Tuesday, December 6, 2016

எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று... சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது?



அன்று...

24.12.87...வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் தான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மரணம் என்கிற செய்தி ஊர்ஜிதமாக நகரினுள் பரவியது.தொண்டர்கள் செயலிழந்து கதறித்துடிக்க, பல சமூக விரோதிகள்...இந்த சோகமான நேரத்தை வசதியாகப் பயன்படுத்திக்கொண்டனர். திறந்திருந்த ஒட்டல்களில் டீ குடித்துவிட்டு, காசு கொடுக்காமல் கடைக்காரர்களைத் தாக்கினார்கள். கோடம்பாக்கம் பகுதியில் நான்கு டீக்கடைக்காரர்கள் காயம் அடைந்தார்கள். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்போக, ’உங்களை யாருய்யா கடையை திறக்கச் சொன்னது? உயிரோட வந்திருக்கீங்களே...இதுவே பெரிசு!’ என்று சொல்லி விரட்டினார்கள். வாகனங்களில் செல்பவர்களின் மீது கல்லெறியும் கலாட்டா துவங்கியபோது, காலை மணி எட்டு. நுங்கம்பாக்கம் வள்ளுவர் சிலையருகே ஒரு மாருதி காரை துவம்சம் செய்தார்கள். அண்ணா சாலையின் இருபுறமும் சவுக்குக் கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அந்த சவுக்குக் கம்புகளை ஆளுக்கொன்றாய் உருவிக்கொண்டு சைக்கிளில் செல்பவர்கள் மீது கூட அடித்து சந்தோஷப்பட்டார்கள். ஆயிரம் விளக்குப் பகுதியில் ஒரு ஜவுளிக்கடை, மாடியில் தையல்கடை போன்றவற்றைச் சூறையாடினார்கள். அண்ணா மேம்பாலம் முதல் அண்ணா சிலை வரையிலான பகுதிகளில் இருந்த கடைகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளானது. அண்ணா சாலையில் இருந்த முக்கிய பிரமுகரின் சிலையை சேதப்படுத்தினார்கள்.



அன்று இரவு நிலைமை இதைவிட மோசமானது. திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர், பைக் போன்ற எல்லா வாகனங்களின் பெட்ரோல் டாங்கிலும் மணலை போட்டுவிட்டுப் போனது ஒரு கும்பல். மைலாப்பூர் பகுதியில் ஒரே நாளில் 47 சைக்கிள்கள் காணாமல் போயின. தேனாம்பேட்டை பகுதியில் 12 வயது சிறுவனின் உடல் மீது மண்ணெண்ணை ஊற்றிவிட்டு, தீ வைத்துவிடுவோம் என்று மிரட்டி பணம் வசூல் செய்து கொண்டு நகர்ந்தது.

அமைந்தகரை பகுதியில் வீடு வீடாகப் போய், கதவைத் தட்டி டிபன் கேட்டார்கள். இல்லை என்று சொன்ன வீடுகளில் கல் எறிந்து கலாட்டா செய்தார்கள்.

சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில்களெல்லாம் சில சமூக விரோதிகளால் கற்களால் அடித்து நொறுக்கப்பட்டு, எண்ணூர் அருகேயே நிறுத்தப்பட்டுவிட்டன. பாவம்... பயணிகள் கம்பார்ட்மென்ட் கதவுகளை இறுக்கமாக மூடியபடி, நடுங்கியபடி காத்திருந்த காட்சிகள் அரங்கேறின.

ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உடல், டிரக்கில் ஏற்றி மெரீனா பீச்சில் இறுதி அடக்கம் செய்ய இறக்கினார்கள். ஆங்காங்கே நின்ற கும்பல் சமாதி அருகே வரத் துடிக்க, ஏக கலாட்டா. போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப்படை அவர்களை அடக்க படாத பாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது. பதிலுக்கு கும்பல் தரப்பில் மண்ணையும் கற்களையும் எறிந்தனர். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. கும்பலில் இரண்டு, மூன்று பேர் சுருண்டு விழுந்தனர்.

சஃபையர் தியேட்டர்

’ஒரு பெரிய கூட்டம் கம்பெல்லாம் வைத்துக்கொண்டு தியேட்டர் உள்ளே இருக்கும் ஷோரூமை உடைத்து ஃபர்னிச்சர்களை எடுத்துட்டுப் போயிட்டாங்க. இவற்றுடைய மொத்த மதிப்பு சுமார் 30 ஆயிரம்!’’ என்றார் தியேட்டர் மேனேஜர் அப்புண்ணி.

