொஞ்ச காலத்தில் எல்லா நாளும் திங்கட்கிழமைபோல் இழுத்துப்போட்டு வேலையை முடிக்க வேண்டி வந்துவிடும். கடின உழைப்பும் குறிக்கோளும் மிக அவசியமே.

அதேபோல் மிகப் பெரிய லட்சியங்களுக்காக மகிழ்ச்சியைத் தியாகம் செய்யும் லட்சிய வீரர்களும் மேதைகளும் உலகில் உண்டு. இந்தக் கட்டுரைத் தொடர் அது போன்ற லட்சியவீரர்களுக்கானது அல்ல. அவர்களுக்கு இது போன்ற கட்டுரைகளே தேவையில்லை. நம்மை போன்ற சாமானியர்களுக்காகவே இதெல்லாம்.

ஓட்டமும் ஓய்வும்

எதற்காக இவ்வளவு பதற்றம், ஓட்டம் ,போட்டி, பரபரப்பு என்பதைப் பற்றி ஒரு கணம் யோசிக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். உலகப் புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞானி மசானபு ஃபுகோகா சுட்டிக்காட்டிய விஷயம்: ஒரு மனிதன் பல காலம் இராப்பகலாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தானாம். அதனால் அவனது கண் பார்வையே பாதிக்கப்பட்டதாம். கடைசியில் அவன் ஆராய்ச்சியில் வெற்றி அடைந்தானாம். அவன் கண்டுபிடித்தது என்ன தெரியுமா, மூக்குக் கண்ணாடி.

இப்படி சிக்கல்களுக்குத் தீர்வாகும் என நினைத்து நாம் செய்யும் பல செயல்களே அச்சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிடும். வாழ்வில் வெற்றி பெறுவது முக்கியம். அதைவிட முக்கியம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பது. இலக்கு நோக்கிய ஓட்டத்துக்கும் ஓய்வுக்குமான ஒரு சமநிலைதான் நலம்தரும் நான்கெழுத்து.

(அடுத்த வாரம்: உண்மை வீரன் யார்?)

கட்டுரையாளர், மனநலத்துறைப் பேராசிரியர் |தொடர்புக்கு: ramsych2@gmail.com
அந்த பொய்யை சொல்ல சொன்னது யார்?- திண்டுக்கல் சீனிவாசனுக்கு தீபா கேள்வி

Published : 24 Sep 2017 16:24 IST

BHARATHI PARASURAMAN_50119




'ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய். பொதுமக்கள் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய நிலையில் 'அந்த பொய்யை சொல்ல சொன்னது யார்?' என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த தீபா இவ்வாறு கூறினார்.


தீபா பேசியதாவது:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் காலம் கடந்து பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் சொன்னதாக கூறி இருக்கிறார். அந்த பொய்யை சொல்ல சொன்னது யார்? என்பது பற்றி முழு உண்மைகளையும் வெளியிட வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தை பொறுத்தவரை சசிகலா குடும்பத்தினர் மீது நானும் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறேன். அவர்களிடம் ஆதாரங்கள் இருந்தால் அச்சமின்றி துணிந்து வெளியிடட்டும். புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் இருந்திருந்தால் டி.டி.வி. தினகரன் முன்கூட்டியே வெளியிட்டிருக்கலாமே.

அவர்கள் ஆதாரங்களை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் நான் வழக்கு தொடர்வது உறுதி. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த பிரதமரிடம் கோரி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா குடும்பத்தினர் சொல்லச்சொன்னதையே ஊடகங்களிடம் கூறினோம்: திண்டுக்கல் சீனிவாசன்

Published : 24 Sep 2017 16:39 IST

BHARATHI PARASURAMAN_50119




அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்| கோப்புப் படம்.

முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் என்ன சொல்லச் சொன்னார்களோ அதையே ஊடகங்களிடம் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 'ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய். பொதுமக்கள் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திண்டுக்கல் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திண்டுக்கல் சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, "ஜெயலலிதா உணவு அருந்தியதாக சசிகலா குடும்பத்தினர் கூறச்சொன்னதையே ஊடகங்களிடம் நாங்கள் தெரிவித்தோம். இதையே மதுரை பொதுக்கூட்டத்தில் நான் தெளிவுபடுத்தி விளக்கினேன். மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதில் தவறில்லை" என்று கூறினார்.
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் மாநகர பஸ்களுக்கு இடம் தருவதில் சிக்கல்?

