Sunday, March 15, 2015

தேநீ(னீ)ர்ப் பெண்



டீக் கடை வைத்து நடத்தும் பெண்களைப் பார்த்துப் பழகிய பலருக்கும் ஸ்கூட்டரில் சென்று டீ சப்ளை செய்யும் ஜெயாவைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கும். ஈரோடு குமலன்குட்டையைச் சேர்ந்த ஜெயாவுக்கு 42 வயது. டீ சப்ளை செய்வதில் இருபது வருட அனுபவம். சிறு வயதில் பவர்லூம் தறியில் வேலை பார்த்தவர், டீ மாஸ்டரைக் காதலித்துக் கரம் பிடித்தார். கணவர் பெருந்துறையில் டீ மாஸ்டராக இருக்க, இருசக்கர வாகனத்தில் டீ கேனைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிடுகிறார்.

“தினமும் லைனுக்கு டீ கொண்டு போவேன். டூவீலர் ஒர்க் ஷாப், கார் ஒர்க் ஷாப், லேத், கம்பெனி களுக்கு டீ, போண்டா, வடை, சமோசா சப்ளை செய்வேன். மதியம் 12 மணிக்கு மேல சின்னதா ஒரு கடை வச்சு வடை வியாபாரம் பண்றேன்” என்று சொல்லும் ஜெயா, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்துக்கொள்கிறார்.

“அன்னைக்கு ஏதாச்சும் சொந்தங்காரங்க விசேஷம் இருந்தா போயிட்டு வருவேன். மத்தபடி மழை பெஞ்சாலும், வெயில் அடிச்சாலும் டீ விக்கப் போயிடுவேன். செலவு போக தினமும் கூலி 500 ரூபா நிக்கும். எனக்கு எந்தக் குறையும் இல்லை. நான் நினைச்சபடியே வீடு கட்டியாச்சு. பையனும் எம்.பி.ஏ படிச்சுட்டு வேலைக்குப் போறான்” என்று ஜெயா சொல்லும்போது உழைத்து வாழ்வதில் இருக்கும் நிறைவை உணர முடிகிறது.

வந்துருச்சு “வாட்ஸ் அப் வாய்ஸ் காலிங்” – இதிலாவது “மிஸ்ட் கால்” கொடுக்காம பேசுங்கப்பா!



டெல்லி: உலக அளவில் பிரபலமான குறுஞ்செய்தி சேவை அப்ளிகேஷனான "வாட்ஸ் அப்" நிறுவனம் ஒரு வழியாக வாய்ஸ் காலிங் சேவையையும் தொடங்கி விட்டது. வாட்ஸ் அப்பின் வாய்ஸ் காலிங் குறித்த போலிச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக தன்னுடைய வாய்ஸ் காலிங் சேவையினை வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்த வாட்ஸ் அப் நிறுவனம்.

ஆனால், இந்த சேவையினை உங்களது மொபைலில் ஆக்டிவேட் செய்ய மற்றொரு பயனாளரின் உதவி தேவை. முதலில், வாட்ஸப்பின் புதிய பதிவினை தரவிறக்கம் செய்த பின்னர், வாய்ஸ் காலினை தரவிறக்கம் செய்த மற்றொரு நண்பர் மூலமாக உங்களுக்கு கால் செய்யச் சொன்னால் முடிந்தது வேலை. கால் முடிந்தவுடன் மீண்டும் ஒரு முறை வாட்ஸ் அப்பினை ஓப்பன் செய்தால் தற்போது ஒரு புதிய திரையினைப் பார்க்கலாம். அதில் வாய்ஸ் காலிங்கிற்கும் ஒரு புதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வாட்ஸ் அப் அப்கிரேடு செய்யாத பயனாளர்களை உங்களால் தொடர்பு கொள்ள இயலாது. அப்புறம் என்ன வாய்ஸ் மெசேஜ் அனுப்பி நண்பர்களை டார்ச்சர் செய்ததை நிறுத்தி இனி வாட்ஸ் அப் மூலமா கால் செய்யுங்க... "சுவீட்" டார்ச்சர் பண்ணுங்க!

Saturday, March 14, 2015

சின்ன எழுத்தால் மாறும் அர்த்தம்: ஆங்கிலம் அறிவோமே- 48

Return to frontpage

ஒரு நண்பர் August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா? என்று கேட்டிருக்கிறார். முதன்முறை படித்தபோது இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கும் வித்தியாசம் புரிய வில்லை. பிறகுதான் புரிந்தது அவர் Capitonym பற்றிக் கேட்கிறார் என்று.

