Thursday, March 5, 2015

Andhra Pradesh News on March 5, 2015

MBBS study becomes costly in the State

Medical education is going to be more costly with the State Government has decided to hike the convener quota seats of private medical colleges. According to sources, 50 per cent of convenor seats are being filled up and out of the rest of the 50 per cent seats 15 per cent (NRI) quota and 35 percent under management quota.
With the latest decision, student has to shell down Rs.11 lakhs for management quota seats which was being filled up with Rs.5.5 lakh making cent per cent hike. The Government has decreased the fees in convenor quota seats which are being filled up on the basis of EAMCET ranks from Rs.60,000 to rs.10,000. 

B Category seats: The 10 per cent B category quota seats were so far being filled up by the government and now it was entrusted to private managements. With the fresh decision of the government there would be two entrance test. One on the basis of EAMCET and the other EAMCET-Association of Colleges) for filling up of management quota seats.

'பீர் உண்டு...பீப் கிடையாது!' - உணவை தீர்மானிக்கும் அரசாங்கங்கள்

Vikatan.com


மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதைக்கூட அரசாங்கங்கள் தீர்மானிப்பது என்பது இந்தியாவில் வெகு காலங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது மகாராஷ்ட்ராவில் 'பீப்' எனப்படும் மாட்டிறைச்சி குறித்து மூச்சே விடக்கூடாது என்று கடுமையான தடையை விதித்து இருக்கிறார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னர்ப் பி.ஜே.பி.-சிவசேனா அம்மாநிலத்தை ஆட்சி செய்தபொழுது கொண்டு வந்த MAPA (maharashtra animal preservation act) சட்டத்திருத்தம், இப்பொழுது ஜனாதிபதியின் ஒப்புதலில் அமலுக்கு வந்திருக்கிறது.1976 -ல் இச்சட்டம் இயற்றப்பட்டபொழுது பசுவைக் கொல்ல மட்டும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இப்பொழுது காளை மாடுகளையும் இணைத்து இருக்கிறார்கள்.

பசு என்பது புனிதமான அம்சமாக இந்துக்களால் பார்க்கப்படுகிறது என்பது இதற்கு வைக்கப்படுகிற வாதம். ரிக் வேதத்தில் பசுவை புனிதமாகக் கருத வேண்டும் என்று சொல்லும் பாடல்கள் உண்டு. அதே சமயம் வேதகாலத்தில் பசு, எருமைகளைக் கூட்டம் கூட்டமாகப் பலியிடுவதும், உண்பதும் இயல்பாக நடந்த ஒன்று.

அம்பேத்கரின் வரிகளில்:

"ரிக்வேத கால ஆரியர்கள் பசுவை உணவுக்காகக் கொன்றார்கள் என்பதும், எக்கச் சக்க பீப் உண்டார்கள் என்பதும் ரிக் வேதத்திலேயே தெளிவாக இருக்கிறது. ரிக் வேதத்தில் இந்திரன் சொல்கிறார், 'அவர்கள் பதினைந்து கூட்டல் இருபது காளைகளை உண்ண சமைக்கிறார்கள்' (X. 86.14). ரிக் வேதம் (X.91.14) அக்னிக்குக் குதிரைகள், எருமைகள், காளைகள், பசுக்கள் பலியிடப்பட்டன என்று சொல்கிறது.

சதப்த பிராமணத்தில் வரும் பாடலே பசுவை புனிதமாக ரிக் வேதத்தில் குறித்தது. ஆனாலும், பலரும் பீப் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. ஆரியர்களின் மகாரிஷி யான யக்ஞவல்கியரும் பீப் சாப்பிடுபவராக இருந்தபடியால், அவரிடம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபொழுது, " நான் அம்மாமிசத்தை உண்கிற ஒருவனாக இருக்கிறேன். அதுவும் இளசாக இருந்தால் கட்டாயம் உண்பேன்." என்கிறார்.

