Thursday, March 9, 2017

சமோசா... வேண்டவே வேண்டாம்!’ மருத்துவம் சொல்லும் காரணங்கள்
vikatan.com

எல்லா டீக்கடைகளிலும் தவறாமல் காணப்படும் ஒரு நொறுக்குத்தீனி, சமோசா. `மூணு பத்து ரூபா’ என குட்டியூண்டு சைஸில் பேப்பர் கவரில் விற்கப்படுவது தொடங்கி, உள்ளங்கைகொள்ளாத சைஸ் வரை விதவிதமான வகைகள் உண்டு. சினிமா தியேட்டர்களில் இடைவேளையில் சமோசா கடித்து, டீ குடிக்காத தமிழ் ரசிகர்கள் வெகு குறைவு. மதுரைப் பக்கம் வெதுவெதுப்பான சூட்டில் வெங்காய மசாலா வைத்துப் பரிமாறப்படும் `சமோசா’, அலாதிச் சுவைகொண்டது. சென்னை சௌகார்பேட்டை பகுதியில் மொறுமொறு சுவையுடன் பச்சைச் சட்னி, சாஸுடன் கிடைக்கும் வட இந்திய வகைக்கு, பிரத்யேக ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் பல இடங்களில் சமோசா-சுண்டல் காம்பினேஷனுக்கு மயங்கிக்கிடக்கிறவர்கள் உண்டு. `எல்லாம் சரி... இது, நம் உடலுக்கு நல்லதுதானா?’ என்கிற கேள்வியையும் கூடவே கேட்கவேண்டியிருக்கிறது.



‘சமோசாவும் நம் ஆரோக்கியமும்’ என்கிற பக்கத்துக்குப் போவதற்கு முன்னால், இதன் வரலாற்றை மேம்போக்காக ஒரு புரட்டுப் புரட்டிவிடலாம். `சமோசா’, மட்டுமல்ல... ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பகுதியிலும் அழைக்கப்படும் இதன் பெயர், மலைப்பைத் தருகிறது. சமஸ்கிருதத்தில், `கட்டக்கா’, பெங்காலியில் `ஷிங்காரா’, உஸ்பெஸ்கிஸ்தானில் `சொம்சா’, அரபியில் `சம்புசாக்’, பர்மிய மொழியில் `சமோஷா’!

சப்பாத்திக்கு இடுவது மாதிரி, கோதுமை மாவை (மைதாவும் இப்போது சேர்க்கப்படுகிறது) இட்டு, அதில் மசாலா வைத்து முக்கோணமாக மடித்துப் பொரித்து எடுத்தால், அது சமோசா. சைவம் எனில் மசாலாவில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, பச்சைமிளகாய், வெங்காயம், இன்னும் சில வாசனைப் பொருள்கள் கலந்தும் மசாலா தயாரிக்கிறார்கள். அசைவம் எனில், இறைச்சியில் செய்யப்பட்ட மசாலா! இந்தியாவில் பெரும்பாலும் சைவ சமோசாதான் புழக்கத்தில் இருக்கிறது.



கடந்த எட்டு நூற்றாண்டுகளாக தெற்காசிய சமையலில் சமோசா வெகு பிரபலம். என்றாலும், `இதன் பூர்வீகம் எது?’ என்றால், மத்தியக் கிழக்கு நாடுகளைத்தான் காட்டுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஈரானிய வரலாற்றியலாளர் அபுல்ஃபாஸல் பேஹாக் (Abulfazl Beyhaqi), `தாரிக்-ஏ பேஹாக்’ (Tariq-e Beyhaqi) என்ற வரலாற்று நூலில், 10-ம் நூற்றாண்டுக்கு முன்னரே சமோசா இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். 13, 14-ம் நூற்றாண்டில்தான் வியாபாரிகள் மூலமாக இந்தியாவுக்குள் மூக்கை நுழைத்திருக்கிறது சமோசா. அப்படி அல்ல... டெல்லி சுல்தான்களுக்காக சமைக்க வந்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த சமையல்காரர்கள்தான் இதை அறிமுகப்படுத்தினார்கள் என்றும் சொல்கிறார்கள்.