அதாவது அவர் குறிப்பிட்டதில் ஒரு வார்த்தை (August என்று) Capital Letter- ல் தொடங்க, மற்றொன்று ‘august’ என்று Capital Letter இல்லாமல் தொடங்குகிறது. இதுபோன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Capitonym என்பார்கள். அதாவது முதல் எழுத்தை Capital ஆக மாற்றிவிட்டால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடும்.

சில சமயம் உச்சரிப்புகூட மாறிவிடும். நண்பர் சுட்டிக் காட்டிய வார்த்தைகளையே எடுத்துக் கொள்ளலாமே. August என்பது ஒரு மாதத்தின் பெயர். ரோமானியச் சக்கரவர்த்தி Augustus என்பவர் பெயரிலிருந்து உருவானது.

மாறாக august என்ற வார்த்தைக்குப் பொருள் மரியாதைக்குரிய மற்றும் கவரக்கூடிய என்பதாகும்.. அதாவது Respected, distinguished, renowned, prestigious போன்ற வார்த்தைகளுக்குச் சமமானது. I was in an august company என்றோ It was an august performance என்றோ குறிப்பிடலாம்.

வேறொரு மாதம் கூட இந்த வகையைச் சேர்ந்ததாகிறது. March என்ற வார்த்தை வருடத்தின் மூன்றாவது மாதத்தைக் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். மாறாக march என்பது ராணுவத்தில் நடப்பதுபோல சீரான இடைவெளிகளில் நடப்பது என்று அர்த்தம்.

மேற்கூறியவற்றில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட வார்த்தைகள் (august, march ஆகியவை) வாக்கியத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றால் என்ன செய்வது என்கிறீர்களா? (வாக்கியத் தொடக்க எழுத்து capital letterல்தானே எழுதப்பட வேண்டும்!) அப்படி இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். நான் கூட அதனால்தான் ‘மாறாக’ என்ற வார்த்தையை இடம்பெறச் செய்திருக்கிறேன்.

சில சமயம் ஒரு குறிப்பிட்ட பொருளை அதே போன்ற பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் Capitonym பயன்படும். பிரபஞ்சத்தில் பல சூரியன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் குறிப்பிட sun என்றும் பூமி போன்ற கிரகங்கள் சுற்றும் சூரியனை Sun என்றும் குறிப்பிடுவார்கள். அதேபோல பூமியைச் சுற்றும் நிலவுக்கு மட்டும் Moon என்று ஸ்பெஷல் அந்தஸ்து. பிற கிரகங்களைச் சுற்றும் பொருள் moon. இப்படி வானியல் நூல்களில் குறிப்பிடுவதுண்டு.

Church என்றால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கூடி இருக்கும் மக்கள் குழு. முதல் எழுத்தைச் சிறியதாக்கி church என்றால் அது ஒரு கட்டிடத்தை மட்டுமே குறிக்கிறது.

Liberal என்றால் அது லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது. மாறாக liberal என்றால் அது தாராளமயமான என்பதைக் குறிக்கிறது.

Cancer என்பது ஒரு குறிப்பிட்ட வானியல் கூட்டம் அல்லது ராசிகளில் ஒன்று. புற்றுநோயைக் குறிக்க cancer என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ( தூள் படத்தின் ரீமா சென் விவேக் மயில்சாமி நினைவுக்கு வருகிறார்களா?)

Titanic என்றால் நீரில் மூழ்கிய அந்தப் பிரம்மாண்டக் கப்பலைக் குறிக்கும் என்பது தெரிந்திருக்கும். முதல் எழுத்தைச் சிறியதாக்கி titanic என்றால் பிரம்மாண்டமான என்று மட்டுமே பொருள்.

இந்த வாக்கியம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

A turkey may march in Turkey in May or March!

(Turkey என்பது துருக்கி நாட்டையும் turkey என்பது வான்கோழியையும் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே?)

VERBATIM

Verb என்பதற்கும் verbatim என்பதற்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். தொடர்பு உண்டு யார் சொன்னது?

Verbatim என்ற வார்த்தையைக் கொஞ்சம் விரிவாகவே விளக்கினால் தெளிவாகப் புரியும்.

