Wednesday, February 8, 2017


சசிகலாவுக்கு மரண அடி... இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்க முடியாது- தேர்தல் ஆணையம் பொளேர்



டெல்லி: அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியாது; பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தது செல்லாது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதிமுக சட்டவிதிகளின் படி பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுக உறுப்பினர்களும் ஓட்டுப் போட்டு தேர்வு செய்தால்மட்டுமே ஒருவர் பொதுச்செயலராக முடியும்.


1972-ம் ஆண்டு எம்ஜிஆர், திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் அல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுமே பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும் என கட்சி விதியை உருவாக்கினார்.


அதேபோல் அதிமுக விதிகளின்படி தற்காலிக பொதுச்செயலர் அல்லது இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்கவும் முடியாது. இதனை முன்வைத்து தேர்தல் ஆணையத்திடம் சசிகலா நியமனத்துக்கு எதிராக சசிகலா புஷ்பா எம்.பி புகார் கொடுத்திருந்தார்.


அந்த புகாரில், 2011-ம் ஆண்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா நடராஜன் நீக்கப்பட்டார்; அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து சசிகலாவை மன்னித்து ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். ஆனால் அதிமுகவில் அவர் இணைந்தாரா என்பது தெரியவில்லை. அதிமுக விதிகளின் படி ஒருவர் 5 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராக இருந்தால் மட்டுமே கட்சி பதவிகளுக்கு வர முடியும். இதன்படி சசிகலாவால் அதிமுக பொதுச்செயலராக முடியாது; அவரது நியமனத்தை ஏற்கக் கூடாது என கூறப்பட்டிருந்தது.


இப்புகாரின் அடிப்படையில் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் அதிமுகவின் சட்டவிதிகளில் உரிய திருத்தம் மேற்கொண்டால் மட்டுமே இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியும்; அப்படி செய்யாமல் பொதுச்செயலர் ஒருவரை அதிமுகவில் நியமிக்க முடியாது என தீர்மானித்திருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அதாவது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக சசிகலா நீடிக்க முடியாது என தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

ஸ்டார் ஹோட்டலில் கடும் கண்காணிப்பில் அதிமுக எம்எல்ஏக்கள்... 3 நாளைக்கு டூர்

சென்னை: அமைதியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியான போராட்டம் நடத்திய பின்னர் ஆவேச பன்னீர் செல்வமாக மாறிய சசிகலா மீது சராமரி குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

இதன் பின்னர் தமிழக அரசியல் களமே பரபரப்படைந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் பின்னால் யாரும் இல்லை எல்லோரும் எங்க பின்னாடிதான் இருக்கிறார்கள் 134 பேர் இருக்கிறார் என்று அவசரமாக பேட்டி கொடுத்தார் தம்பித்துரை.

இந்த நிலையில் இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் நடைபெற்றது. நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் சொகுசு பேருந்து மூலம் பாதுகாப்பாக ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கேயே காலை உணவு கொடுக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த உடன் மதிய சாப்பாடு அங்கேயே கொடுக்கப்பட்டது. உணவு சாப்பிட்டு உடன் மீண்டும் பேருந்து மூலம் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராயப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்துகளில் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட உள்ளார்களாம். பதவி பிரமாணம் செய்து வைப்பது குறித்து ஆளுநர் முடிவு எடுக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் சுற்றுப்பயணத்திலேயே இருக்க சசிகலா உத்தரவிட்டுள்ளாராம்.

3 நாளுக்கு தேவையான உடைகளையும் எம்.எல்.ஏ.க்கள் எடுத்துச் சென்றுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் முகாமுக்கு மாறுவதை தடுக்கவே இந்த சுற்றுலாப் பயணம் என தகவல் வெளியாகி உள்ளது.