ஸ்பென்ஸர்

இதன் துணைத் தலைவர் ராமானுஜம், ‘’கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக விதவிதமான கேக் செய்து வைத்திருந்தோம். பேக்கரி செக்ஷனை உடைத்து, கேக்குகளையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார்கள். பக்கத்தில் அழகழகான சர விளக்குகள் விற்பனை செய்யும் செக்ஷன். பல பொருட்கள் சேதம். எல்லாம் சேர்த்து சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு நஷ்டம்!’’

அந்தக் காலகட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் வால்டேர் தேவாரம். உளவுப்பிரிவில் 12 வருட அனுபவம் உள்ள அதிகாரியான இருதயதாஸ், கூடுதல் டெபுடி கமிஷனராக இருந்தார். எம்.ஜி.ஆர். இறந்த அன்று பாதுகாப்புக்காக சுமார் 7 ஆயிரம் போலீஸாரை நியமித்திருந்தனர். இருந்தும், பயங்கர கலவரம் நடந்தன. எம்.ஜி.ஆர் உடலைப் பார்க்க கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டு சென்னைக்கு வந்துவிட்டனர். நேரம் ஆக, ஆக பசியெடுத்து. இரண்டு நாட்கள் பயணம் செய்து வந்ததால், மாற்று உடை இல்லை. கைச் செலவுக்கு பணமில்லை. முக்கிய சாலைகளில் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. அவற்றைப் பார்த்ததும், கும்பலுக்கு ஏக குஷி. சூறையாட ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களை விரட்டியடிக்க.. ஆங்காங்கே கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி, சில இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தவேண்டிய அளவுக்கு நிலைமை சீரியஸானது.



ஜெயலலிதா காலமான இன்று..!

கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் இறந்த காலகட்டத்தில் நடந்த கலவரங்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது சென்னையில் நடந்த கலவரங்கள். இந்த இரண்டையும் நேரில் பார்த்த சென்னைவாசிகளில் பலர் டிசம்பர் 4-ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு செய்தி வெளியானதும், மிரண்டு போனார்கள். சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டு விடுவார்களோ? என்று பதட்டமானார்கள். வர்த்தக நிறுவனம் நடத்துகிறவர்கள் கடைகள் சூறையாடப்படுமோ என்று டென்ஷனில் தவித்தார்கள். ஆனால்... எல்லோரின் பயத்தைப் போக்கும் வகையில் எந்தப் பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் சென்னை போலீஸ் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உளவுப்பிரிவு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் போன்றவர்கள் அவசரமாக கூடி விவாதித்தனர். அவர்கள் திட்டமிட்டதை கனகச்சிதமாய் செயல்படுத்தினார்கள். அதன் எதிரொலியாக... ஜெயலலிதா இறந்த நாளன்று சென்னையில் வழக்கம்போல் டூ வீலர்கள், கார்கள் ரோடுகளில் ஓடின. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே சில கடைகள் திறந்திருந்தன. நடமாடும் டீக்கடைகள் ஆங்காங்கே முளைத்தன.





கடந்த டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி பரவியது. உடனடியாக அப்போலோ மருத்துவமனை முன்பு மக்கள் கூட்டம் அலைமோதின. நேரம் கடந்து செல்லச் செல்ல... ஜெயலலிதா உடல்நிலை பற்றிய வதந்திகள் தமிழகம் முழுவதும் பரவத் தொடங்கின. இதனால் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். அதோடு ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த சமயத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தததோடு, அவரது உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது. இது அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், அன்றிரவு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. சென்னை முழுக்க ’விசிபிள் போலீஸ்’என்கிற பேனரில் ஆயிரக்கணக்கான போலீஸார் வலம் வந்துகொண்டிருந்தனர். மறுநாள் விடிந்தது. 05.12.16...திங்கட்கிழமை. பகல் முழுக்க அமைதியாகக் கழிந்தது. மாலையில், முக்கால்வாசி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நேரம் முடிவதற்கு முன்பே, வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டன.

மாலை நேரத்தில் திடீரென்று ஒரு தனியார் தொலைக்காட்சி, ஜெயலலிதா காலமானார் என்று தவறுதலாக செய்தியை ஒலிபரப்பியது. அதையடுத்து, சென்னையில் ஒருவித பதட்டம் தொற்றிக்கொண்டது. அப்போலோ வாசலில் போலீஸாருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு அது மோதலானது. ஆஸ்பத்திரிக்குள் தொண்டர்கள் நுழைய முயல்கிறார்கள் என்கிற செய்தி ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எட்டியதும், ‘ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்கிறது” என்று அறிவித்தது. அப்போதைக்கு பரபரப்பு அடங்கியது.