பதிவு செய்த நாள்25செப்
2017
00:01

தொல்லியல் துறையின் தடையின்மை சான்று சிக்கல் காரணமாக, வண்டலுார் - கிளாம்பாக்கம் பஸ் நிலைய திட்டத்தில், எம்.டி.சி., எனப்படும், சென்னை மாநகர போக்குவரத்து பஸ்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, வேறு தேவைகளுக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
சென்னை, கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வண்டலுார் - கிளாம்பாக்கத்தில், தென் மாவட்ட பஸ்களுக்காக, புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 88 ஏக்கர் நிலம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய பஸ் நிலையத்துக்கான உத்தேச வரைபடம், தனியார் கலந்தாலோசனை நிறுவனம் வாயிலாக தயாரிக்கப்பட்டது. இந்த வரைபடத்தின் அடிப்படையில், புதிய பஸ் நிலையம், இரண்டு தளங்களாக செயல்படும். 

பொது மக்கள் தரை தளம், முதல் தளத்துக்கு வந்து செல்ல வசதியாக, சென்னை விமான நிலையத்தில் உள்ளது போல, மேம்பாலம் அமைக்கப்படும்.

9.55 ஏக்கர் : ஆனால், விமான நிலையத்தில் உள்ளது போல, இங்கு அமைக்கப்படும் மேம்பாலத்தின் பயன்பாடு, புறப்பாடு, வருகை என, பிரிக்கப்படாது. 

தரை தளத்தில் உள்ள வாயில், அரசு பஸ்களை பயன்படுத்துவோருக்கும், முதல் தளத்தில் உள்ள வாயில், ஆம்னி பஸ்களை பயன்படுத்துவோருக்கும் என, பிரிக்கப்பட உள்ளது.

இதன் அடிப்படையில், பஸ் நிலைய வளாகத்தின் முகப்பில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, மாநகர பஸ்களுக்கான பணிமனை மற்றும் பஸ் நிலைய மேம்பாட்டிற்காக, 9.55 ஏக்கர் நிலத்தை ஒதுக்க திட்டமிடப்பட்டது. அப்போது தான், கோயம்பேடு போல, சென்னையின் பிற பகுதிகளில் இருந்து, மக்கள் இங்கு வந்து செல்ல முடியும். ஆனால், தொல்லியல் துறையின் தடையின்மை சான்று பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், கிளாம்பாக்கம் பஸ் நிலைய திட்டப்பகுதி, 88 ஏக்கரில் இருந்து, 30 ஏக்கராக சுருக்கப்படுகிறது. இதன்படி, பாரம்பரிய சின்னம் உள்ள பகுதி, அதில் இருந்து முதல், 100 மீட்டர் சுற்றளவு பகுதியை தவிர்த்து, மீதம் உள்ள பகுதியில் தான், பஸ் நிலைய திட்டம் செயல்படுத்தப்படும். இடத்தை சுருக்குவதால், திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்படுகின்றன.

அரசின் கருத்து : இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எம்.டி.சி.,க்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட, 9.55 ஏக்கர் நிலம், வேறு தேவைக்கு மாற்றப்படுகிறது. இதனால், எம்.டி.சி.,க்கு, புதிய பஸ் நிலையத்தின் தரை தளம் அல்லது முதல் தளத்தை ஒதுக்கலாமா, வேறு இடத்திற்கு மாற்றலாமா என, ஆலோசிக்கப்பட்டது. பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும், எம்.டி.சி., பஸ்களை ஓரம் கட்டிவிட்டு, சுற்றுலா ஒப்பந்த வாகன உரிமத்தில் இயங்கும், ஆம்னி பஸ்களுக்கு இடம் ஒதுக்கினால், சட்ட சிக்கல் ஏற்படும். எனவே, இதில், அரசின் கருத்தை கேட்டறிந்த பின் முடிவு செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
'கட்டை வண்டி'யாக பாண்டியன், வைகை : ரயில்கள் வேகம் எடுப்பது எப்போது?

பதிவு செய்த நாள்24செப்
2017
23:50




மதுரை: குஜராத்தில் புல்லட் ரயில், ஆந்திராவில், 'ஹைபர் லுாப்' ரயில் விட ரயில்வே நிர்வாகம், மாநில அரசுகளுடன் இணைந்து முயற்சித்து வருகிறது. ஆனால், தெற்கு ரயில்வேயில் மட்டும், மதுரை - சென்னை இடையே இயங்கும் பாண்டியன், வைகை ரயில்களின் வேகம் கூட அதிகரிக்கப்படாமல், 'கட்டை வண்டி'யாக இயக்கப்படுகின்றன. இவற்றின் பெயரில் மட்டுமே, 'அதிவிரைவு' இருக்கிறது. பயண நேரம் அதிகமாக இருப்பதால், பயணியர் அவதிக்கு உள்ளாகின்றனர்.