எம்எல்ஏக்களை பாதுகாப்பாக பேருந்துகளில் அழைத்து சென்று தங்கவைப்பது முதல் அவர்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கவனித்துக்கொள்கின்றனராம். செல்போன்களும் கடுமையான கண்காணிப்பில் உள்ளார்களாம் எம்.எல்.ஏக்கள்.

source: oneindia.com
Dailyhunt

Tuesday, February 7, 2017


கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் : சசிகலாவை எதிர்த்த ஓபிஎஸ் #OPSVsSasikala


தற்போது அங்கு மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டுவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து நின்றுகொண்டு இருக்கிறார்கள். பத்திரிகையாளர்களிடம் பேச அவர் கண்ணீரைத் துடைத்தபடியே ஆயுத்தமாகிக் கொண்டு இருக்கிறார்.

அவர் கூறியதாவது, "மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மாவின் உந்து சக்தியால் தான் நான் இங்கு வந்தேன். மாண்புமிகு அம்மா அவர்கள் நோய்வாய்ப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவரது உடல்நிலை, மிகவும் கிட்டத்தட்ட மோசமான நிலையை எட்டியபோது, என்னிடம் வந்து 'மாண்புமிகு அம்மாவின் நிலை மோசமாக இருக்கிறது,கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்' என்று சொன்னார்கள்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது ஏன் மாற்று ஏற்பாடு என்றேன் அசாதாரண சூழ்நிலையில், ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்கள்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம், நான் அழுது புலம்பினேன். முதல்வர், பொது செயலாளர் என இரு பொறுப்பையும் என்னை ஏற்று நடத்த சொன்னார்கள். மாண்புமிகு அவைத் தலைவர் மதுசூதனனை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என சொன்னார்கள். என்னை முதல்வராக இருக்க சொன்னார்கள்.

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திவாகரன் போன்றோர். சசிகலாவை பொதுசெயலாளராக ஆக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நான் சசிகலாவிடம் இதை சென்று சொன்னபோது, அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதால் டெல்லியில் முகாமிட்டேன்.அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், பிரதமரிடம் சிறப்பு சட்டம் வேண்டும் என்றேன். புதிய சட்டம் உருவாக்கினோம் மத்திய அரசின் ஒப்புதல் வாங்கினோம் .




நான் செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. உதயகுமார் பேசியது நீதிக்கு புறம்பானது என சசிகலாவிடம் முறையிட்டேன்.

நான் முதல்வராக இருக்கும் போது, உதயகுமார் சசிகலா முதல்வராக வேண்டும் என்று சொன்னார். உதயகுமார் பேசியது நீதிக்கு புறம்பானது என சசிகலாவிடம் முறையிட்டேன். உதயகுமாரைக் கூப்பிட்டு கண்டித்துவிட்டோம் என்றார்கள்.ஆனால், அவர் மதுரைக்கு சென்றும், இதையே தான் பேசினார். ஒட்டுமொத்த நாட்டு மக்களும், நம்மீது வருத்ததில் இருக்கிறார்கள். தொண்டர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.என்னை ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்றேன். என்னை தனிப்பட்ட ரீதியில் அவமானப்படுத்தினால், நான் அதை ஏற்றுக்கொள்வேன். பொது வாழ்விற்கு வந்தால் சிலவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என அமைதியாக இருந்தேன்.


நான் பிரதமரை சந்தித்தால் தம்பிதுரை தனியாக எம்பிகளை சென்று பிரதமரை சந்திக்கிறார். இருவரும் ஒரே கோரிக்கைக்கு வந்ததால், எனக்கு அனுமதி கொடுத்தார்கள்.

கழகத்தின் பொது செயலாளர் தான் முதல்வர் ஆக வேண்டும் என பலர் பேசினார்கள். என்னுடைய அமைச்சரவையில் இருக்கும் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் எனக்கு எதிராக பேசினார்! செல்லூர் ராஜூவும் செங்கோட்டயனும் சொல்கிறார்.நான் மூத்த அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.என்னை அவமானப்படுத்துவதாக உணர்ந்தேன். வேண்டாம் என்று சொன்ன என்னை ஏன் இப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறீர்கள் என்றேன்.