சரி! அம்பேத்கர்தான் பொய் சொல்கிறார் என்று ஒரு போடு போடலாம் என்று பார்த்தால், விவேகானந்தரும் கவிழ்த்து விட்டார். அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்: "பழைய சடங்குகளின் படி பீப் சாப்பிடாத இந்து நல்ல இந்துவே கிடையாது என்று கருதப்பட்டது. சமயங்களில் அவன் ஒரு பெரிய மாட்டையே பலி கொடுத்து அதைச் சாப்பிட வேண்டி இருந்தது." என்கிறார்.

அக்பர், 1586-ல் ஒரு பிர்மான் போட்டு பசுவதையைத் தடை செய்திருக்கிறார். ஹைதர் அலி ஆட்சியிலும் பசுவதைத் தடை செய்யப்பட்டே இருந்திருக்கிறது. பசுவைக்கொன்றால் கைகளை வெட்டுகிற அளவுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 1857 புரட்சியின் பொழுது இந்துக்களின் நம்பிக்கைகளை மதித்துப் பசுவதையைத் தடை செய்வதாகப் பகதூர் ஷா அறிவித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஆரிய சமாஜ இயக்கம், பசுவதைக்கு எதிராக குரலெழுப்பி, அதனையே முக்கிய அரசியலாக மாற்றியது. ஐக்கிய மாகாணத்தை (தற்போதைய உத்தரபிரதேசம்) அந்த இயக்கம் பெரிய கலவர பூமியாக ஆக்கி, மத இணக்கத்தைக் குலைத்தது. பசுவை காப்பாற்றுவோம் என்கிற கோஷத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள், பழங்குடியினர் என்று எண்ணற்றோரின் உணவுத் தேர்வுகள், விருப்பங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை.

காந்தி, தீண்டப்படாதவர்கள் மது அருந்துவது, மாமிசம் உண்பது முதலிய அசுத்தமான செயல்களைச் செய்யக்கூடாது என்றும், இந்து மதத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்று பசுவைக் காப்பது என்றும் 1927-ல் சொன்னார். ஆனால், எந்த வகையிலும் பசுவதையைச் சட்ட ரீதியாகவோ, கட்டாயத்தின் பெயரிலயோ தடை செய்வதை அவர் எதிர்த்தார். நல்லெண்ணம், புரிதல் ஆகியவற்றின் மூலமே அதைச் சாதிக்க முடியும். சட்ட ரீதியான தடை இன்னமும் பசுவதையை அதிகப்படுத்தவே செய்யும் என்று அவர் கருதினார்.

விடுதலைக்குப் பிறகு அறுபதுகளில் பல்வேறு மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போடப்பட் டன. இதனை எதிர்த்துச் சுப்ரீம் கோர்ட்டில் முகமது ஹனீப் குரேஷி தொடர்ந்த வழக்கில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் (குறிப்பாக இஸ்லாமிய கறி விற்பனையாளர்கள்) மனு செய்திருந்தார்கள். அதில் தங்களுடைய அடிப்படை சொத்துரிமை, வியாபாரம், தொழில் உரிமைகள், மத உரிமை ஆகியவற்றை இந்தத் தடைகள் பாதிப்பதாகச் சொன்னார்கள். அதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

குரானை தன் பார்வையில் அணுகிய உச்சநீதிமன்றம், பசுவை பலிகொடுப்பது ஒன்றும் இஸ்லாமியர்களுக் குக் கட்டாயமில்லை என்று சொல்லிவிட்டது. அதே சமயம் பொருளாதார ரீதியாக மாடுகளைக் கொல் லாமல் பராமரிப்பது கடினமான ஒன்று என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டு, முழுமையாகப் பசுவை கொல் வதைத் தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புத் தந்தது.

1967 காலகட்டத்தில், பசுவதையை முழுமையாக அமல்படுத்தலாமா என்பது குறித்து முடிவு செய்ய, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர், வெண்மைப் புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பூரி சங்கராச்சாரியார் ஆகியோர் உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

பார்கவா எனும் புகழ்பெற்ற உயிரியல் விஞ்ஞானியிடம் கோல்வால்க்கர், "எப்படி மாமிசமும், பாலும் உற்பத்தி ஆகின்றன?" என்று கேட்க, "இரண்டும் ஒரே இடத்தில் இருந்துதான், ஒரே முறையிலேயே உற்பத்தி ஆகின்றன." என்று பார்கவா சொல்ல, "பிறகு மாமிசத்தைப் புசிக்கிற நீங்கள் ஏன் பாலை மட்டும் சாப்பிடக்கூடாது?" என்று கோல்வால்க்கர் கேட்க, பார்கவா சூடு குறையாமல், "பாலை மட்டும் அருந்தும் நீங்கள் ஏன் மாமிசம் சாப்பிடக்கூடாது?" என்று திருப்பிக்கேட்டார்.