டெல்லி சுல்தான்கள் சபையில் இருந்த அரசவைக் கவிஞர் அமிர் குஸ்ரோ (Amir Khusro), உலகைச் சுற்றிவந்த யாத்ரீகர் இபின் பதூதா (Ibn Battuta)... எனப் பலரும் சமோசா பற்றிய குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். முகமது பின் துக்ளக்கின் அரண்மனைச் சமையலில் சமோசாவுக்கும் இடம் இருந்ததாகச் சொல்கிறார் இபின் பதூதா.

ஆரம்பத்தில் படைவீரர்கள், வியாபாரிகள், ஊர் ஊராகப் பயணம் செய்கிறவர்கள் இரவில் தங்க நேரிடும்போது, சமோசாக்களை செய்து வைத்துக்கொள்வார்களாம். அடுத்த நாளில் பகல் உணவுக்கு உபயோகப்படும் என்பதற்காக இந்த ஏற்பாடு. அரசர்கள், சுல்தான்களுக்கு மட்டுமல்ல... சாமான்யர்களுக்கும் பிடித்த நொறுக்குத்தீனி சமோசா. இந்தியாவில் இது அறிமுகமானபோது, உத்தரப்பிரதேச மாநில மக்கள், அதை சைவ வடிவத்துக்கு மாற்றி ஏற்றுக்கொண்டார்கள். சில நூற்றாண்டுகளிலேயே சமோசா இந்தியாவில் பிரபலமாகிவிட்டது. வட இந்தியாவில் சமோசா மாவுக்குப் பெரும்பாலும் மைதாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.



வட இந்தியாவில் சில நகரங்களிலும் பாகிஸ்தானிலும் அசைவ சமோசா வெகு பிரபலம். ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை ஸ்டஃபிங்கில் சேர்க்கிறார்கள். பஞ்சாப்பில் சமோசாவுடன் சென்னா பரிமாறப்படுகிறது. மும்பையில், `சமோசா பாவ்’ பிரசித்திபெற்ற ஒன்று. பன்னில் வைத்துத் தரப்படும் இதை `இந்தியன் பர்கர்’ என்றுகூடச் சொல்லலாம். தீபாவளிப் பண்டிகையின்போது வட இந்தியாவில் சில இடங்களில் இனிப்பு சமோசா தயாரித்து, பரிமாறும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது.

ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் சமோசா, பண்டிகைகால ஸ்பெஷல் ரெசிப்பி. பொரித்துச் சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு என்பதற்காக சில மேற்கத்திய நாடுகளில் சமோசாவை மைக்ரோவேவ் அவனில் பேக் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்டஃபிங்குக்கு ஆரோக்கியமான காய்கறிகள்! உலகமெங்கும் பிரபலான உணவுப்பொருளாகிவிட்டது சமோசா... ஒவ்வோர் இடத்திலும் ஒரு சுவை. சுவைத்து மகிழலாம்தான். அதற்கு முன்னர், `சமோசா ஆரோக்கியமானதுதானா?’ என்ற கேள்விக்கு டயட்டீஷியன் சௌமியா சொல்லும் விளக்கத்தையும் பார்த்துவிடுவோம்...



``மாலை 4 மணி. டீ குடிக்கப் போகிற இடத்தில் தட்டில் சுடச்சுட கொட்டிவைக்கப்பட்டிருக்கிறது சமோசா. ஒன்றை எடுத்துக் கடித்துச் சுவைக்க வேட்கை எழும்தான். ஆனால், அதனால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைத் தெரிந்துகொண்டால், அதன் பக்கம் போக மாட்டீர்கள்.

ஒரு சின்ன சமோசாவில் 240 கலோரிகள் இருக்கின்றன. நம் உள்ளூர் கடைகளில் விற்கப்படும் சமோசாக்களில் ஊட்டச்சத்தைத் தரக்கூடிய பொருட்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். சர்க்கரைநோயாளிகளுக்குச் சேராத உருளைக்கிழங்கு இருக்கிறது; அதற்கான மாவில் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மைதா கலக்கப்படுகிறது. மைதாவில் இருக்கும் அதிக அளவிலான கிளைசெமிக் இண்டெக்ஸ் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டும். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். இதுகூடப் பரவாயில்லை. சமோசாவைப் பொரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய்... அதுதான் ஆபத்தானது.



