Monday, September 25, 2017

விஷம் குடித்த குடும்பத்தினர் ஆறு பேர் பலி; மதுரையில் சோகம்

பதிவு செய்த நாள்
செப் 24,2017 19:54


மதுரை:மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் கடன் பிரச்னையால் விஷம் குடித்தனர். இதில் ஆறு பேர் பலியாகினர்.

சவுராஷ்டிராபுரம் குறிஞ்சிநகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் குறிஞ்சி குமரன். சகோதரர் வேல்முருகன். இருவரும் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் மற்றும் 'ஜெயம்' என்ற பெயரில் நர்சரி பள்ளி நடத்தி வந்தனர். மேலும் தீபாவளி சிறுசேமிப்பு சீட்டு, ரியல் ஸ்டேட், வட்டித் தொழிலும் செய்து வந்தனர். குறிஞ்சி குமரன் குடும்பத்தினர் மாடி வீட்டிலும், தாயார் ஜெயஜோதி கீழ் வீட்டிலும் வசித்தனர். வேல்முருகன் அருகில் உள்ள தெருவில் குடும்பத்தினருடன் வசித்தார்.

நேற்று மதியத்தில் இருந்து இரவு 7:00 மணி வரை குறிஞ்சி குமரனின் வீடு பூட்டிக் கிடந்ததால் அருகில் இருந்த உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். இரவு 7:15 மணிக்கு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது குறிஞ்சிகுமரன் வீட்டில் மொத்த குடும்பத்தினரும் விஷம் குடித்த நிலையில் கிடந்தனர். இதில் தயார் ஜெயஜோதி, குறிஞ்சி குமரன், மகள் தாரணி, வேல்முருகன், மகள் ஜெயசக்தி ஆகியோர் இறந்து கிடந்தனர். வேல்முருகன் மனைவி தேவி, மகன் பிரவீன், குறிஞ்சி குமரன் மனைவி தங்கச்செல்வி, அவரது மகள் ஜெயமோனிகா ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இவர்களை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வேல்முருகன் மனைவி தேவியும் பலியானார்.

குறிஞ்சிகுமரனின் மனைவி தங்கச் செல்வி, மகள் ஜெயமோனிகா, வேல்முருகன் மகன் பிரவீன் சிகிச்சையில் உள்ளனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்னையால் மனமுடைந்து விஷம் குடித்தது தெரிந்துள்ளது. மதியம் 2:00 மணிக்கு பூச்சி கொல்லி மருந்து குடித்திருக்கலாம் என விசாரணையில் தெரிந்துள்ளது.

உறவினர் ரவிச்சந்திரன் கூறியதாவது: மதியத்தில் இருந்து இரவு வரை வீடு பூட்டியே கிடந்தது. சந்தேகப்பட்டு கதவை உடைந்து உள்ளே சென்றோம். ஒன்பது பேரில் நான்கு பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர். '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து ஒரு மணி நேரமாக வரவில்லை. நான்கு பேரையும் இரு சக்கரவாகனத்திலும், மினிபஸ்சிலும் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தோம். தற்கொலைக்கு காரணம் கடன் பிரச்னையாக இருக்கலாம்.இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...