வர்கீஸ் குரியனின் எதிர்ப்பு வேறு வகையானதாக இருந்தது. நோயுற்ற பசுக்களை, வயதாகிப் போன மாடுகளைப் பராமரிக்க ஆகும் செலவு அதிகம் என்பதால் அவற்றைக் கொல்வதற்குத் தேவை உண்டு என்று அவர் கருதினார். கோல்வால்க்கர் அவரிடம், "குரியன் நான் பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பசுவதைக்கு எதிராகப் பெற களமிறங்கிய பொழுது ஒரு பெண் சுடும் வெய்யிலில் வீடு வீடாகச் சென்று அதற்காக உழைப்பதை பார்த்தேன்.

இந்த நாட்டைக் கலாசார ரீதியாக இணைக்க இதுவே ஆயுதம் என்று புரிந்தது. பசுவதையை அமல்படுத்தி எனக்கு வெறும் ஐந்து வருடங்கள் கொடுங்கள். நான் நாட்டையே ஒற்றுமைப்படுத்திக் காண்பிக்கிறேன்." என்று படுத்தி எடுத்தார். குரியன் அசையவேயில்லை. (எனக்கும் ஒரு கனவு இருக்கிறது-குரியனின் சுயசரிதை) மொரார்ஜி தேசாய் ஆட்சிக்கு வந்ததும் அந்தக் கமிட்டியை சத்தமேயில்லாமல் கலைத்து விட்டார்.

பசுக்களைக் கொல்லும் வயதை இருபத்தி ஐந்து என்று சில அரசுகள் ஏற்றி சட்டமியற்றிய பொழுது, பதினைந்து வயதோடு ஒரு மாட்டின் பயன்பாடு நின்றுவிடும்பொழுது இப்படிச் சட்டம் போடுவது முழுத்தடைக்குச் சமமானது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.

ஆனால், மிர்சாபூர் மோட்டி குரேஷி கசாப் வழக்கில், (2005) நவீன தொழில்நுட்பம் பசுக்களின் வயதை அதிகப்படுத்தி விட்டது என்றும், பசு பால் கொடுப்பது நின்று போனாலும் அதன் சாணம், கோமியம் கோஹினூர் வைரத்தைப் போல விலை மதிக்க முடியாதது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லகோட்டி அடங்கிய பெஞ்ச் கருத்து தெரிவித்தது.

குஜராத் அரசு கொண்டு வந்த தடைச்சட்டத்தை முழுமையாகச் செல்லும் என்று அத்தீர்ப்பு அறிவித்தது. ஹின்சா விரோதக் வழக்கில், சமண விழாக்களின் பொழுது மாடுகளை வெட்டும் கூடங்களை மூடியது சரியென்ற உச்சநீதிமன்றம், முழுமையான பசுவதைத்தடை என்பது சட்டரீதியாகத் தேவையற்றதும், விரும்பத்தக்கதும் இல்லை என்றுவிட்டது.

இந்தியா முழுக்கப் பசுவதையை வெவ்வேறு வகைகளில் இருபத்தி நான்கு மாநிலங்கள் தடை செய்திருக்கின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் (சட்டப்பிரிவு 48)-ல் அதற்கு இடம் இருக்கிறது. மிகக்கடுமையாக இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்கள் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான். ராஜஸ்தானில் ஈகைத்திருநாள் அன்று இஸ்லாமியர்கள் வெட்டி உண்ணும் ஒட்டகத்தைப் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவித்துப் பிஜேபியின் வசுந்தரா ராஜே அரசு சட்டம் இயற்றியது.