அப்பாவும் மகனும் ஒரு கண்காட்சிக்குப் போனார்கள். அங்கே நயாகரா பற்றி ஒரு குறும்படம் காட்டப்பட்டது. வீட்டுக்கு வந்ததும் அப்பா தன் மனைவியிடம் இப்படிக் கூறினார். அந்தக் குறும்படத்தின் தொடக்கத்திலே ஒரு ஸ்லைடு போட்டாங்க கீதா. நயாகரா பத்தி இப்படித் தொடங்கினாங்க. “அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே..’’.

அப்பா இப்படி ஆரம்பித்தவுடனேயே மகன் குறுக்கிட்டான். “தப்பா சொல்றீங்க அப்பா. ‘அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே’ கிடையாது. ‘கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே’ன்னுதான் சொன்னாங்க’’ என்று திருத்தினான். .

அப்பா ஒப்புக்கொண்டு தன் வாக்கியத்தை மாற்றிச் சொன்னார். “கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நீர்வீழ்ச்சி ..’’. இப்படித் தொடரும்போது “தப்பு தப்பு’’ என்று குறுக்கிட்டான் மகன். “நீர்வீழ்ச்சின்னு அவங்க சொல்லலை. அருவின்னுதான் சொன்னாங்க’’ என்றான்.

அந்த மகன் சரியான Verbatim-காரன்! அதாவது ஒருவர் சொன்னதை “வார்த்தைக்கு வார்த்தை அச்சுப்பிசகாமல்’’ சொல்வதோ எழுதுவதோதான் VERBATIM.

REFUSE REFUTE REBUT

Refuse என்றால் மறுப்பது. He refused the invitation. I refuse to accept your view.

Refute என்பதை ஆதாரத்துடன் மறுப்பது என்கிற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். The testimony of the witness was refuted.

Rebut என்றால் விவாதம் செய்து ஒன்றை மறுப்பது.

இந்தப் பகுதியில் உள்ள கார்ட் டூனைப் பார்ப்பதற்குமுன் அதில் உள்ள கணவன் போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும், போலந்து நாட்டினரை Polish என்று சொல்வார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்..

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

வேலையில் விருப்பம் இல்லையா?- வாசகர் பக்கம்

Return to frontpage

அலுவலகத்தில் சிலர் எப்போதும் மகிழ்ச்சியாக, சிரித்த முகத்துடன் வலம் வருவார்கள். அவர்கள் தங்களின் பணி பற்றியோ பணிச் சுமை பற்றியோ எப்போதும் குறை சொல்லிப் பார்க்க முடியாது. அவர்கள் எந்த வயதினராகவும் கூட இருக்கலாம். அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

கடுமையான பணிச் சுமை இருக்கும் போது கூட அவர்கள் படபடப்பாக இருப்பதைக் காண முடியாது. என்ன காரணமாக இருக்கும்? அவர்கள் தங்களது பணியை முழுமையாக நேசிப்பவர்கள். தங்களது பணியை மிகவும் அனுபவித்துச் செய்பவர்கள்.

இன்னொரு பிரிவினர் இருப்பார்கள். இந்த வேலை என் தகுதிக்கு மிகவும் குறைவான ஒன்று . நான் இதை விடச் சிறந்த வேலைக்குத் தகுதியானவன் என்ற மனப்பாங்குடனே இருப்பார்கள்.

இந்த எண்ணம் தவறானதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். நான் வேலையில் சேர்வது என்ற குறிக்கோளில் வெற்றி பெற்று விட்டேன். இதற்கு அடுத்த கட்டமாக என்னை உயர்த்திக் கொண்டு இன்னும் முன்னே செல்வது எப்படி என்று நினைப்பது நல்ல எண்ணம்தான்.

ஆனால், நான் செய்யும் வேலை எனக்குப் பிடிக்கவில்லை என்று புலம்பிக் கொண்டு, மேலும் முன்னேறிச் செல்ல எந்த முயற்சியும் எடுக்காமல் காலந் தள்ளுவதுதான் பிரச்சினை. இதனால் வேலையில் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களது வேலையின் தரமும் அளவும் திருப்திகரமாக இருக்காது. இதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவார்கள்.