என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். கழகத்தின் கட்டுப்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் ராஜினாமா செய்தேன். மக்கள் விரும்பினால் , ராஜினாமாவைத் திரும்ப பெறுவேன். மக்கள் நம்பிக்கையை பெற்ற ஒருவர் முதல்வராக வேண்டும்" என்று கூறி கிளம்பினார்




மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெ., சமாதி முன் அமர்ந்த அவர் கண்களை மூடி சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மவுன அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா முதல்வராக பதவியேற்க இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் இந்த திடீர் மவுன அஞ்சலி கவனிக்க வைத்திருக்கிறது.

படங்கள் : அசோக்

ஜெ., நினைவிடத்தில் 40 நிமிடங்களாக தியான நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்..! #LiveUpdates

தற்போது அங்கு மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டுவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து நின்றுகொண்டு இருக்கிறார்கள். பத்திரிகையாளர்களிடம் பேச அவர் ஆயுத்தமாகிக் கொண்டு இருக்கிறார்.
மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெ., சமாதி முன் அமர்ந்த அவர் கண்களை மூடி சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மவுன அஞ்சலி செலுத்தினார். ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா முதல்வராக பதவியேற்க இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் இந்த திடீர் மவுன அஞ்சலி கவனிக்க வைத்திருக்கிறது.

செயற்கை நிறமூட்டிகள்... செழிக்கும் வணிகம்... தொலைந்துபோகும் ஆரோக்கியம்! நலம் நல்லது-66 #DailyHealthDose



`வண்ணக் கனவுகள் மட்டும் இருந்தால் போதாது; ஆரோக்கியத்துக்கு, உணவிலும் அவை இருக்க வேண்டும்’ என்கிறது உணவு அறிவியல். சில மணங்களை மனம் ரசிப்பதற்கு, மூளைக்குச் சில நிறங்கள் தேவைப்படுகின்றன. எனவேதான், உணவில் செயற்கை நிறமூட்டும் வணிகம், ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் டாலருக்கு உலக அளவில் நடக்கிறது. இந்த செயற்கை நிறமூட்டிகள் காரணமாக நிச்சயம் செயலிழக்கும் ஆரோக்கியம். இயற்கையாகவே வண்ணம் நிறைந்த காய், கனிகள் நம் உடலுக்கு உரமும் ஊட்டுபவை.



ஹோட்டலில் செக்கச்செவேலென பரிமாறப்படும் தந்தூரி சிக்கனையும் சில்லி சிக்கனையும் சாப்பிட்டுவிட்டு கையை சமையல் பாத்திரத்தைக் கழுவுவதுபோல் எலுமிச்சைச் சாறு, சோப்புத் தண்ணீர் எல்லாம்விட்டுக் கழுவுவோம். அதற்குப் பிறகும் இளஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது, கோழியில் இருந்தோ, குழம்பில் போட்ட காய்ந்த மிளகாயில் இருந்தோ வந்தது கிடையாது. நம் கண்களைக் கவர அதில் தூவப்பட்டிருக்கும் `ரெட் டை 40’ (Red Dye 40) எனும் ஆசோ டையின் (Azo Dye) எச்சமாக இருக்கலாம்.



பெட்ரோலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வகைகள்தான் பஞ்சு மிட்டாய், கேசரி, தந்தூரி சிக்கன்களில் பெருவாரியாகச் சேர்க்கப்படுகின்றன. சிக்கனும், பஞ்சு மிட்டாயும், கேசரியும் ரத்தச் சிவப்பு நிறத்தில் இருந்தால்தான் பிடிக்கும் என்றால், ஒருவேளை நம் ரத்தத்தை வற்றச் செய்யும் புற்றுநோயும் கூடவே வரலாம் என்கின்றன இன்றைய ஆய்வுகள். பல நாடுகள் இந்த நிறமிகளைத் தடை செய்திருக்கின்றன. செயற்கையாக இல்லாமல், இப்படி எத்தனை நிறங்கள் இயற்கை உணவில் இருக்கின்றன என உற்றுப் பார்த்தால் ஆச்சர்யம்!