மத்தியபிரதேச அரசு, 2012-ல் பசுவைக் கொன்றால் மூன்று முதல் ஏழு வருட சிறைத்தண்டனை என்று சட்டம் கொண்டுவந்தது. தான் நிரபராதி என்று நிரூபிக்கும் பொறுப்பும் குற்றஞ்சாட்டப்பட்டவர் வசமே என்றது அச்சட்டம். ஹெட் கான்ஸ்டபிள் அளவில் துவங்கி ஆயுதம் ஏந்தி சோதனை செய்யும் உரிமையையும் அந்தச் சட்டம் வழங்கியது.

264.6 பில்லியன் ரூபாய் மதிப்புக் கொண்ட துறையாகத் திகழும் பீப் ஏற்றுமதியை மதச்சாயம் பூசி காலி செய்யக் கிளம்பி இருக்கிறார்கள். உலகில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மாமிச உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வியாபாரத்தை இது பெருமளவில் பாதிக்கும். தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் குடும்பங்கள் பெரிய அளவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அவர்களுக்குப் புரதத்தை அதிகளவில் வழங்குவது பீப் தான். எழுபது சதவிகித புரத ஆற்றல் தலித் பிள்ளைகளுக்குப் பீப் மூலமே கிடைக்கிறது.

மட்டனின் விலையில் மூன்றில் ஒரு பங்கே இருக்கும் பீப் இனிமேல் மகாராஷ்ட்ரா ஒடுக்கப்பட்ட இன பிள்ளைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால், பசுவதை மட்டுமே தடை செய்யப்பட்டு பிற மாட்டைக் கொல்லலாம் என்கிற சூழல் இருந்தது. இதற்குத்தான் தற்போது மகாராஷ்ட்ரா அரசு தடை போட்டுள்ளது.

பசு மட்டுமல்லாது மாட்டு இனத்தையும் கொல்லவேக்கூடாது என்று அரசு இயற்றியிருக்கும் சட்டம், ஐந்து வருட சிறைத்தண்டனையை வழங்குகிறது. இதனால் சுற்றுலாத்துறை பெருமளவில் இதனால் பாதிக்கப்படும். பீப்பும், பீரும் செமையான காம்பினேஷனாக இருக்கும் சூழலில் இந்தச் சட்டம் அதற்கு ஆப்பு வைத்துள்ளது. வெளிநாட்டவர்கள் இந்தியாவின் முக்கியச் சுற்றுலாத்தலமான மும்பைக்கு வர இனிமேல் யோசிப்பார்கள்.

பெரிய அளவில் கறி ஏற்றுமதியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த குரேஷி (இஸ்லாமிய சமூகத்து வியாபாரிகள்) இதனால் பாதிக்கப்படுவார்கள். பலர் வேலை இழப்பதும் நடக்கவிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே தன்னுடைய உணவுத்தேர்வுகள், மத நம்பிக்கைகள், சொந்த விருப்பங்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் இந்த வதைச்சட்டங்கள் மனிதர்களையே வதைக்கின்றன!

- பூ.கொ.சரவணன்

இப்படி ஒரு மன உணர்வா?