அவரை வேலையை விட்டு நீக்கும் அளவுக்குப் போக வாய்ப்புண்டு. இதனால் கிடைத்த வேலையை இழந்து விட்டு மறுபடியும் முதலில் இருந்து வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம் மட்டுமல்ல, வேலை கிடைத்தாலும் அந்த வேலையிலும் இவருக்கு அமைதி கிடைக்குமா என்பதும், அதனால் அந்த வேலையும் நீடிக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெரியவர் வருவோர், போவோர் எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருப்பார். கமலஹாசன் அவரது பணியின் மகத்துவத்தை அவருக்குப் புரிய வைத்தவுடன் முகமெல்லாம் மலரச் சிரிப்புடன் பணி செய்வார்.

எவ்வளவு சிறியப் பணியாக இருந்தாலும், எந்தப் பணியும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும். பாராட்டு கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் வரை உழைக்க வேண்டியதுதான்.

ஒருவன் எப்படி மகிழ்ச்சி வரும் போது துள்ளிக் குதித்து நடனமாடி மகிழ்கிறானோ, அது போலவே மகிழ்ச்சி வரும் வரை துள்ளிக் குதித்து நடனமாட வேண்டும் என்கிறது ஜென் பவுத்தம்.

பணிச்சூழல் நாம் விரும்பியபடி கனகச்சிதமாக இருக்க வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது. இருக்கும் சூழலில் பணியை ஆரம்பித்து அதை நமக்கு விருப்பமான முறையில் மாற்றிக் கொள்ள முயல வேண்டும். அதுவே பணியிடத்தில் மகிழ்ச்சி தரும்.

ஜி.வி. வெங்கடேசன்

பயமில்லை ஜெயமுண்டு

பெரும்பாலான மனிதர்களின் தோல்விக்கோ வெற்றிபெற முடியாததற்கோ காரணம் அவர்களின் பயம் என்கிறார் அமெரிக்க உளவியலாளர் சூசன் ஜெப்பர்.

பயம் என்பது ஒருவரது ஆற்றலையும் சக்தியையும் குறைக்கும் சக்தி படைத்தது. பயந்தவர்கள் நிதானமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுவார்கள்.

பயத்துக்கான காரணம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. பல்லி முதல் பாம்பு வரை, இருட்டு முதல் உயரம் வரை, வெற்றி முதல் தோல்வி வரை, தெரியாதவை முதல் புரியாதவை வரை என பல வேறு காரணங்கள். சிலருக்கு சாதாரணமாய் தோன்றும் விஷயங்கள் மற்றொருவருக்கு பயத்தை ஏற்படுத்தும் சாகசமாய் தோன்றும்.

பயத்துக்கான அளவுகோலும் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பயத்தின் அளவைப்பொறுத்து அதன் வெளிப்பாடும் விளைவுகளும் வேறுபடுகின்றன. இதுவே பலவிதமான உளவியல் பிரச்சனைகளுக்கும் உடல் நலக்குறைவுக்கும் கூட வித்தாகிறது.

ஒருவரின் மன அமைதியையோ, அவரைச் சார்ந்தவர்களை பாதிக்கும் வகையிலோ, அல்லது கல்வி மற்றும் வேலையில் அவரது வளர்ச்சியை பாதிக்கும் வகையிலோ பயம் இருந்தால் கண்டிப்பாக அதற்கான தீர்வைக்காண வேண்டியது முக்கியம்.

பயத்தின் அளவு, காரணம் மற்றும் விளைவுகளை பொருத்து அதைக் கையாள மேற்கொள்ளும் முறைகளும் வேறுபடுகின்றன. சில நேரங்களில் இத்தகைய நபர்களின் பயத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கையாள, மருத்துவ மனோதத்துவ மற்றும் வாழ்வியல் மாற்ற நிபுணர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது.

கையாளும் முறைகள்

பயம் ஏற்படும்போது அதனுடன் போராடுவதோ, பயத்தைப் போக்க முற்படுவதோ பலனைத் தராது. மாறாக முதலில் உடலையும், மனதையும் அமைதியான சகஜ நிலைக்கு கொண்டுவர வேண்டும். ஒரு டீயைக் குடிப்பதோ, வெளியில் தூய்மையான காற்றில் கொஞ்ச தூரம் நடப்பதோ, அல்லது மிதமான வெந்நீரில் குளிப்பதோ என தன்னால் முடிந்ததை செய்யலாம்.

சுவாசப்பயிற்சி மனதையும் உடலையும் நிலைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும்பங்கு வகிக்கிறது. சுவாசப் பயிற்சியின் போது நிதானமாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அதைவிட நிதானமாகவும் நீண்ட நேரத்திலும் மூச்சை வெளியே விட வேண்டும். இதைத்தொடர்ந்து செய்யும் போது உடலும் மனமும் நம் வசப்படும்.