தெருவோரக் கடைகளில் சமோசா பொரிக்க எந்த வகை எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதேபோல ஒரே எண்ணெயில் திரும்பத் திரும்ப பொரிப்பார்கள். அது ட்ரான்ஸ் ஃபேட்டுக்கு (Trans fat) வழிவகுக்கும். இதை `ஹைட்ரோஜனேஷன்’ (Hydrogenation) என்பார்கள். அதாவது ஒரு உணவைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்தும்போதோ, ஒரே எண்ணெயை மேலும் மேலும் பயன்படுத்தும்போதோ ஹைட்ரஜன் உணவோடு சேரும். இது ட்ரான்ஸ்ஃபேட்டுக்கு வழிவகுக்கும். சர்க்கரைநோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதைச் சாப்பிட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களின் பிரச்னை தீவிரமாகும்.

மற்ற ஸ்நாக்ஸைவிட சமோசா கொஞ்சம் டேஞ்சர்தான். அதீத கொலஸ்ட்ரால், செரிமானக் கோளாறுகள், ட்ரான்ஸ் ஃபேட் (கெட்ட கொழுப்பு), சுகாதாரமற்ற மைதா மற்றும் எண்ணெய்... இவை போதுமானவை சமோசாவை வேண்டாம் என்று சொல்ல!

தொடர்ந்து சமோசா சாப்பிடுவது, வயிற்றில் தொப்பையை உருவாக்கும். அதோடு சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கெல்லாம் பாதை வகுக்கும். சமோசா சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் வீட்டிலேயே செய்யலாம். நல்ல எண்ணெயில், ஆரோக்கியமான ஸ்டஃபிங்கோடு மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து சாப்பிட்டால் தவறில்லை. மற்றபடி, சமோசாவுக்கு `நோ’ சொல்வதே புத்திசாலித்தனம்.’’

ஆக, வீட்டு சமோசாவுக்கு வெல்கம் (எப்போதாவது) சொல்வோம்! கடை சமோசா..? வேண்டவே வேண்டாம்!

- பாலு சத்யா

கேள்வி மூலை 21: வாசித்தல் ஏன் தூக்கத்தை வரவழைக்கிறது?

ஆதி
  

பலரும் அவ்வளவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் இருப்பார்கள். புத்தகத்தை கையில் எடுத்த கொஞ்ச நேரத்தில் தூக்கம் கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்துவிடும். ஏன் இப்படி நடக்கிறது? வாசித்தல், ஏன் நமக்குத் தூக்கத்தை வரவழைக்கிறது?

தளர்ந்த உடல்

முதலாவதாக, மிகவும் சௌகரியமான நிலையில் உடலை வைத்துக்கொண்டுதான் பொதுவாக நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். அதாவது உடலை நன்றாகத் தளர்த்தும் வகையில் உட்கார்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ. அது மட்டுமல்லாமல் சத்தம் ஏதுமில்லாத ஓர் இடத்தில், ஒரு நாளின் கடைசி வேலையாக அல்லது உடல் ஆற்றலை பெரிதாகச் செலவழித்த பின்னர்தான் பெரும்பாலும் வாசிக்க உட்காருகிறோம். இதன் காரணமாக வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் உடல் ஓய்வு நிலைக்குச் சென்றுவிடுகிறது அல்லது தூக்கத்தை நோக்கி இழுக்கப்படுகிறது.

கவனம் திசைதிரும்புதல்

மற்றொருபுறம் நம்மைக் கவர்ந்து இழுக்கும் ஒரு புத்தகமோ அல்லது கதையோ நடப்பு உலகத்திலிருந்து, நடப்புக் கவலைகளிலிருந்து வேறொரு உலகத்துக்கு நம்முடைய கவனத்தை இட்டுச் செல்கிறது. நாளைக்கு உங்களை மிரட்டப்போகும் பரீட்சை அல்லது வேலைக்கான காலக்கெடு அல்லது நீண்ட தூரப் பயணத்துக்கான திட்டத்தை வாசிப்பு மறக்க வைத்திருக்கும்.