logo

கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி டெல்லியில் நடந்த 23 வயது மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் கற்பழித்து, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட துடிதுடிப்பு இன்னும் மாறவில்லை. அதன் எதிரொலியாகத்தான் நாடு முழுவதும் இன்று பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2013–ம் ஆண்டு பெண்கள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதன்தொடர்ச்சியாக இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த படுபாதகத்தை செய்த 6 பேர்களில் ராம்சிங் என்பவன் ஜெயிலிலேயே தற்கொலை செய்துகொண்டான். அக்ஷய் தாகூர், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, இப்போது அப்பீலில் இருக்கிறது. ஒரு குற்றவாளி 17 வயதுடையவன் என்பதால் இப்போது 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த நிலையில், அந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் இருக்கும் சம்பவம் நடந்த அந்த பஸ் டிரைவர் முகேஷ் சிங்கை, உலக புகழ்பெற்ற பி.பி.சி. நிறுவனம் பேட்டி எடுத்து, வருகிற 8–ந் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஒரு டாகுமெண்டரி படத்தை திரையிட திட்டமிட்டுள்ளது. இந்த பேட்டியில் கொடியவன் முகேஷ் சிங் நெஞ்சமெல்லாம் பதறும் அளவுக்கு சில கருத்துக்களை கூறியிருக்கிறான். எந்த பெண்ணாவது கற்பழிக்கப்பட்டால் அதை எதிர்த்து போராடக்கூடாது, அமைதியாக இருந்து அனுமதித்துவிட வேண்டும். அப்படி இருந்தால் கற்பழிக்கப்பட்ட பிறகு, அவள் விட்டுவிடப்படுவாள், அவளுடன் இருக்கும் பையன்தான் அடிபடுவான், எந்த நல்ல பெண்ணும் இரவு 9 மணிக்குமேல் வெளியே சுற்ற மாட்டாள், கற்பழித்தவனைவிட அந்த பெண்தான் கற்பழிப்புக்கு பொறுப்பு, ஆணும்–பெண்ணும் சமமல்ல, பெண் என்பவள் வீட்டை பார்த்துக்கொண்டு, வீட்டு வேலை செய்யவேண்டுமே தவிர, இரவு நேரங்களில் டிஸ்கோ, பார் என்று சென்றுகொண்டும் தவறான காரியங்களை செய்துகொண்டும், தவறான உடைகளை அணிந்துகொண்டும் இருக்கக்கூடாது, என்னுடைய கண்ணோட்டத்தில் 20 சதவீத பெண்கள் நல்லவர்கள் என்று கூறியிருக்கிறான். இதோடு அவன் விட்டுவிடவில்லை. இப்போது எங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை இனி கற்பழித்துவிட்டு கொலை செய்வதை அதிகரித்துவிடும், இப்போது கற்பழிப்பவர்கள், கற்பழிப்பு முடிந்தவுடன், பொதுவாக அவளை விட்டுவிடுவோம், வெளியில் சொல்ல மாட்டாள் என்று கூறி விட்டுவிடுவார்கள், இனி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று கொன்றுவிடுவார்கள், நிர்பயா சம்பவம் ஒரு விபத்து தான், இரவில் வெகுநேரம் கழித்து இப்படி சுற்றக்கூடாது என்ற ஒருபாடத்தை அவளுக்கும், அவளுடைய ஆண் நண்பருக்கும் புகட்டவே இவ்வாறு கற்பழித்து, அடித்தோம் என்று திருவாய் மலர்ந்து இருக்கிறான்.

இந்த பேட்டியின் முழு விவரமுமே 8–ந் தேதி தான் தெரியும் என்றாலும், இதுதொடர்பாக இப்போது வந்துள்ள தகவல்களைப் பார்க்கும் போது, இந்த கொடூர குற்றத்தை செய்தவர்கள் எத்தகைய மனநிலைக்கு ஆட்பட்டவர்களாக இருந்து இருக்கிறார்கள், எப்படி பின்தங்கிய அறிவாற்றலோடு இருந்து இருக்கிறார்கள், இப்படிப்பட்ட மன ஓட்டத்தில் உள்ளவர்கள் இவர்களைப் போல இருக்கிறார்களே என்பதை எண்ணும் போது தான் வேதனையாக இருக்கிறது. இந்த மனநிலை நாட்டில் மாறவேண்டும்.

மாதம் 100 நிமிடங்கள் இலவசமாக பேசலாம் தபால் நிலையத்தில் செல்போன் விற்பனை அமோகம் வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர்

சென்னையில் உள்ள தபால் நிலையத்தில் பாரத் செல்போன் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர்.