உடலும் உள்ளமும் அமைதியான பிறகு தனது பயத்துக்கான காரணத்தை தெளிவாக ஆராயலாம்.

புதியவைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில் ( புதிய வேலை, புதிய மனிதர்கள், பணி மாற்றம், இடம் மாற்றம்) அவற்றைப்பற்றிய விவரங்களை முன்கூட்டியே திரட்டி ஓரளவுக்கு தயாராக இருப்பது பலனைத் தரும்.

தனது பயம் தோல்வியைப் பற்றியோ, மற்றவர்கள் முன்பு தனது செயலோ பேச்சோ அடையப்போகும் மோசமான விமர்சனம் பற்றியோ இருந்தால், அத்தகைய தோல்வி மற்றும் மோசமான விமர்சனத்தால் ஏற்படப்போகும் மிக மோசமான பின் விளைவுகளைக் கற்பனை செய்து பார்க்கலாம். அத்தகைய சூழ்நிலைகள் வாழ்வின் முடிவல்ல. மேலும் நல்ல சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றன என்ற தெளிவு ஏற்படும். அத்தகைய தெளிவு முன்கூட்டியே வரும் பயத்தையும் தெளிவிக்கும்.

எதற்கு பயப்பட வேண்டும், என்னதான் நடந்துவிடும் என்று பார்த்துவிடலாம் என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பயம் என்பது கோழைத்தனம். குழம்பிய மனநிலையில் உள்ளவர்களையே பயம் தாக்கும். எனவே தைரியத்தையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பயம் ஏற்படும்போது, தனக்கு நல்லதே நடக்கும், எந்த துன்பமும் வராது, நடப்பவை எல்லாம் நல்லதுக்கே போன்ற ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் பயம் நாளடைவில் தானாய் மறைந்து விடும்.

எந்த விஷயத்துக்காக பயம் ஏற்படுகிறதோ அதை அடிக்கடி எதிர்கொள்வதும் பயத்தை தணிக்கும். தனிமையில் இருப்பது, உயரத்தில் இருப்பது பயம் என்றால் தானாகவே முன்வந்து, தன்னை தயார்படுத்திக்கொண்டு அத்தகைய சூழ்நிலைகளை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டும்.

பயம் ஏற்படும் நேரங்களில் தனக்குப் பிடித்த விஷயங்களைக் கண் முன் கற்பனை செய்து பார்க்கலாம். தனது மனதை சந்தோஷப்படுத்தும் நிகழ்வையோ, கடவுள் படத்தையோ, அழகான காட்சியையோ கண் முன் பார்க்கும்போது பயத்துக்கான காரணம் தானே அகன்று விடும்.

உலகின் தலைசிறந்த மனிதர்களுக்கு பயம் இருந்ததில்லை என்பதை அடிக்கடி நினைத்துப்பார்க்க வேண்டும்.

நம்முள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை அகற்றிவிட்டால் பயமும் அகன்றுவிடும் என்ற உண்மை புரிய வேண்டும்.

பயம் என்பது முடிவை நோக்கிய பயணம். வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் பயத்துக்கு இடமில்லை.

தொடர்புக்கு: sriramva@goripe.com

ஒரு தலைக்காதலால் அரசு பெண் ஊழியருக்கு நடந்த கொடூரம்!

கிருஷ்ணகிரி: காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த என்ஜினீயர், தனது உடலில் தீ வைத்துக் கொண்டதோடு, அரசு பெண் ஊழியரையும் கட்டிப்பிடித்ததால் இரண்டு பேரின் உடல் கருகியது. ஒருதலை காதலால் நடந்த இந்த சோக சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (24), 6 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்2 படித்து வந்தார். அதே பள்ளியில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த ராணி (24) (பெயர் மாற்றம்) பிளஸ்2 படித்து வந்தார். அப்போது முதல் சந்தோஷ், ராணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவரது காதலை ராணி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, பள்ளி படிப்பு முடிந்ததும் சந்தோஷ் சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்தார். பாலக்கோட்டை சேர்ந்த ராணி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அந்த காலத்திலும் சந்தோஷ், ராணியை தொடர்ந்து ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்த ராணி, குரூப்-1 தேர்வு எழுதி தேர்வானார். அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் அலுவலகத்தில் உதவியாளராக பணி கிடைத்தது. அவர் தினமும் பாலக்கோட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே, ராணியை ஒருதலையாக காதலித்து வந்த சந்தோஷ், அவரை திருமணம் செய்ய முடிவு செய்து, பாலக்கோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.