குஜராத், ஆமதாபாத்தில் இருந்து மஹாராஷ்டிரா, மும்பைக்கு புல்லட் ரயில் இயக்க, பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 508 கி.மீட்டரை, 2.07 மணி நேரத்தில் கடக்க முடியும்.

ஆந்திர மாநிலத்தில், விஜயவாடா - அமராவதி நகரங்களை இணைத்து, 'ஹைபர் லுாப்' ரயில் வழித்தடம் அமைக்க, முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துஉள்ளார். இதன் மூலம், 35 கி.மீட்டரை, ஆறு நிமிடங்களில் கடந்து விடலாம். ஆனால், தெற்கு ரயில்வேக்கு கணிசமான வருவாய் ஈட்டி தரும், தென் மாவட்ட ரயில்களான பாண்டியன், வைகையின் வேகத்தை அதிகரிக்க கூட நடவடிக்கை இல்லை.

சொன்னது என்னாச்சு? : மீட்டர் கேஜ் பாதைகளை, அகல பாதைகளாக மாற்றும் பணி நடந்த போது, தென் மாவட்ட ரயில்கள் மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், வேலுார், ஜோலார்பேட்டை வழியில், சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டன.

சில ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக திருப்பி விடப்பட்டன. சென்னை செல்ல அதிக நேரம் எடுத்து கொள்ளப்பட்டதால், பயணியர் சிரமப்பட்டனர்.அப்போது, தெற்கு ரயில்வே பொது மேலாளராக இருந்த கீர்த்திவாசன், 'பயணியர் சிரமத்தை பொறுத்து கொள்ள வேண்டும். அகல பாதை பணிகள் முடிந்ததும், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். குறைந்த நேரத்தில் சென்னை செல்ல முடியும்' என, ஆசை வார்த்தை காட்டினார்.

'பாண்டியன் ரயில், எட்டு மணி நேரம், வைகை ரயில், ஆறு மணி நேரத்திற்குள் சென்னை செல்லும்' என, அப்போது தெரிவிக்கப்பட்டது. அகல பாதை பணிகள் முடிந்து, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்று வரை, இந்த இரு ரயில்களின் வேகம் அதிகரித்தபாடில்லை.

9 மணி நேரமாகும் : மதுரையில் காலை, 7:00 மணிக்கு புறப்படும் வைகை ரயில் மதியம், 2:40க்கு சென்னை செல்கிறது. சென்னையில் மதியம், 1:30 மணிக்கு புறப்படும் வைகை ரயில், இரவு, 9:20 மணிக்கு மதுரை செல்கிறது. ஆனால், பல நாட்கள் இந்த ரயில் இரவு, 9:40 மணிக்கு தான், மதுரை வருவதாக பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.

வைகை ரயில், 497 கி.மீ., கடக்க சராசரியாக, 7 மணி, 40 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது. வைகை இன்ஜின் குறைந்தபட்சம், மணிக்கு, 64 கி.மீ., அதிகபட்சமாக மணிக்கு, 110 கி.மீ., வேகம் வரை இயங்கும் திறன் கொண்டது.
பாண்டியன் ரயில், மதுரையில் இரவு, 8:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 5:25க்கு சென்னைக்கும், அங்கிருந்து இரவு, 9:20க்கு புறப்பட்டு மறுநாள் காலை, 6:10க்கு மதுரைக்கும் வருகிறது. இந்த ரயில், 8 மணி, 50 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது.

சொல்வதுடன் சரி : சென்னை - மதுரை வரை இரட்டை பாதை பணிகள் முடியும் நிலையில் உள்ளன. தெற்கு ரயில்வே பொது மேலாளராக பதவி ஏற்பவர்கள், 'சென்னை - மதுரை ரயில்களின் பயண நேரம் குறைக்கப்படும்' என, அறிவிப்பதுடன் சரி. செயல்படுத்த நடவடிக்கை எடுக்காததால், இந்த ரயில்கள், 'கட்டை வண்டி' வேகத்திலேயே இயக்கப்படுகின்றன
.
பாண்டியன் ரயிலில், ஒரு மாதத்திற்கு முன், முன்பதிவு செய்தால் மட்டுமே இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கிடைக்கும் நிலை உள்ளது. அந்தளவுக்கு பயணியர் கூட்டம் அதிகம். 'புல்லட் ரயில், ஹைபர் லுாப் ரயில்கள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் பாண்டியன், வைகை ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுத்து கொள்ளுமோ' என, பயணியர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