தபால் நிலையத்தில் செல்போன் விற்பனை

தபால் நிலையத்தில் தபால் தலைகள், தபால் கவர்கள் போன்றவற்றை விற்பனை செய்தும், வீடுகளுக்கு தபால்கள், மணியார்டர்கள் போன்றவற்றை வழங்கியும் வந்தனர். இந்த நிலைமை மாறி தற்போது அத்தியாவசிய பொருட்களான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வங்கி, இன்சூரன்ஸ் போன்ற சேவைகளையும் தபால்துறை செய்து வருகிறது. தற்போது புதிதாக செல்போன் விற்பனையையும் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் ‘பெண்டா’ என்ற பாரத் போன் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள அண்ணாசாலை, தியாகராயநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் செல்போன் விற்பனை நடந்து வருகிறது. அண்ணாசாலையில் உள்ள தபால் நிலையத்தில் திரளான வாடிக்கையாளர்கள் சென்று செல்போன்களை வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து சென்னை வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:-

செல்போன் வசதிகள்

இந்த வகை செல்போனில் இரண்டு சிம்கார்டுகள் பொருத்திக்கொள்ள முடியும். அதில் ஒரு சிம் கார்டு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இணைப்பாக இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு 100 நிமிடம் வீதம் 18 மாதத்திற்கு இலவச அழைப்பும் வழங்கப்படுகிறது.

அத்துடன் ‘புளுடூத்’, 3 இன்ச் அளவிலான ஸ்கிரீன், 1,800 எம்ஏஹெச் 8 மணி நேரம் பேசும் வகையிலான பேட்டரி, எப்.எம்.ரேடியோ, ஜாவா விளையாட்டுகள், காணாமல் போனால் கண்டுபிடிக்கும் நவீன வசதி (மொபைல் டிராக்கர்), இன்டர்நெட் பிரவுசிங், வாட்ஸ்-அப் போன்ற வசதிகளும் உள்ளன. 8 ஜிபி மெமரி கார்டு, 64 எம்.பி, ரேம் சேமிப்பு, செல்போனின் பின்புறம் 1.3 மெகாபிக்சல் கேமரா வசதியும் கொண்டுள்ளது. இவற்றை வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேரடி மானிய திட்டத்தில் சேராதவர்களுக்கும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் மானியம் இல்லாமல் தான் சிலிண்டர் வினியோகம் இன்டேன் திட்டவட்ட அறிவிப்பு



நேரடி மானிய திட்டதில் சேராதவர்களுக்கு ஏப்ரல் 1–ந் தேதி முதல் மானியம் இல்லாமல் தான் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும் என்று இன்டேன் தெரிவித்துள்ளது.

சமையல் கியாஸ் சிலிண்டர்

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் கியாஸ் ஆகிய 3 நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்து வருகின்றன. இந்த 3 எண்ணெய் நிறுவனங்களிலும் சேர்த்து தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 54 லட்சம் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன.

வங்கி கணக்கில் நேரடியாக மானியம் பெறும் திட்டத்திற்காக சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கி கணக்கு, ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றன. வரும் 31–ந் தேதி இந்த திட்டத்தில் சேர்வதற்கு கடைசிநாளாகும். அதற்கு பிறகு அனைவருக்கும் மானியம் இல்லாமல் சந்தை விலையிலேயே சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தென்மண்டல அலுவலகத்தின் செய்தித் தொடர்பு முதுநிலை மேலாளர் வி.வெற்றிசெல்வகுமார் கூறியதாவது:–

84 சதவீதம் பேர் இணைப்பு

இந்தியன் ஆயில் நிறுவனம் 619 ஏஜென்சிகள் மூலம் ஒரு கோடி வாடிக்கையாளர்களை கையாண்டு வருகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நேற்று வரை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (இன்டேன்) 83.25 சதவீதம், பாரத் கியாஸ் நிறுவனத்தில் 79.45 சதவீதம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 83.56 சதவீதம் வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சராசரியாக 16 முதல் 18 சதவீதம் வரை பல்வேறு காரணங்களால் இந்த திட்டத்தில் சேரவில்லை. இவர்களுக்கு வரும் 31–ந் தேதிக்கு பிறகு மானியம் இல்லாத சிலிண்டர்களே விற்பனை செய்யப்படும். அதற்கு பிறகு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு 3 மாதங்களுக்கான மானிய தொகை சேர்த்து ஒரே தவணையாக போடப்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு மானியம் பெற முடியாது.