அப்போது ராணியின் வீட்டார், திருமணத்திற்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து 3 முறை ராணி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர்களோ, சந்தோசிற்கு தங்களின் மகள் ராணியை கொடுப்பதில்லை என்று உறுதியாக தெரிவித்து விட்டனர். இதனால் சந்தோஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை ராணி, கெலமங்கலத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதற்காக பாலக்கோடு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அங்கு சந்தோஷ் தயாராக நின்று கொண்டிருந்தார். பாலக்கோட்டில் இருந்து புறப்பட்ட பேருந்தில் ராணி ஏற, பின்னால் உள்ள இருக்கையில் சந்தோஷ் அமர்ந்து கொண்டார். கெலமங்கலம் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும் ராணி இறங்கியுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ், "ஏன், என்னை காதலிக்க மறுக்கிறாய். உன்னை விடாமல் 6 ஆண்டுகளாக நான் காதலித்து வருகிறேன். என்னுடைய காதலை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாய்?“ என்று ராணியிடம் கேட்டுள்ளார்.

அப்போது ராணி, “நான் தான் அப்போதே சொல்லி விட்டேனே. என்னை காதலிக்க வேண்டாம் என்று பலமுறை கூறியும் ஏன் என்னை தொடர்ந்து வருகிறாய்?“ என்று கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கெலமங்கலம் சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேனில், சந்தோஷ் பெட்ரோலை வாங்கியுள்ளார். பின்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராணியிடம், "கடைசியாக கேட்கிறேன். என்னை காதலிக்கிறாயா இல்லையா?" என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ராணி, தனது உறவினருக்கு செல்போன் மூலம் பேசி தான் ஆபத்தான சூழலில் உள்ளதாகவும், தன்னை வந்து மீட்டு செல்லும்படியும் கூறியுள்ளார். அப்போது திடீரென்று சந்தோஷ், தான் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் மளமளவென்று ஊற்றியுள்ளார். பின்னர் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் மூலம் தனது உடலில் தீயை பற்ற வைத்துள்ளார்.

இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த ராணி அங்கிருந்து ஓட முயற்சி செய்வதற்குள் எரியும் தீயுடன் ஓடிய சந்தோஷ், “என்னுடன் வாழ முடியாது என்று தான் கூறி விட்டாய். சாவிலாவது நாம் ஒன்றாக இணைவோம்“ என்று கூறி, எரியும் நெருப்புடன் ராணியை கட்டிப்பிடித்து கொண்டார். இதில் அவரது உடலிலும் தீப்பிடித்தது. 2 பேர் உடலிலும் தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சந்தோஷ் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் காவல்துறையினர், சிகிச்சை பெற்று வரும் ராணி மற்றும் சந்தோஷிடம் விசாரணை நடத்தினர். ராணி அளித்த வாக்குமூலத்தில், "என்னை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த சந்தோஷ், தொடர்ந்து என்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்தார். நான் காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில், அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டு, என்னையும் கட்டிப்பிடித்து, கொலை செய்ய முயன்றார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

அந்த புகாரின் பேரில் கெலமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'எச் - 1பி விசா' விண்ணப்பங்கள் ஏப்., 1ம் தேதி முதல் ஏற்கப்படும்..DINAMALAR 14.3.2015

வாஷிங்டன்: அமெரிக்காவில் பணிபுரிய, இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வழங்கப்படும், எச் - 1பி விசா விண்ணப்பங்கள், வரும் ஏப்., 1ம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என, அமெரிக்க அரசு தெரிவித்து உள்ளது. வரும் அக்டோபரில் துவங்கும், 2015 - 16ம் நிதியாண்டில், 65 ஆயிரம் எச் - 1பி விசாக்கள் வழங்கப்பட உள்ளன. முதல் ஐந்து அலுவல் தினங்களில், மேற்கண்ட எண்ணிக்கைக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அதிகளவு விண்ணப்பங்கள் வரும் நிலையில், விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய, கடந்த ஆண்டைப் போலவே, குலுக்கல் முறை பயன்படுத்தப்பட உள்ளது என, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...