சப்பைக்கட்டு : ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:இரட்டை அகல ரயில் பாதை பணிகள் இன்னும் முடியவில்லை. திண்டுக்கல் - திருச்சி இடையே, இன்றும் கல்பட்டிசத்திரம், அய்யலுாரில் ஒரு வழிப்பாதையில் தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்பணிகள் முடிந்தால் மட்டுமே, இரட்டை பாதையும் பயன்பாட்டிற்கு வரும்.அதிவேக ரயில்களை இயக்க, தண்டவாளங்களில் ஜல்லி, சிலீப்பர்கள் சீரமைக்கப்பட வேண்டும். 'மிஷின் பேக்கேஜிங்' மூலம் தண்டவாளத்தை சீரமைக்க வேண்டும். பிறகு தான் ரயில்களின் வேகத்தை மணிக்கு, 160 கி.மீ., வரை அதிகரிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தெற்கு ரயில்வே தலைமை இயக்க மேலாளர் அனந்தராமன் கூறுகையில், ''முக்கிய ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, பரிசீலித்து வருகிறோம். இரட்டை பாதை பணி முடிந்த பின், பாண்டியன், வைகை ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்,'' என்றார்.
விஷம் குடித்த குடும்பத்தினர் ஆறு பேர் பலி; மதுரையில் சோகம்

பதிவு செய்த நாள்
செப் 24,2017 19:54


மதுரை:மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் கடன் பிரச்னையால் விஷம் குடித்தனர். இதில் ஆறு பேர் பலியாகினர்.

சவுராஷ்டிராபுரம் குறிஞ்சிநகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் குறிஞ்சி குமரன். சகோதரர் வேல்முருகன். இருவரும் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் மற்றும் 'ஜெயம்' என்ற பெயரில் நர்சரி பள்ளி நடத்தி வந்தனர். மேலும் தீபாவளி சிறுசேமிப்பு சீட்டு, ரியல் ஸ்டேட், வட்டித் தொழிலும் செய்து வந்தனர். குறிஞ்சி குமரன் குடும்பத்தினர் மாடி வீட்டிலும், தாயார் ஜெயஜோதி கீழ் வீட்டிலும் வசித்தனர். வேல்முருகன் அருகில் உள்ள தெருவில் குடும்பத்தினருடன் வசித்தார்.

நேற்று மதியத்தில் இருந்து இரவு 7:00 மணி வரை குறிஞ்சி குமரனின் வீடு பூட்டிக் கிடந்ததால் அருகில் இருந்த உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். இரவு 7:15 மணிக்கு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது குறிஞ்சிகுமரன் வீட்டில் மொத்த குடும்பத்தினரும் விஷம் குடித்த நிலையில் கிடந்தனர். இதில் தயார் ஜெயஜோதி, குறிஞ்சி குமரன், மகள் தாரணி, வேல்முருகன், மகள் ஜெயசக்தி ஆகியோர் இறந்து கிடந்தனர். வேல்முருகன் மனைவி தேவி, மகன் பிரவீன், குறிஞ்சி குமரன் மனைவி தங்கச்செல்வி, அவரது மகள் ஜெயமோனிகா ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இவர்களை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வேல்முருகன் மனைவி தேவியும் பலியானார்.

குறிஞ்சிகுமரனின் மனைவி தங்கச் செல்வி, மகள் ஜெயமோனிகா, வேல்முருகன் மகன் பிரவீன் சிகிச்சையில் உள்ளனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்னையால் மனமுடைந்து விஷம் குடித்தது தெரிந்துள்ளது. மதியம் 2:00 மணிக்கு பூச்சி கொல்லி மருந்து குடித்திருக்கலாம் என விசாரணையில் தெரிந்துள்ளது.