சிலிண்டர் தட்டுப்பாடு

இன்டேன் நிறுவனத்தை பொறுத்தவரையில் சுமார் 84 சதவீதம் பேர் சேர்க்கப்பட்டுவிட்டதால், கியாஸ் ஏஜென்சிகள் கியாஸ் நிரப்பும் மையங்களில் மானியம் சேர்க்கப்படாத விலையில் அதாவது சந்தைவிலையிலான சிலிண்டர்களை தான் அதிகம் வாங்கி வினியோகிக்கின்றனர். ஆனால் இந்த திட்டத்தில் சேராமல் இருக்கும் 16 சதவீதம் பேர் தான் மானியம் சேர்க்கப்பட்ட சிலிண்டர்களை வாங்குகின்றனர்.

இதனால் இந்த வகை சிலிண்டர்கள் குறைவான விற்பனை என்பதால், கியாஸ் ஏஜென்சிகள் குறைந்த எண்ணிக்கையில் வாங்கி வினியோகிக்கின்றனர். இதனால் மானியம் சேர்க்கப்பட்ட சிலிண்டர்கள் விற்பனையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 1–ந் தேதி முதல் அனைவருக்கும் மானியம் சேர்க்கப்படாத சந்தைவிலையிலான சிலிண்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் தட்டுப்பாடு பிரச்சினையும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இருக்காது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் 1800 233 555 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.

புதிதாக கியாஸ் இணைப்பு கோரி விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக வங்கி கணக்கு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். நாடு முழுவதும் 12 ஆயிரம் பேர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று கோரி மனு அளித்துள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

In a first, Mumbai activist’s passport lists sex as transgender

MUMBAI: When Satyashree Sharmila decided to apply for a passport online last October, the form asked her to fill up the sex column as 'Male' or 'Female'. The 33-year-old, who had given up the gender she was born into over a decade ago and now identifies as a transgender, approached the passport authorities with her problem. They asked her to tick any of the boxes in the online form and promised to change it later. But Satyashree was not having any of it.

A few months ago, in April 2014, the Supreme Court had sanctified the third gender by asking the government to make sure transgenders get job quotas and facilities including voter card, passport and driving licence.


A few days after meeting the passport authorities, she found the online application form had a third option in the column for sex: 'Transgender'. On February 15, 2015, Satyashree received her passport — the first person in Maharashtra, and perhaps India, to be issued the document with her gender listed as 'Transgender'.

"It was one of the happiest moments of my life," Satyashree, a law graduate, told TOI. Satyashree, who stays in Vikhroli, is a board member and program manager under Project Pehchan of Darpan Foundation which works for transgender and hijra community rights in Mumbai.

Satyashree's passport adds to the growing recognition the third gender is being accorded in India.

In 2013, the Election Commission had issued voter cards to transgenders for the first time.

Activists said usually transgender persons get passports that identify them as a 'Female'. This is not an identity that most transgender persons are comfortable with.

Satyashree is one.

Madras HC imposes cost on woman who joined Indian Bank by submitting bogus certificate


MADURAI: The Madurai bench of the Madras high court on Wednesday imposed a cost of Rs 1 lakh on a woman who joined the Indian Bank by submitting a bogus community certificate.

The woman, R Thenmozhi, had obtained a Scheduled Tribe community certificate by furnishing false information.

Dismissing a writ petition filed by Thenmozhi, the division bench of Chief Justice Sanjay Kishan Kaul and Dr S Tamilvanan directed her to pay Rs 1 lakh to the adi dravidar and tribal welfare department.

The amount should be spent for the welfare of the tribal students in the state, the court said.

Thenmozhi joined the Indian Bank by submitting a community certificate which showed that she belonged to the Hindu Konda Reddis.

When her documents were subjected to scrutiny, the bank came to know that the community certificate was a bogus one. The bank informed her that it would initiate action against her.

Thenmozhi filed several petitions before the high court to stop the bank from initiating action against her.

On July 9, a state-level scrutiny committee certified that she did not belong to the Hindu Konda Reddis community.

Aggrieved over it, she filed a writ petition, which the division bench dismissed with a cost of Rs 1 lakh.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...