தாவரம், தன் வளர்சிதை மாற்றத்தில் சேமித்துவைத்திருக்கும் பொருள்தான் இந்தத் தாவர நிறமிகள். `பாலிபீனால்கள் குழுமம்’ என்று தாவரவியலாளர்களால் அழைக்கப்படும் சத்துக்களில்தான் இந்த நிறமிகளைத் தரும் சத்துக்கள் அனைத்தும் அடங்கும். இவை, தாவரம் தன்னை அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்தும், சில கிருமிகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கிக்கொண்டவை. மனிதன் அதைச் சாப்பிடும்போது, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்காதபடி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் பெரும் பங்கு செலுத்துபவை.



பாலிபீனால் எதில் கிடைக்கும்?

* பால் சேர்க்காத ஒரு கப் தேநீரில் 100 - 150 மி.கி உள்ளது. கிரீன் டீயில் பாலிபீனால் சத்து இதைவிடக் கூடுதலாகக் கிடைக்கும்.

* 100 கிராம் கறுப்புப் பன்னீர் திராட்சையோ, கருநீல நாவல் பழமோ, சிவந்த ஆப்பிளோ, பப்பாளியோ, மாதுளையோ 200 - 300 மி.கி பாலிபீனாலைத் தரக்கூடும். இந்தப் பழங்கள் மிகவும் கனிவதற்கு முன்னர், கொஞ்சம் இளம் காயாக இருந்தால் பீனாலிக் அமிலங்கள் (Phenolic Acids) சற்று அதிக அளவில் கிடைக்கும். அதிகம் பழுக்காத இளம் கொய்யாவை சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதும், `வாழை இளம் பிஞ்சொழிய கனியருந்தல் செய்யோம்’ என சித்த மருத்துவ நோயணுகா விதி பாடியதும் இதனால்தான்.

* அதே நேரம், ஆந்தோசயனின் (Anthocyanin) எனும் நிறமிச் சத்துக்களோ, நன்கு பழுக்கும்போது பழத்தோலில் உருவாகிறது. எனவே, மாதுளை, பப்பாளி, தக்காளி, மாம்பழம் ஆகியவற்றை நன்கு கனிந்த பின்னர் சாப்பிடுவதே சிறந்தது.



* வெறும் வயிற்றில் வேறு உணவு இல்லாத வேளையில் பழங்கள் உள்ளே சென்றால்தான் மருத்துவப் பயன் தரும் அதன் நிறமிச் சத்துக்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படும். `டெசர்ட்’ என்ற பெயரில் பழத்தைக் கடைசி பெஞ்சில் உட்காரவைப்பது தவறு.

* சமைப்பதில், சேமிப்பதில் கவனம் இல்லாவிட்டால், இந்த பாலிபீனால்களின் பயனை இழக்க நேரிடும். சிறிய வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, `ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா’ எனும் புளிச்ச கீரை ஆகிய காய்கறிகளிலும், சதகுப்பை முதலான மூலிகைகளிலும் உள்ள `குயிர்செட்டின்’ (Quercetin) எனும் சத்துதான், நம் ரத்த நாளத்தில் கொழுப்புப் படியாமல் இருக்க உதவும் முக்கியமான பாலிபீனால் சத்து. ஆனால், வெங்காயத்தையும் தக்காளியையும் சமைக்காமல் சாலட் ஆகச் சாப்பிடும்போதுதான் முழுப் பயன் கிடைக்கும். வெங்காயத்தை வேகவைக்கும்போது 80 சதவிகிதமும், வறுக்கும்போது 30 சதவிகிதமும் பாலிபீனால்கள் காணாமல்போகும்.



