Friday, November 7, 2014
Thursday, November 6, 2014
இந்த நாள் என்னுடைய நாள்...கண் கலங்கவைத்த கண்ணதாசன்!

கல்யாணம் ஆகி பத்துவருஷத்துல மனைவி உடம்பு சரியில்லாம தவறிட்டாள், ஒரு பெண் பிள்ளை, இரண்டு ஆண் குழந்தை. சொந்தக்காரங்க வற்புறுத்தலால பிள்ளைகளை பராமரிக்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளுக்கும் ஒரு பெண் குழந்தை... அஞ்சாங் கிளாஸ் வரை நாமதான் படிக்காம இப்படி வயல்லகிடந்து கஷ்டப்படுறோம். பிள்ளைகளையாவது நல்லா படிக்க வைக்கணும்னு கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களையெல்லாம் வித்து காலேஜ் சேர்த்தேன்.....ஆனா...?"- ராஜாவின் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீர்த்துளிகள் துயரத்தோடு சரிந்துவிழுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு அருகில் இருக்கும் ஜம்புக்குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயியான ராஜா தன்னுடைய மூத்த மகன் கண்ணதாசனை அவனது விருப்பபடியே டாக்டராக்கிவிட வேண்டுமென்று நினைத்த அற்புதமான அப்பா. அதிர்ஷ்டவசமாக அர்மோனியா நாட்டில் உள்ள எரேவன் மருத்துவக்கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.'மகன் டாக்டராகி ஸ்டெதஸ்கோப்போடு வருவான்!' என்று கனவுகளை நிரப்பி வைத்திருந்த ராஜா, மகன் சவப்பெட்டியில் வீடு வந்து சேர்ந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகவில்லை.
என்ன நடந்தது....? தொண்டையை செருமிக்கொண்டு பேசுகிறார் ராஜா. ‘‘பிள்ளைங்க எதிர்காலம் நம்மைப்போல இருக்கக்கூடாதுன்னு 4 பிள்ளைகளையும் தனியார் பள்ளியில சேர்த்தேன். அந்த செலவுகளை என்னால சமாளிக்க முடியாம கொஞ்ச கொஞ்சமா என் பெயரில் இருந்த நிலங்களை வித்துதான் படிக்கவச்சேன். மூத்த மகன் கண்ணதாசனுக்கு படிப்புனா உசுரு. தன்னோட அம்மா சின்ன வயசிலேயே உடம்பு சரியில்லாம இறந்ததால தான் டாக்டராகி ஏழைமக்களுக்கு இலவசமா சிகிச்சையளிக்கணும்னு அடிக்கடி சொல்வான்.

அதுக்காக கஷ்டப்பட்டு படிச்சான். ஆனாலும் மார்க் குறைஞ்சதால தமிழ்நாட்ல மெடிக்கல் சீட் கிடைக்கல, அப்பதான் அர்மோனியா நாட்டில் படிக்க வாய்ப்பு கிடைச்சது. முடிந்தவரை செலவு செய்வோம். பத்தாததுக்கு கல்விக்கடன் வாங்கி சமாளிச்சிடலாம்னு முடிவு செய்து அவனுடைய முதல் வருடம் கல்லூரி கட்டணம் மற்றும் விசா, தங்குவதற்கான செலவுகள்னு கிட்டத்தட்ட 7 லட்சரூபாயை கடைசியாக இருந்த நிலங்களையும் விற்று செலவு செய்தேன்.
பையனை கல்லூரிக்கு அனுப்பி வைத்துவிட்டு போச்சம்பள்ளியில இருக்கிற இந்தியன் வங்கியில லோன் கேட்க போனா, அப்ளிகேஷன் கூட அவங்க தரலை. ரொம்ப இழுத்தடிச்சாங்க. இதை அறிந்த நண்பர்கள் சிலர் “நீ இப்படியே அலைஞ்சுகிட்டு இருந்தா இவுங்கள்ட்ட லோன் வாங்க முடியாது நீதிமன்றத்துல ஒரு கேஸை போடு அப்பதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க. சென்னை உயர் நீதி மன்றத்துல வழக்கு போட்டு 20 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கலாம்னு ஒரு தீர்ப்பும் வாங்கினேன். ஆனால் நான் கேஸ்போட்டதால வங்கி அதிகாரிகள் என் மேல கோபம் ஆகிட்டாங்க.