ஆனால், அன்று இரவு 11.45 மணிக்கு அப்போலோ தரப்பில் ஜெயலலிதா காலமானார் என்று அறிக்கை வெளியானது. ஜெயலலிதாவின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட சில அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்குள் நுழைய முயன்றனர். அப்போது காவலர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் லேசான தடியடி நடத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பெரியமேடு பகுதியில் அ.தி.மு.கழக வட்டச் செயலாளர் ஒருவர் கடைகளை மூடச் சொல்லி ரகளை செய்ய...போலீஸுக்கு தகவல் போனது. அவரை ரவுண்டு கட்டி அலேக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிச் சென்றனர். இந்தத் தகவல் சென்னை முழுக்க உள்ள அ.தி.மு.கழக பிரமுகர்களுக்குப் பரவியது. அவ்வளவுதான்... அ.தி.மு.க-வினர் அமைதியானார்கள்!

போலீஸார் தரப்பில், ’பொதுமக்கள் போர்வையில் கலவரம் தூண்டும் சமூக விரோதிகள் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினோம். சில ரகசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பலர் கண்காணிக்கப்பட்டதோடு, எதிர்கட்சியினரின் வீடுகளுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தினோம். மத்திய அரசும், தமிழகத்துக்கு பாதுகாப்பு பணிகளுக்கு துணை ராணுவம் அனுப்பத் தயாரானது. சென்னையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இறக்கிவிடப்பட்டனர். 7 கூடுதல் கமிஷனர்கள், 4 இணை கமிஷனர்கள், 18 துணை கமிஷனர்கள், 60 உதவி கமிஷனர்கள், 300க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் என 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். பக்கத்து மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ராஜாஜி அரங்கம், எம்.ஜி.ஆர் சமாதி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்ப்பட்டனர்!’’ என்றனர்.

இதற்கிடையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் இருந்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் 'விடுமுறையில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். காவல் நிலையங்களுக்குத் தேவையான காவலர்களை வைத்துக் கொண்டு மீதமுள்ள 75 சதவிகிதம் காவலர்களை ரோந்து, பாதுகாப்பு பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து இணை கமிஷனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப தனியார் வாகனங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று ஜார்ஜ் உத்தரவிட்டு இருந்தார்.

மேலும், சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதலாக சாரங்கன், ஜெயராமன் என்ற இரண்டு ஐ.ஜிக்கள் நியமிக்கப்பட்டனர். இதில் ஐ.ஜி சாரங்கனுக்கு சென்னையில் உள்ள மூலைமுடுக்கெல்லாம் அத்துப்படி. இதனால் காவல்துறை ரோந்துப் பணி தொய்வில்லாமல் நடந்தது. உடனுக்குடன் வாக்கி டாக்கி மூலம் உத்தரவுகள் பிறக்கப்பிட்டன. இரவு முழுவதும் காவல்துறை வாகனங்கள் நகர் முழுவதும் உலாவந்தன.

அப்போலோவிலிருந்து ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த அ.தி.மு.கவினருக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்த தடுப்புகள் தகர்த்தெறியப்பட்டன. டிசம்பர் 6-ந் தேதி காலை ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த சிலர் இரும்புத்தடுப்புகளை உடைத்துக்கொண்டு குறுக்குவழியில் உள்ளே நுழைந்தனர். அதைப் பார்த்த போலீஸார் அவர்களை துரத்திச் சென்று தடியடி நடத்தினர். இந்த களேபேரத்தில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு போலீஸாரே தண்ணீர் குடிக்க கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். முன்எச்சரிக்கையுடனும், பாதுகாப்புட ஏற்பாடுகளுடன் செயல்பட்ட காவல்துறையால் கலவரமில்லாமல் அமைதியாக ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் முடிந்தது!

- எஸ்.மகேஷ்

ஒரு பெண் முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபம் அல்ல: தமிழிசை புகழஞ்சலி

இடது: ஜெயலலிதா, வலது: தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்.
ஒரு பெண் அரசியல்வாதியாக முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபமான காரியம் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவு குறித்து தமிழிசை இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''மீண்டும் மீண்டு வருவார் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் மாண்டுபோனார் என்ற செய்தி பேரிடியை நன்மை தாக்கி இருக்கிறது. ஒரு துணிச்சல் மிக்க தலைவரை ஒரு மனிதாபிமான தலைவரை மரணம் இன்று கொண்டு சென்றிருப்பதை மனது ஏற்க மறுக்கிறது. தீர்க்கமாக முடிவெடுக்கும் தலைவருக்கு முடிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை சிந்திக்க மனது மறுக்கிறது.