நம்முடைய மனம் பெரும்பாலான நேரம் நடப்புக் கவலைகளை எப்படித் தீர்ப்பது என்பது குறித்தே யோசித்துக் கொண்டிருக்கிறது. வாசிக்கும்போது அதிலிருந்து விலகி, நம்முடைய மனமும் தளர் வான நிலைக்குச் சென்றிருக்கும்.

பிடிக்காமல் போனால்

நேர்மாறாக, நீங்கள் வாசிப்பது கவனத்தைக் கவராமல் சலிப்படையச் செய்யும் வகையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? தொடர்ந்து வாசிப்பதற்கு எடுக்கும் முயற்சி, மூளையை சோர்வுறச் செய்யும். (எடுத்துக்காட்டாக, ஆர்வமற்று பாடப் புத்தகத்தை வாசிப்பது). இந்த நிலையில் உங்கள் மனதின் கவனம் சிதறி அரைத்தூக்க நிலைக்குச் சென்றிருக்கும். இதுவும்கூட விரைவிலேயே தூக்கத்தை வரவழைத்து விடுகிறது.
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
(குறள்: 636)

குறள் இனிது: அறிதல்..புரிதல்...செய்தல்...!

சோம.வீரப்பன்

2012-ல் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா கோபிநாத்தின் ‘உன்னால் முடியும்' நிகழ்ச்சி. தொழிலில் வெற்றி பெற்றவர்கள் அதன் ரகசியங்களை மேலாண்மை பயிலும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் களம் அது. ஆச்சி மசாலாவின் ஐசக்கின் நேர்காணலில் அவரது வெற்றிக்கான காரணங்களை அவரே கூறக் கேளுங்கள். BBA படித்துவிட்டு, MBA படிக்க முடியாததால் கோத்ரெஜ் நிறுவனத்தில் ஹேர்டை போன்ற பொருட்களை விற்கும் விற்பனை யாளராகச் சேர்ந்தவராம் அவர்!
10 பேர் இருக்கும் குழுவில் பலரும் விற்பனை இலக்குகளை எப்படி அடையலாம் , எதை விற்கலாம் என்றே யோசித்துக் கொண்டிருப்பார்களாம். ஆனால் இவரோ விற்பனையாகாத பொருட்களைப் பற்றியும் அவற்றை என்ன செய்தால் விற்கலாம் என்பதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டேயிருப்பாராம்! ஐயா, படிப்போ, பயிற்சியோ ஒன்றாக இருந்தாலும் அதன் பாதிப்பும் பலனும் ஆளுக்கு ஆள் வேறுபடுமில்லையா?

டெல்லியின் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் பயின்றவர்கள் அனைவருமா ஓம்புரி போல நடிக்கிறார்கள்? புணே பிலிம் இன்ஸ்டி டியூட்டில் பலர் பயின்றாலும் யாரோ ஒருவர் தான் ஸ்மிதா பாட்டீல் ஆகிறார்! கேட்பதும், பார்ப்பதும் ஒன்றே தான் என்றாலும் அதன் புரிதல் வெவ்வேறு கோணங்களில், அளவுகளில் அமைந்து விடுகிறதில்லையா? இதை ஆங்கிலத்தில் 3-i என்கிறார்கள்.அதாவது information, interpretation and implementation!
வகுப்பறையில், வாழ்க்கையில் நமக்குப் பல தகவல்கள் கிடைக்கின்றன. நாம் அவற்றை எப்படி கிரகித்துக் கொள்கிறோம், அவற்றை எப்படி செயல்படுத்துகிறோம் என்பது முக்கியமில்லையா ? இந்த இரண்டாவது மூன்றாவது செயல் i-க்கள் தானே ஏட்டுச் சுரைக்காயா இல்லையா எனத் தீர்மானிப்பவை? புத்திசாலித்தனம் என்பது எதிலும் இழையோடும் அடிப்படை முறைகளை (patterns) விரைவாகப் புரிந்து கொள்வது என்பார்கள்.அது தானேங்க சுயபுத்தி என்பது?