தீர்ப்புப்படி அப்ளிகேஷன் தரக்கூட ரொம்ப தாமதிச்சாங்க. அப்புறம் லோன் கிடைக்க இதெல்லாம் கொண்டுவாங்கனு ஒரு பட்டியல் கொடுத்தார் மேனேஜர். அதில் ரத்தசொந்தங்களில் சிலரிடமிருந்த ஷ்யூரிட்டி தவிர மற்ற எல்லாவற்றையும் தயார் செய்தேன். பரவாயில்லைன்னு முதல்ல அப்ளிகேஷனை வாங்கின மேனேஜர், ஒருமாதம் கழித்து அதையே காரணம் காட்டி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
இதற்கிடையில் என் மகன் முதல்வருடத்தை முடிச்சிட்டான். இரண்டாவது ஆண்டிற்கான கட்டணம் கட்ட வேண்டிய சூழல், என்னால் முடியவில்லை. அவனது சூழலை புரிந்துகொண்டு அவனது சக நண்பர்கள் சேர்ந்து கட்டணம் முழுவதையும் கட்டிவிட்டார்கள். மற்ற செலவுக்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் என் சம்பாத்யத்திலிருந்து அனுப்பினேன். இதற்கிடையில் ரத்த சொந்தத்தில் ஷ்யூரிட்டி கொடுக்க ஆள் இல்லை என்பதால் என் நண்பர் ஒருவர் தருவதை மேனேஜரிடம் சொன்ன போது முதலில் சம்மதித்தார். எனது வீடு, என் நண்பரது சொத்து என ஷ்யூரிட்டி கொடுத்தோம். இதோ.. அதோ.. என இழுத்தடித்தார்களே தவிர லோன் கிடைக்கவில்லை. அதற்குள் பழைய மேனேஜர் அனந்தராமன் என்பவர் மாற்றலாகி, புதியதாக சீனிவாசன் என்பவர் பொறுப்பேற்றார். மீண்டும் பழைய பல்லவி.
இதற்கிடையில் மூன்றாவது ஆண்டு தொடங்கியும் பணம் கட்ட முடியவில்லை, வங்கியிலிருந்து கடன் பெற முடியாது என்பதை உணர ஆரம்பித்தேன். இடையில் இதையெல்லாம் சிந்தித்து கண்ணதாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. கடைசியில் பணம் கிடைக்கவில்லையென்ற தகவலை அவனிடம் சொன்னபோது நான் இந்தியா திரும்பி வந்துடுறேம்ப்பானு சொன்னான், நானும் என்னென்னவோ முயற்சி பண்ணியும் முடியலை, கூடிய சீக்கிரம் லோன் வந்துடும்னு அவுங்க சொல்றதுக்கே மூன்று வருஷம் ஆகிடுச்சி.
எப்படியும் பணம் புரட்டிடலாம்னு நம்பிக்கையா இருந்த ஒரு நாள் ராத்திரி “உங்க பையன் தற்கொலை பண்ணிக்கிட்டான்” னு போன்ல தகவல் வந்துடுச்சி. என கண்ணீரை துடைத்தபடி பேசினார். வங்கிக்கடன் தருவதா சொல்லி, தேவையில்லாம அதை இழுத்தடிச்சி ,அநியாயமா என மகன் உயிரை பறிச்சிடுச்சி அந்த வங்கி. எப்படியோ என் பையன் தியாகியா இருந்துட்டு போறான். ஆனா இது மாதிரி இன்னொரு மாணவன் பாதிக்கப்படக்கூடாது" என்று அழுத்தமாக சொல்கிறார் ராஜா.