* பாலிபீனால்கள் உட்கிரகிக்கப்பட, நம் சிறுகுடல், பெருங்குடல் பகுதியில் லோக்டோபேசிலஸ் (Lactobacillus) முதலான புரோபயாடிக்ஸ் இருப்பது நல்லது. இது இயல்பாகக் கிடைப்பது மோரில் மட்டுமே. எனவே, சின்ன வெங்காயத்தின் பயன் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால், வெங்காயத் தயிர் பச்சடியாகவோ, வெங்காயம் தொட்டுக்கொண்டு மோர் சோறாகவோ, மோர் சேர்த்த கம்பங்கூழாகவோ சாப்பிடுவது சிறந்தது.

* வெங்காய பக்கோடா சுவை தரலாம்; ஆனால், சுகம் தராது. அதேபோல் வெங்காயத்தின் வெளி வட்டத்தில்தான் அந்தச் சத்து அதிகம். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என வெளிப்பக்கம் பூராவையும் உரித்து உரித்து, உள்ளே உள்ள வெள்ளை வெங்காயத்தைச் சாப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.

இயற்கையாக நிறமும் கொடுத்து, உடலுக்கு உரமும் தரும் பொருட்கள் ஏராளமாக இருக்கும்போது அவற்றைச் சாப்பிடுவதே ஆரோக்கியம். அதைவிட்டுவிட்டு செயற்கை நிறமூட்டிகள் பின்னே போவது நம் சுகமான வாழ்க்கையைப் பாழ்படுத்திவிடும். கேக்கில் மூணு அடுக்கு வண்ணம், பிஸ்கெட் பார்டர் ஒரு வண்ணம், உள்ளே க்ரீம் இரண்டு வண்ணம், குளிர்பானத்தில் புது வண்ணம் எனச் சாப்பிடுவது, கொஞ்சமாக பெட்ரோலும் தாரும் குடிப்பதற்குச் சமம்.

தொகுப்பு: பாலு சத்யா

மணவை முஸ்தபா- தமிழ் உள்ள காலம் வரை வாழும் நின் புகழ்!

vikatan.com

உலகின் தொன்ம மொழிகளில் ஒன்று தமிழ். இயற்கையான வளமும் இலக்கணச் செழுமையும் மிகுந்த இம்மொழி பல்வேறு மொழிகளுக்குத் தாயாக இருக்கிறது. பிற மனிதக் குழுக்கள் சிந்திக்கப் பழகும் முன்பே, தமிழர்கள் தங்கள் மொழியால் வானத்தை அளந்தார்கள். பிரபஞ்சத்தின் சக்திகளை வார்த்தைகளால் காட்சியாக்கினார்கள். உலக மொழி வல்லுநர்கள் எல்லாம் தமிழின் ஆழத்தை, அற்புதத்தை சிலாகித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தமிழர்கள் அதன் மகத்துவத்தை மறந்து பல தலைமுறைகள் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். மருத்துவமோ, பொறியியலோ, அறிவியலோ படிக்கத் தகுதியற்ற மொழி என்று தம் தாய்மொழிக்கு முத்திரை குத்திவிட்டு வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது இளைய தலைமுறை. இப்படியான காலக்கட்டத்தில், தமிழின் அறிவியல் சிறப்பை, செழுமையை வெளிக்கொண்டு வருவதிலேயே தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மணவை முஸ்தபாவின் மரணம், உண்மையில் பேரிழப்பு.