அம்மா அம்மா என்று அழைக்கப்பட்ட அந்த தாய் உள்ளம் இன்று இல்லை என்பதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது, ஜெ என்ற பெருமை ஆண்டிருந்தது, தற்போது வெறுமை தமிழகத்தை சூழ்ந்திருக்கிறது. அவரின் இழப்பை தனிப்பட்ட இழப்பாகவே நான் கருதுகிறேன். ஒரு பெண் அரசியல் வாதியாக முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபமான காரியம் அல்ல.

உடல்நலம் சரியில்லாதபோதும் கடுமையாக உழைத்து, கடுமையாக சுற்றுப்பயணம் செய்து தன் கட்சியை வெற்றி பெற செய்த மரியாதைக்குரிய ஜெயலலிதா முழுவதுமாக முடியும் வரை முதல்வராக இருப்பார் என்று நினைத்தபோது முதல்வராக இருக்கும்போதே அவருக்கு முடிவு வந்திருப்பதை நம்ப முடியவில்லை.

உடல் நிலை தேற வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தோம், இன்று இழப்பை தாங்கும் உறுதியை இறைவன் தர வேண்டும் என பிரார்த்திப்போம். அவர்களின் தொண்டர்கள் தனது தாயை இழந்து தவிக்கிறார்கள், அவர்களுடனும் தமிழக மக்களுடனும் எனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்.

மரியாதைக்குரிய ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஒரு துணிச்சலை துணிச்சலாக கொண்டு செல்லும் துணிச்சல் மரணத்திற்கு எப்படி வந்தது என்று வியந்து கொண்டிருக்கிறேன், அழுதும் கொண்டிருக்கிறேன். தமிழக பாஜக வின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம்... எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது?
 Poet Vairamuthu condoles for Jayalalithaa's demise
ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப் புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.

அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் 'அம்மு' என்று அறியப்பட்டவர், அரசியல் உலகில் 'அம்மா' என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு 'பிரதமர் வேட்பாளர்' என்று தன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை. போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப் பெருமையைக் கரைத்துக் கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.

 உறுதி என்பது அவர் உடன்பிறந்தது. ஒருமுறை கர்நாடகத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது, கன்னடப் போராளிகளால் சூழப்பட்டார். 'கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக' என்று முழங்குமாறு வற்புறுத்தப்பட்டார். 'கன்னடம் வாழ்க' என்று சொன்னாலும் செல்வேனே தவிர எந்த நிலையிலும் 'தமிழ் ஒழிக' என்று கூறமாட்டேன் என்று துணிந்து நின்று வன்முறைக்கு நடுவிலும் வழிமாறாதவர் மொழிமாறாதவர் ஜெயலலிதா. கலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை; அழியாதவை. அவரைத் தவிர யாரும் ஆட முடியாது என்ற நடனங்களும், அவரைத் தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். 'எங்கிருந்தோ வந்தாள்' படத்தில் அவர் காட்டிய குணச்சித்திரம் கொண்டாடத்தக்கது. 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு செளந்தர்ய ஒய்யாரம் தந்திருப்பார். 'ஆயிரத்தில் ஒருவனில்' அவரது அழகு சந்தனச் சிலையா சந்திர கலையா என்று சொக்க வைக்கும்.

 சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோர்க்கும் வாய்க்காது இந்தச் சரித்திரம். அவர் உயிரோடிருந்தபோது இந்தப் புகழ்மொழியைச் சொல்லமுடியாத சூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேனே என்ற துயரம் இறப்பின் வலியை இருமடங்கு செய்கிறது. மறைந்தும் மறையாத கலையரசிக்கு ஒரு ரசிகனாக என் அஞ்சலிப் பூக்களை அள்ளித் தெளிக்கிறேன். எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது?

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/poet-vairamuthu-condoles-jayalalithaa-s-demise-269087.html

Jayalalithaa dies: December a fateful month for Tamil Nadu?

CHENNAI: December seems to be jinxed for Tamil Nadu as it witnessed yet another major loss with AIADMK supremo and Chief Minister J Jayalalithaa joining a list of iconic leaders whose end came in the last month of the year.

While AIADMK founder and charismatic actor-turned politician MGR died on December 24, 1987, his protege Jayalalithaa breathed her last yesterday (December 5), in a tragic coincidence of their end coming in the same month.