சொந்த ஊருக்கு வந்த கண்ணதாசனின் உடலுக்கு ஊர் மக்கள் அனைவரும் கூடி அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வங்கிக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள். தனது மகனின் படிப்புக்காக இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டார் ராஜா. வங்கிக்கடன் கிடைக்காததால் உயிரையும் விட்டுவிட்டார் கண்ணதாசன். வங்கி தரப்பில் அவர் நாங்கள் கேட்டத்தொகைக்கு ஷ்யூரிட்டி தரவில்லையென்று காரணம் சொல்லப்படுகிறது. எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் என கோஷமிடும் இந்தியாவில் அதன் கீழ் இயங்கும் ஒரு வங்கி ஒரு இளைஞனுக்கு தன் கோர முகத்தை காட்டி கொன்றிருக்கிறது.
“படிப்பதற்கு உனக்கு உரிமை இல்லை’ என்று ஒருநாள் தனது டைரியில் எழுதிய கண்ணதாசன், இன்னொரு நாள் ஏதோ ஒரு நம்பிக்கையில் “இந்த நாள் என்னுடைய நாள். இந்த யுனிவர்சிட்டியிலிருந்து செல்லும்போது டாக்டர் பட்டத்துடன்தான் செல்வேன்“ என்று எழுதியிருக்கிறார். கடைசி வரை வங்கியின் மீது நம்பிக்கை வைத்து கடைசியில் அந்த நம்பிக்கைக்கு தன் வாழ்க்கையையே தொலைத்திருக்கிறார் கண்ணதாசன்.
லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் நம்பி இருக்கும் கல்விக்கடனை விதிமுறைகளை சொல்லி மறுப்பது இனியாவது தவிர்க்கப்பட வேண்டும். சொத்தை அளவிட்டு கல்விக் கடன் வழங்காமல் மாணவனின் திறனை அளவிட்டு கல்விக்கடன் தரப்பட வேண்டும் என்பதை அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறான் கண்ணதாசன். அதற்கு அவன் கொடுத்த விலை அவனது உயிர்.
எம்.புண்ணியமூர்த்தி
படங்கள் : வி.சதீஸ்குமார்

கதவுகள் இல்லாத கிராமம்! கூரை இல்லாத ஆலயம்...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து கமுதி செல்லும் வழியில், அபிராமம் கிராமத்தில் இருந்து வடக்கு நோக்கி 4 கி.மீ தொலைவில், பாப்பனம் கிராமத்தில் அமைந்திருக் கிறது ஒரு கோயில். இந்தக் கோயிலின் விசேஷமே, கோயிலுக்குக் கதவுகள் இல்லை என்பதுதான்.
சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் வசித்த மக்கள், பஞ்சத்தின் காரணமாக ஊரை விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது, அதுவரை அவர்கள் வழிபட்டு வந்த முனியப்ப சுவாமி கோயிலில் இருந்து ஓர் அசரீரி, ''என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்'' என்று ஒலித்ததாம். அப்படியே முனியப்ப சுவாமியையும் தங்களுடன் எடுத்துக்கொண்டு புறப்பட்ட மக்கள் வந்து சேர்ந்த இடம்தான் இந்த பாப்பனம் கிராமம்.
பாப்பனம் கிராமத்துக்கு வந்ததும் மக்கள் செய்த முதல் வேலையே, தாங்கள் வழிபட்டு வரும் முனியப்ப சுவாமிக்கு ஒரு கோயில் கட்டியதுதான். கோயிலைக் கட்டி முடித்துக் கதவு வைக்க இருந்தபோது மறுபடியும் ஓர் அசரீரி, ''என் கோயிலுக்கு கதவு வைக்க வேண்டுமானால் தங்கத்தில்தான் வைக்க வேண்டும்'' என்பதாகக் கேட்டது. கோயிலுக்குத் தங்கத்தில் கதவு வைக்க யாரால் முடியும்? எனவே, கோயிலுக்குக் கதவுகள் வைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். சுவாமியின் கோயிலுக்கே கதவு இல்லாதபோது தங்களுடைய வீட்டுக்கு மட்டும் கதவு எதற்கு என்று நினைத்த மக்கள், தங்கள் வீடுகளுக்கும் கதவுகள் வைக்காமலேயே விட்டுவிட்டனர். இருந்தும், எந்த அசம்பாவிதமும் இங்கே நிகழாமல் காத்து வருகிறார் முனியப்பசாமி.