ஒரு மொழியின் சிறப்பே அதன் அறிவியல் தன்மை தான். வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத அறிவியல் தன்மை தமிழில் தளும்ப நிறைந்திருக்கிறது. கடும் ஆராய்ச்சிகள் மூலமும், களத்தேடல்கள் மூலமும் அவற்றை வெளிக்கொண்டு வந்து உலகத்தின் பார்வைக்கு வைத்து அங்கீகாரமும் பெற்றுத்தந்தவர் முஸ்தபா. காலத்துக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளாத மொழி நீடிக்காது. தமிழின் வளமையைப் புதுப்பிக்க அவ்வப்போது காலம் அறிஞர்களை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறது. அப்படியான ஒரு மாண்புமிகு உயிர்ப்பு தான் முஸ்தபா. தமிழை செம்மொழியாக்க வேண்டும் என்ற குரல் பொதுத்தன்மையை எட்டி வலுவடைய பின்னணியாக இருந்தவர் இவர். வெறும் வார்த்தைகளாக இல்லாமல், தீவிர ஆய்வுகள் மூலம் அதன் செம்மொழித்தன்மையை நிரூபிக்கவும் துணை நின்றவர். யுனெஸ்கோவில் இருந்து ஏராளமான தரவுகளைக் கொண்டு வந்து தொகுத்து மத்திய அரசுக்கு அளித்தார். சுமார் 4.4 கோடி சொற்களைக் கொண்ட பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தை தமிழுக்குக் கொண்டு வர அயராது உழைத்தவர். மொழியின் ஜீவன், கலைச்சொற்களில் தான் இருக்கின்றன. புதிது புதிதாக சொற்களை உருவாக்கும் அதே வேளையில், வட்டாரங்களில் தூய்மைத்தன்மையோடு இருக்கும் வார்த்தைகளையும் தேடியெடுத்து, தூசிதட்டி பரவலாக்க வேண்டும். அந்த இரண்டு பணிகளையும் நேர்த்தியாகச் செய்தார் முஸ்தபா.

உலகத்தைப் புரட்டிப் போட்ட கணினிப் புரட்சி, தமிழுக்கு மாபெரும் சவாலாக நின்றபோது, அதை இலகுவாக்கி மொழிக்குள் அடக்கிய பெருமையும் முஸ்தபாவுக்கு உண்டு. "கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி" என்ற அவரது பெரும் பங்களிப்பு, தமிழுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தந்தது. கூகுள் போன்ற தேடல் இணையதளங்கள் அந்தக் களஞ்சியத்தில் இருந்தே தமிழ் மொழிக்கான வார்த்தைகளை எடுத்தாள்கின்றன. கணினி களஞ்சிய பேரகராதி, மருத்துவக் களஞ்சிய பேரகராதி, அறிவியல் கலைச்சொல் களஞ்சியம், அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி, மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் போன்ற கலைச்சொல் அகராதிகள் தமிழுக்கு அவர் அளித்த பெரும் கொடைகள். தம் வாழ்நாளில் சுமார் 8.5 லட்சம் கலைச்சொற்களை உருவாக்கியிருக்கிறார் முஸ்தபா. அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தாலே ஒழிய ஒரு தனி மனிதருக்கு இது சாத்தியமில்லை.

நமக்கு அருகிலே இருக்கும் இலங்கையில் மருத்துவமும், பொறியியலும் தமிழில் வழங்கப்படும் நிலையில், இன்னும் நாம் அதற்கான சில படிகளைக் கூட கடக்காமல் இருக்கிறோம். அதற்கென உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகமும் ஆழ்ந்து உறங்குகிறது. தட்டுத்தடுமாறி பொறியியலில் தமிழ்வழியைக் கொண்டு வந்தபோதும், அதை மாணவர்களும் பெற்றோரும் நம்பத் தயாரில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க ஆசைப்பட்டு, வேறு ஆங்கில வழிப்படிப்புகள் கிடைக்காத நிலையில் தான் அதை தேர்வுசெய்கிறார்கள். அந்த வகுப்பறையிலும் தமிழ்வழி என்பது பெயருக்குத் தான். ஆசிரியர்களில் குரலில் ஒலிப்பதென்னவோ ஆங்கிலம் தான்.

வெறும் இலக்கியங்களால் மட்டுமே சிலாகித்து விட்டு அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் மொழியைப் புறம்தள்ளுவது கண்டு மனம் வெதும்பினார் முஸ்தபா. ஒரு அரசு செய்ய வேண்டிய வேலைகளை தனியொரு மனிதனாக முன்னின்று செய்தார். தமிழில் அறிவியல் எழுத்தை, சிந்தனையை வெகுவாக ஊக்கப்படுத்தினார். இளம் எழுத்தாளர்களை எழுதத்தூண்டினார். அனைத்து அறிவியல் தமிழ் எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து, அறிவியல் தமிழ் கருத்தரங்குகளை நடத்தினார். மொழியைக் கையாள்வதில் எந்த சந்தேகம் தோன்றினாலும் இளம் எழுத்தாளர்கள் தட்டுவது முஸ்தபா வீட்டுக் கதவைத் தான். எந்த நேரத்திலும் எதைப்பற்றியும் பேசலாம் அவரிடம்.