‘படித்தவன் பாடம் நடத்துகிறான், படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்' என்பது வெறும் திரைப்பட வசனமில்லை! அது வாழ்க்கையின் யதார்த்தம் நமக்குச் சொல்லும் பாடம்! இன்னுமொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.தொழிலில் வெற்றி பெற படிப்பு அவசியமா என்னும் விவாதம். இறுதியில் சிறப்பு விருந்தினராக வந்தவரிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. அவர் அதிகம் 
படிக்காதவர்.ஆனால் அபார சாதனையாளர்.

‘உங்கள் வெற்றி எதைக் காட்டுகிறது? MBA படித்தவர்கள் செய்யாததை நீங்கள் சாதித்து விட்டீர்களே' என்பதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘முன்னேற்றமடைய கெட்டிக்காரத்தனம் தேவை. வாய்ப்புகளை இனம் காணவும், உபயோகப்படுத்திக் கொள்ளவும் தெரிந்த திறமை அது. வெறும் படிப்பினால் வருவதில்லை' என்று அவர் சொல்வதை மறுக்க முடியுமா?

படிப்பு முன்னேற்றத்திற்கு உதவியே தவிர உத்திரவாதம் இல்லையே! இதில் வேடிக்கை என்னவென்றால் அவரிடம் IIMல் படித்தவர்கள் சிலர் பணிபுரிவதாகவும், அவர்கள் பரவாயில்லை,கொடுத்த பணியைச் செய்து விடுவார்கள் என்றும் சொன்னார்! இயற்கையான அறிவுடன் கல்வியையும் பெற்றவரால் தீர்க்க முடியாத பிரச்சினை உண்டா என்கிறார் வள்ளுவர்!
- somaiah.veerappan@gmail.com

மார்ச் 16-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்: அரசு ஊழியர்கள் ஓய்வு வயது வரம்பு உயர்த்தப்பட வாய்ப்பு

தமிழக சட்டப்பேரவை அடுத்த கூட்டத்தொடர் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே, 2017- 2018 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.3.2017-ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை-9, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.
அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசிய லில் பரபரப்பும் குழப்பமும் நிலவி யது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இந்நிலையில், வரும் 16.03.2017 அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு வயது உயர்த்தப்படுமா?

இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை நம்பியுள்ளனர். இதை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு நிதி தேவைப்படும்.
ஏற்கெனவே தமிழக அரசுத் துறைகளில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Counselling for PG NEET in April

March 9, 2017, Bengaluru, DHNS

The counselling for PG medical and dental seats would be conducted by the NEET authorities, Karnataka Examinations Authority (KEA), COMEDK and CODEUNIK. DH File Photo.
The Consortium of Deemed Universities in Karnataka (CODEUNIK) has announced that counselling for PG NEET would be conducted between April 10 and 12 to fill postgraduate medical and dental seats in eight deemed universities in the state.

This time around, permission has been granted to the deemed universities to have a discrete counselling to fill seats. The last date for submission of applications online is March 28. The applications should be filled online at www.codeunik.org.

The counselling for PG medical and dental seats would be conducted by the NEET authorities, Karnataka Examinations Authority (KEA), COMEDK and CODEUNIK.

Meanwhile, the Karnataka Professional Colleges’ Foundation, comprising 14 medical and 24 dental unaided private professional colleges, has mandated COMEDK to conduct a single window counseling for these institutions to fill up over 400 medical and about 250 dental PG seats, based on the results NEET 2017.

The National Board of Examination which has conducted the NEET for Postgraduate Medical and Dental Courses has announced the results on January 13. It may be recalled that students sought that counselling for PG medical and dental seats be conducted on a common platform to avoid confusion.

They also sought that the dates do not coincide with each other and staged a protest in this regard last week.

Dr S Kumar, executive secretary, COMEDK, told DH said the counselling for seats in private colleges and deemed universities would be conducted at NMKRV College for women in Jayanagar.