இந்தக் கிராமத்து மக்கள் யாரும் கட்டிலில் உறங்குவது இல்லை. மண் தரையில்தான் உறங்குகிறார்கள். வெளியூரைச் சேர்ந்தவர்கள் இந்த ஊருக்கு வந்தால், அவர்களும் தரையில்தான் உறங்கவேண்டும்.
அறுவடைக் காலத்தில், முதலில் கொஞ்சம் அறுவடை செய்து முனியப்ப சுவாமிக்குக் காணிக்கை செலுத்திய பிறகே அறுவடையைத் தொடர்கிறார்கள். இதனால் ஆண்டுக்கு ஆண்டு விளைச்சல் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள்.
வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்துகொண்டு முனியப்ப சுவாமியை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடுவதாகவும் பரவசத்துடன் கூறுகிறார்கள்.
முனியப்ப சுவாமி கோயிலுக்கு அருகிலேயே அரியநாச்சிஅம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு கூரை இல்லை. மக்கள் பலமுறை இந்தக் கோயிலுக்கு கூரை அமைத்தும், கூரை இடிந்து விழுந்துகொண்டே இருந்தது. அதனாலேயே இன்று வரை அக்கோயில் கூரை இல்லாமல்தான் இருக்கிறது. இந்த அரியநாச்சி அம்மனுக்கு மார்கழி மாதம் பொங்கல் வைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும் என்கிறார்கள்.
கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை
தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே
சொல்
பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?
மூளையில் எப்போது
முள்முளைத்து உனக்கு?
மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே
நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்
சாகவில்லை
நீயே அழுகிறாய்
கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை
உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?
மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?
உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா
அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்
உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்
பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?
வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பியபோது
கைந்நிறையப் பூக்கள்
இப்போதென்ன...
பைந்நிறைய
சவப்பெட்டி ஆணிகள்...?
ஓ
வாழ்க்கையோடு
உடன்பாடு
மனிதரோடுதான்
முரண்பாடா?
மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே
சொல்
பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?
மூளையில் எப்போது
முள்முளைத்து உனக்கு?
மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே
நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்
சாகவில்லை
நீயே அழுகிறாய்
கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை
உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?
மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?
உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா
அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்
உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்
பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?
வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பியபோது
கைந்நிறையப் பூக்கள்
இப்போதென்ன...
பைந்நிறைய
சவப்பெட்டி ஆணிகள்...?
ஓ
வாழ்க்கையோடு
உடன்பாடு
மனிதரோடுதான்
முரண்பாடா?
மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி
- கவிஞர் : வைரமுத்து
சென்னை, புறநகர் பகுதிகளில் மக்களை அலறவைக்கும் வெறிநாய்கள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெறிநாய்களால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சென்னை, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், பூந்தமல்லி, மதுரவாயல், போரூர், செங்குன்றம், புழல், மாதவரம், திருவொற்றியூர், எண்ணூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
பாஸ்ட் புட் மற்றும் இறைச்சி கடைகளில் கிடைக்கும் மிச்சம் மீதியுள்ள மாமிச கழிவுகளை சாப்பிடும் தெரு நாய்கள் நாளடைவில் கிருமிகளால் தாக்கப்பட்டு வெறிநாய்களாக மாறி விடுகிறது. இவை இரவு பகல் பாராமல் தெருக்களில் வெறி கொண்டு திரிகின்றன. இரவு நேரங்களில் வேலை முடிந்து இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பும் தொழிலாளர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. கடைக்கு செல்லும் பெண்கள், முதியோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் நாய்களின் தொல்லைக்கு ஆளாகின்றனர். தொல்லை தரும் நாய்களை ஊசி மற்றும் விஷம் வைத்து கொல்லக் கூடாது என மிருகவதை சட்டம் உள்ளது. அதையும் மீறி கொன்றால் புளுகிராஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மூலம் இனப்பெருக்கத்தை தடுக்கிறார்கள்.