முஸ்தபாவின் சொந்த ஊர் மணப்பாறை அருகில் உள்ள இளங்காகுறிச்சி. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பட்டப்படிப்பையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புகளையும் முடித்தார். மனைவி பெயர் சவுதா. அண்ணல், செம்மல் என்ற 2 மகன்களும், தேன்மொழி என்ற மகளும் இருக்கிறார்கள். இஸ்லாம் மீது பிடிப்பு கொண்ட முஸ்தபா, அதில் உள்ள அறிவியல் தன்மை, சமூக நல்லிணக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சி நூல்களையும் எழுதியிருக்கிறார். தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள், பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம், இஸ்லாம் ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?, இஸ்லாமும் சமய நல்லிணக்கமும், அண்ணலாரும் அறிவியலும், சமண பௌத்த கிருஸ்துவ இஸ்லாமிய இலக்கியங்கள், தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள், சிந்தைக்கினிய சீறா, இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் போன்ற நூல்கள் அவரின் பங்களிப்புகளில் பிரதானமானவை.

யுனெஸ்கோ நிறுவனம், தமது அதிகாரப்பூர்வ செய்தி ஏடாகிய "யுனெஸ்கோ கூரியர்" இதழை தமிழில் கொண்டு வர முனைப்புடன் செயல்பட்டவர் முஸ்தபா. மத்திய அரசு, வழக்கம்போல ஒரு பிராந்திய மொழிக்கு அப்படியான முக்கியத்துவம் கிடைக்கக்கூடாது என்று பல தடைகளை உருவாக்கிய போது, தமிழக அரசியல் தலைவர்களை ஒருங்கிணைத்து, மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். அதன் விளைவாக, இந்தியாவில் ஒரே பிராந்திய மொழியாக தமிழில் தம் இதழைக் கொண்டு வந்தது யுனெஸ்கோ. அந்த இதழுக்கு ஆசிரியராக முஸ்தபாவே நியமிக்கப்பட்டார். 1967 முதல் அந்த இதழ் நிறுத்தப்பட்ட காலம் வரை அவரே ஆசிரியராக இருந்து இதழை வழிநடத்தியதோடு, அதை முற்றுமுழுதாக தமிழ் மொழியின் வளத்தை மேம்படுத்தும் வகையிலேயே நடத்தினார். தமிழ் பண்பாட்டு சிறப்பிதழாக ஒரு இதழைக் கொண்டு வந்தார்.

கலைமாமணி உள்பட பல விருதுகள், அங்கீகாரங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலும் அவர் பல வகைகளில் கொண்டாடப்பட்டிருக்கிறார். அவரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. வாழ்ந்த காலத்திலேயே அவருக்குச் செய்யப்பட்ட நல் மரியாதை அது. உடல் நலம் நலிவுற்ற காலத்தில், நூல்களுக்காக அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் பெரும் உதவியாக இருந்தது.