Both leaders had also gone through prolonged period of illness before their end came.

C Rajagopalachari, the last Governor General of India, passed away on December 25, 1972 while rationalist leader "Periyar" E V Ramasamy died on December 24, 1972, both aged 94.

Nature too had played havoc with citizens of the state in the last month of the year.

The killer tsunami of 2004 struck on December 26, while the torrential unprecedented downpour in December 2015 left a scar in the minds of many harried citizens of Chennai, Kancheepuram, Cuddalore, Tiruvallore and Thoothukudi.

Jayalalithaa: A warrior queen with welfare heart who won many a war

Jayalalithaa: A warrior queen with welfare heart who won many a war

CHENNAI: Leading a rump AIADMK after MGR's death, Jayalalithaa had lost the 1989 assembly election. Down and apparently wanting to opt out, she wrote a letter to the assembly Speaker saying she was resigning as MLA. She didn't send the letter, but, mysteriously enough, it made its way to the Speaker who said he was accepting the resignation. Enraged by this, Jayalalithaa dug in her heels and swept the polls in 1991. This was not the only time she chose to fight back and win when her opponents sought to corner her.

Tragedies and setbacks were never a stranger to Jayalalithaa. She lost her father early and her mother just when she was stepping into adulthood. She could never settle into never settle into the domestic, married life she year ned for. When her film world mentor MGR brought her into politics, the bigwigs with in the party threw a fit. Some of them rebelled openly . But, for her, life was as much about coming out on top in the big bad world of movies as it was about staving off challenges in the murky, male-dominated world of politics.

Jayalalithaa's political graph was an improbable one. Though born and raised in a Brahmin family, she seized the initiative in a party of the Dravidian movement known for its antipathy to Brahmins. From film star and political novice to fierce protector and mother-figure for the people, she reinvented herself often. For Tamil women - her mass base - she showed what a woman can do in a man's world. They identified with her personal story, her seemingly indomitable spirit.

Critics chafed at Jayalalithaa's take-no prisoners approach. Remember when her growing demands brought down the Vajpayee government in 1998. Even in Cauvery her last policy battle - she chose to fight it out in courts till the end rather than negotiate.

Allegations of corruption dogged her for nearly 20 years. The cases against her were often watertight and judges found them compelling. She was convicted four times, yet managed to shake loose legal shackles and come back to power. Jayalalithaa's earliest training ground may have moulded her political ideas.

Her mentor MGR had given her a key role in putting together the landmark noon-meal scheme that has been lauded for its audacity as well as for achieving key social goals like boosting school enrolment and cutting down dropout levels. Taking welfare politics to heart - the subsidised Amma canteens were only a recent example - she expanded it to freebies that reinforced her stern but caring mother image.


Jayalalithaa inherited MGR's AIADMK, whose rank and file comprised the lowest rungs of Tamil society , and presided over it as its unquestioned leader. Under her, novices who demonstrated their loyalty found themselves catapulted into the big league; they also faced the axe when they crossed the line. They queued up to fall at her feet, irrespective of age, and she seemed to tower over them.


When parties everywhere seemed to prefer coalitions, she boldly went alone and won. In the 2014 Lok Sabha poll marked by the national Modi wave, the AIADMK scored nearly 45% of the votes, on its own, and won 37 of the 39 seats in the state. This year in Tamil Nadu, for the first time in more than 30 years, the AIADMK bucked the trend of regime change.

Just as it reached its apogee in terms of mass base, AIADMK finds itself in trouble. With Jayalalithaa at the helm, there was little room for any other leader with mass appeal in the party .Without her, the party stares at a political vacuum.

மக்கள் வெள்ளத்தில் ’மக்களால் நான்.. மக்களுக்காக நான்… ஜெயலலிதா’


’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அரசியல் ஆளுமை மிக்க தலைவியான ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி இல்லத்தில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அரசியல் ஆளுமை மிக்க தலைவி ஜெயலலிதாவின் உடல் மீது மூவர்ண தேசிய கொடியும் அவருக்கு பிடித்தமான பச்சை நிற பட்டுப்புடவை போர்த்தி கண்ணுறங்கிறார்.

’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய வீரமங்கையின் உடல் அவரது மக்களின் கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது. அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள், திரையுலகினர் என வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

karunanidhi

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கட்சிகளைப் பொறுத்து வேறுபாடுகள் இருந்தாலும்,அதிமுக கட்சியின் நலன்களுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது.அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் லட்சக்கணக்கான தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

NEWS TODAY 31.01.2026