அப்படி இருந்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. கடந்த 2009ல் நாய்க்கடிக்கு 9 பேர், 2010ல் 12 பேர், 2011ல் 21 பேர், 2012ல் 28 பேர், 2013ல் 33 பேர், 2014ல் இதுவரை 36க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி, நகராட்சிகளில் புகார் செய்தாலும் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை வந்து லாரியில் நாய்களை பிடித்து செல்கின்றனர். பின்னர் அவற்றை காட்டு பகுதிகளில் விட்டு விடுகின்றனர். இந்த இடைவெளியில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வதால் அவை முன்பைவிட வெறி கொண்டு அலைகின்றன. இதனால் மக்களை விரட்டி கடிக்கின்றன.
மாநகராட்சி, நகராட்சி சுகாதார மையங்களில் நாய்க்கடி, பாம்புக் கடிக்கு ஊசி மருந்து இல்லை. புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்று தான் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால் ஏழை மக்களுக்கு பணம் அதிகம் செலவாகும் என்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் மட்டும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன.
அவற்றை அவ்வப்போது பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து வருகிறோம். வருடத்துக்கு 60,000 நாய்களுக்கு மேல் கருத்தடை ஆபரேஷன் செய்கிறோம் என்றனர்.
எனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொல்லை தரும் வெறிநாய்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்க்கடி, பாம்புக் கடிக்கு சுகாதார மையங்களில் ஊசி மருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
அந்தக் காலத்து படம் மாதிரி இல்லபா

பொங்கல்னா ஜல்லிக்கட்டு. தீபாவளின்னா சினிமா டிக்கெட்டு’அப்படினு ஊர்ல பெரியவங்க சொல்லுவாங்கோ. ‘அதான் தீபாவளி முடிஞ்சு போச்சுல அதுக்கு இப்ப இன்னா?’ அப்படிங்கிறீங்களா? தீபாவளிதான் முடிஞ்சுபோச்சே. தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் இன்னும் ஓடிக்கிட்டுத்தானே இருக்கு. கூல் ட்யூட், ஓகே… ஓகே… ஐ வில் கம் டூ த பாயிண்ட்...
இன்னைக்கு தீபாவளின்னா புது ட்ரெஸ், பார்ட்டி, பீச், அப்படி இப்படினு ப்ரெண்ட்ஸோட பயங்கரமா செலிபிரேட் பண்ணியிருப்பீங்க. 20 வருஷத்துக்கு முன்னாடி இன்னாதான் இருந்தாலும் சினிமாதான் ஸ்பெஷல். இப்ப எல்லாம் முன்னாடியே ரிசர்வ் பண்ணி, போட்டிருக்க சட்டைல சின்ன மடிப்புக்கூட கசங்காம படம் பார்த்துறோம்.
ஆனா முன்னாடி அப்படி இல்ல. அதுலயும் ரஜினி, கமல் படம் ரிலீஸ் ஆச்சுன்னா போதும். சும்மா ஏரியாவே பட்டையைக் கிளப்பும். காலைல சன் எல்லாம் வர்றதுக்குள்ளே ப்ரெஷ், பேஸ்ட், டவல் எடுத்துகிட்டு தியேட்டருக்குப் போயிருவாங்க. போலீஸ் எல்லாம் வந்தாலும் ஃபேன்ஸ் அடங்க மாட்டாங்க. ஒருத்தர் மேல ஒருத்தர் ஏறி ஒரு வழியா டிக்கெட் எடுத்துருவாங்க.
டிக்கெட் கிடைக்காம வீட்டுக்குப் போறவங்களும் உண்டு. ஜல்லிக்கட்டுல காளைய அடக்குற மாதிரி தீபாவளி ஃபர்ஸ்ட் ஷோல டிக்கெட் எடுக்குறது. டிக்கெட் எடுத்தாலே மாஸ்தான். படம் எப்படியிருந்தா இன்னா? டிக்கெட் கெடச்ச சேடிஸ்பேக் ஷன்ல திரும்பி வந்துருவாங்க.