முஸ்தபாவிடம் இருந்த தனித்தன்மை, அவர் மிகச்சிறந்த மொழி ஆராய்ச்சியாளராக, தமிழ் மீது பிடிப்பு கொண்டவராக இருந்தபோதும், தம்மொழியை சிறப்பிப்பதற்காக எக்காலத்திலும் அவர் பிற மொழிகளைப் பழித்ததில்லை. அவற்றின் மேன்மையை குறைத்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை. இஸ்லாம் மீது அவருக்கு பிடிப்பு இருந்தபோதும் பிற மதங்களின் மீது அவருக்கு சிறிதும் காழ்ப்புணர்வு இருந்ததில்லை. மதங்களுக்கு இடையிலான பொதுமைகளை மையமாக்கியதே அவருடைய ஆன்மிகம். சிறுவர்களுக்காக நிறைய எழுதினார். நிறைய தொகுப்பு நூல்களை உருவாக்கினார். சிறுவர் கலைக்களஞ்சியம், சிறுவர்க்கும் சுதந்திரம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

மணவை முஸ்தபா தம் தாய்மொழிக்குச் செய்திருப்பது மிகப்பெரும் பங்களிப்பு. தமிழுள்ள காலம் வரை, அதன் அணிகலன்களாக அவை நிலைத்திருக்கும்.

-வெ.நீலகண்டன்

சசிகலா முதல்வராவது கடினம்..!' சிக்கல்களைச் சுட்டிக்காட்டும் வழக்கறிஞர்


ஜெயலலிதாவின் மறைவு அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22 -ம் தேதி அப்போலோவில் காய்ச்சல் மற்றும் நீர்சத்துக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி அறிவித்தது.

அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் தமிழக முதல்வராக ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க-வில் அடுத்த தலைமை யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் திடீரென்று கடந்த டிசம்பர் 31-ம் தேதி சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பொதுச் செயலாராகப் பதவி ஏற்ற சில நாட்களில் சசிகலா முதலமைச்சராகவும் பதவி ஏற்கப்போகிறார் என்று தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏ- க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராக இன்று (7.2.2017) சசிகலா நடராஜன் பதவி ஏற்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பதவி ஏற்புக்கான விழா ஏற்பாடுகள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆனால், பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. எப்போது நடைபெறும் என்றும் தெளிவான தகவல் இல்லை.

அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது....

சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (5.2.2017) வழக்கறிஞர் விஜயன் தனது பேஸ்புக் பதிவில் சட்டசிக்கல்கள் குறித்துத் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவரிடம் பேசியபோது "மூன்று விவகாரங்களில் சசிகலா பதவி ஏற்பதற்கான தடைகள் உள்ளது. அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு வரவுள்ளது. இப்படி அவர் மீது உள்ள வழக்குகளாலும் சசிகலாவுக்கு சிக்கல் உள்ளது.

மற்றொரு தடையாக , சட்டமன்றத்துக்கு ஒருவர் செல்லவேண்டும் என்றால் இந்திய அரசியலைமைப்பின் 188-வது பிரிவின்படி உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கே உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று விதியில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் முதலமைச்சராகப் பதவி ஏற்கும் ஒருவர் எப்படி உறுதிமொழி ஏற்காமல் பதவி ஏற்க முடியும் ? பதவி ஏற்றுக்கொண்டு ஆறு மாத காலத்துக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிடுவேன் என்பது இந்திய அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது" என்றார் .

விஜயன் சார்பாக வைக்கப்படும் வாதங்கள்.....

1. இந்திய அரசியலமைப்பு -10-வது விதியின் படி நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்க வேண்டும். (legislative member ) சசிகலா அவர்கள் உறுப்பினராக இல்லை.

2.ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவையில் அமர்வதற்கு பிரமாணம் எடுக்க வேண்டும். அப்படியே முதலமைச்சராக வந்தாலும் 6 மாதகாலம் உறுப்பினராக இல்லாமல் எப்படி அமர முடியும்.

இவ்வாறு வழக்கறிஞர் விஜயன் தெரிவித்துள்ளார்.மேலும் "இந்திய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள முதலமைச்சருக்கான விதிகளைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது" என்றார்.

சசிகலா பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில்,தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் டெல்லியில் இருந்து மும்பை சென்று விட்டார். சசிகலா பதவி ஏற்பதில் உள்ள சட்ட சிக்கல்களை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்த பின்னரே,அவர் தமிழகம் திரும்பலாம் என்று சொல்லப்படுகிறது.

- கே.புவனேஸ்வரி

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...