“Soon after the KEA conducts its counselling, COMEDK counselling will be done. Subsequently, with a day’s gap, CODEUNIK would conduct counselling,” Kumar.
நீட் தேர்வு ஏழை மாணவர்கள் நுழைய முடியாத தேர்வாக உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

மார்ச் 08, 04:00 AM

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மதுராந்தகம் தேரடி தெருவில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆத்தூர் கோபாலகண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் கோ.க.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில நிர்வாகி பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழகத்தில் கடந்த 5½ ஆண்டுகளில் ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என பலர் முதல்–அமைச்சராகி உள்ளனர். குறிப்பாக ஊழல் தான் ஆட்சி செய்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சிறையில் இருந்திருப்பார். இந்தியாவில் ஒரு முதல்– அமைச்சருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது இதுவே முதல் முறை.ஹைட்ரோ கார்பன் திட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக மக்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில் அதை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது தவறு. மத்திய அரசின் கைகளில் அனைத்து அதிகாரங்களும் உள்ளதால் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படுகிறது. நீட் தேர்வு என்பது நுழைவு தேர்வு அல்ல. ஏழை மாணவர்கள் நுழைய முடியாத தேர்வு. தமிழகத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 750 மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதில் 144 இடங்கள் அதாவது 15 சதவீதம் மத்திய அரசுக்கு தரவேண்டிய நிலை உள்ளது. செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவானது. இதில் 15 சதவீத இடங்களை மற்ற மாநில மாணவர்களுக்கு தரச்சொல்லி மத்திய அரசு நிர்ப்பந்தப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்த ராமதாசை மதுராந்தகம் நகர எல்லையில் இருந்து மேளதாளங்கள் முழங்க கட்சி நிர்வாகிகள் சரவணன், சாந்தமூர்த்தி, பக்கிரிசாமி, ஜீவா, சதீஷ், சங்கர், சகாதேவன், சந்தோஷ், குமார் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அழைத்து சென்றனர். முடிவில் பா.ம.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சபரி நன்றி கூறினார்.
நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டத்தை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று மத்திய மந்திரிகளிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
மார்ச் 09, 04:00 AM

புதுடெல்லி,

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டத்தை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று மத்திய மந்திரிகளிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர்.மத்திய மந்திரிகளுடன் சந்திப்பு

‘நீட்’ தேர்வு மற்றும் ‘கேட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய மந்திரிகளிடம் வலியுறுத்துவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் முதன்மை செயலாளர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன், சுனில் பாலிவால் ஆகியோர் டெல்லி சென்றனர். அவர்கள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை நேற்று சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–ஆதரவான நிலைப்பாடு

‘நீட்’ (தேசிய தகுதி நுழைவுத்தேர்வு) தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி அ.தி.மு.க. அரசு சார்பில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. அதில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரிகளின் ஒப்புதலும் கேட்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் நாங்கள் 2 மந்திரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க வலியுறுத்தினோம். அவர்கள் இதை பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்கள்.

மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி எடுத்து சொன்னோம். தமிழகத்தில் 3½ லட்சம் மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் உயிரியல் பாடப்பிரிவில் தேர்வு எழுதுகிறார்கள். 3 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே மத்திய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுகிறார்கள், எனவே, கிராமப்புற மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு சிரமமாக இருக்கும் என்று கூறினோம்.எய்ம்ஸ் மருத்துவமனை

மேலும் அரசு கல்லூரியில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குத்தான் விலக்கு கேட்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினோம். காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

இதை பரிசீலிப்பதாக கூறிய அவர், தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வழங்கப்படும் என்ற சாதகமான பதிலையும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், ‘என்ஜினீயரிங் படிக்க விரும்பும் மாணவர்களை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மேற்படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ‘டான்செட்’ தேர்வு நடத்தப்படுவதால் மீண்டும் ‘கேட்’ தேர்வு தேவையில்லை என தெரிவித்தோம்’ என்றார்.

NEWS TODAY 15.05.2026