இன்னொரு முக்கியமான பாயிண்ட் அப்போ சினிமான்னா ‘ஒரு கதை’ சொல்வாங்க. ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின் இருப்பாங்க. அப்பா, அம்மா எல்லாம் இருப்பாங்க. நம்ம ஊர் மாதிரி ஒரு ஊர் இருக்கும். ஆளுங்க இருப்பாங்க. அப்புறம் ஒரு வில்லன் இருப்பான். வில்லனுக்கும் ஹீரோவுக்கும் சண்டை வரும். கடைசில ஹீரோ ஜெயிப்பார். ஹீரோயின மேரேஜ் பண்ணுவார்.
இல்லனா வில்லன் அபேஸ் பண்ண ஹீரோவோட சொத்தை வில்லன ஜெயிச்சு வாங்கிருவார். போலீஸ் கடைசி சீன்ல வந்து, “யூ ஆர் அண்டர் அரஸ்ட்’’ அப்படி சொல்லி வில்லன கைது பண்ணிக் கூட்டிட்டுப் போவாங்க. இல்லன்னா ஹீரோவின் ப்ரெண்ட், துரோகம் பண்ணி செகண்ட் ஆஃப்ல எனிமியா மாறுவான். கடைசில ஹீரோ நண்பன ஜெயிச்சு அவர திருத்துவான்.
இது மாதிரி ஏகப்பட்ட ஸ்டோரீஸ். இன்னாதான் சொன்னாலும் அந்தக் காலத்துப் படத்துல ஒரு ஸ்ட்ரெயிட்டான கதை இருக்கும். மேட்டர் இன்னான்னா, குறியீட்டுப் படம், அம்பு போட்ட படம்லாம் அப்போ இல்ல. அதான் அந்தக் காலத்து பெருசுங்க இப்ப உள்ள எந்தப் படம் பார்த்தாலும், “அந்தக் காலத்து படம் மாதிரி இல்லபா” அப்படிம்பாங்க.
இப்ப ஸ்டோரி இல்லாத படம் எடுக்குறதுதான் டிரெண்ட். சோடா தெளிச்சி, தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிற மாதிரி. கதை இன்னான்னு தெரியாத மாதிரி எடுக்கணும். அதான் இப்ப சேலஞ்ச். அப்படியே ட்ரை பண்ணாலும் பார்க்க முடியாது. அது வேற மேட்டர். இன்னாபா ஒண்ணும் புரியல அப்படினு எவனாது கேட்டா ‘பின் நவீனத்துவப் படம்’ அப்படிங்கணும். ஃபுல் எனர்ஜியையும் போட்டுப் படம் பார்த்தாலும் புரியாது; புரியக் கூடாது.
இப்ப புதுசா இன்னொரு குரூப் கிளம்பியிருக்கு. படத்தைப் ப்ரேம் பை ப்ரேம் பிரிச்சு மேஞ்சு, ஹீரோவோட ஜீன்ஸ் கலர்ல இது இருக்கு. ஹீரோயினோட ஸ்டிக்கர் பொட்டுல அது இருக்குன்னு படத்தை எடுத்த டைரக்டருக்கே தெரியாத குறியீடெல்லாம் சொல்லுவாங்க. இன்னாபான்னு கேட்டா குறியீட்டுப் படம்பாங்க. இந்த மாதிரி படத்துக்கு இன்னயின்ன குறியீடு எல்லாம் இருக்குன்னு படம் பார்த்துட்டு வந்து பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்ருவாங்க. அத பாத்துட்டுப் படம் பார்க்கப் போறதால சேதாரம் இருக்காது.
Subscribe to:
Comments (Atom)
NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra
NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra Published On 4 Apr...
-
Chennai lockdown news: Today's updates from your city TIMESOFINDIA.COM | Apr 3, 2020, 07.59 AM IST Amid prevalent chaos an...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்! நமது நிருபர் நோய்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்... தவறான வா...