உறவினர் ரவிச்சந்திரன் கூறியதாவது: மதியத்தில் இருந்து இரவு வரை வீடு பூட்டியே கிடந்தது. சந்தேகப்பட்டு கதவை உடைந்து உள்ளே சென்றோம். ஒன்பது பேரில் நான்கு பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர். '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து ஒரு மணி நேரமாக வரவில்லை. நான்கு பேரையும் இரு சக்கரவாகனத்திலும், மினிபஸ்சிலும் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தோம். தற்கொலைக்கு காரணம் கடன் பிரச்னையாக இருக்கலாம்.இவ்வாறு கூறினார்.
பட்டையை கிளப்பினார் பாண்ட்யா; தொடரை வென்றது இந்தியா
பதிவு செய்த நாள்
செப் 24,2017 21:17


இந்துார்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் பாண்ட்யா விளாசல் கைகொடுக்க இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி ம.பி.,யில் உள்ள இந்துாரில் நடக்கிறது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் கார்ட்ரைட், மாத்யூ வேட் நீக்கப்பட்டு ஆரோன் பின்ச், ஹேண்ட்ஸ்கோம்ப் வாய்ப்பு பெற்றனர். 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.



பின்ச் விளாசல்:

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், ஆரோன் பின்ச் ஜோடி துவக்கம் தந்தது. பாண்ட்யா பந்தில் வார்னர் (42) போல்டானார். பின், இணைந்த பின்ச், கேப்டன் ஸ்மித் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய பந்துவீச்சை விளாசிய பின்ச், ஒரு நாள் அரங்கில் 8வது சதம் எட்டினார். தன் பங்கிற்கு, ஸ்மித் அரை சதம் கடந்தார்.

விக்கெட் சரிவு:

குல்தீப் 'சுழலில்' பின்ச் (124) ஆட்டமிழந்தார். ஸ்மித் 63 ரன்களில் அவுட்டானார். இதன்பின், விக்கெட் அடுத்தடுத்து சரிந்தது. சகால் பந்தில் மேக்ஸ்வெல் (5) சிக்கினார். டிராவிஸ் ஹெட் (4), ஹேண்ட்ஸ்கோம்ப் (3) ஒற்றை இலக்கில் திரும்பினர். முடிவில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (27), ஆஷ்டன் ஏகார் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரோகித் அரை சதம்:

பின், களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித், ரகானே ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. கூல்டர் பந்தை ரகானே பவுண்டரிக்கு விரட்டினார். தன் பங்கிற்கு, ரிச்சர்டசன் பந்தை ரோகித் சிக்சருக்கு பறக்கவிட்டார். இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தபோது, ரோகித் (71) ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் பந்தில் ரகானே (70) அவுட்டானார். கேப்டன் கோஹ்லி(28), கேதார் ஜாதவ்(2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

பாண்ட்யா அதிரடி:

பின் மணீஸ் பாண்டேவுடன் இணைந்த பாண்ட்யா அதிரடியில் கலக்க இந்திய அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது. வெற்றிக்கு 10 ரன்கள் மட்டும் தேவையாக இருக்கும் போது 4 சிக்சர்களுடன் அரைசதம் கடந்த பாண்ட்யா 78 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 47.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. மணீஸ் பாண்டே 36 ரன்களுடனும், தோனி 3 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
சேலம் பழைய பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் குப்பை சேகரித்த கலெக்டர் ரோகிணி



சேலம் பழைய பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் குப்பை சேகரிக்கும் பணியில் கலெக்டர் ரோகிணி ஈடுபட்டார்.

செப்டம்பர் 24, 2017, 05:00 AM
சேலம்,

தமிழகத்தில் தூய்மையே சேவை இயக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சேலம் மாநகராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் தூய்மையே சேவை இயக்க திட்டத்தின்கீழ் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த துப்புரவு பணியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், சாரண, சாரணியர், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு துப்புரவு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் இணைந்து குப்பை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், சேலம் மாநகர் நல அலுவலர் டாக்டர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், செந்தில்குமார், கலைவாணி, சுரேஷ், சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழைய பஸ்நிலைய பகுதியில் நடந்த பணியின்போது, கலெக்டர் ரோகிணி குப்பைகளை சேகரித்து பக்கெட்டில் கொட்டினார். கலெக்டரின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் உடன் வந்த அதிகாரிகள், மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் குப்பைகளை சேகரித்தனர். மேலும் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்கவும் அங்கிருந்த பயணிகளுக்கு கலெக்டர் ரோகிணி அறிவுரை வழங்கினார். மேலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

இதுபோல சுகவனேசுவரர் கோவில் வளாகம், சேலம் டவுன் ரெயில் நிலையம், அரசு அருங்காட்சியக வளாகம் ஆகிய பகுதிகளிலும் தூய்மையே சேவை இயக்க பணிகள் நடந்தது. இந்த பணியின்போது சேகரிக்கப்படும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காக 10 குப்பை லாரிகள், 80 தள்ளுவண்டி, 100 பக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

அத்துடன் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டதுடன் துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.

NEWS TODAY 21.12.2025